Thursday, January 31, 2008

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை

கடந்த நான்கைந்து நாள்களாக தொலைக்காட்சியில் இதுபற்றிய செய்திகளைக் காண்பிக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு (அட்டவணை சாதியினர் - SC) மாணவர்கள் மத்திய அரசுக் கல்லூரிகளில் மேல்படிப்பு படிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் ஐஐடி முதலான அனைத்தும் அடங்கும். சென்ற ஆண்டுவரை(?) இந்த உதவித்தொகை எந்தவித நிபந்தனைகளும் இன்றிக் கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது மத்திய அரசு, 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்கள் எடுத்திருந்தால்தான் இந்த மாணவர்களுக்கு மேல்படிப்பின்போது உதவித்தொகை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

SC மாணவர்களுக்கான உதவித்தொகை 'merit cum means' என்ற வரையறைக்குள் வரக்கூடாது. SC வகுப்பினரில் படிப்பு குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்கவேண்டும் என்ற காரணத்தால்தான் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானம், மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் ஆகியவற்றைக் கண்காணிப்பதால் பெருமளவு SC மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஒரு கணிப்பின்படி, சுமார் 2.25 லட்சம் SC மாணவர்கள் இந்தியா முழுவதிலும் கல்லூரிப் படிப்பிலிருந்து வெளியேற நேரிடும் என்கிறார்கள்.

அப்படி நேர்ந்தால் அது மோசமான ஒரு நிகழ்வாகும்.

இது தொடர்பாக ஆதாரபூர்வமான தகவல் ஏதும் Ministry of Social Justice and Empowerment -இடமிருந்து வரவில்லை. அவர்களது இணையத்தளத்தில் தேடியதில், சில விஷயங்கள் அகப்பட்டன. 2000-01 முதல் 2003-04 வரை, மத்திய அரசு கொடுத்துவந்துள்ள "Post Metric Scholarship" எவ்வளவு, அது எத்தனை பேரைச் சென்று அடைந்துள்ளது என்ற விவரம் இதோ: (ஆதாரம்)

ஆண்டுஉதவித்தொகை
ரூ. கோடி
மாணவர்கள்
லட்சம்
2000-01114.1515.50
2001-02159.2717.18
2002-03153.0518.19
2003-04264.9922.00

இந்த உதவித்தொகை வழங்குவதில் பெற்றோர்களது வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ. 50,000 என்று இருந்தது, 2003-04 முதல் ரூ. 1,00,000 என்று உயர்த்தப்பட்டுள்ளதாக மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆண்டறிக்கை கூறுகிறது.

***

பல தாழ்த்தப்பட்ட வகுப்பு தலைவர்கள், திருமாவளவன், வீரமணி போன்றோர் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளனர். திருமாவளவன் நேற்று தொலைக்காட்சி பேட்டியில் பேசும்போது, பெற்றோர் வருமான வரம்பை ரூ. 2,00,000 என்று மாற்றவேண்டும், 60% மதிப்பெண்கள் என்பதை நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கோரிக்கை நியாயமானது.

2 comments:

  1. பெற்றோர் வருமான வரம்பை ரூ. 2,00,000 என்று மாற்றவேண்டும்.

    எதற்காக? குறைந்த பட்ச மதிப்பெண் 60% என்பதை நீக்கலாம்.

    ReplyDelete
  2. "
    பெற்றோர் வருமான வரம்பை ரூ. 2,00,000 என்று மாற்றவேண்டும்."



    உதவி தொகை வசதி குறைந்தவர்களுக்கு தானே ?

    ReplyDelete