Thursday, April 10, 2008

செக்ஸ் படங்கள்

கடந்த சில வாரங்களாக எனது வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு ஹிட் எகிறிக்கொண்டே வந்தது. அது எப்போதோ 2005-ல் எழுதியது. என்ன காரணம்? யாராவது இட்லிவடை, கில்லி போன்ற இடங்களில் சுட்டியுள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்தப் பதிவு டூரிங் டாக்கீஸ் என்ற தொடர் விளையாட்டு.

மேலும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில் காரணம் விளங்கியது. “செக்ஸ் படம்” என்ற குறிச்சொல்லை வைத்து கூகிளில் தேடுபவர்களுக்கு இரண்டாவது சுட்டியாக இந்தப் பதிவு வந்து தொலைக்கிறது. அதனால் ஏகப்பட்டவர்கள் இந்தப் பதிவில் வந்து குதிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன தேவையோ அது இங்கே கிடைக்கமாட்டேன் என்கிறது. கூகிள் படத் தேடல்தான் அவர்களுக்குத் தேவை. எழுத்துத் தேடல் அல்ல.

14 comments:

 1. இதே போல் என் ஆங்கில பதிவிற்கு வந்து ஏமாறும் நபர்கள் நிறைய

  http://bruno.penandscale.com/2007/12/are-you-looking-for-srm-college-girls.html

  ReplyDelete
 2. என் தளத்துக்கு "மசாலா படம்"-னு தேடி வர்றாங்க. எப்படியெல்லாம் தேடுறாங்கப்பா :) உண்மையிலேயே சோம்பு, சீரகம், பட்டைன்னு மசாலாவோட படம் தேடுவாங்களோ :)

  **
  இனிமேல் உங்களுடைய இந்த இடுகைக்கும் வருகைகள் கூடும் :)

  ReplyDelete
 3. தெரு விளக்கில் படித்து கலெக்டர் ஆனார் என்பார்கள்... அது போல் இன்னொரு எடுத்துக்காட்டுக்கு கால்கோள் இடுறீங்க ;)

  ReplyDelete
 4. தலைப்புல போட்டு எழுதிட்டீங்கள்ள, இனிமே எல்லாரும் இங்கதான் வருவாங்க!

  என்னுடைய பதிவிற்குத் தேடல் இயந்திரங்களின் மூலம் அதிகம் வருபவர்கள் : கலவி, ஆண்குறி, கொங்கை, அறிவியல், கருணாநிதி, ஆணுறை, இன்பம், கனடா, பெண்ணுறை, சுஜாதா போன்ற பதங்களுக்கான விளக்கங்களை (முடியுமானால் படங்களுடன்) தேடி வருகிறார்கள்.

  இதில் ரொம்ப நாளைக்குப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது கருணாநிதி - அப்புறம் ஜெயமோகன் - கருணாநிதி விவகாரத்தில் நான் எழுதியது, தமிழ்க் குறுவட்டின் முகப்பில் கருணாநிதியின் படம் இருப்பதைக் குறித்த விமர்சனத்தை எழுதியது காரணம் என்று தெரியவந்தது.

  சில சமயம் உள்வரும் சுட்டிணைப்புகளைப் பார்த்து என் பதிவை அப்படியே ஒட்டு மொத்தமாக வேறு தளங்களில் போட்டிருப்பது தெரியவருகிறது.

  ReplyDelete
 5. இந்தத் தலைப்பும், இடுகையும் இன்னும் பல மடங்கு, பார்வையாளர்களைக் கொண்டு வரும். ஆல்தி பெஸ்ட்டு :-)

  நல்ல வேளை... blogger, பின்னூட்டங்களுக்கு (by default), NO Follow என்று tag அளித்திருக்கும். இல்லை என்றால், இந்தப் பதிவையும், வெங்கட் , கமா போட்டு அடுக்கியிருக்கும் 'குறிச்' சொற்கள் கொண்ட பின்னூட்டத்தையும் வைத்து, கூகிள் , இது ஒரு போர்னோ தளம் என்று கட்டம் கட்டியிருக்கும் :-)

  ReplyDelete
 6. செக்ஸ் படம் என்று தேடும்போது, நீங்கள் இரண்டாவது ரேங்கிலிருந்து முதல் ரேங்கிற்கு உயர்ந்துவிட்டது தெரிந்தது. வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. முதலில் ஹிட்டை எப்படி கண்டுபிடிப்பது?

  அப்புறம் எப்படி இந்த மாதிரி ஹிட்டை ஏற்றுவது?

  அதற்கு ஒரு பதிவு போடக்கூடாதா?

  ReplyDelete
 8. பிரபு: ஹிட்டைக் கண்டுபிடிப்பதற்கு blogger.com-ல் Google Analytics என்ற வசதி உள்ளது. இதனை எளிதாக இணைக்கலாம். வேண்டுமானால் இதற்கு ஒரு பதிவைச் சேர்க்கிறேன்.

  ஹிட்டை ஏற்றுவது - ஒழுங்காக எழுதிக்கொண்டிருந்தாலே போதும்:-) தொடர்ச்சியாகவும் எழுதவேண்டும்.

  ReplyDelete
 9. 'செக்ஸ் படங்கள்' என்ற குறிச்சொல்மூலம் இந்த ஆண்டுதான் (2008) அந்தப் பதிவுக்கு நிறைய ஹிட் வருகிறது. 2005-லேயே எழுதிய பதிவு என்றாலும்.

  2007-ல் இந்தப் பதிவோ, இந்தக் குறிச்சொல்லோ முதன்மையாக ஹிட்டைக் கொடுக்கவில்லை.

  இணையத்துக்குப் புதிதாக வரும் தமிழர்களின் தேடுதல் வேட்கை எதைப்பற்றியது என்பதை இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது!

  ReplyDelete
 10. பரங்கிமலை ஜோதி, ஷகிலா என்றெல்லாம் ‘குறி'ச்சொற்களை போட்டு தேடி வந்து என் பதிவுகளை படிக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது? :-(

  ReplyDelete
 11. ennakku rompa moooda irunthusu athan vanthan

  ReplyDelete
 12. ungal site sex padam endru potal muthalidam varuthu , valthukkal

  ReplyDelete
 13. அவர்களின் தேடல் செக்ஸ் கல்வியாக கூட இருக்கலாம்.

  போர்னோ தளங்களை தவிர்ப்பதை விட முக்கியமானது சித்த மருத்துவம் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் கூத்துகளை தவிர்ப்பது நல்லது.
  ஏகப்பட்ட இயல்பான உறுப்பு அமைப்புகளை தங்கள் சுயலாபத்திற்காக தவறாக இருப்பதாக விளம்பரம் செய்கின்றார்கள்.

  மிக விரிவாகவே எழுதி விடுவேன். ஆனால் மட்டுறுதலில் இந்த மறுமொழி தகுதி பெருமா என தெரியவில்லை.

  அதனால் இணைப்பு மட்டும் தருகிறேன்.

  http://sagotharan.wordpress.com/2009/12/11/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae/
  ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்

  ReplyDelete
 14. nan teduvathu ethum kidaikala

  ReplyDelete