Saturday, February 13, 2010

இந்தியர்களால் துயருறும் காந்தி - 1

காந்தியின் நினைவு தினத்துக்கு மூன்று தினங்களுக்கு முன் பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் மைக்கல் கானலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவில் பெண்கள் இன்று படும் துயரங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான் என்பது அந்தக் கட்டுரையின் சாராம்சம். (Women suffer from Gandhi's legacy)

இதை முன்வைத்து மருதன் தன் வலைப்பதிவில் காந்தியின் பெண்கள் என்று எழுதினார். அடுத்து ரவிபிரகாஷ் அந்த கார்டியன் கட்டுரையை காந்தியால் துயருறும் பெண்கள் என்று தமிழில் மொழிபெயர்த்தார்: (ரவிபிரகாஷ் | மருதன்). ரவிபிரகாஷின் மொழியாக்கத்தில் சில பிழைகள் உள்ளன.

காந்தியின் கருத்துகள் காரணமாக இந்தியாவில் பெண்கள் இன்றும் துயர் உறுவதாகச் சித்திரிக்கும் மைக்கல் கானலனைப் போல காந்தியால் இன்று இந்தியாவில் இந்துக்கள் துயர் உறுகிறார்கள் என்று பலர் சித்திரிக்கிறார்கள். இன்னும் பலர் இந்தியாவில் உள்ள அனைவருமே காந்தியால் துயர் உறுகிறார்கள் என்று சித்திரிக்கிறார்கள்.

ஒருவேளை இவை அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இந்தக் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் வலுவான பகுத்தறிவின் பின்னணியிலும் இயங்கியல் பொருள்முதல்வாதப் பின்னணியிலும் வந்திருக்கும் நாம் அப்படியே பிறர் சொல்வதை ஏற்பது நியாயமா? கொஞ்சம் ஆழ்ந்து உண்மை என்ன என்று கண்டறிய வேண்டுமல்லவா? மைக்கல் கானலன் என்ற வெள்ளைக்காரர்கூட காந்தியை அப்படி இப்படி படித்து எதையோ எழுதிவிடுகிறார். நம்மவர்கள் எந்த இடத்தில் காந்தி இப்படியெல்லாம் சொன்னார், எழுதினார் என்பதைக் கண்டறியவேண்டுமல்லவா?

மீண்டும் சாராம்சத்துக்கு வருவோம். காந்தி பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் என்று மருதன் கானலனைப் படித்து முன்வைப்பவை இவை:
1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.

2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.

3) ஒரு தகப்பன், தன் குடும்பத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.
மருதன் இதற்கான ஆதாரங்களை காந்தியின் எழுத்துகளிலிருந்தே எடுத்து முன்வைப்பதாகச் சொல்கிறார். அவர் எவ்வளவு தூரம் காந்தியைப் படித்துள்ளார், எவ்வளவு எளிதில் இவற்றை முன்வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எனவே என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவி செய்யலாம் என்றிருக்கிறேன்.

கானலன் முதலில் குறிப்பிடுவது டால்ஸ்டாய் பண்ணையில் காந்தி ஒரு சோதனை செய்தபோது நடைபெற்றது. வழக்கம்போல, காந்தியே இந்தச் சம்பவத்தை தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்ற புத்தகத்தில் 35-ம் அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடுகிறார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.
ஒரு நாள் ஒரு வாலிபன் இரு பெண்களை தவறான முறையில் கேலி செய்தான் என்ற விஷயம், அப்பெண்கள் மூலமாகவோ அல்லது வேறு குழந்தைகள் மூலமாகவோ எனக்குத் தெரிய வந்தது. அந்தச் செய்தி என்னை நடுங்கச் செய்தது. விசாரித்ததில் அது உண்மைதான் என்று அறிந்தேன். அந்த வாலிபனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ஆனால், அது போதவில்லை. இனி அந்தப் பெண்களை எவரும் தவறான கண்களுடன் பார்க்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும், தங்களுடைய பரிசுத்தத்தை எவரும் தாக்கமுடியாது என்ற தைரியம் பெண்களுக்கு வருவதற்கு அறிகுறியாகவும் அப்பெண்கள் மேனியில் ஏதாவது சின்னங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.

ஸ்ரீராமனிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பிரிந்து இருந்த சீதையை, அவள் தூய்மையின் காரணத்தால் காம, குரோதம் மலிந்த ராவணன் தொடக் கூட முடியவில்லையல்லவா? இந்தப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கவும், அதே சமயத்தில் பாவியின் கண்கள் சுத்தப்படவும் இதைச் செய்யலாம் என்று நினைத்தேன்.

என்ன விதமான குறியை அவர்கள் அணியவேண்டும்? இப்பிரச்னையைப் பற்றி இரவு முழுவதும் உறக்கமின்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும், அந்தப் பெண்களின் அழகான நீண்ட முடியை வெட்டிவிட அனுமதிக்கும்படி மெதுவாகக் கேட்டுக்கொண்டேன். பண்ணையில் நாங்களே ஒருவருக்கொருவர் முடிவெட்டிக்கொண்டு சவரமும் செய்துகொள்வது வழக்கம். எனவே எங்களிடம் முடிவெட்டும் கருவியும் கத்தரிக்கோலும் இருந்தன.

முதலில் அப்பெண்கள் நான் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை. பண்ணையில் இருந்த மூத்த பெண்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர்களாலும் முதலில் முடிவெட்டுதலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கடைசியில் என் சொல்லை ஆதரித்தார்கள்.

அந்தச் சிறுமிகள் இருவரும் பெருந்தன்மையுள்ளவர்கள். பாவம், அதில் ஒருத்தி இப்போது உயிருடன் இல்லை; அவள் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவள். மற்றொருத்தி இப்போது திருமணம் ஆகி குடித்தனம் நடத்தி வருகிறாள்.

இறுதியில் அவர்கள் இருவரும் சம்மதித்ததும், நானே, என் கைகளால் அவர்கள் தலை மயிரை வெட்டினேன். பிறகு என் செய்கையின் கருத்தை வகுப்பில் விளக்கிக் காட்டினேன். அதன் மூலம் பெரிய பயன் விளைந்தது. அதற்குப் பிறகு தவறான கேலி வார்த்தை எதுவும் என் காதில் விழவில்லை. மயிர் வெட்டப்பட்ட அப்பெண்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இதன் மூலம் எவ்வளவு லாபம் என்பதை யார் அறிவார்?

அந்த வாலிபர்கள் இந்தச் சம்பவத்தை இன்னும் மனத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும், தம் கண்களைப் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.

இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

இந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.
இந்தச் செயலைச் செய்தவர் யார் என்று பார்ப்போம். யாரோ தெருவில் போகும் ஒரு பெண்ணை தெருவில் போகும் ஓர் ஆண் சீண்டினான் என்ற காரணத்தால் அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நாட்டாமை ஒருவர், ‘அட, அந்தப் பொண்ண இழுத்துகிட்டுவாலே! அவ முடிய இழுத்து வெட்டுலே!’ என்று தீர்ப்பு கூறவில்லை.

காந்திதான் அந்தப் பெண்களுக்கும் வம்பு செய்த ஆணுக்கும் தந்தையாக இருந்தார். அவரது அரவணைப்பில்தான் அவர்கள் மூவரும் படித்துக்கொண்டிருந்தனர். காந்தியின் கஸ்டடியில் பல ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தக் குழந்தைகளின் அம்மாக்களும் அப்பாக்களும் அருகே கூட இல்லை. அப்போது, ‘நல்லா பஜனை செய்யுங்க, நானே காண்டம் வாங்கித் தரேன்’ என்றா காந்தி அவர்களிடம் சொல்லியிருக்கமுடியும்?

காந்தியின் மனம் பதைபதைத்துப்போனது. இதெல்லாம் நடந்தது 1910-களில். அதாவது இன்றைக்குச் சுமார் 100 வருடங்களுக்கு முன். அமெரிக்கா முதற்கொண்டு பிரிட்டன் வரை கட்டற்ற செக்ஸ் உறவு என்று யாருமே பேசியதில்லை. ஆனால் மனித இனம் உருவான காலந்தொட்டே அடாலசண்ட் கட்டத்தின் டெஸ்டாஸ்டெரோன் ஹார்மோன் ஆண்களைக் குரங்குகளாக்கி விடுகிறது. அப்போது இந்த ஆண்கள் செய்யும் கேலியும் கிண்டலும் இன்றும்கூட பெண்களை வதைக்கிறது.

இதற்கு என்ன தீர்வு என்று இன்று நமக்குத் தெரியுமா? ஆண்களுக்கு செக்ஸ் வேண்டும். அவர்களது இலக்குக்கு ஆளாகும் பெண்களுக்கும் அப்படியே என்றால் பிரச்னை இல்லை. அதுவும் அந்த ஆணிடமே அவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்றால் பிரச்னையே இல்லை. பிரச்னை எங்கு வருகிறது? அந்த ஆண், பிற பெண்களைத் துன்புறுத்தும்போது. அப்போது என்ன செய்யலாம்? அந்த ஆணை அடித்து நொறுக்கலாம். அல்லது சிறையில் தள்ளலாம். மருதன், ரவிபிரகாஷ் பக்கங்களில் காந்தியை எள்ளி நகையாடும் ஆண்களை அவர்களது பதின்ம வயதில் செய்த பொறுக்கித்தனங்களுக்காக ஜெயிலில் போட்டு பெண்டு நிமித்த எனக்கும்தான் ஆசை!

ஆனால் காந்திக்கு அங்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அவர்தான் அந்த ஆணுக்கும் பொறுப்பு. அவனைக் கூப்பிட்டுக் கண்டுக்கிறார். ஆனால் அந்தக் கண்டிப்பு, டெஸ்டோஸ்டெரான் முன் எம்மாத்திரம்? அந்தப் பையனை அந்த இடத்திலிருந்து விலக்கி அவனது வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அதனை காந்தி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதக்கூடியவர். எனவே அப்போது தனக்குத் தோன்றிய ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறார். அந்தப் பெண்களைக் குரூபியாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ஓர் அடையாளம். அந்த அடையாளம் அந்தப் பெண்களைத் துன்புறுத்துவதைவிட அந்த ஆணைத் துன்புறுத்தவேண்டும். என்னால்தானே இந்தத் தொல்லை இந்தப் பெண்களுக்கு? என்னால்தானே? நான் இனி இந்தமாதிரி நடந்துகொள்ள மாட்டேன். அதே சமயம் அந்த அடையாளம் ஒரு நீங்காத வடுவாக உடலில் தெரியக்கூடாது. மனத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும். தீர்வு? முடி.

இன்று நாம் வேறுமாதிரி இந்தப் பிரச்னையைக் கையாண்டிருப்போம். நாமெல்லாம் மிகச் சிறந்த அறிவாளிகள்தான். காந்தி, பாவம், அந்த அளவுக்கு முன்னேறாதவர்.

ஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.

இன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்.

அதற்குப்பின் தீவிரமான ஓர் எச்சரிக்கையையும் அவர் பிறருக்கு முன்வைக்கிறார். இந்த முடிவை நீங்கள் யாரும் எடுக்காதீர்கள். என்னைப் பின்பற்றாதீர்கள்! அந்தக் குழந்தைகளுக்குத் தாயும் தகப்பனுமாக நீங்கள் இல்லாவிட்டால், இதுபோன்ற முடிவை எடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆக, பொத்தாம்பொதுவாக, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. இப்போது நாம் சில கேள்விகளை முன்வைப்போம்.

1. உங்கள் மகள், ஒரு குரங்குப் பையனின் பாலுறவுத் தொந்தரவுக்கு ஆளாகிறாள். என்ன செய்வீர்கள்?

2. உங்கள் குரங்கு மகன், பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். என்ன செய்வீர்கள்?

3. உங்கள் வீட்டில், உங்கள் பொறுப்புக்கடியில், உங்கள் சொந்தக்காரப் பையன் ஒருவனும் பெண் ஒருத்தியும் தங்கிப் படிக்கிறார்கள். இருவருக்கும் நீங்கள்தான் கார்டியன். அந்தப் பையன் அந்தப் பெண்ணை பாலுறவுத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறான். இப்போது என்ன செய்வீர்கள்?

(தொடரும்)

24 comments:

 1. அருமையான பதிவு, நன்றி. காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்து நிராகரிக்கும் சிலர், அவரது மற்ற கொள்கைகளை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவற்றையும் collateral damage ஆக்கி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. கமல்ஹாசன் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

  " இந்தியாவிற்கு எப்போது காந்தி தேவையாய் இருக்காது? எல்லாவகையிலும் இந்த நாடு மேம்பட்டதாக மாறி காந்தி கண்ட கனவுகள் நனவாகும் போது. அது வரைக்கும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காந்தி என்பவர் இந்த நாட்டுக்கு தேவையாய் தான் இருப்பார்" .

  அது வரைக்கும் காந்தி என்பவர் இந்தியாவில் ஒரு விவாதப் பொருள். இன்று மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து சென்றாலும் இந்தியாவிற்கு காந்தி தேவையாய் தான் இருப்பார்.

  முழுமையாக புரிந்து கொள்வதை விட அவரை முழுமையற்றதாக ஆக்க நடந்து கொண்டுருக்கும் வரையிலும் கிராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த இந்தியா கட்டமைக்காத வரைக்கும், இந்தியா என்பது அடிப்படையில் கிராமத்தை கொண்டு உருவாக்காத வரைக்கும் இந்த தவறான புரிதல்கள் விவாதப்பொருளாக இருக்கும். அவரும் எப்போதும் போல பணத்தாள்களிலும், நீதிபதிக்கு பின்னாலும் தனது பொக்கை வாயால் இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டேதான் இருப்பார்.

  காந்தி என்பவரைப் பற்றி முழுமையாய உணர்ந்து கொள்ள வேண்டும் என்பவர்களை விட அவரை உருக்குலைக்க ஆர்வமிருப்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம்.

  ReplyDelete
 3. இந்தக் கட்டுரைக்கு நீங்கள் வைத்த தலைப்பு மிகச் சரி. நீங்கள் சுட்டிய வலைப் பதிவுகளையும் படித்ததில் மிகவும் வருத்தப் பட்டேன்.

  காந்தியின் வாழ்க்கை நிஜமாகவே திறந்த புத்தகம்தான். அவருடைய வாழ்க்கையை அவரே பல கடிதங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். இங்கே சென்று பார்க்கலாம்

  சமீபத்தில் ஜெயமோகன் மிக அழுத்தமாக, மிக விரிவாக காந்தியாரைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார்.

  இதையெல்லாம் படிக்கமாட்டேன். மருதன் ஏதோ எழுதியிருக்காராம்... அதப் படிச்சிட்டு காந்தி இம்புட்டுத்தானான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம். அதிலும் ஒருத்தர் காந்தி தன் மனைவியை துன்புறுத்தினார். பையன் தற்குறின்னு எழுதறார். காந்தியாருக்கு எத்தனை பையன்கள் உண்டு... அதில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதெல்லாம் காந்தி தளத்தில் விரிவாக இருக்கிறது. எதுவுமே படிக்காமல் கருத்து சொல்ல மட்டும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

  என்ன செய்யறது... கட்டற்ற இணைய சுதந்திரத்துல இந்த மாதிரி நுனிப்புல் மேயற பழக்கமும் ஒரு விளைவு. மிகவும் வருந்ததக்க விளைவு.

  ReplyDelete
 4. பத்ரி,

  உங்கள் கேள்விகளுக்கான பதில்:

  #2 & #3 - தவறும் செய்யும் பையன் நம் பொறுப்பில் இருப்பதால், அவனுக்குத் தக்க தண்டனை (காந்தியின் உத்தியான தலையை மொட்டை அடிப்பதையே கூட) வழங்கலாம்.

  #1 - பையனுக்குப் பொறுப்பான பெரியவர்கள் யாரோ அவரிடம் முறையிட்டுப் பார்க்கலாம். பயனொன்றும் இல்லையெனில் சட்டரீதியாக (காவல்துறையில் முறையீடு, இத்யாதி) நடவடிக்கை எடுக்கலாம்.

  மேற்கூறிய உத்திகளில் தவறு செய்தவன் தண்டிக்கப்படும் சாத்தியமாவது உள்ளது. இதை விட்டு ஏற்கனவே மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் மொட்டை அடித்து சிறுமைப்படுத்தினால்? அதுவும் தவறு செய்த பையனுக்கு எந்த தண்டனையும் வழங்காமல்???

  ReplyDelete
 5. I am happy, as usual you have transcendented "isms" and trying to interpret issues based on its merit.
  Every one has a write to interpret leaders including Gandhi -but not to degrade them.
  Gandhi seems to be more vulnerable and it is a great solace that people like you start interpreting him in a right sense.
  I am looking forward the readers reactions to those three critical questions you have raised

  ReplyDelete
 6. I have missed the prvilege of posting the first comment due to the incompatibility of google indic transliteration tool with your blog. Please enable it or otherwise enable to paste it

  ReplyDelete
 7. thanks for focussing The Guardian article here, Badri. The discussion thread in the newspaper for this article too makes an equally interesting reading.

  ReplyDelete
 8. பத்ரி,
  தலையை மொட்டை அடித்த பின்னும் அந்த பெண்ணுக்கு அவன் தொல்லை கொடுத்திருந்தால் காந்தி அவளது உடல் உறுப்புகளையும் முகத்தையும் சேதம் செய்துகொள்ள அறிவுறுத்தி இருப்பாரா?
  எப்படியும் அந்த பைய்யன் மொட்டை அடிக்காத எதிர் வீட்டு பெண்ணை தொல்லை செய்ய போகிறான்.சத்தியாகிரகம் என்பது அந்த பெண்ணை மட்டும் காப்பாற்றும் என்றால் அது ஒரு சுயநல சித்தாந்தமா?
  அந்த ஒரு குரங்குக்காக தெருவில் உள்ள எல்லா பெண்களும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டுமா?
  மொட்டை அடிக்கப்பட்ட பெண்ணுக்கு அதில் முழு உடன்பாடு இருந்திருக்குமா? பெண்ணாக பிறந்ததை நினைத்து அவள் எவ்வளவு வேதனை அடைதிருப்பாள்? இது அவளது மன இறுக்கத்தை அதிகரிக்கும் செயல்.

  தன்னை தானே சிதைத்து கொள்வதன் மூலம் நாம் பிரச்சனையில் இருந்து தற்கலிகமாக விடுபடலாம். ஆனால், அது ஒரு நிரந்தர தீர்வு கிடையாது.

  ReplyDelete
 9. So, you mean to say Women, by deforming herself or her appearance, can change the attitude of men???

  But why?

  ReplyDelete
 10. Please also read http://www.gandhi-manibhavan.org/activities/essay_breakingshackles.htm

  ReplyDelete
 11. ஆனந்த்: முடிவெட்டிக்கொள்வது என்றால் மொட்டை போட்டுக்கொள்வது அல்ல.

  ReplyDelete
 12. இது சுத்தாமாக புரியவில்லை பத்ரி.

  காந்தி எப்படி செய்தார் இதை

  அந்தவாலிபனுக்கு புரியவைத்து "பார் உன்னால் தான் இந்த பொன்னுங்க ரேண்டு பேருக்கும் முடி வெட்டிவிடுகிறேன்.நி செய்ததுக்குதான் இவர்கலுக்கு இப்படி நிகழ்ந்தது என்று சொல்லி செய்தாரா, இல்லை சொல்லாமலே செய்தாரா

  ReplyDelete
 13. காந்தியடிகளின் இது பற்றிச் சிந்தித்தது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மறந்துவிட்டு , இந்தச் சம்பவம் 2010 இலே நடந்தது போலப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

  எட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா? ஓட்டுரிமையா? போடி அடுப்பங்கரைக்கு என்று இருந்த காலகட்டத்திலே, இந்த மாதிரி ஒரு மனிதன் சிந்தித்தான் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

  //இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நான் எழுதுவது, மற்றவர்கள் பின்பற்றுவதற்காக அல்ல. அப்படிப் பின்பற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாவார்கள். எவ்வளவு தூரம் ஒருவன் இவ்விஷயங்களில் செல்ல முடியும் என்பதையும் சத்தியாக்கிரகத்தின் தூய்மையையும் காட்டுவதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

  இந்தத் தூய்மையே வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம். இவ்விதமாகப் பரிசோதனைகளை ஆரம்பிக்குமுன் ஓர் ஆசிரியர், அந்தக் குழந்தைக்குத் தாயும் தந்தையுமாக இருந்து எந்த விதமான விளைவுகளுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மிகக் கடுமையான தவம்தான் இப்படிச் செய்ய அவரைத் தகுதியுள்ளவராக்கும்.//

  என்ற காந்தியின் வாக்குமூலம் உண்மையானது என்ற பட்சத்தில், அந்த ஆள், நிசமாகவே கவனிக்கப்படவேண்டியவர், ஆழ்ந்து படிக்கப்பட வேண்டியவர்.

  ReplyDelete
 14. Its not correct to judge Gandhiji's view and his decisions. It is not fair to blame Gandhiji or whoever with limited knowledge. Probably if Gandhiji is alive, he would have admitted this as mistake. That doesn't mean Gandhiji has no vision or misguided.

  A good decision may be viewed as a bad decision over a period of time. It always happened in the history that leaders changed their stance as per the situation.

  I believe No one against his desire and focus; But there is no perfect solutions in the world...

  ReplyDelete
 15. பிரகாஷ்,

  நீங்கள் கூறுவதிலிருந்து இச்சம்பவம் இன்று நடந்திருந்தால் தவறு, ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதால் சரி என்று கூறுவதாகப் புரிந்து கொள்கிறேன். நீங்கள் கூறும்

  //எட்டுபத்து வயதிலே விவாகம், அதிருஷ்டம் இருந்தால் கைம்பெண் கோலம் இல்லாவிட்டால் உடன்கட்டைச் சதி, விருப்பு வெறுப்பு என்ன, உடல் நோவுண்டா என்ற அக்கறையின்றி இருட்டிலே தடவிப்புணர்ந்து முடிந்ததும் எட்டி உதைத்து டசன் கணக்கிலே பிள்ளை வரம், படிப்பா? ஓட்டுரிமையா? போடி அடுப்பங்கரைக்கு//

  என்பது போன்ற சூழல் இன்றும் எங்கோ ஒரு மூலையில் நிலவிக் கொண்டிருப்பதுதான். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு பொதுமக்களிடையே பரவியுள்ளது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான்.

  தாகூர் போன்றவர்களின் படைப்புகளைப் படித்தால், நூறாண்டுகளுக்கு முன்பு கூட நிலைமை நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு மோசமாக இருக்கவில்லை என்பதை உணரலாம். ஒரு பெண்ணுக்கு போதிய படிப்பறிவில்லாவிட்டாலும், தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்திப் பெறக்கூடிய ஒரு சூழல் நிலவியதாகவே அக்கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதிருப்பது போலவே அப்போதும் வெவ்வேறு சமூகத் தளங்களில் பெண்ணுரிமை என்பது வேறுபட்டிருக்கலாம். ஆனால் ஒரு தேசத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஒரு மோசமான முன்னுதாரணத்தை வழங்கிவிட்டுப் போனதுதான் இங்கு வருத்தமான செய்தி.

  ReplyDelete
 16. Had someone else done the same thing how many would support it?.Gandhi had some views at that time and he tried some measures.This trial and error approach would not be a good solution because it hinged on his views than on an analysis of the situation or the views of other parties.What would have happened had the teasing continued after cutting the hair.Gandhi got it wrong because his analogy with Sita was irrelevant here.Sita was a mythical figure.Real life in India was different. A 'Ravana' of Gandhi's times could have more than one wife
  and Hindu Pandits and law would have permitted that.The pundits and Kanchi Shankaracharya opposed fixing minimum age for girls.They never bothered about plight of the girls or their sufferings.Gandhi should have handled this differently.

  ஆனாலும் அவர் அனைவரிடமும் ஒரு டெமாக்ரட் ஆக, பேசிப் பேசித்தான் முடிவெடுத்தார். இதுதான் என் கருத்து. நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வரை நான் பொறுத்திருப்பேன்.

  இன்றைய பெண்ணியவாதிகள் காட்சிதரும் தோற்றத்தைத்தான் அவர் அன்று அந்தப் பெண்களுக்குக் கொடுத்தார்
  Your understanding of democracy and feminism is flawed. A 'democratic' solution would not be something as cutting a hair. It would be something that educates boys and girls on these issues and educate them about responsible behavior. It would abhor the idea or punishing one party for the fault of the other or invoking the sita as a symbol here.Surpanaka's nose was cut.Would Gandhi advocate a similar treatment for men teasing women.If X teases Mathifor his cartoons, I cant cut the hair of Mathi as a solution and even if he consents to that it is wrong.

  ReplyDelete
 17. 'ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியாவிலேயே கொண்டு வந்த சமூக மாற்றங்கள், மற்றும் மேற்கத்திய உலகில் நடைபெற்ற renaissance சீரமைப்புகள் ஆகிய அனைத்தையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு பாரிஸ்டர் பட்டதாரிக்கு இந்த அளவுக்குத்தான் சமவுரிமை பற்றிய சிந்தனை / புரிதல் இருந்தது என்பது வருத்தமான செய்திதான். '

  Gandhi's moral reasoning was often flawed because it lacked an objective analysis of the situation and it took somethings as axioms irrespectve of the circumstances.He objected to treating Kasturibha with Pencilin. Could you understand that.His notions on health and medicine were unreasonable.His objection was based that and not on the reality of the day.
  Often he behaved like a fundamentalist with strong views and imposed it on others.Harilal was an example.For his being and becoming a Mahatma some others had pay a heavy price.Hari Lal hated Gandhi and loved Kasturi Bha.Great men like Gandhi had their own flaws.Let us accept that and let us not defend him uncritcally.

  ReplyDelete
 18. Gandhi did not hide anything. For the uninitiated it might be shocking. Self infliction of pain is a recurrent theme in Gandhi's methods. That is what Satyagraha is all about. It is easy to correct a hundred people by inflicting pain to oneself than inflicting pain to hundred people. Most of us talk about women' rights only on paper. Most us are not even ready to accept a wife more intelligent than us but at the same time have the courage to criticise Gandhi. Gandhi is not certainly for hypocrites.Gandhi has written more than what one can read in a life time. How easy it is to form a opinion from just reading the contents page. Gandhi is much more than rocket science. That is why so many books and articles are written on him- perhaps more than anyone else- every thinking man under the sun wants to understand him.

  ReplyDelete
 19. டெஸ்டஸ்டெரோன் என்ன சொன்னாலும் கேக்காது ... அதனால் தான் உன்னைக் காத்துக்கொள்ள பர்தா அணிந்துகொள் என்று அர்த்ததோடு வந்த பழக்கமோ?? இசுலாமிய அன்பர்கள் விளக்குவார்களா?? இந்த கான்டெக்ஸ்டில் பர்தா சரியாகப் படுகிறது

  ReplyDelete
 20. மருதன் தன்னுடைய வலைப்பதிவில் காந்தியை பற்றி குறிப்பிட்ட விவரங்களுக்கும், நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிட்ட விவரங்களும், ஒன்ரோடு ஒன்று முறனாக இருக்கிறது.

  மருதன் மைக்கல் கானலன், கார்டியன் பத்திரிக்கையில் காந்தியைப் பற்றி வெளியிட்டுயிருந்த செய்தியை மேற்கோல் காட்டியிருக்கிறார். மைக்கல் கானலன் தன்னுடைய செய்திக்ளுக்கு ஆதாரமாக காந்தியின் படைப்புகளிலிருந்து மெற்கோள் காட்டியிருக்கிறார்.

  அந்த செய்திகள் தவறானது என்று சுட்டி காட்ட விரும்பினால் காந்தியினுடைய படைப்புகளில் அம்மாதிரியான செய்திகள் இல்லை என்று நிருபிக்கவெண்டும்.

  நிங்கள் உங்களுடைய வலை பதிவில அப்படி காந்தியினுடைய ஒரு படைப்பை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கோளுக்கு எடுத்துக்கொண்ட காந்தியினுடய படைப்பும், மைக்கல் கானலன் ம்ற்றும் மருதன் அவர்கள் எடுத்துக்கொண்ட படைப்புகளும் ஒன்ருதான என்று சந்தேகம் வருகிறது. காந்தியை பற்றி ஒரு செய்தியை வைத்துக் கொண்டு அவருடைய முலு சரித்திரத்தையும்/கொள்கையையும் இதுதான் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது, வந்துவிட்க்கூடாது.

  மாறாக காந்தியை பற்றி ஏற்கமுடியாத விஷயங்கள் நிறையவே உள்ளன. காந்தியை பற்றிய நம்முடைய அபிமானங்ளை விட்டுவிட்டு அவரைப் பற்றிய மற்றவர்களின் குறிப்புகளை தெரிந்துகொள்ள விரும்பினால் நம்க்கு பல உண்மைகள் விளங்கும், ஆச்சிரியமாகவும் இருக்கும்.

  காந்தியின் பெண்களை பற்றிய கருத்துகள் மட்டும்மல்லாது, தேசம், மதம், அஹிம்சை பற்றிய அவருடைய மாறுப்பட்ட கருத்துக்களை தெரிந்துக்கொள்வதற்கு பின்வரும் புத்தகங்களை படிக்களாம்.

  1) லெஜண்ட் ஆப் பார்டிஷன் (மித் அண்ட் ரியாலிட்டி) - சீர்வாய்
  2) மே ட் பிலீஸ் யுவர் ஹானர் - நேத்துராம் கோட்சே
  3) மருதனின் - இந்திய பிரிவினை
  4) நல் இரவில் சுதந்திரம்
  5) ட்ராஜிக் ஸ்டொரி ஆப் பார்டிஷன்.
  இன்னும் பல.

  இந்த விஷயத்தில் தெளிவு காண விரும்பினால், காந்தி மற்றும் அவர் சார்ந்தவர்களின் படைப்புகளை மற்றும் படித்தால் உண்மை புலனாகாது.

  ReplyDelete
 21. 1.பெண்கள் குறித்த காந்தியின் பார்வை இராமாயணத்தின் வழி பெறப்பட்டது. நிலவுடமைச் சமூகத்தில் பெண்(ணும்) ஆணின் ஓர் உடமையாகக் கருதப்பட்ட கருத்தியலில் எழுதப்பட்டது இராமாயணம். காந்தி, பத்ரி சொல்வதைப் போல ஹார்மோன் பிரசினையாக இதை அணுகவில்லை. டெஸ்டோஸ்டீரோன் பற்றிப் பேசும் பத்ரி ஏன் ஈஸ்ட்ரோஜன் பற்றிப் பேசவில்லை என்பது யோசிக்க வேண்டியது. காதலைப் பற்றி காந்தியின் அபிப்பிராயம் என்னவாக இருந்தது? யாராவது எழுதினால் தேவலை.

  2.வங்கத்திலும் தமிழகத்திலும் நிலவிய சூழலைக் கொண்டு தென்னாப்ரிக்காவில் நிலவிய சூழலை கணிக்க முயல்வது சரியல்ல.

  3.100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் free sex பற்றிப் பேசப்படவில்லை என்ற தகவலும் தவறு.
  >> காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்; மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர். பேதமின்றி மிருகங்க்ள் கலத்தல் போலே, பிரியம் வந்தால் கலந்தன்பு.பிரிந்து விட்டால் வேதனையொன்றில்லாது பிரிந்து சென்று வேறொருவனைக் கூட வேண்டும் என்பார்<<
  இது பாரதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.
  பாரதியும் இந்தக் கவிதையில் ஆண்களைச் சாடுகிறார். ஆனால் அவர் பார்வை காந்தியிலிருந்து வேறுபட்டது.

  ReplyDelete
 22. People who wants to criticize Gandhi, they look at mere events without looking at the substance. To find the substance one must understand completely. Badri, you have done a wonderful job of giving substance of the event. Great!

  When we try to understand anybody or any principles, it must be seen from the environment of the time period when the person lived or the principles came. If you look from your time, that too without understanding the substance, we are half-baked.

  Lekshmi N. Pillai

  ReplyDelete