சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் நாங்கள் பெருமையுடன் வழங்க உள்ள புத்தகங்கள் இவை. சென்ற ஆண்டு இவை இருக்கவில்லை. இந்த முயற்சி ஆரம்பித்தது மார்ச் 2010-ல்தான்.
அமர சித்திரக் கதைகள் (அமர் சித்ர கதா), ஆனந்த் பாய் என்பவர் வழிகாட்டுதலில் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட வரலாறு, புராண, இதிகாச, காப்பிய படக்கதைகள் மட்டுமல்ல, நிஜ மனிதர்களைப் பற்றியும் உருவாக்கப்பட்ட படக்கதைகள். பஞ்ச தந்திரம், தெனாலி ராமன், பீர்பால் படக்கதைகளும் உண்டு.
பின்னர் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு பிரைவேட் ஈக்விடி குழுமம், அமர சித்திரக் கதைகளை மட்டும் தனியாக வாங்கிக்கொண்டது. இந்தியாவில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தக பிராண்ட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அமர சித்திரக் கதைகள் என்று சொல்லிவிடலாம்.
பெரும்பாலும் ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் மட்டும் பிற மொழிகளிலுமாக இவை கிடைக்கின்றன. காமிக்ஸ் விரும்பிகள், இரு வண்ணத்தில் தமிழில் சுமார் 70-80 வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கு தேடினால் எங்கேனும் கிடைக்கலாம். முழு வண்ணத்திலேயே 15 புத்தகங்கள் வரை தமிழில் அமர சித்திரக் கதைகள் நிறுவனத்தாலேயே வெளியாகியிருந்தன. அவையும் இப்போது அச்சில் இல்லை. அதில் எழுத்துகள் கையாலேயே எழுதப்பட்டிருக்கும். கணினியுகத்துக்கு முந்தைய காலகட்டம் அது.
மார்ச் 2010 முதல், அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம். அவை அமர சித்திரக் கதைகள் பிராண்டிலேயே வெளியாகும்.
இதுவரையில் 24 புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அனைத்தும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மேலும் சில புத்தகங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ன்போது நிச்சயம் 100 புத்தகங்களாவது இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
இந்தப் புத்தகங்களில் நாங்கள் வெளியிட்ட முதல் எட்டை நான்தான் தமிழாக்கம் செய்தேன்! அதில் எனக்கு மிகுந்த திருப்தி. அடுத்தவற்றை எல்லாம் ப்ராடிஜி எடிட்டர் சுஜாதா மொழியாக்கம் செய்ய, அவற்றை நான்தான் எடிட் செய்கிறேன். என் பிற அனைத்து வேலைகளையும்விட எனக்கு மிகுந்த சந்தோஷம் தருபது இந்த வேலைதான்.
நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று தொடங்கி, பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா வந்து, பெரிய எழுத்து மந்திரவாதக் கதைகளைப் படித்து அங்கிருந்து விகடன், குமுதம் படிக்க ஆரம்பித்தேன் நான். அதேபோல இன்று என் மகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்கிவைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, ஆங்கில அமர சித்திரக் கதைகளிடம் தஞ்சம் புகுந்தேன். இப்போது அவள் அமர சித்திரக் கதைகள் தாண்டி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாள்.
புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது என்று குறைப்படுவோர் பலர். தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் எங்கும் என்று முறையிடுவோர் பலர். வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துவைத்துள்ள பலரும் எப்படித் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பின் சுவையை ஊட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் பதற்றமும் அடைகிறார்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இதற்கான ஒரு விடை: அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
விலையும் மலிவுதான். 32 பக்கங்கள் கொண்ட (கிரவுன் 1/4) ஒவ்வொரு முழுவண்ணப் புத்தகமும் வெறும் ரூ. 35 மட்டுமே!
இதுவரை வந்துள்ள அனைத்து அமர சித்திரக் கதைகள் (தமிழ்) புத்தகங்களை வாங்க
இதற்குமுன் நான் அமர சித்திரக் கதைகள் பற்றி எழுதிய பதிவுகள் ஒன்று | இரண்டு
"அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்." Dear Badri, you are 100% right. I did the same with my son and he is now into reading big time.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி பத்ரி
ReplyDeleteஇது போன்ற விஷயங்களில் கிழக்கு முன்னோடி என்று நான் கருதுகிறேன். இது போக சிறிய அளவிலான கடினப் பக்கங்கள் கொண்ட மற்ற புத்தகங்களையும் பெங்களூர் புத்தகத் திருவிழாவில் பார்த்தேன். பொதுவாக நான் பார்த்தவரை இவை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் (நவ்நீத் பதிப்பகத்தார்).
புத்தகத் திருவிழா ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் புதுப் புத்தகங்களைப் பற்றி அறிமுகப் படுத்துகிறீர்கள். இது மிக அவசியமான ஒன்று. இல்லாவிட்டால் வாசகர்களுக்கு எப்படித் தெரியும்? மற்ற பதிப்பகத்தினரும் இதை செய்ய வேண்டும்.
உண்மை. படிப்பில் ஆர்வம் வர காமிக்ச தான் சரியான வழி.
ReplyDeleteதில்லியில் உங்களிடன் சொன்ன துப்பறியும் சாம்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
சுரேஷ்
தீபாவளி சமயத்தில் சேலம் ரயில் நிலையங்களில் இந்த புத்தகங்களை பார்த்தேன். மொத்தமாக இரண்டு தமிழ் பதிப்புகள் வைத்திருந்தார்கள். கிட்டதட்ட 100 ஆங்கில அமர் சித்திரக்கதைகளுக்கு நடுவில் இரண்டே இரண்டு தமிழ் அமர் சித்திரக்கதை புத்தகங்களை பார்த்தது மிகவும் வேதனையாக இருந்தது.
ReplyDeleteசிறுவர்கள் தமிழ் படிக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.
ஆகையால் இது போன்ற முயற்சிகளை நிறுத்தி விடாதீர்கள்.
Hi Badri,
ReplyDeleteOrdered all of them now online.
This incident happened 3 years back when I was talking to a coworker. Her kids were grown up then, some married and others around that age. She was a single Mom. One day, at home she questioned her grown up kids "What was the thing that you liked in me when you grew up"? The kids replied, the "time you would spend with us reading story books every evening before we sleep. That is the best part we like in you". She also said that, it is not the money or other things they look from you but your time....
I follow the advice, I make it a point to spend some 20 mins every night (other than teaching or playing) with my daughter before she goes to sleep. While in the bed, read some small stories and then put her to sleep. She is 8 now. Another couple of years she may need me... beyond that she will get into her own world and move on...
I am doing what I can and have to...Just thought of sharing it when I read this post.
Thanks
Venkat
பத்ரி...கிழக்கு புத்தகங்களில் எதாவது கிண்டில் பதிப்பு வந்திருக்கிறதா? வர வாய்ப்பு இருக்கிறதா?
ReplyDelete// நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம்.//
ReplyDeleteஅருமை பத்ரி! தமிழ் சிறுவர் இலக்கியத்திற்கும், தமிழ்க் குழந்தைகளிடம் நமது பண்பாட்டையும், சரித்திரத்தையும், நாயகர்களையும் அறிமுகப் படுத்துவதற்கும் NHM செய்யும் மிகப் பெரிய பங்களிப்பு இது. பாராட்டுக்கள்!
அனைத்துப் புத்தகங்களும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் தடித்தடியாக மூன்று புத்தகங்கள் கொண்ட "Mahabharata collector’s edition" ம் வருமல்லவா? தனித்தனியாக வந்த எல்லா மகாபாரத அ.சி.க புத்தகங்களையும் தொகுத்து நேர்த்தியான முறையில் இப்படி 3 புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒரு பொக்கிஷம் - குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படிக்க ஆரம்பித்தால் உடனே ஈர்க்கப் பட்டு விடுவார்கள்!
Mr Badri please bring all Amar Chitra books in tamil. Even the old editions. Amar Chitra have stop publishing some of thier old titles, e.g Sambhaji. I have some of the English titles already. Now eagerly waiting for tamil versions.
ReplyDeleteதிரு.பத்ரி,
ReplyDeleteஒரு வேண்டுகோள்.
கண்காட்சி இயங்கும் 15 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் ரூ.250 வைக்கவும்.இதில் 4 பேர்களை அனுமதிக்கலாம்.உள்ளே அவர்கள் இந்த துகைக்கு எந்த புத்தகங்கள் வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம்.
நன்றி.
பி.கு:இவ்வாறு சில யோசனைகளை BAPASI க்கு ஏற்கனவே தெரிவித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உங்களை அணுகுகிறேன்
//இதில் தடித்தடியாக மூன்று புத்தகங்கள் கொண்ட "Mahabharata collector’s edition" ம் வருமல்லவா?//
ReplyDeleteஅதை நானும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
அமர் சித்திர கதைகளில் பல பூந்தளிர் அமர் சித்திர கதைகள் என்று தமிழில் வெளிவந்தது
//நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். // நானும் தான். ஏனோ இந்தியாவில் சித்திரக் கதைகளுக்கு மதிப்பில்லை. பெற்றோரும் ஊக்குவதில்லை. ஆஸ்டெரிக்ஸ் டின்டின் படித்துதான் பிரஞ்சு மேல் விருப்பமே வந்தது.
ReplyDeleteI am planning to use the photos of this post for my blog posting. Hope it's ok with you. Thanks
ReplyDeleteSIR, I WANT TO BUY ALL AMAR CHITRA KATHAI AVAILABLE IN TAMIL. THE LIONK YOU MENTIONED ABOVE IS NOT WORKING. PLEASE HELP ME OUT.
ReplyDelete