Friday, December 31, 2010

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கும் என் சிறு நூல். பக்கம்: 88, விலை ரூ. 40.பா.ராகவனின் முன்னுரை

9 comments:

 1. பத்ரி அவர்களின் வலைததளத்தில் இட வேண்டிய எனது பின்னோட்டத்தை இங்கே இட்டு விட்டேன்.

  நன்றி,
  சதீஸ் எம். ஆர்.

  ReplyDelete
 2. டாபிகலான சர்ச்சை, நடக்கவிருக்கும் புத்தக சந்தை இரண்டையும் முடிச்சுப்போட்டு, நாடு தழுவிய ஒரு மெகா பிரச்னையை புத்தக வியாபாரமாக்கும் முயற்சி என்றால் அது தப்பே இல்லை.

  ஆனால் ஊழலே நடக்கவில்லை என்று நிறுவப்போகிறீர்களா அல்லது 1,76,000 கோடி இல்லை, அதைவிடக் கொஞ்சூண்டு குறைவுதான் என்று நிறுவப் போகிறீர்களா, புரியவில்லை. வெறும் 100 கோடியாக மட்டுமே இருந்தால்கூட ஊழல் ஊழல் தான். மக்கள் பணத்தை அல்லது மக்களுக்கு வந்திருக்கவேண்டிய பணத்தைச் சுருட்டி ஸ்வாஹா பண்ணியது ராசாவாக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் சாமானனியனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளி தான்.

  இதெல்லாம் இல்லவே இல்லை. மின்னியல் டெக்னாலஜி, குவாண்டம் சூத்திரங்கள், குவால்காம் சிப் டிசைன், GSM/CDMA algorithm இதெல்லாம் புரியாமல் இதைப்பற்றி யாருமே பேசக்கூடாது என்று சொல்லப்போகிறீர்களா? அவ்வளவு அபத்தமாகச் சொல்லமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை. ஆனால் பாராவின் முன்னறிவிப்பறிக்கை அந்தத் திசையில்தான் நீள்கிறது. நான் கவலைப்படுகிறேன்.

  என்னதான் பத்ரி இது பற்றி ஏற்கனவே எழுதியதைப் படித்திருந்தாலும், நானும் சேர்ந்து கும்பலோடு கோவிந்தாவாக தர்ம அடி அடித்திருந்தாலும். எது எப்படி இருந்தாலும், புத்தகத்தை வாங்காமல், படிக்காமல், அது பற்றிய விமரிசனம் சரியாக இருக்காது,

  வாங்கிவிட்டு வெச்சுக்கறேன் என் கச்சேரியை!. ஒருவேளை புக்ஃபேர் முடிவதற்குள் நான் அங்கே வந்து நிற்கவில்லையென்றால் எனக்கு ஒரு பார்ஸேல்! தனியாக எடுத்து வையுங்கள்!

  ReplyDelete
 3. புத்தகத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது அலுவலகத்தில் (சாப்ட்வேர்) கூட இந்த ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ஏதோ ராஜாவும் தி.மு.க வும் எடுத்தக் கொண்டதைப் போலவே விவாதிக்கப்படுகிறது. முதலில் சி.எ.ஜி ரிபோர்ட் பத்தியே விவாதிக்க வேண்டிய நிலையில், அது தெரிவிக்கிற எண் வேறு விதமாக புரோஜெக்ட் செய்யப்படுகிறது. இந்த புத்தகத்தை அவர்களுக்குப் பரிசளிக்க விரும்புவேன். ஆங்கிலத்திலும் வெளியிடும் எண்ணம் உள்ளதா? இங்கு பெங்களூரில் எனது மற்ற மாநில நண்பர்களுக்கும் கொடுக்க வசதியாக இருக்கும்.

  இதை தான் பதிவிட நினைத்தேன். எனது முதல் பின்னூட்டத்தை எடுத்து விடலாம்.

  நன்றி,
  சதீஸ் எம். ஆர்.

  ReplyDelete
 4. This is little too much and too early. Though i may not have a chance to read this, it can be a good thing for a blog post.. not a book.

  anyway, keep defending

  ReplyDelete
 5. குருமூர்த்தி துக்ளக்கில் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன். ஏனோ அவர் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை. அதற்கு பதில் உங்களுடைய புத்தகத்தை வாங்கிட வேண்டியதுதான்.

  ReplyDelete
 6. Sir, If you publish it in english too, it will be great. Thanks a lot.

  ReplyDelete
 7. Since Badri is of the opinion that A.Raja is still innocent, this can be sold in DMK meetings. It may end up as a best seller.

  ReplyDelete
 8. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்,

  இதைப்பற்றி பத்ரி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுவிட்டார்.அதனுடைய நீட்சியாகத்தான் இந்த புத்தகம் இருக்கும் என்பது என் துணிபு.

  ராசா குற்றவாளிதான் என கண்டுபிடிக்கப்பட்டு,ராசா,மு.க குடும்பத்தினர் குற்றங்களை முழுவதும் ஒப்புக்கொண்டால் கூட,சில அறிவு ஜீவிகள் அவர்கள் குற்றமற்றவர் என
  வாதாடிக்கொண்டுதான் இருப்பர்.

  Anyway the issue is fast getting forgotten by the concerned (voters of TN)So DMK need not have any fears.

  ReplyDelete