Wednesday, December 22, 2010

உலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?


கடந்த ஆறு மாதங்களின் உலகின் முக்கிய தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள், வீட்டோ அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் இந்தியா வந்தனர். அப்போது அவர்கள் சொன்னவை, செய்தவை.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், 27-29 ஜூலை 2010

இந்திய-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தங்கள்: $1.1 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.”

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 6-9 நவம்பர் 2010

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்: $10 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாத வலைப்பின்னல்கள், முக்கியமாக லஷ்கர்-ஈ-தோய்பா, தோற்கடிக்கப்படவேண்டும். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும்.”

பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி, 4-7 டிசம்பர் 2010

இந்திய-பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள்: யூரோ 7 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“அண்டை நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனுமதிக்கமுடியாதது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் தன் முயற்சிகளை அதிகப்படுத்தவேண்டும்.”

சீனப் பிரதமர் வென் ஜியாபோ, 15-17 டிசம்பர் 2010

இந்திய-சீன வர்த்தக ஒப்பந்தங்கள்: $16 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பேச்சு ஏதுமில்லை
பாகிஸ்தான் பற்றி: பேச்சு ஏதுமில்லை. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன என்று கூட்டு அறிக்கை மட்டுமே.

ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவ், 21-22 டிசம்பர் 2010

இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்கள்: $30 பில்லியன்
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.
“பயங்கரவாதத்துக்கு உதவும், தூண்டிவிடும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகள், பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் அளவுக்கே குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பாகிஸ்தான் தண்டனை அளிக்கவேண்டும்.”

3 comments:

  1. ஒரே குடும்பத்தில் 3 மந்திரிகள் என்பது ”அற” செயலாக இருக்காதுனு சொன்ன அறதலைவரை பற்றி ஒன்னுமே சொல்லலையா?

    ReplyDelete
  2. see this http://www.thestreet.com/_yahoo/story/10950403/1/4-banks-to-benefit-from-china-india-deals.html?cm_ven=YAHOO&cm_cat=FREE&cm_ite=NA

    ReplyDelete
  3. பத்ரி,என்ன சொல்ல அல்லது சுட்ட விரும்புகிறீர்கள்?
    இந்தியாவைச் சொறிந்து விட்டு விட்டு பிசினஸ் செய்து கொண்டு போகிறார்கள் என்றா?

    இந்தியாவுடன் பிசினஸ் செய்ய வெளிநாடுகளுக்கு இந்தியாவைச் சொறிந்து விடும் வகையான ஸ்டேட்மெண்ட் விட வேண்டும் என்று கூட அவசியமில்லை...தலைவர்களின் பினாமி கம்பெனிகளில் முதலீடு செய்தால் பத்தாது??!!

    கிரீன் ஹவுஸில் ஸ்வான் பங்கு வாங்கிய கதையெல்லாம் பத்திரிகைகளில் நாறுகிறதே,படிக்க வில்லையா?

    ReplyDelete