- கல்பாக்கம் டவுன்ஷிப், அலைகளால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 பேர்கள் இறந்திருக்கின்றனர்.
- கல்பாக்கம் டவுன்ஷிப்பில் இருந்தவர்கள், அங்கிருக்கும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடப்பெயற்சி அலைகளால் ஏற்பட்ட அழிவினால்தான்.
- இரண்டு அணு உலைகளில் ஒன்று ஏற்கனவே பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது.
- சுனாமியைத் தொடர்ந்து இரண்டாவது அணு உலையும் மூடப்பட்டுள்ளது.
- இரண்டு உலைகளுக்கும் எந்தச் சேதமுமில்லை. கதிர்வீச்சு அபாயம் எதுவுமில்லை.
இன்று மதியம் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் காகோட்கர் பத்திரிகை, ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
யாரும் அணுக்கதிர்வீச்சு தொடர்பாக பயப்பட வேண்டிய தேவையில்லை.
நல்ல செய்தி
ReplyDeleteகல்பாக்கத்தில் உள்ள என் உறவினர் ஒருவர், குடும்பத்துடன் நேற்று எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். பாதிப்பு மிக மோசம் என்றே சொன்னார்கள். அடுக்கு மாடி வீடுகளின் தரைத்தளத்திலெல்லாம் தண்ணிர் வந்துவிட்டதாம். ஊரில் கார் வைத்திருப்போர் பெரும்பாலோனோர் தம் வாகனத்தை இழந்திருக்கிறார்கள். ஏபிடிகாரர்கள், பழுதான கார்களை மொத்தமாக எடுத்துப் போயிருக்கிறார்களாம். இலவசமாகப் பழுதுபார்த்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கல்பாக்கத்தில் இருந்த மக்கள் அனைவரையும் சிறிது தொலைவிலுள்ள 'அணுப்புரம்' என்ற புதிய நகரியக் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்திருக்கிறார்களாம். நகரில் பிரபலமான ஒரு மருத்துவர், ஒரு பாட்டு ஆசிரியர், ஏழெட்டுக் குழந்தைகள் உள்பட பல மீனவர்கள் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. அணு ஆலை காப்பாற்றப்பட்டுவிட்டது மட்டுமே நல்ல செய்தி.
ReplyDeleteBy: பாரா