இன்றைய நிலவரப்படி நாகை மாவட்டத்தில் வேண்டிய அளவு உணவு, (பாக்கெட்) தண்ணீர், உடைகள் என நிறைய வந்துள்ளன. ரஜினி ராம்கியும் தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளிலும் தேவையான அடிப்படைப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன என்று தகவல் கிடைத்ததாகச் சொல்கிறார்.
ஆனால் இப்பொழுதும் கூட உடல்கள் கடலிலிருந்து உள்ளே அடித்துவரப்படுகின்றன. இப்பொழுது தன்னார்வத் தொண்டர்கள் சற்று அதிகமான அளவில் வந்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அனைவரும் முகம்/வாய் மூடிய நிலையில்தான் உடல்களை அப்புறப்படுத்தி எரிக்கின்றனர்/புதைக்கின்றனர்.
தொற்று நோய்கள் (காலரா போன்றவை) ஏதும் பரவும் முன்னர் உடல்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து முடிய வேண்டுமே என்று வேண்டுவோம்.
சர்ஜிகல் கையுறைகள், முகத்தை மறைக்கும் முகமூடிகள், பிளீச்சிங் தூள் போன்ற மருத்துவப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இன்று இவற்றுள் சிலவற்றை வாங்கி நாகைக்கு அனுப்ப நண்பர்கள் சிலர் முயற்சி செய்கிறோம்.
இன்றைய செய்திப்படி தமிழக அரசு மீனவர்கள் இழந்த வலைகளுக்கு பதிலாக புதியதை வாங்கித்தரும் என்றும், வேறு பல்வேறு உதவிகளும் செய்து தரும் என்றும் வந்துள்ளது.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
15 hours ago
உண்மையில் நம்பிக்கை அளிக்கும் செய்தி பத்ரி. ஆறுதல் அடையும் மனம்
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஒரு வாரத்தில் உண்மை நிலை தெரியவரும் என்று நினைக்கிறேன். முகாம்களில் இருக்கும் வரை மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கும். முகாமிலிருந்து வெளியே வந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும்போதுதான் மக்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும். வலைப்பதிபவர்கள் சார்பாக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்து வேண்டிய உதவிகளை செய்ய முடியுமா? அதற்கான வழிமுறைகள், எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் பற்றி உங்களது கருத்தை தெரிவியுங்கள்.
Want to help the needy people who got affected by Tsunami visit this site.
ReplyDeletehttp://www.tsunamivictims.org...It has options for receiving funs through cards
Anbudan
Aravindan