சிங்கப்பூரில் நடந்த தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கான (11-12 டிசம்பர் 2004) இந்திய குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி
தமிழ் இணைய வளர்ச்சி: உயர்ந்த லட்சியம் எதுவாகும்
1. சர்ச் எஞ்சின்
என்னுடைய கணிணியிலிருந்து இண்டர்நெட் மூலமாக எந்தவிதமான தகவல்களையும் விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப அறிவுத்தாள்களையும், எண்ணக்களஞ்சியங்களையும் search engine கள் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது. எனக்கு ஓர் எண்ணம் ஆங்கிலத்தில் எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும் சில மேற்கத்திய நாட்டு மொழிகளில் மட்டுமே மெஷின் மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது. நான் அறிந்த வரையில் எந்த மொழியில் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலை client server and web architecture மூலமாக திரும்பப் பெற முடியும். சில search engine கள் மட்டும் மேற்கத்திய மொழிகளிலிருந்து (French, German, Spanish, Italian & Portugese) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தருகிறது. ஆங்கிலத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க வேண்டுமானால் அதை எந்த எந்த விதங்களில் நாம் அடைய முடியும் என்பதை இந்த மாநாட்டு நிபுணர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
2. இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர்
இதுவரை நாம் ஒவ்வொருவரும் சிறு சிறு முயற்சிகள் செய்து தமிழ் இண்டர்நெட் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம். இந்நிலை மாறி நமக்கு ஒரு பெரிய இலட்சியம் அவசியம். அந்த இலட்சியம் என்னெவென்றால் தமிழ் சார்ந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்புகளான browser, web server, application server, database server, mail server களை சொந்தத் தமிழ் மொழியில் unicode version 4.0 மூலமாக open source code வழியே வடிவமைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வழியே இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களையும், தொடர்புகளையும், store செய்தலையும், retrieve செய்தலையும் செயல்படுத்திக் காட்டவேண்டும். இதன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தாய்மொழி வழியே ஏராளமான அறிவுக் களஞ்சியங்கள் நேரடியாகச் சென்றடையும். தமிழ் வளர்ச்சி, தமிழ் படைப்பு, தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்கள் செயல்பாடு எல்லாம் இதன் மூலம் பெருகும். நீங்கள் இந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மட்டும் அல்ல, மற்ற இந்திய மொழிகளும் இந்த அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாறி அம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள ஒரு ஊன்றுகோலாக அமையும். இந்த அடிப்படை கட்டமைப்பு தமிழ் உலகம் முழுதும் பயன் படுத்தப்படும் போது மற்ற search engineகள் அதன் சொந்த மொழியிலேயே எடுத்து உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் கொடுக்க ஏதுவாக இருக்கும். இந்த இரண்டு எண்ணங்களும் நிறைவேற்றப்பட்டால் பல மொழி அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தும் தமிழருக்கு தமிழிலேயே கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் தமிழ் மொழி அறிவுக் களஞ்சியங்கள் (கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அறிவியல் விஞ்ஞானம், தொழில்நுட்பம்) அனைத்தும் search engineகள் மூலமாக உலகெங்கும் சென்றடையும்.
உங்கள் முயற்சி வெல்க.
(ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்)
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
வாழ்த்துக்கள் பத்ரி
ReplyDeleteBy: karthikramas
வாழ்த்துக்கள் இது தொடர்பாக விவாதிக்க , பங்கேற்க இனையத்தில் எதேனும் தளம் இருக்கிறதா?
ReplyDeletehttp://www.infitt.org/ என்பது உத்தமத்தின் (INFITT) தளம்.
ReplyDeleteவிவாதத்திற்கு என தனியான தளம் எதுவும் இல்லை. இதற்கான தேவை உள்ளது என்பதை உத்தமம் குழுவினருக்குத் தெரிவிக்கிறேன்.
http://groups.yahoo.com/group/tamilinix என்னும் யாஹூ! குழுமத்தில் லினக்ஸ் இயக்குதளத்தைத் தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் பற்றி பேசப்படுகிறது.
பிற இயக்குதளங்கள் மீதான விவாதத்திற்கு - முக்கியமாக மைக்ரோசாஃப்ட், மேகிண்டாஷ் ஆகியவற்றை தமிழாக்குதல் குறித்த விவாதங்களுக்கு என சரியான தளம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இதைப்பற்றிய விவரங்களுடன் வருகிறேன்.