திடீரென - குற்ற உணர்ச்சி மிகுதியால் - இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் "மற்றுமொரு சுனாமி" என்று பயமுறுத்தல் அழைப்பு விட, அதனைக் கேட்டு ஒவ்வொரு தென் மாநிலமும் அவசர அவசரமாக எல்லோரையும் கடலை விட்டு அகன்று, மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு சொல்ல, ஒரே களேபரம்.
கடலை ஒட்டி இரண்டு கி.மீ தொலைவில் உள்ள அனைவரும் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது சாதாரண விஷயமல்ல. இந்தியாவின் மாபெரும் கடற்கரை ஓரங்களில் பல லட்சம் பேர் குடியிருக்கின்றனர்.
என்னதான் நடக்கிறது?
கடந்த ஏழு நாள்களில் எங்கெங்கெல்லாம் நில அதிர்வு, எந்த அளவில் நடக்கிறது என்பதை அமெரிக்காவின் நிலவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் பார்க்கலாம்.
வடக்கு சுமத்ராவில் 9.0 ரிக்டர் அளவில் நடந்த நில நடுக்கத்தையொட்டி, அங்கும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், தினமும்... ஆம், தினமும், நில அதிர்ச்சி வந்தவண்ணம் உள்ளது. இந்த after shock இன்னமும் சில நாள்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கடந்த 12 மணி நேரத்தில் சுமத்ராவில் மூன்று நில அதிர்ச்சிகள் 5.6, 5.7, 5.3 ரிக்டர் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு நாள்களில் அந்தமான் நிகோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 30 நில அதிர்வுகள்.
இந்த அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படப் போவதில்லை.
ஒருவர் சென்னை ரிசர்வ் வங்கிக் கட்டடம் வரை தண்ணீர் வந்துவிட்டது என்று எழுதியிருந்தார். அப்படியொன்றும் நடக்கவேயில்லை. கடல் உறுமியிருக்கலாம். அலைகள் கூட ஆர்ப்பரித்திருக்கலாம். ஆனால் சுனாமி ஏதும் இதுவரையில் இல்லை.
அரசின் வீண் "புலி வருது" பயமுறுத்தலால் இன்று நாகை போன்ற இடங்களில் மீட்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மக்கள் மனதில் தேவையற்ற பீதி.
ஆனால் அவ்வப்போது "No need to panic, we are asking people only to be cautious" என்கிறார்கள் மத்திய அரசுத் தரப்பினர்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
4 hours ago
உண்மையில் பாதிப்பு இல்லை என்பதை கேட்டு பெருமூச்சுவிட முடிகிறது. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனாலும் புலி வருது பயமுறுத்தல் மட்டும்தான், புலி வரவில்லை என்று கேட்க நிம்மதியாய் இருக்கிறது.
ReplyDeleteஐயா,
ReplyDeleteஇது சரியில்லை. அரசுக்குக் கிடைக்கும் எந்த சிறு தகவலையும் பரப்ப (disseminate) வேண்டியது அரசின் கடமையே. அதனை பரபரப்பாகவும் மீட்பு பணிகளை நிறுத்துவதுமே தவறானவை.
The Govt. reacts slowly to disasters but when it over reacts, it does aggressively.
By: மணியன்
This new alert is effective until 6 pm today (expires in a few hours from now)
ReplyDeletehttp://www.moneycontrol.com/backends/News/frontend/news_detail.php?autono=158454
need help from india
ReplyDeleteTheese Medicines need immediately in srilanka north and east.Anybody can help from India or anywhere Pls contact eelanathan@yahoo.com
1)Pirton
2)Amaxoline
3)Cefelexine
4)Penagan
5)Brafan
6)Bandage
7)Cotton wool
8)Plaster
9)Gension Violet
10)Surgical Spirit
11)Ceyline
12)Declopinic Sodium
13)Cloxacilin
14)IV canala
Water purification pills
ஈழநாதன்.
சகோதரர்களுக்கு
ReplyDeleteமட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குவதற்காக பின்வரும் மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.eelanathan@yahoo.com
1)Piriton
2)Amaxoline
3)Cefelexine
4)Penagan
5)Brufan
6)Bandage
7)Cotton wool
8)Plaster
9)Gension Violet
10)Surgical Spirit
11)Ceyline
12)Declopinic Sodium
13)Cloxacilin
14)IV canula
15)IV needdless
16)IV cyringes 10cc,5cc,3cc,2cc,17.50% dxtros 25% dxtros
18)Erythromicin
19)Toxoid
20)Crape Bandage
21)Betadine
22)Probanthine
23)Maxolone
24)H2O2
25)Aldomet
Water purification pills
இந்தியாவிலிருந்து யாராவது இவற்றை விமானப் பொதிகளாக அனுப்ப முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
ஈழநாதன்
(I am not sure whether he checked your mail.)
ஒரு வேண்டுகோள். உங்கள் போன்று எற்படுதிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க முடியுமா? சிறிது நாட்களுக்குமுன் தமிழில் எழுவதைப்பற்றி ஒரு வலைத்தளம் இருந்தது. அதை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை
ReplyDeleteமேலும் உங்களது தளத்தை Firefox browser இல் படிக்க முடியவில்லை. அதிலும் படிக்க என்ன செய்யவேண்டும்?
By: N
கடைசி மறுமொழியில் ஒரு சொல் விட்டு போய் விட்டது.
ReplyDeleteஉங்கள் ப்ளாக்(Blog) என்று படிக்கவும்
By: N