இந்தோனேஷியா, இலங்கை ஆகிய இடங்களில் நேர்ந்துள்ள இழப்பு மிகவும் மோசமானது. இவ்விரு நாடுகளிலும் ஆளும் அரசுக்கு எதிராக சண்டையிட்ட குழுவினர் கையில் இருக்கும் இடங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சேதம் ஏற்பட்டுள்ள, அரசின் கீழுள்ள பகுதிகளில்கூட மீட்புப் பணிகள் நடப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசின் அங்கம் ஏதும் இல்லாத விடுதலைப்புலிகள் கீழுள்ள பகுதிகளில் அரசு நிறுவனத்தால் எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும்?
இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கையிலான தமிழர் பகுதிகளுக்கான நிவாரணத்தை சரியாகச் செய்யக்கூடியவர்கள் விடுதலைப் புலிகள்தான். ஆனால் பிற நாட்டு அரசுகளால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஓரமைப்பிற்கு எந்த அளவுக்கு பிற நாட்டு அரசுகள் உதவி செய்யும் என்று தெரியவில்லை.
இந்தியா இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறது. இதில் எத்தனை வடகிழக்கிலங்கைக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை. அதைப்போல இந்தியா அனுப்பியுள்ள மருத்துவர்களில் சிலர்தான் திரிகோணமலைப் பகுதிக்கு மட்டும் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏதேனும் அமைப்பு மருத்துவர்கள் பலரை ஒன்று சேர்த்து வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசே இந்தச் செயலை முன்னின்று செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை.
செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை, (ஆக்ஸ்ஃபாம்?) வடகிழக்கிலங்கையில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்றும் தெரியவில்லை.
வடகிழக்கிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
15 hours ago
இதில் அரசாங்கம் இலங்கை அரசோ, இந்திய அரசோ எதுவும் செய்யகூடும் என்ற நப்பாசைக்கு அர்த்தமே இல்லை. எல்லா தமிழர்களும், அரசு நிறுவனங்களை தவிர்த்து, இந்த விஷயத்தில் புலிகள் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்வதே சரியானது.
ReplyDeleteவைகோ போன்றவர்கள் இந்த நேரத்தில், இந்த விஷயம் குறித்து பேசாமல் வேறு என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்கள்? மத்திய அரசை இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய இவர்கள் இந்நேரம் மவ்னமாகவோ, வேறு எதையோ பேசிகொண்டிருந்தால், அதைவிட மொள்ளமாறித்தனம் கிடையாது. ஈழபிர்ரசனையில் போராதரவு தந்து சத்தம் எழுப்பியவர்கள் இப்போது இந்த பிரச்சனை குறித்து பேசுவது மிக அவசியமானது.
உண்மை அதுதான். அங்கிருக்கும் மக்களுக்கு வெளியுதவியென்று பெரிதாக எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகமே முழுமூச்சாகச் செயற்படுகிறது. செய்தி ஊடகங்கள் கூட சரியான நிலைவரத்தைத் தெரிவிப்பதில்லை.
ReplyDeleteவசந்தன்.
By: வசந்தன்.
இந்தியா ஒரு குறிப்பிட்ட சதவிகித உதவிகளை வன்னி பகுதிக்கு அளிக்க இலங்கை அரசை கட்டாயபடுத்தும் என்று தோன்றவில்லை- நம் அரசியல்வாதிகள் சத்தம் எழுப்பினாலும். தமிழகத்தில்ம் அரசு சாராமல்தான் அதை செய்தாக வேண்டும்.
ReplyDeleteநான் அறிந்த வரையில் தமிழகதில் பணம், பொருட்கள் பெரிய பிரச்சனை இல்லை என்று தெரிகிறது. அதில் ஒரு பகுதியை வன்னி பகுத்திக்கு (அரசிடம் அல்ல) அளிப்பதே தமிழ்நாட்டிலிருந்து செய்ய கூடியது. குறைந்த படசம் தமிழ் தேசியம் பேசியவர்கள் அதற்கு முற்சிக்க வேண்டும்.
பத்ரி அவர்களே TRO என்பது இலங்கை நிர்வாக சேவைகளின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்பு(NGO).வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஒரே வழி அருகிலுள்ள TRO கிளையை நாடுவதுதான்.இப்போதுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகூட வன்னிப்பகுதிக்கும் அம்பாறைக்கும் போய்ச்சேருமா எனப்து சந்தேகமே.
ReplyDeleteஇந்தியா அனுப்பவிருக்கும் நூறு கோடியிலும் அமெரிக்கா அனுப்பிய 15 மில்லியனிலும் எவ்வளவு சதவீதம் இராணுவத்துக்குப் போய்ச்சேரும் என நினைக்கிறீர்கள்.பேச்சுவார்த்தையை மீள ஆரம்பித்தாலொழிய நிதியுதவி இல்லை என்று ஜப்பானும்,அமெரிக்காவும் கைவிரித்திருந்த நிலையில் இந்த நிதி உதவி இலங்கை அரசுக்கு புதையல் மாதிரி.குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் நடந்த இழப்பை மூடி மறைப்பது எதற்காக வரும் நிதியெல்லாவற்றையும் முடக்கி ஆயுதம்வாங்கிச் சேர்ப்பதற்குத்தான்.இதுவரை BBC,CNN போன்ற ஊடகங்களோ அல்லது இலங்கை அரசுக்குச் சார்பான ஊடகங்களோ வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புப் பற்றி மூச்சுவிடவில்லை உயிரிழப்பை இலக்கங்களில் சொல்கிறார்களே ஒழிய உண்மையான பாதிப்பு வெளியுலகிற்குத் தெரியாவண்ணம் மறைப்பதில்தான் முனைப்பாக உள்ளனர்.
ஈழநாதனின் கருத்து கவலை அளிக்கிறது. இங்கு அமெரிக்காவில் செய்தி ஊடகங்கள், காலே மற்றும் கொழும்புவில் ஏற்பட்ட இழப்புகளைத் தான் காண்பிக்கிறார்கள்; பேசுகிறார்கள். வரைபடத்தைப் பார்த்தால் கிழக்கில் சேதாரம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று ஐயம் ஏற்படுகிறது. இப்பகுதி புலிகளின் நிர்வாகத்திலும் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. TRO வைப் பற்றி நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறேன். இதற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய வலைத்தளம்:
ReplyDeletehttp://www.troonline.org/en/
நன்றி
As RosaVasanth said, I was so suprised by the silence of Vaiko and others (specially the ppl who have so much concern abt Eelam Tamils). Even I saw very rare politicians in affected areas in Tamil Naadu. May be they have just visited to say sorry for ppl for a short period. I saw only Thirumaavalan helping ppl in TV.
ReplyDeleteAlso, its true that the TRO registered in whole Sri Lanka as a NGO. Even today, the sri lankan PM told something stupid to reuters. He said, If international countreis accept the request by LTTE (cuz they are asking help separately), then it will be worsing the ethnic war more. What the hell he is thinking? All i can say to him, Yoo Man, if you helping north and east tamil ppl like you are donig to other places, we don't need to beg international countries separately.
We have experienced and learned lotz of stuffs by our 20 year ethnic war. One of the important lessons we have learned that we can't depend on others. Thaz what was proven us again.
By: DJ
சற்றுமுன் கேட்ட பிபிசி செய்திகளில் கூட தென்னிலங்கையில் தான் சேதம் அதிகம் என்கிறார்கள். கொழும்பில் உள்ளவர்களிடம் மட்டும் தான் பேட்டி எடுக்கிறார்கள்--இந்தியத் தூதர் நிரூபமா ராவ் உள்பட. வடகிழக்குப் பகுதியைப் பற்றி அறவே செய்தி இல்லை. அரசுதவி வரவில்லை என்று போராளிகள் குற்றம் சாட்டுவதாக மேலோட்டமாகச் சொல்லிப்போகிறார்கள். அதைப்பற்றி அரசாங்கத்திடம் ஒரு கருத்துகூடவா கேட்டு ஒலிபரப்ப முடியாது? ஊடகங்கள் போய் பார்க்கவில்லை என்பதால் அங்கு சேதமில்லை என்று அர்த்தமாகி விடுமா? உலகப்படத்தையும், கடலலை பாய்ந்த திசையையும் வைத்துப் பார்க்கும்போது இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக ஈழப்பகுதியில் தான் அதிக சேதம் இருக்கவேண்டும். இந்தியா உள்பட உலக நாடுகளின் உதவிகள் அனைத்தும் கொழும்பு அரசிடம் தான் கையளிக்கப்படுகின்றன. மனிதர்களால் உருவாக்கப்படும் அழிவுகளில்தான் அரசியல் புகுந்து விளையாடுகிறதென்றால் இயற்கைச் சீரழிவுகளின்போது கூடவா?
ReplyDeleteதமிழ் நாட்டுத் தமிழர்களுக்குத்தான் அச்சமோ, அக்கறையில்லாமலோ இருக்கும். வெளியில் வசிக்கும் தமிழர்களாவது இருபக்கமும் ஆதரவுக் கரங்களை நீட்ட வேண்டும்.
சுந்தரமூர்த்தி
By: M. Sundaramoorthy
இந்தியாவில் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. மருந்துகள், உணவு, உடைகள், போர்வைகள் என. சரியான நேரத்தில் சரியான மக்களுக்குப் போய்ச்சேர சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர, ஓரிரு நாள்கள் ஆனாலும் இப்பொழுது எனக்குக் கிடைக்கும் தகவல்களிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் - அரசு வழியாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ - தேவையானவை போய்ச்சேரத் தொடங்கி விட்டன.
ReplyDeleteஎனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதை முதற்காரியமாக ஏற்றுச் செய்யவேண்டும். மேலும் பண உதவி மட்டும் போதாது. பொருள்கள் தேவை. உணவுப்பொருட்கள், உடைகள், மருந்துகள், மருத்துவர்கள் என ஏகப்பட்ட தேவை உள்ளது.
இந்தியாவில் இருந்துகொண்டு - வெறும் 40 கிமீ தூரம்தான் என்றாலும் - இலங்கைத்தமிழர்களுக்கு உதவி செய்வது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது.
இதில் அச்சம், அக்கறையின்மை என்று ஏதும் கிடையாது. செய்வதற்கு வழியே இல்லை! ஒரு காரையோ, லாரியையோ எடுத்துக்கொண்டு மருந்துகளைத் தூக்கிப்போட்டுக்கொண்டு யாரும் அங்கே போய்விட முடியாது. விமானம் தேவை. விமானம் ஒன்றை சார்ட்டர் செய்ய ஏகப்பட்ட பணம் தேவை. இலங்கை அரசு அனுமதி தேவை. வெளியே போக இந்திய அரசு அனுமதி தேவை. தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு என பொதுமக்களிடையே பொருட்களை சேகரிக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை! தனியார்களாக நாம் நாலைந்து பேர் பேசினால் அதனால் சிறிது பணத்தைத்தான் சேர்க்க முடியும்.
அரசியல் மாற்றங்கள் ஏதும் திடீரென நிகழாத வரை, தமிழ் தேசியவாதிகள் வாய்பொத்தி மவுனம் காக்கும் வரை, மேற்சொன்னவற்றில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இப்பொழுதிருக்கும் நேரம் குறைவு.
கனடா வாழ் தமிழர்கள் தம் நாட்டை நேரடியாக வலியுறுத்தி உதவிகள் நேரடியாக பொருட்களாக ஈழத்தமிழர் பகுதிகளுக்கு விமானம்/கப்பல் மூலமாகப் போய்ச்சேர வகைசெய்ய வேண்டும். பிரிட்டன் வாழ் தமிழர்களும் இதைச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தமிழர்கள், சிங்கப்பூர், மலேசியா தமிழர்கள் முன்வரவேண்டும். இதற்காக அந்தந்த நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தமிழர் குழுக்கள் சென்று போய்ப் பார்க்கவேண்டும்.
இலங்கை அரசு வழியாக தமிழர் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், எந்த வகையிலும், எவ்வித உதவிகளும் போய்ச்சேராது என்பது இப்பொழுது நன்றாக விளங்கி விட்டது.
பேரிழப்பிலும்கூடவா இலங்கை அரசு பேதைமை காட்ட வேண்டும்? மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தக்க உதவிகளை உடனே செய்ய முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் ஆபத்துக்கு உதவுவதே மனிதத் தன்மை. இதில் விரோதம் காட்டுவது கண்டிக்கத் தக்கது. தமிழ்நாதம் இணையத்தளம் அங்குள்ள நிலைமைகளை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளது.
ReplyDeleteBy: மூர்த்தி
சிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.
ReplyDeletehttp://uk.geocities.com/manxmathan/index.htm
By: Man Mathan
நீங்கள் BBC இலோ CNN இலோ வடக்கு கிழக்கில் ஏற்பட இழப்புக்களை அறிவது கஸ்டமான விடையம் ஆனல் உங்களை போன்ற இன்னும் பலரும் இப்படி தான் கேட்கிறார்கள் என்ன கொழும்பு காலியில் தான் கடல் பெருக்கா என்று எனவே நீங்கள் கவிதை தோட்டத்தில் கூடுதலாக வடக்கு கிழக்கு செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதோடு இதில் ஒரு தொலைக்காட்சி இணைப்பை தருகிறேன் அதில் தமீழத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு இடம் பெறும். அதில் எங்கள் உறவுகள் எவ்வளவு இழப்பை கண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் காணலாம்.
ReplyDeleteதொலைக்கட்சியின் இணைப்பு
www.tamilvision.tv
கனடா, பிரிட்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா, பிரான்ஸ்.. என அனைத்து நாடுகளில் வாழும் புலம் பெயர்வாழ் மக்களும் தங்கள் உதவிகளை உடனடியாக வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தடவையில் மட்டும் கொடுத்து தமிழீழத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது. அங்கு ஏற்பட்டது சாதாரண இழப்பு அல்ல அது பல ஆண்டுகளுக்கு எம் மக்களை தாக்க போகும் இழப்பு. எனவே அந்த இழபுக்களை புனரமைக்க பல ஆண்டுகள் எடுக்கும். அந்த உதவிகளையும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தான் செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இன்று தமிழீத்தின் முல்லைதீவு பகுதியில் இருந்து நேரடி ஒலிபரப்பின் போது ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன விதமான உதவிகளை உங்களுக்கு இதுவரை வழங்கியது ?
அப்போது அவர் கூறினார் .. அவர்களின் வாகனங்கள் மட்டும் தாறுமாறாக அவசரமாக ஓடித்திரிகிறது ஆனால் எந்த விதமான உதவியையும் செய்வதாய் காணவில்லை என்று.
எனவே அங்கு உதவிகளை வழங்கி கொண்டிருப்பவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழ்கமும், தமிழீழவிடுதலைப்புலிகளும், ஊர் மக்களும் தொண்டர்களும் தான். அத்தோடு அங்கு ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ள விலங்கினங்களையும், இடிந்து விழுந்துள்ள கடடங்கள், மரங்கள் போன்றவற்றை அக்கற்றவும் கனரக வாகனங்களின் பற்றக்குறை காணப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மனிதவளத்தை பாவித்தே அவர்கள் துப்பரவு செய்து வருகிறார்கள்.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அனுப்பபட்ட உதவிகளை கூட தம் பகுதிகளுக்கு திருப்பி அனுப்ப பொலீசாரும் , இராணுவத்தினரும் முனைந்து வருகிறார்களாம். ஆனால் தமிழீழ விடுதலை புலிகள் அவர்களின் முகாமையே சீரமைத்து கொடுத்துள்ளார்கள்.
இது மாதிரி கனக்க விடையங்கள் அங்கே நடக்குறது ஆனால் அவை எல்லாம் திட்டமிட்டு வெளிநாட்டு ஊடகங்களால் மறைக்க படுகிறதோ அரசால் மறைக்க படுகிறதோ எனக்கு தெரியவில்லை.
By: கவிதன்
நீங்கள் BBC இலோ CNN இலோ வடக்கு கிழக்கில் ஏற்பட இழப்புக்களை அறிவது கஸ்டமான விடையம் ஆனல் உங்களை போன்ற இன்னும் பலரும் இப்படி தான் கேட்கிறார்கள் என்ன கொழும்பு காலியில் தான் கடல் பெருக்கா என்று எனவே நீங்கள் கவிதை தோட்டத்தில் கூடுதலாக வடக்கு கிழக்கு செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதோடு இதில் ஒரு தொலைக்காட்சி இணைப்பை தருகிறேன் அதில் தமீழத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு இடம் பெறும். அதில் எங்கள் உறவுகள் எவ்வளவு இழப்பை கண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் காணலாம்.
ReplyDeleteதொலைக்கட்சியின் இணைப்பு
கனடிய தமிழ் தொலைக்காட்சிகனடா, பிரிட்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா, பிரான்ஸ்.. என அனைத்து நாடுகளில் வாழும் புலம் பெயர்வாழ் மக்களும் தங்கள் உதவிகளை உடனடியாக வழங்கி கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தடவையில் மட்டும் கொடுத்து தமிழீழத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது. அங்கு ஏற்பட்டது சாதாரண இழப்பு அல்ல அது பல ஆண்டுகளுக்கு எம் மக்களை தாக்க போகும் இழப்பு. எனவே அந்த இழபுக்களை புனரமைக்க பல ஆண்டுகள் எடுக்கும். அந்த உதவிகளையும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தான் செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இன்று தமிழீத்தின் முல்லைதீவு பகுதியில் இருந்து நேரடி ஒலிபரப்பின் போது ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன விதமான உதவிகளை உங்களுக்கு இதுவரை வழங்கியது ?
அப்போது அவர் கூறினார் .. அவர்களின் வாகனங்கள் மட்டும் தாறுமாறாக அவசரமாக ஓடித்திரிகிறது ஆனால் எந்த விதமான உதவியையும் செய்வதாய் காணவில்லை என்று.
எனவே அங்கு உதவிகளை வழங்கி கொண்டிருப்பவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழ்கமும், தமிழீழவிடுதலைப்புலிகளும், ஊர் மக்களும் தொண்டர்களும் தான். அத்தோடு அங்கு ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ள விலங்கினங்களையும், இடிந்து விழுந்துள்ள கடடங்கள், மரங்கள் போன்றவற்றை அக்கற்றவும் கனரக வாகனங்களின் பற்றக்குறை காணப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மனிதவளத்தை பாவித்தே அவர்கள் துப்பரவு செய்து வருகிறார்கள்.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அனுப்பபட்ட உதவிகளை கூட தம் பகுதிகளுக்கு திருப்பி அனுப்ப பொலீசாரும் , இராணுவத்தினரும் முனைந்து வருகிறார்களாம். ஆனால் தமிழீழ விடுதலை புலிகள் அவர்களின் முகாமையே சீரமைத்து கொடுத்துள்ளார்கள்.
இது மாதிரி கனக்க விடையங்கள் அங்கே நடக்குறது ஆனால் அவை எல்லாம் திட்டமிட்டு வெளிநாட்டு ஊடகங்களால் மறைக்க படுகிறதோ அரசால் மறைக்க படுகிறதோ எனக்கு தெரியவில்லை.
By: கவிதன்By: கவிதன்
வணக்கம். மலேசியாவிலிருந்து எழுதுகின்றேன். மலேசியாவிலுள்ள தமிழர் புனர்வாழ்வு இயக்கத்துடன் இணந்து பணியாற்றி வருகின்றேன். ஆனால், ஏற்ற, போதுமான உதவிகளைச் செய்யவேண்டுமானால், சரியான தகவல் தேவை. இதுவரை, அது எனக்குக் கிடைக்கவில்லை. பணம் திரட்டுங்கள், உடை, மருந்துப்பொருட்கள் தேவை என்று பொதுவான விண்ணப்பங்களே இதுவரை கிடைத்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பணமோ உதவியோ வேண்டுமானால், குறிப்பான தகவல் தேவை. பொருட்கள் வேண்டுமென்றால், என்ன பொருட்கள், எந்த அளவு, எவ்வளவு விரைவாக ... தமிழகத்திலிருந்து வாங்கி அனுப்பலாமா? அங்கு முடியாவிட்டால், எங்கிருந்து? மலேசியாதான் இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள நாடு.
ReplyDeleteமைய டி.ஆர்.ஓ. உள்ள யாராவது இதைப்படித்தால், இன்னும் அதிகமான தகவலைக் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கின்றேன். எங்களால் இன்னும் அதிகமான உதவிகளைச் செய்ய முடியும், ஆனால், உண்மை நிலவரம் தெரியாமல் செயல்பட்டால் அது முழு பலனை அளிக்காது. தற்பொழுது, நாங்கள் சுனாமி நிவாரணப் பணி மையம் ஒன்றை ஏற்படுத்தி பொருட்களையும், பணமும் சேகரித்துக் கொண்டுள்ளோம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் முதல் 'ஷிப்மெண்ட்' அனுப்பப்படும். (பார்: http://tamilfound.org/tsunami.jpg )
இன்னொரு விண்ணப்பம். தயவுசெய்து www.troonline.org வலைத்தளத்தை பெரிய ஒரு சேவையகத்தில் அமர்த்துங்கள். எந்நேரமும் 'server busy' என்றே வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக முயன்றுவருகின்றேன்!
ReplyDeleteநன்றி...
Evolutionary: தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களுமே கிடைத்தாலும், இங்கிருந்து அவற்றை வடகிழக்கு இலங்கைக்கு அனுப்புவதில் சிரமங்கள் இருக்கலாம். அதனால் TRO அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் எப்படி பொருட்களை வடகிழக்கு இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்று யாராவது கேட்டறிய வேண்டும்.
ReplyDeleteநீங்கள் சொல்வதைப்போல என்ன வேண்டும், என்ன உடனடித் தேவை என்பதும் நேரடியாக TRO அமைப்பிடமிருந்துதான் வரவேண்டும். யாருக்காவது TRO அமைப்பின் முக்கியஸ்தர்களைத் தெரியுமா? நேரடி தொலைபேசித் தொடர்பு இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
As far as I heard, Overseas TROs are focusing mainly in collecting money. Cuz other ways won't make the needs to be on time for the affected ppl . But the people are collecting clothes and the students are collecting medical supplies in Canada. I don't know much about TROs' services. If you have time, listen this radio (http://www.ctr24.com). They are accepting money from your credit cards (if you're far away) and the fund is given directly to TRO.
ReplyDeleteBy: DJ
TRO Bank account in Colombo, Sri Lanka:
ReplyDeleteBank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka
TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7
Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76
There is an alert for fresh Tsunami strikes in coastal TN & Kerala. Reports say, there is an increase in the sea water level. People are being evacuated in various coastal parts of TN.
ReplyDeleteIn chennai, Beach Road is closed. Conflicting reports are coming for evacuating of people in Nagai & Kanyakumari
By: narain
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13779
ReplyDeleteBy: narain
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13779
ReplyDeleteBy: narainBy: narain
http://groups.yahoo.com/group/Eelam_LitArt_Arch/message/727
ReplyDeleteஅன்பின் பத்ரி எனது பதிவில் சகல அநேகமான நாடுகளிலுள்ள இன் கிளைகளின் விலாசமும் தொடர்பிலக்கமும் கொடுத்துள்ளேன்.குழந்தைகளுக்கான போசாக்குணவு,மருந்து,நீரைச் சுத்திகரிக்கும்,அநேகமான பொது சுகவீனங்களுக்கான மருந்துகள் என்பன தேவைப்படுகின்றன.உங்களுக்கு இந்தியாவிலிருந்து பொதிகள் அனுப்புவது சிரமமாக இருந்தால் மருந்துப் பொருட்கள் அனுப்பமுடியுமா என்று பாருங்கள் முடியாவிட்டால் பணமாகவும் அனுப்பி உதவலாம்.அவர்களின் தொடர்புக்கு +94 11 2 69 32 54
ReplyDeleteபக்ஸ் +94 11 4 71 65 76 மட்டக்கலப்புச் செயலகத் தொடர்பிலக்கம்.94- 65- 2226592
casulies
ReplyDeleteAmparai 8500
hambantota 4500
galle 3500
jaffna 2500
batticaloa 1500
so as you can see more damage is in the south not in the north
100's of lorries have been sent to the north
most of them have been handed over to the TRO
one indian navy ship full of suplies & doctors has arrivied at trinco & indian navy & doctors are working in tamil area's
su.pa.tamilselvan has praised the way the government has acted in this regard
By: suren
i forgot to mention this the government has handed out Rs.1 billion to each of the 8 tamil destricts in the north & east (this is not planed but already has been given).
ReplyDeletethe armed forces(amry, navy, air force) have donated their salary to the affected tamil, muslim people in north & east
By: suren
மலேசியாவில் இருந்து எழுதிய நண்பருக்கு
ReplyDeleteமலேசியாவில் தமிழர்புணர்வாழ்வுக்கழகத்தின் தொடர்புகளை பெற்று கொள்ள இந்ததோலைபேசி இலக்கத்துடனோ, நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமோ முயலலாம்.
No 6, Jalan 6/2
46000 Petaling Jaya
Malaysia
Phone: +60 326919363
Fax: +60 326918272
E-mail: malaysia@troonline.org
By: கவிதன்
Suren, Where did u hear all these news?
ReplyDeleteBy: DJ
from the indian high commision
ReplyDeletevideo footage showing the handover of supply to the TRO
interviews by the government agents for these districts
the central condinators for disator relief for these area's
interview to the media by tamilselvan
army commander saying they are donating thier salary
casulty figures from the government agent's & social service department.
one more thing the south (galle-100km matara) is close to colombo so relief will get their first jaffna-320km, mullathivu-300km & trinco very far away so it will take time (road is distroyed, bridges distroyed)
By: suren