நேற்றைய செய்தியின்படி அவ்னீஷ் பஜாஜ் தில்லி உயர் நீதிமன்றத்தில் பிணையில் வெளிவர விண்ணப்பித்துள்ளார். அந்த விசாரணை இன்று நடக்கிறது. இந்தக் கைது, நீதிமன்றக் காவல் ஆகியவை முற்றிலும் தேவையற்றது என நாஸ்காம் (NASSCOM) தெரிவித்துள்ளது.
IT Act 2000 என்ன சொல்கின்றது என்பதைப் படிக்க இங்கே செல்லவும்.
Tuesday, December 21, 2004
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி,
ReplyDeleteசட்டத் திருத்தத்தைவிட சட்டத்தைப் பற்றியும் கணினி வர்த்தகத்தின் அடிப்படைகளையும் போலீசாருக்கு பயிற்றுவித்தால் இது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளை தடுத்துவிடலாம்.
என்னுடைய எண்ணங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.
பி.கு. உங்கள் வலைப்பதிவில் பின் தொடருதல் வசதி நீக்கப் பட்டுவிட்டதா?
blogger.com இல் எப்பொழுதாவது பின்தொடர்தல் வசதி கொடுக்கப்படும் என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். haloscan வழியாக பின்தொடர்தல் செய்துவந்தேன். பின் அதனால் பல அசவுகரியங்கள் ஏற்பட்டதால் நிறுத்தி விட்டேன்.
ReplyDelete===
காவல்துறைக்கு கணினிப் பயிற்சி ... அதிலெல்லாம் அவர்களுக்கு நாட்டமிருக்காது. அவர்களைக் கேட்டால் சட்டப்படி நாங்கள் நடந்துகொள்கிறோம் என்றுதான் சொல்வார்கள். சட்டத்தில்தான் சரியான திருத்தம் தேவை என்பது என் கருத்து.
என் தனிப்பட்ட கருத்து - போர்ன் படங்கள் வெளிப்படையாகவே எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் - வாங்குபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் போதுமானது. காலம் காலமாக போர்ன் எழுத்துகள் புத்தகங்களாக விற்கப்படுகின்றன. இன்றுவரை யாரையாவது இதற்காக ஜெயிலில் போட்டதாகத் தகவல் இல்லை. அதன்பின் பலரால் நம் மின்னஞ்சல் பெட்டிகளிலேயே தேவையற்ற குப்பைகள் வந்து விழுகின்றன. இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லை.
இந்த இடத்தில் அவ்னீஷ் பஜாஜைக் கைது செய்யவேண்டியதன் அவசியம் எனக்குப் புரியவில்லை. இணையச் சந்தை என்பதற்கான பொருள் IT Act 2000ஐத் தயாரித்தவர்களுக்குப் புரியவில்லை என்றுதான் சொல்வேன். அதனால் அதனை முதலில் சரிசெய்ய வேண்டும்.
அதன்பின் காவல்துறைக்கும், சட்டம் இயற்றுபவர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் இணையம் பற்றிய பயிற்சி வகுப்புகள் கொடுக்கலாம்.