இது நிற்காது.
எல்லா பயங்கரவாதங்களுக்கும் ஊற்றுக்கண் அரசுகள் தன் நாட்டினர் மீதும் பிற நாட்டினர் மீதும் நிகழ்த்தும் வன்முறைகள் என்பது என் கருத்து. அப்படிப் பார்க்கும்போது கடந்த நாநூறு வருடங்களில் இங்கிலாந்து/பிரிட்டன் பதவியில் இருந்தவர்கள் தன் நாட்டவர் மீதும் பிற நாட்டவர் மீதும் எண்ணற்ற அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளனர். உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்னைகளுக்கான காரணம் பிரிட்டன். மீதிக்கு, அமெரிக்கா. 1950க்கு முந்தைய பிரச்னைகளுக்கான காரணம் பிரிட்டன். அதற்குப் பிறகான பிரச்னைகளுக்கு முதல் காரணம் அமெரிக்கா, இரண்டாவது காரணம் பிரிட்டன்.
தொழில்நுட்பம் பரவப்பரவ, பாதிக்கப்பட்டவர்கள் - நாடுகளோ, தனி மனிதர்களோ - தாங்களும் சக்திமிக்க நாடுகள் மீது தாக்குதலைத் தொடுக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர். நியூ யார்க், மேட்ரிட், லண்டன் - நகரங்களை முழுமையாக ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்று அல் கெய்தா காண்பித்துள்ளது. அல் கெய்தாவையும் மிஞ்சும் பயங்கரவாத அமைப்புகள் நாளை தோன்றும்.
இன்று சோகம் ததும்பிய குரலுடன் பேசும் டோனி பிளேர் தன் நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறித் தாம் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று குவித்துள்ளோம் என்பதை இன்று இரவு தூங்கப்போகும்போது நினைத்துப் பார்ப்பாரா? ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷைவிடப் புத்திசாலியானவர், இதை யோசித்துப் பார்ப்பது நல்லது.
தங்கள் நாடுகளின் கொள்கைகளை நிலைநாட்ட பிற நாடுகளை வேரறுப்பது பாவமல்ல என்னும் politics of expediency கருத்தாக்கத்தை முன்வைக்கும் கிஸ்ஸிங்கர், நியோ-கான்கள் ஆகியோரே உலகில் தீவிரவாதம் வளரக் காரணமானவர்கள்.
சோவியத் யூனியனைக் கழுவேற்ற, பாகிஸ்தான் போன்ற நாடுகளை உள்ளூர பயங்கரவாதத்தை ஆதரிக்க வைத்தது, அதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தொடுக்கும் பயங்கரவாதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டது, ஆப்கானிஸ்தானைக் கொலைக்கூடாரமாக ஆக்கியது, ஈராக்கை இன்றும் நாசமாக்கிக்கொண்டிருப்பது, லத்தீன் அமெரிக்காவில் கொடுமைகள், ஆப்பிரிக்காவில் கொடுமைகள், ஆசியாவில் கொடுமைகள் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் நாசமாக்காத கண்டமே கிடையாது. (இந்தியா ஒன்றும் பரிசுத்தம் அல்ல. உள்நாட்டிலேயே மாநிலம் மாநிலமாகப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள் ஏராளம். அதைத்தவிர அண்டை நாடுகளில் குழப்பம் ஏற்படுத்துவதும் நிச்சயமாக இருக்கும்.)
இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படும்போது அதற்கு நானும் இதைப்படிக்கும் நீங்களும் காரணம். அதைப்போலவேதான் ஒவ்வொரு அமெரிக்கனும் 9/11க்குக் காரணம். ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் இன்றைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்.
யாளி நகர்
6 hours ago
பத்ரி
ReplyDeleteஇன்று அமெரிக்காவில் போகுவரத்திற்கான தீவிரவாத அலர்டதிகமாக்க பட்டுவிட்டது!! இதனால் அரசுக்கு 1 பில்லியன் டாலர்கள் செலவு ஒரு நாளைக்கு.
எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு என்ன தீர்வு? போருக்கு எதிரான மனநிலையில் இருந்த பிரிட்ஷ் மக்களை இந்த தாக்குதல் போரை ஆதரிக்க வைக்கும் அபாயம் உண்டல்லவா? இந்த தாக்குதலின் இலக்கு பொருளாதார இராணுவ மையங்கள் அல்லவே? இவற்றின் மூலம் பொதுமக்கள் தான் பலியாவார்கள் என்பது நிச்சயம் தெரிந்த விடயம் தானே?
ReplyDeleteBadri,
ReplyDeleteExcellent and Unbiased analysis. Thanks a zillion for posting with a neutral view.
புஷ் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா போர் தொடரும் என்று :( செப் 11 தாக்குதல்கள் அமரிக்காவை ஈராக் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பளித்தது. இனி பிரிட்டிஷ் அரசு என்ன செய்யுமோ?
ReplyDeleteஇதையும் பாருங்கள் ....
http://tamilnenglish.blogspot.com/
பத்ரி,
ReplyDeleteஇந்தியாவில் உள்நாட்டுக் குழப்பங்கள் உண்டு. இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் அரசும் பொறுப்பு. இது உண்மை. மறுக்கவில்லை.
சந்தடி சாக்கில் "...அண்டை நாடுகளில் குழப்பம் ஏற்படுத்துவதும் நிச்சயமாக இருக்கும்.." என்று சொல்கிறீர்களே தயவு செய்து தெளிவாகச் சொல்லுங்கள்.
நடு நிலையோடு பேசுவதாக நினைத்துக் கொண்டு "ஏற்படுத்துவதும் நிச்சயமாக இருக்கும்" என்று சொல்லக் கூடாது. இருக்கிறது என்று சொல்லுங்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்.
தாய் நாடு என்பதற்காக விமர்சிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உண்மையை (நீங்கள் உண்மை என்னும் நம்புவதை) ஆதாரத்துடன் தந்தால் நல்லது.
1.இந்தியா எத்தனை அண்டை நாடுகளில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது?
2.இந்தியா தற்போது எந்த அண்டை நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது?
(RAW வின் வேலையே அதுதான் என்று பொதுவாகச் சொல்லி விடாதீர்கள். பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலைத் தாருங்கள்)
அன்புடன்,
கணேசன்.
"உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்னைகளுக்கான காரணம் பிரிட்டன். "
ReplyDeleteஎன் கருத்தும் இதே; ஏற்கெனவே இதைப் பதிவும் செய்துள்ளேன்.
நன்றிகள் பத்ரி!
ReplyDelete//1.இந்தியா எத்தனை அண்டை நாடுகளில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது?
ReplyDelete2.இந்தியா தற்போது எந்த அண்டை நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது?//
கணேசன்,
பத்ரி சொல்ல முன்னாடி நான் சொல்லுறேன்.
பங்களாதேஷ், இலங்கை இரண்டும் போதுமா?
நன்றி "Anonymous" அவர்களே,
ReplyDelete1.Bangladesh என்று நீங்கள் உச்சரிக்கக் காரணமே இந்தியாதான்.இந்தியா உதவியிருக்காவிடில் அப்படி ஒரு நாடே தோன்றியிருக்காது.
(அமெரிக்கா தற்போது ஈராக்கிற்கு உதவிக்(???)கொண்டு இருப்பதையும்,
Pakistan எப்போதும் Kashmir க்கு உதவிக் (???) கொண்டு இருப்பதையும்,
இந்தியா Bangladesh -க்கு செய்த உதவியுடன் சேர்த்துப் பார்ப்பீர்களேயானால் ..நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. )
2.இலங்கையில் இந்தியா குழப்பங்களை ஏற்படுத்தவில்லை.அந்த நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்றது அதுதான் உண்மை.
(அங்கு இராணுவம் என்ன செய்தது/செய்யவில்லை என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை)
மேற்கண்ட இரண்டும் உங்கள் பார்வையில் "இந்தியா பிற நாடுகளில் விளைவிக்கும் குழப்பமாக " த் தெரிந்தால் அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அன்புடன்,
கணேசன்.
"டோனி பிளேர் தன் நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறித் தாம் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று குவித்துள்ளோம் என்பதை இன்று இரவு தூங்கப்போகும்போது நினைத்துப் பார்ப்பாரா?"
ReplyDeleteபோர் வேண்டாம் என்று ஊர்வலம் வந்த தன்நாட்டு மக்களின் மீது தண்ணீரை அடித்து கலைத்தபோது தோன்றாதது இப்ப நடந்தவைகளைப் பார்த்தாவது தோன்றினால் நல்லதுதான்
இன்று காலை ரொனி பிளேயர் ஆற்றிய உரை தொலைக்காட்சியில் பார்த்தேன். மனிதாபிமானம் தொலைந்து விட்டது, தீவிரவாதிகள் அதிகரித்து விட்டார்கள் என்று உணர்சிவசப்பட்டு உரையாற்றினார். சிரிப்பாக இருந்தது. யாரை யார் நோவது. பாவம் அப்பாவி மக்களின் உயிர்கள் வீணாய்ப்பலியாகிக்கொண்டு.
ReplyDeleteபத்ரி - இப்பொழுதுதான் என் பதிவில் இதைப்பற்றி எழுதிவிட்டு வந்தேன். நீங்களும் கிட்டத்தட்ட என் மனநிலையைப் பிரதிபலிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeletehttp://www.domesticatedonion.net/blog/?item=547
'அடுத்த அட்டாக் ஆஸ்தராலியாமீது'னு ஒரு செய்தி பரவிக்கிட்டு இருக்கு.
ReplyDeleteஎன்னவோப்பா, மனசே சரியில்லை.
என்றும் அன்புடன்,
துளசி.
நல்ல பதிவு. நன்றிகள் பத்ரி.
ReplyDelete//இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படும்போது அதற்கு நானும் இதைப்படிக்கும் நீங்களும் காரணம். அதைப்போலவேதான் ஒவ்வொரு அமெரிக்கனும் 9/11க்குக் காரணம். ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் இன்றைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்.//
ReplyDeleteNice analyses and point of view.
Thank you for the post.
sarah
I shocked by the indiffernce and lack of sympathy for the victims in this post. Its a joke to blame the innocent people for the wrong doings of the govt.
ReplyDeleteThe pains of terrorism cannot be felt unless it happens in their own yard!
.:dYNo:.
என்னால் இந்த பதிவில் கருத்துக்களுடன் முழுதாக உடன்பட முடியவில்லை. டைனோவின் கருத்து தான் எனதும்.
ReplyDeleteதீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதை கண்டிப்பது தான் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு பத்ரி, வெங்கட் போன்றவர்கள், அதை நியாயப்படுத்துவது போல் எழுதுவதை படிக்க நிஜமாகவே வருத்தமாக இருக்கிறது. :-(
ReplyDelete-சுரேஷ்.
தேசப்பற்று என்ற போர்வையில் வழக்கமாக மறைக்கப்படும் உண்மைகளைத 'நறுக்'கென்று சொன்ன உங்களுக்கு என் பாராட்டுக்கள்!
ReplyDeleteஉண்மை சுடும் என்பதற்காக சொல்லாமல் இருக்க முடியாது.
நன்றி - சொ. சங்கரபாண்டி
/I shocked by the indiffernce and lack of sympathy for the victims in this post. //
ReplyDeleteindifference --- what is the real meaning of it and that too here in this writing???. What is there to talk about sympathy on victims. Innocents are killed, yes, but under what reason?.
We unknowingly think that having sympathy over the victims is the best remedy than EVEN to see why that happens. We are in such a calamity and in such a understanding that showing sympathy is the remedy than to see the cause of it. We unknowingly mix the two terms "compassion" - the Budhas nature and "sympathy" -Mother therasa's nature. Sympathy comes only when you think the other is below you, and you are ther to save them. compassion comes out of awareness, out of love and respect and thankfulness and above all with righteousness.
Even if somebody shows the path of how to see the situation, we always oppose even to think about why they say. But it is always like this when we fail to see the truth.
Somebody has commented that it should happen in our yard to feel for it. Do they think it is not happenning in our yard, only in our yard that is happenning even now, even in our life we have seen the Coimbatore Gundu vedippu, what we can do about it?. Ramar Koil, what can we do about that. Sympathy?? Can sympathy alleviate this problem?. NO. These sort of things will bound to happen when there is always mentallity of brutalism in terms of power , and when humanatarian concern is failed. I feel that more and more awareness should be there, and I feel that Badris View is one among them . Atleast it can knock some people minds towards this aspect. In that way this point of view is too good about the fact than the sympathy, because it touches the root cause than to see only the remedy. The remedy in terms of sympathy can only be a 2 minutes aaruthal and that too only for the victims(but they already lost their own so much), but the view like Badri's will be helpful for the people to realize more and more and be aware of human nature and to nurture us to be human than anything else so that once if we understand this aspect we will never be a cause of unhuman activity.
sarah
பத்ரி,வணக்கம்!
ReplyDeleteவலைப் பதிவுகள் இந்த விவகாரத்தை தத்தமது புரிதலுக்கேற்றவாறு எழுதியும்,விமர்சிக்கும்போது தங்கள் கட்டுரையொன்றே மிகத் தெளிவாக,பொருளியற்றளத்தில் வைத்து, விஞ்ஞான பூர்வமாகக் காரணங்களைச் சொல்கிறது.இதுதாம் ஆய்வுக்குரிய பண்பு.இதுவே மக்களின் நலன் சார்ந்த பக்கச்சார்பு.இஃதின்றி நடுநிலைமை பேசல் கபடமானது.ஒடுக்குபவர்களுக்கும்,ஒடுக்கப்படுபவர்களுக்கும் மத்தியில் நடுநிலைமை கிடையாது.எனவே தங்கள் பார்வையானது மிக மிகச் சரியானது.உங்களுக்கு என் நன்றியும்,வாழ்த்தும் என்றுமுரம் சேர்க்கும்!
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
Sarah,
ReplyDeleteI am not here to teach English, and I am pretty sure that people understand what 'indifference' and 'sympathy' means.
For your reference -
indifference => http://dictionary.reference.com/search?q=indifferent
http://dictionary.reference.com/search?q=sympathy
sympathy -> A feeling or an expression of pity or sorrow for the distress of another; compassion or commiseration.
I am not against alternate views but the only fact that I pointed out is that the post was indifferent and failed to sympathize with the victims, which I feel should be expressed at least at a cursory level.
>>>>Somebody has commented
:)). Say 'hi' to our friend!
And sorry Badri for littering your comment box... I will not pursue this discussion beyond this for I know where this will lead to.
.:dYNo:.
பத்ரி,
ReplyDeleteஇது தர்க்கப்பூர்வமாக நியாயமாகத் தெரிந்தாலும் நீங்கள் எதிர்பார்ப்பது போல டோனி ப்ளேர் நினைத்துப் பார்க்கப்போவதில்லை. அப்படியே நினைத்தாலும் வெளியே சொல்லப்போவதில்லை. இன்னும் வீறாப்புடனும், ஆவேசத்துடனும் தான் பேசுவார். புஷ் இதைவிட இன்னும் பல படிகள் உயரசெல்லக்கூடியவர். பிரச்சினை என்னவென்றால் இந்நாடுகளில் அயல்நாட்டவர்களின் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கும்--குறிப்பாக முஸ்லீம்களின் மீது. ஏற்கனவே முஸ்லீம்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் ஒருவித Kafkaesque நிலைமை நிலவுகிறது. நூலகத்தில் ஒருவர் எடுக்கும் புத்தகங்களின் பெயர்களைக் கூட அரசு கேட்டுப்பெறும் சூழ்நிலை. நிலைமை இன்னும் மோசமாகவே வாய்ப்பு அதிகம்.
Good post Badri.
ReplyDeleteAnd.. good argument there Sarah!
//போருக்கு எதிரான மனநிலையில் இருந்த பிரிட்ஷ் மக்களை இந்த தாக்குதல் போரை ஆதரிக்க வைக்கும் அபாயம் உண்டல்லவா?//
ReplyDeletepoint !!
//Unbiased analysis.
If I choose not to decide, I still have made a choice :-(
டைனோ எனது பதிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நான் எதுவுமே சொல்லவில்லை என்றார். உண்மைதான். எனது ஆதரவு வார்த்தைகளால் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ReplyDeleteஎன் நண்பர்கள் (இந்தியர்கள் இல்லை) அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் விசாரித்துத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒப்புக்கு என் பதிவில் ஆறுதல் எதுவும் சொல்லப்போவதில்லை.
வினை விதைத்தால் அறுக்கத்தான் வேண்டும்.
ஈராக்கில் எத்தனையோ அப்பாவிகள் தினமும் கொல்லப்படுகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தால் ஒவ்வொரு நாளும் பதிவை ஆறுதலுடன்தான் தொடங்கவேண்டும். ஈராக்கோ, பிரிட்டனோ, அப்பாவிகள்தான் எப்பொழுதும் சாகின்றனர். ஓர் அப்பாவிக்கும், இன்னோர் அப்பாவிக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
டோனி பிளேர் என்ன நினைத்தாலும் சரி, சொன்னாலும் சரி, பிரிட்டிஷ் குடிமக்கள் இதைப்பற்றி சற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். ஏன் ஒரு கூட்டத்தார் இத்தனை வெறியுடன் பிரிட்டன் வந்து பல வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, பொதுமக்களை உயிரிழக்கச் செய்யவேண்டும்? என்ன காரணம்?
தொடர் வெடிகுண்டுகளுக்குப் பொறுப்பேற்று இருக்கும் அல்-கெய்தா என்ன சொல்லியுள்ளது என்பதைப் படிக்க:
http://www.guardian.co.uk/terrorism/story/0,12780,1523861,00.html
Also please read Tariq Ali's article in The Guardian
ReplyDeletehttp://www.guardian.co.uk/terrorism/story/0,12780,1523821,00.html
Thanks badri, for your kind and nice explanations fro what you have written
ReplyDeletesarah
/என் நண்பர்கள் (இந்தியர்கள் இல்லை) அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் விசாரித்துத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்/
ReplyDeleteஉங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இச்சிக்கலில் மாட்டியிருந்தால் இதே தொனியில் பதிவை எழுதியிருப்பீர்களா? தெரிந்தவர்களுக்கு கூறிய ஆறுதலை தெரியாதவர்களுக்கு கூற இயலாதாது ஏன்?
ஈராக்கில் நடக்கும் கொடுமைகளால் லண்டனின் குண்டுவெடிப்பு சரிதான் என நியாயப்படுத்த முடியுமா?இரண்டுமே கண்டிக்கப்பட வேண்டிய விசயம்தானே.
எல்லா பிரிட்டாசாரும் குண்டுவெடிப்புக்கு காரணம் என்பது ஓவராகப் படுகிறது. பெரும்பானமையை முன்னிலைப்படுத்தும் ஜனநாயகத்தில், எதிர்ப்பவனின் குரல் எடுபடாமல்தானே போகிறது. அதற்காக அவனையும் குற்றவாளி லிஸ்டில் எவ்வாறு சேர்ப்பீர்கள்.
தலைவர்கள் பத்திரமாக இருக்க அப்பாவிகளை பலி வாங்கும் தீவிரவாதத்தால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை.அடக்குமுறைகள்தான் அதிகரிக்கின்றன.
இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? இø¨Ä ±ý¸¢È£÷¸û. «Å÷¸Ùõ ÌüÈšǢ¸û ±ý¸¢È£÷¸û.
ReplyDelete¯í¸û Ä¡ƒ¢ì¨¸ §À¡ð¼¡ø, ÀÂí¸ÃÅ¡¾¢¸Ç¢ý «ðÞÆ¢Âò¾¢É¡ø º¡Ìõ ´ù¦Å¡ÕÅÕõ ´Õ ÌüÈõ ¦ºö¾¢Õì¸ §ÅñÎõ. ¸¡Ä¢Š¾¡É¢Â÷¸Ç¡ø ÀﺡÀ¢ø Á¡ñ¼ ±ø§Ä¡Õ§Á ÌüÈšǢ¸û¾¡ý. ²ý? «Å÷¸û ÌüÈõ ;ó¾¢Ã ¸¡Ä¢Š¾¡¨É ¦¸¡Îì¸ §ÅñÎõ ±ýÚ இó¾¢Â «Ã¨º ¸ð¼¡Âô ÀÎò¾¡¾Ð.
¾í¸û ¦º¡ó¾ Áñ½¢Ä¢ÕóÐ ÐÃò¾ôÀðÎ «¸¾¢ Ó¸¡ÁòòÄ¢ÕìÌõ ¸¡‰Á£Ã¢¸Ùõ ÌüÈšǢ¸û¾¡ý. «Å÷¸û ÌüÈõ ¸¡‰Á£Ãò¨¾ À¡¸¢Š¾¡ÛìÌ ¦¸¡Îì¸ §ÅñÎõ ±É இó¾¢Â «Ã¨º ¸ð¼¡Âô ÀÎò¾¡¾Ð.
«Š…¡Á¢ø ¾¢ÉÓõ ÌñθǢɡø Á¡ñÎ ¦¸¡ñÊÕìÌõ ±ø§Ä¡Õ§Á ÌüÈšǢ¸û¾¡ý. «Å÷¸û ÌüÈõ ²§¾¡ ´Õ Ţξ¨Ä À¨¼¨Â ¬¾Ã¢ì¸¡ÅÐ.
¿£í¸û ¦º¡øÅÐ ÀÂí¸Ã Å¡¾ò¾¢ý «Ê¨Á º¡ºÉõ.
Å.¦¸¡.Å¢ƒÂá¸Åý
இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா?
ReplyDeleteஇல்லை என்கிறீர்கள். அவர்களும் குற்றவாளிகள் என்கிறீர்கள்.
உங்கள் லாஇஜிக்கை போட்டால், பயங்கரவாதிகளின் அட்டூழியத்தினால் சாகும் ஒவ்வொருவரும் ஒரு குற்றம் செய்திருக்க வேண்டும். காலிஸ்தானியர்களால் பஞ்சாபில் மாண்ட எல்லோருமே குற்றவாளிகள்தான். ஏன்? அவர்கள் குற்றம் சுதந்திர காலிஸ்தானை கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசை கட்டாயப் படுத்தாதது.
தங்கள் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு அகதி முகாமத்த்லிருக்கும் காஷ்மீரிகளும் குற்றவாளிகள்தான். அவர்கள் குற்றம் காஷ்மீரத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என இந்திய அரசை கட்டாயப் படுத்தாதது.
அஸ்ஸாமில் தினமும் குண்டுகளினால் மாண்டு கொண்டிருக்கும் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவர்கள் குற்றம் ஏதோ ஒரு விடுதலை படையை ஆதரிக்காவது.
நீங்கள் சொல்வது பயங்கர வாதத்தின் அடிமை சாசனம்.
வ.கொ.விஜயராகவன்
fyi: A look in the mirror for America - The Boston Globe - Boston.com - Op-ed - News
ReplyDelete-balaji
Boston
Badri,
ReplyDeleteHad great regards on your thoughts & writings so far. But, this post is a CRAP. Wondering why there is not even an iota of sympathy to the victims.
Romba keezha irangittinga Badri..
இந்த பதிவுக்கான பின்னூட்டுகள் பல ஒரு நவீன (மேற்கத்திய) மனிதாபிமான அணுகுமுறையில், கண்டனத்தையும் வருத்தத்தையும் சொல்லிவிட்டு சில நாட்கள் கழித்து பின் மெதுவாக அதன் பின் உள்ள அரசியல் காரணங்களை எழுத வேண்டும் என்ற மனப்பான்மையோடு சொல்லப்பட்டிருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் மேல் தனிப்பட்ட வன்மமோ, அனுதாபக்குறைவோ இதை எழுதியவருக்கு இருக்கமுடியாது என்பது வெளிப்படை. இது நேரடியாக குண்டுவெடிப்புகளுக்கு பின் உள்ள அரசியலைப் பேசுகிறது. சென்னையில் இருந்த போது நடந்த சாலை விபத்து நினைவுக்கு வருகிறது. அடிப்பட்ட பெண் சாலையில் கிடக்க ஆயிரம் பேராவது அனுதாபம் தெரிவித்து அடுத்த வேளையைப் பார்க்கப் போய்விட்டார்கள். இரத்தத்தில் தோய்ந்த தலையை புரட்டுவதா வேண்டாமா, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேண்டுமா, ஆட்டோ போதுமா என்று யோசித்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த அனுதாபம் துளியும் இல்லை என்று சொல்லமுடியும்.
ReplyDeleteஇந்த மாதிரியான சம்பிரதாயங்களை நம்மைவிட மேற்குலகம் நன்கு பயின்றவை. அதனால் தான் அவைகள் பிறர் மேல் அதிக கொடுமைகளை இழைக்கமுடிகின்றன என்றால் அது பிழையான பார்வையாக இருக்கமுடியாதென்றே சொல்வேன். அனுதாபத்தோடு அணுகுவது ஒரு வகை நிறுவனப் படுத்தப்பட்ட மத வழி அணுகுமுறை.
பத்ரியாவது அதைத் தவிர்த்து இதை அணுகியதற்காக அவருக்கு நன்றிகள்.
>>நன்றி சுனாமி
ReplyDelete**
>>அநியாயம் செய்யும் ஒட்டு மொத்த சமூகத்தின் நிலை
11:102 அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும், மிகக் கடினமானதாகவும் இருக்கும்
***
இந்த வரிச்ல இனொரு அனுதாபமரற்ற பதிவுன்னு யாரும் கோவப்படக் கூடாது.
பத்ரி சாரு ஒரு டாக்டரின் மன நிலையில் இத எழுதிகாரு. டாக்டரு அனுதபப்பட்டா பேசண்ட யாரு காப்பாத்துறது?
நீ கல்க்கு சாரே
தனது நாட்டு அரசு தன் மீதோ, அந்நிய நாடுகள்/குடிமக்கள் மீதோ வன்முறையைப் பிரயோகிப்பதைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்புக்களும் கல்வியறிவும் ஊடக வசதியும் இந்தியா போன்ற நாட்டின் குடிமக்களைவிட முன்னேறிய மேற்கத்தியக் குடிமக்களுக்கு அதிகம் இருக்கிறதென்பதில் சந்தேகம் ஏதும் இருக்கமுடியாது. Collateral damage என்று சர்வசாதாரணமாக உயிர்களைப் பட்டியலிட்டு போர் யந்திரத்தை அனைவர் தலைமேலும் ஏற்றும் முட்டாள் அரசாங்கங்கள் மீதான, அதைத் தேர்ந்தெடுத்து, இன்னும் ஆதரிக்கும் மக்கள் மீதான விமர்சனமாகத்தான் இதைப் பார்க்கிறேன். நிகழ்ந்த வன்முறையை, மரத்திலிருந்து தானாகத் தலைமேல் விழுந்த பனங்காய் என்று ஊடகங்கள் சித்தரிக்க முயல்வதைக் கணக்கில் கொள்ளாமல், இந்த customized bleeding heart liberalism கொண்டு, "வன்முறை நிகழ்ந்திருக்கிறது, அதைக் கண்டிக்காமல் இப்படி எழுதுகிறீர்களே" என்ற தொனியுடன் கண்டிக்கும் பின்னூட்டங்களைத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை. இறந்தவர்களைக்குறித்து வருத்தம் யாருக்குத்தான் இல்லை?
ReplyDeleteUnable to agree with you Badri. Going by your logic, what happened in Beslan is the mistake of Russian children?
ReplyDeleteAtrocities have been happening all over the world for centuries, doesn't mean that it is the mistake of the victims. If you say Iraq is the reason, the Americans will say 9/11, the terrorists will say Palestine (though the same Arab nations do not want Palestines in their land and have thrown them out), and it will go on and on till crusades.
Attacking innocent civilians is a strategy of urban warfare, and it ought to be condemned, be it by either side. Saying that we are attacked for our mistakes is almost masochistic in nature.
Do you think that if US pulls out of Iraq and Afghanistan the terrorist attacks will stop? Do you think going back to Taliban is good for Afgahnistan and going back to Saddam is good for Iraq?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபத்ரி, வணக்கம்.
ReplyDeleteஉண்மையை வெளிபடையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்! அதனைச் சகிக்க முடியாமல் சிலர் திமிருவது இயல்பே. 911 நிகழ்விற்குப் பின் -- அதனை நான் "பயங்கரவாதம்" என்று சொல்லாததற்குக் காரணம், நியு யாக்கில் மாண்டவர்களின் எண்ணிகையை விட பன் மடங்கு அதிகமானோரை கொன்று குவித்துவிட்ட 'கூட்டுப் படைகளின்' செயலை என்னவென்று சொல்வது? -- சூசன் சொந்தாக் என்பவர் இது போன்ற கருத்தைத்தான் வெளியிட்டார். (காண்க: http://www.american-pictures.com/english/jacob/Sontag.htm ) இதனால், அவர் வலதுசாரிகளின் இடைவிடா விமர்சனத்திற்கு உள்ளானார்.
இங்கு, இரண்டு தவறுகள் ஒன்றைச் சரியாக்காது என்ற அடிப்படையில், இலண்டனில் நடந்தது எப்படிப் பார்த்தாலும் தவறுதான், ஆதலால், நடந்ததைப் பயங்கரவாத மென்று கண்டிக்காவிட்டால், நாமும் பயங்கரவாதத்திற்குத் துணை போவதாக பொருட்படும் என்ற வாதம், சிறுபிள்ளைத் தனமான ஒன்றாகவே எனக்குப் படுகின்றது.
என்ன செய்வது ... தினமும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், பத்து, இருபது, ஐம்பது என்று அப்பாவி ஈராகியர்களையும் ஆப்கானிகளையும் கொன்று வருகின்றனரே. இன்று, அப்பாவி மக்களின் பரிதவிப்பிற்காகக் கண்ணீர் வடிக்கும் புஷ், பிலேர் இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் வாடும் அப்பாவி மக்களுக்காக கண்ணீர் வடிப்பதில்லை? உலக மக்களின் நலனையும் மனித உரிமைகளைப் பற்றியும் பேசும் பிலேர், கொலை ஆயுதங்களை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பிரிட்டன் முன்னனியி லுள்ளது என்று அறிந்திருக்க வில்லையா என்ன?
ஆயுதம் தயாரிப்பதற்காகவும், இராணுவத்திற்காகவும் ஒதுக்கப்படும் பணத்தில் பத்தில் ஒரு பங்கையாவது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவிப் பணமாகக் கொடுத்திருக்கலாமே! அதைத்தானே அவர்கள் செய்வதில்லை. இனியும் செய்வார்களா என்பதுகூட சந்தேகமே. பாதுகாப்பு என்ற பெயரில் இன்னும் அதிகமாகவே கொலை ஆயுதங்கட்காகச் செலவிடுவர். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டு மல்லவா!
இங்கு பயங்கரவாதத்திற்கான மூலக் காரணங்களை நாமே ஓரளவிற்கு யூகிக்க முடியும்போது, பிலேர், புஷ்ஷிற்குத் தெரிந்திருந்திருக்காதா? சிந்திக்க வேண்டிய ஒன்று. என்ன பத்ரி?
இ.வே.
I am appalled at this attempt to justify an act of terrorism. These arent militants - these are terrorists whose sole aim is to create terror. Even Indian army chooses to call people who support independent Kashmir as Kashmiri militants. There s a difference.
ReplyDeleteAnd If you doubt Blair is now gonna attack another country - you should get your facts right. He is on record stating - "the underlying issues have to be dealt with too in terms of trying to get rid of this dreadful perversion of Islam." He is actually talking about addressing the root causes rather than expressing outrage and declaring war. Isnt it something to be appreciated?
பத்ரி சார்... வழக்கமாக இங்கே பின்னூட்டமிட்டவர்களில் சிலர் பதிய வேண்டிய பதிவை நீங்கள் இட்டிருக்கிறீர்கள். அதான் வித்தியாசம். பதிவிட்ட நீங்களோ, பின்னூட்டமூலம் ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்க்ளோ இதற்கு தீர்வு என்ன இப்படியே tit-for-tat போய்க் கொண்டிருக்குமா என்று சொல்லவேயில்லையே?!
ReplyDeleteஉங்கள் காரணம் உங்களுக்கு எப்படியோ அப்படியே அவரவர் காரணங்கள் அவரவர்களுக்கு.
பின்னூட்டமிட்டவர்கள் உட்பட அவரவர் மனதைத் தொட்டு சொல்ல வேண்டும்.. தவறிப்போய் உங்கள் நெருங்கியவர்கள் இந்த அநியாயத்தில் உயிரிழந்திருந்தால் அப்போதும் இப்படி தான் காரண காரியங்களை அலசிக் கொன்டிருப்பீர்களோ?! காரண காரியங்களை அலசலாம். ஆனால் அதற்கான நேரம் இப்போதல்ல. முதலில் வலுவான கண்டனங்களை தெரிவிக்க மனமிருப்பவர்கள் மட்டும் தான் காரண காரியங்களை அலச தகுதியுள்ளவர்கள்.
//இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா?//
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் கேள்வி எழுப்பினால் ஒரு நாட்டிலும் ஒருவர் கூட உயிருடன் வாழத் தகுதி கிடையாது. அது என்ன செத்து போன நூற்று சொச்சம் பேர் மட்டும் பாவம் செய்தார்கள்? மற்றவர்களுக்கு பாவ (?!) மன்னிப்பா?!
I can understand the anger towards USA and Britain, but not the view that general public is responsible. You even accept blame for the atrocities in India, and by India. But tell me, what have you done, besides mouth-talk, about these problems? Ungalukku vasathiyanatha, ungalin 'opinion'il sari yendru paduvathai neengalum sethirukireergaLa illaiya? Nandraaka ezhuthi paarattu peruvathu mukiyamilla. Naama sollrathila evalavu vishyangala kadai pidikirOm enbathu thaan mukhiyam. Tony/Bush are both responsible for a lot of deaths. But these Islamic terrorism has gotten to be stretched too far. If the fight was for the people, it is understandable. But to kill in the name of religion is not justifiable, be it Islam, Hinduism or Christianity. Those people that died deserve the deepest sympathy and likewise, everyone that is being killed, that was killed due to the ignorance of gov't deserves sympathy. My knowledge of world events are not that great, but I am sure that London incident, WTC incident and Irag problem are not justifiable for any reason.
ReplyDeleteபத்ரி இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். நீங்கள் சொல்லிய விதயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும் அதை சொல்லும் நேரம் இதுவல்ல. நம் வீட்டுக்கு முன்புறமே குடைச்சல்தரும் எதிர் வீட்டுகரனை வைத்து கொண்டு, நாம் வாங்குகின்ற குத்துக்கள் ஏதோ கோடையில் தண்ணீர் பிரச்சனை, குளிர்காலத்தில் வெள்ளப் பிரச்சனை மாதிரி வழக்கமாகிப் போய்விட்டது. நமது எல்லைப் புறங்களில் தீவிரவாதத்தால் நம் சகோதரனொருவன் சகாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். போன உயிர்களுக்காக முதலில் வருத்தப் படுங்கள். 100 பேர் செத்துகிடக்க., அவைகளைப் புறம் தள்ளிவிட்டு, அந்நாட்டிற்கு அறிவுரை வழக்குவதில் தொடங்குகிறது பாசிசம். தீவிரவாதத்தை தினப்படி அனுபவிக்கும் நமக்குப் புரிய வேண்டும் உயிரின் மதிப்பு. சாதாரண மனிதன் எப்போதுமே தீவிரவாதத்திற்கு எதிரியே., அவன் சாவதில் எவ்வித நியாயமும் இல்லை.
ReplyDeleteAgree with the last comment about loss of life. But media coverage and outpouring of sympathy should be similar in size when around 50 Iraqi civilians get killed in a car bomb, on a regular basis.. And what about the iraqi death toll from the start of the war, anybody keeping a count ? People care only about the 'civilized' world ?
ReplyDelete//Agree with the last comment about loss of life. But media coverage and outpouring of sympathy should be similar in size when around 50 Iraqi civilians get killed in a car bomb, on a regular basis.. And what about the iraqi death toll from the start of the war, anybody keeping a count ? People care only about the 'civilized' world ? //
ReplyDeleteஅத்தனை உயிர்களும் தாயின் 'வலி' கொண்டே பிறக்கின்றன., ஒரு மனிதனின் இறப்பென்பதை., சக மனிதனோ., நாடோ., ஒரு தீவிரவாத இயக்கமோ தீர்மானிக்க முடியாது. அப்பாவி மக்கள் பலியிடப்படுவது எங்கு நிகழ்ந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீவிரவாதம் நியாயமான காரணத்திற்காக வந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அது கருவருக்கத்தக்கது. வளர்ந்த நாடுகள் செய்யும் அட்டூழியத்திற்கான கூலி அப்பாவி மக்களின் உயிர் என்பதை ஆதரித்தோமானால்., ஜப்பானின் (ஜப்பான் ஆடியதற்கான பரிசு அது என்றது அமெரிக்கா) நடந்தை சரி எனக் கூறும் கல் மனம் வேண்டும். நம்மைப்போன்ற பலர் செத்துக் கிடக்கும்போது பதறாமல் அறிவுருத்துவது., எருதின் புண்ணைச் சுவைக்கும் காக்கையே நினைவுறுத்துகிறது.
//People care only about the 'civilized' world ? //
அமெரிக்காவையும்., பிரிட்டனையும் பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகளாகத்தான் நான் பார்க்கிறேன். நாகரீகத்தில் அல்ல!!!.
http://www.tamilarangam.blogspot.com/ என்ற தளத்தில் இதை ஒட்டிய ஒரு விவாதம் நடக்கின்றது. இதில் நான் தெரிவித்த கருத்துகள் இதற்கம் பொருந்துவதால் இதில் இளைக்கின்றேன்.
ReplyDeleteபி;இரயாகரன்
11.07.2005
பிட்டனில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் தெரிவை, குண்டுவைத்தவர்கள் தெரிவு செய்தவையல்ல. அதை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் தான், தனக்குத் தானே தெரிவு செய்தது. இன்று மேற்கு நாடுகளில் குண்டுவைப்பவர்கள், பிறப்பில் அந்த உணர்வுடன் பிறந்தவர்களல்ல. மாறாக ஏகாதிபத்தியங்கள் உலகை அடக்கியாள விளைந்தன் எதிர்வினைகள் தான் இவை. உலகெங்கும் எகாதிபத்தியங்கள் சூறையாடுவதன் மூலமே, தமது சொந்தப் பணப்பைகளை நிரப்பிக் கொள்கின்றன. தமது சொகுசு வாழ்க்கையை கட்டமைக்கின்றனர். காலனிகளாகவும், அரைக் காலனிகளாகவும், நவகாலனிகளாகவும் உலகை பகிர்ந்து, அந்த மக்களின் பிணங்களின் மேல் தமது சொந்த சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பீற்றுகின்றனர்.
குறிப்பாக இது போன்ற தாக்குதல்களை இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி துற்றுகின்றனர். திட்டமிட்ட வகையில் இஸ்லாமிய விரோத பிரச்சரத்தை கட்டமைக்கின்றனர். இஸ்லாமிய மக்கள் மேல் திட்டமிட்ட குரோதத்தை, மேற்கு மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். இதன் பின்னயில் உள்ள அரசியல் என்ன?
இதற்கு பின்னால் ஒரு சந்தை, ஒரு வர்த்தகம், ஒரு சொகுச வாழ்க்கையே மண்டிக் கிடக்கின்றது. எண்ணை வர்த்தகம் தான்; குண்டுவெடிப்பின் மூலம். உலகில் எண்ணை மீதான கட்டுப்பாடு தான், உலக ஆதிகத்துக்கு ஆணிவேராக உள்ளது. இதற்குள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, எண்ணை வள நாட்டு மக்களில் பட்டு எதிர்ரொலிக்கின்றது. எண்ணை வளங்கள் குவிந்துள்ள நாடுகள் தற்செயலாகவே முஸ்லீம் நாடுகளாக இருப்பதால், எதிர்வினையும் இஸ்லாமிய மதவடிவத்தில் எதிரோலிக்கின்றது அவ்வளவே. இதற்கு வெளியில் இஸ்லாமிய மதம் மேற்கு ஜனநாயக கனவான்கள் கூறுவது போல், விசேடமான வன்முறையைக் கொண்டவையல்ல.
எல்லா மதங்களுமே வன்முறை சார்ந்தவைதான்;. இதில் தனிப்பட்ட மனிதனின் வழிப்பாட்டு உணர்வை நான் இங்கு குறிப்பிடவில்லை. தனிமனிதனின் வழிப்பாட்டு உணர்வை பயன்படுத்தி செயல்படும் மதங்கள் அனைத்தும், வன்மறையை அடிப்படையாக கொண்டது தான்;. இது குறுகிய வட்டத்தில் தொடங்கி விரிந்த உலகளவிய வடிவம் வரை செயல்படுகின்றது.
ஒரு நாட்டின் மேலான அன்னிய பாதிப்புகளை எதிர் கொள்ளும் போது சமூக விழிப்புணர்ச்சி பின்தங்கிய ஒரு நிலையில், ஆதிக்கத்தில் உள்ள மதங்கள் எதிர் வினையை தன்னகத்தே எடுத்துக் கொள்கின்றது. இதில் இருந்து பிரதிபலிப்பபே லண்டன் தொடர் குண்டுவெடிப்பு.
உள்ளடக்க ரீதியாக இது பயங்கரவாதமாக உள்ளது என்பது எந்தவிதத்திலும் பிரிட்டிஸ் அரச பயங்கரவாதத்தை விட மோசமானவையல்ல. பிரிட்டிஸ் அரசு பயங்கரவாதங்கள் மிகவும் கொடூரமானவை. பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை கொன்றபடிதான், அது உயிர் வாழ்கின்றது. அது தன்னைத் தான் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கவசங்களால் போர்த்தியபடி தான் உலவுகின்றது. மனித உழைப்பை கொள்ளையிடவும், தேச வளங்களை சூறையாடவும் என்ற இலட்சியங்களுடன் தான் உலகை அடிமைப்படுத்தினர். இதன் எதிர்வினைகள் அனைத்தும் அடக்கியாள நினைக்கும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் இருந்து பிரதிபலிக்கின்றது.
இந்த நிலையில் எதிர்வினைகளை செய்பவர்கள் அடிப்படைவாத உள்ளடகத்துடன், மக்களை பற்றி கவலைப்படாத அராஜக வழிகளில் களமிறங்குகின்றனர். ஈவிரக்கமற்ற மனித விரோதத்தை அடிப்படையாக கொண்டு, கண் மூடித்தனமான எதிர் தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதல்கள் அரசு பயங்கரவாதத்தின் ஊற்று மூலங்களை அல்ல, உழைத்து வாழும் எழை மக்களின் அன்றாட போக்குவரத்துகளில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதுடன், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நியாயமான உணர்வுடைய மக்களின் கருத்து நிலைக்கு கூட குண்டு வைத்துவிடுகின்றனர்.
ஏகாதிபத்தியம் உலகை ஆளத் துடிக்கும் ஆக்கிரமிப்புகளை நடத்து இன்றைய நிலையில், அதற்கு எதிராக மேற்கு நாட்டு மக்கள் நாளந்தம் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதை பிரிட்டிஸ் மக்களும் தொடர்ச்சியாகவே செய்கின்றனர். அன்று குண்டு வெடிப்பில் கொள்ளப்பட்ட அப்பாவி எழைப் பொது மக்கள் கூட, இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற்றவராகவோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவராகவோ நிச்சயமாக இருந்திருப்பர். இதன் விளைவு என்ன?
எதிரியல்லாத மக்கள் மேல் குண்டு வெடிப்பை நடத்துவதன் மூலம், மக்களை எதிரி நிலைக்கு தள்ளிவிடுவதையே செய்கின்றனர். இதன் மூலம் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு எதிராக மாறுவதை தடுத்துவிடுகின்றது. இதன் மூலம் அரசு பயங்கரவாதங்கள் கடுமையான எதிர்ப்பின்றி, உலகளவிய ஆக்கிரமிப்புகளை தொடர்வதை நியாயப்படுத்திவிடுகின்றது. சொந்த நாட்டிலும், அன்னிய நாட்டிலும் மக்களின் அடிமைத்தனத்தை இலகுவாக செய்வதற்கு இவை துணையாகின்றது.
உங்கள் கருத்துகள், உங்கள் கேள்விகளின் அடிப்படையில் இது தொடரும்;
பி.இரயாகரன்
10.07.2005
//பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு.//
ReplyDeleteஎனக்கு இது நியாயமாகவே படுகிறது. ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தபிறகு வந்த தேர்தல்களில் புஷ்ஷும் பிளேரும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் கொள்கைகள், வழிமுறைகளை நன்கு அறிந்தபிறகும் அவர்களுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த பொதுமக்கள், இத்தகைய பின்விளைவுகளுக்கு தார்மீக பொறுப்பேற்பதுதானே நியாயம்?
//எனது ஆதரவு வார்த்தைகளால் எந்தப் பிரயோசனமும் இல்லை.//
உண்மைதான். ஒப்புக்கு 'த்ஸு..த்ஸு..' சொல்லிவிட்டு நகர்ந்து போவதால் என்ன பிரயோசனம்? இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழும்போது, 'அது ஏன் நிகழ்ந்தது? இன்னொரு முறை இதுபோல் நிகழாமல் தடுக்க என்ன வழி?' என உரியவர்கள் சிந்திக்கத்தொடங்கினாலாவது எதிர்காலத்தில் பலன் ஏற்படலாம்.
தவிர, இதுபோல ஆதரவு, அனுதாபம், கண்டனம் ஆகியவற்றை தெரிவிக்க அரசியல்வாதிகள் இருக்கிறார்களே!
இப்படிக்கு
அப்பாவி
பத்ரி
ReplyDeleteலண்டன் குண்டுவெடிப்புகள் தொடர்பான உங்கள் பதிவு மிகவும் தீவிரமான குரலில் ஏகாதிபத்திய நாடுகளின் குற்றங்களையும் அதற்கான தண்டணைகளையும் பற்றிப் பேசுகிறது. உலகின் முதன்மையான போர்க் குற்றவாளிகளான அமெரிக்கா மற்றும் அதன் சார்புநாடுகளின் இன்றைய நிலைக்கான காரணத்தை மிகத் தெளிவாக முன்வைத்திருந்தீர்கள். போப் ஆண்டவர் ' கடவுளின் பெயரால் கேட்கிறேன் பயங்கரவாதத்தை நிறுத்தங்கள்' என்று அறிக்கைவிட்டிருக்கிறார். இந்த உலகின் நகைச்சுவை மிகவும் குரூரமாக இருக்கிறது. அப்பாவிகள் கொல்லப்ப்டுவதை நாம் சகிக்க இயலாது. ஆனால் இந்த கொலைகளை தூண்டுவது ஒசாமாபின்லேடனா அல்லது ஜார்ஜ் புஷ்சும் டோனிபிளேயருமா என்ற கேள்விதான் மிகவும் முக்கியமானது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற உள்ளீடற்ற கோஷத்தை முன்வைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
மனுஷ்ய புத்திரன்
Excellent edit and a lot better than the Hindu version!.
ReplyDeleteÀòâ ¨¼õŠ ¦ºö¾¢¸û
ReplyDelete12-7-05
Äñ¼ý: 60 ÌüÈšǢ¸¨Ç ¦¸¡ýÚ, 1000 §ÁüÀð¼ ÌüÈšǢ¸¨Ç ¸¡ÂÁ¡ì¸¢, Äðºì¸½ì¸¡É ÌüÈšǢ¸¨Ç §Å¨Ä§À¡¸Å¢¼¡Ð ¾Îò¾, ƒ¢†¡¾¢Šð ±É ¦º¡øÄôÀÎõ ¿¢Â¡Â §À¡Ã¡Ç¢¸¨Ç ÌüÈšǢ¸Ç¡É §À¡Ä£Š ¸ñÎÀ¢ÎòÐûÇÐ. «ó¾ 4 ¿£¾¢ §À¡Ã¡Ç¢¸Ùõ ¿£¾¢ì¸¡¸ ¾ýÛû ̽¨¼ ¦ÅÊòÐ ¾ü¦¸¡¨Ä ¦ºöÐûÇÉ÷. «ó¾ 4 ¿£¾¢§À¡Ã¡Ç¢¸Ùõ À¢Ã¢ðʉ À¢Ã¨ƒ¸û. À¡¸¢Š¾¡ý â÷Å£¸ò¨¾ º¡÷ó¾Å÷¸û; «Å÷¸û À¡¸¢Š¾¡É¢ø ¾ü¦¸¡¨Ä §À¡÷À¢÷ «¨¼ó¾Å÷¸û ±É ¿õÀô Àθ¢ÃÐ. ±ý§É «Å÷¸û ¾¢Â¡¸õ!! «¾É¡ø «Å÷¸ÙìÌ Àòâ ¿£¾¢ Å£Ã÷ ±ýÈ Àð¼õ ¦¸¡Îì¸ô Àθ¢ÈÐ.
4-9-05: ¦ÀŠÄ¡ý: º¢Ä ¾ü¦¸¡¨Ä ƒ¢†¡¾¢Šð ¿£¾¢§À¡Ã¡Ç¢¸û 400 ŨÃÂ¡É ÌüÈšǢ¨Ç ¦¸¡ýÈÉ÷. «¾¢ø À¡¾¢ ÌÆó¨¾ ÌüÈšǢ¸û. «ó¾ ƒ¢†¡¾¢Šð ¿£¾¢§À¡Ã¡Ç¢¸ÙìÌõ Àòâ ¿£¾¢ Àð¼õ «Ç¢ì¸ô Àθ¢ÈÐ.
Å.¦¸¡.Å¢ƒÂá¸Åý
பத்ரி டைம்ஸ் செய்திகள்
ReplyDelete12-7-05
லண்டன்: 60 குற்றவாளிகளை கொன்று, 1000 மேற்பட்ட குற்றவாளிகளை காயமாக்கி, லட்சக்கணக்கான குற்றவாளிகளை வேலைபோகவிடாது தடுத்த, ஜிஹாதிஸ்ட் என சொல்லப்படும் நியாய போராளிகளை குற்றவாளிகளான போலீஸ் கண்டுபிடுத்துள்ளது. அந்த 4 நீதி போராளிகளும் நீதிக்காக தன்னுள் குணடை வெடித்து தற்கொலை செய்துள்ளனர். அந்த 4 இநீதிபோராளிகளும் பிரிட்டிஷ் பிரஜைகள். பாகிஸ்தான் பூர்வீகத்தை சார்ந்தவர்கள்; அவர்கள் பாகிஸ்தானில் தற்கொலை போர்பயிர்ச்சி அடைந்தவர்கள் என நம்பப் படுகிரது. என்னே அவர்கள் தியாகம்!! அதனால் அவர்களுக்கு பத்ரி நீதி வீரர் என்ற பட்டம் கொடுக்கப் படுகிறது.
4-9-05: பெஸ்லான்: சில தற்கொலை ஜிஹாதிஸ்ட் நீதிபோராளிகள் 400 வரையான குற்றவாளிளை கொன்றனர். அதில் பாதி குழந்தை குற்றவாளிகள். அந்த ஜிஹாதிஸ்ட் நீதிபோராளிகளுக்கும் பத்ரி நீதி பட்டம் அளிக்கப் படுகிறது.
வ.கொ.விஜயராகவன்
பத்ரி,
ReplyDeleteநல்ல பதிவு.
நடுநிலை ஆய்வு.
ஆனால் அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி மக்களும் ஆக்கிரமிப்புப் போருக்குப் பொறுப்பு என்பதுதான் சற்று அதீதமாகத் தெரிகிறது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அப்பாவி மக்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்? அவர்களைக் குறை சொல்வது ஒருவித அராஜகம் என்றே தோன்றுகிறது.
கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இன்னதென்ற அறிவுமிலார் என்பதே மக்களின் நிலை. மற்றபடி நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்..
ராம்கி http://stationbench.blogspot.com
//...நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.//
ReplyDeleteபத்ரி,
இவ்வார்த்தைகள் உண்மையானவை! இதில் எனக்கு மாற்றுக்கருத்தோ அன்றி 'மனிதாபிமான' பம்மாத்து முகமோ கிடையாது. ஏனெனில் இதை நேரிலும் அனுபவத்திலும் கண்டவன்.
ஈழத்தில் நடக்கும் சிங்கள அராஜகத்துக்கு எல்லா சிங்கள மக்களுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் கடந்த 55 ஆண்டுகளாக வெறும் இரண்டுகட்சிகளை மாறி மாறி ஆட்சியேற்றுகிறார்கள். தமக்கு எதுவும் தெரியாது, எல்லாம் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளால் வந்தது, பாவம் ஏழைச்சிங்களவர்கள் (ரயாகரன் டைப் காரணம்) , பொருளாதாரம், எண்ணெய் வியாபாரம்...என்று பம்மாத்து விடுகிறார்கள். இப்போது புதுக்காரணம் வைத்திருக்கிறார்கள். வடகிழக்கில் நடப்பது தமக்குத்தெரியாதாம்! கொழும்பில் தமிழர்ருக்கு (பத்திரிகையாளருக்கு) நடக்கும்போது தெரியாதாம். ஆனால் சிங்களப் பத்திரிகையாளருக்கு நடக்கும்போது (அரசியல் காரணங்களுக்காக) வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு 'அலங்கார' கொடிதான் தமிழருக்கு ஆதரவான கோசம்! அதை நம்பி (?!) தமிழரிலும் ஒரு கூட்டம் பாவம் அப்பாவி ஏழைச் சிங்களவர், பால்குடி மாறாத சிறுவர் என பம்மாத்துக்காட்டுகின்றனர். சொன்னால் பார்த்தீர்களா சிங்கள மக்களுக்கு உங்கள் கஷ்டம் புரிகிறது பார்த்தீர்களா? என்கிறார்கள். இதில் 'கொமினிச' கத்தரிக்காய் வேறு. ஏதோ ரஷ்யா இருந்திருந்தால் புடுங்கி இருப்பார்கள் என்று. ப்ழைய ஜே.வி.பி யினர் (தீவிர சோசலிச வாதிகள்) புரட்சியின்போது இலங்கைக்கு கைகொடுத்தது சீனா (மக்கள் சீனா என சொல்வதில் பெருமிதம்) ரஷ்யா (சோசலிச குடியரசு) இந்தியா (தாய் நாடு, அன்னை இந்திரா) மூன்றும் கைகோர்த்து ஜே.வீ.பியை தொலைத்தார்கள்.
இதைச்செய்ததன் மூலம் உண்மையான சோசலிசவாதிகளை கொன்று வெறும் இனவாத பன்னாடை எச்சங்களுக்கு வழி சமைத்ததுதான் இந்த சோசலிச நாடுகள் செய்தது எனக்கூறுவோரும் உள்ளனர்.