Wednesday, November 09, 2005

நிலமெல்லாம் ரத்தம் முன்பதிவு

நிலமெல்லாம் ரத்தம்/Israel-Palentine/இஸ்ரேல்-பால்ஸ்தீன்


மேலே உள்ள சுட்டியைத் தொடர்ந்து இணையம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

5 comments:

  1. வாழ்த்துக்கள் பாரா & பத்ரி.

    தொடரை ரிப்போர்ட்டரில் அவ்வப்போது படித்துவந்துள்ளேன். விருவிருப்பாக நன்றாக இருந்தது. புத்தகமாக வரும்போது முழுவதும் படித்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். 101 அத்தியாயங்களில் பொறுமையாக ஒரு பெரிய வரலாற்றைச் சொல்லி இருக்கும் பா.ரா. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இந்த புத்தகத்தை மலேசியாவில் இருக்கும் நான் எப்படி வாங்குவது?

    ReplyDelete
  3. இந்த தொடர் ஒருதலைவ்ட்சமாகவே இருந்தது. பாலஸ்தீன தீவிரவாதிகளை விடுதலை போராளிகளாக காண்பிக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் ராகவன். முற்றிலும் விற்பனையை மையமாக கொன்டே எழுதப்பட்ட தொடர் இது. ஏனென்றால், இந்த தொடரை எதிர்ப்பதற்கு இங்கு யூதர்கள் யாரும் இல்லை.

    எங்கு சென்றாலும் அடித்து விரட்டப்பட்ட யூதர்கள் அனுபவித்த கொடுமையை மறந்துவிட்டு (அ) மறைத்துவிட்டு பாலஸ்தீன முஸ்லிம்களை நல்லவர்களாகவும், யூதர்களை கொடுமைக்காரர்களாகவும் காட்டியிருக்கிரார்கள். நாளை, காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் எழுதுவார்கள். காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லை என்று கூட எழுதுவார்கள்.
    நம் நாட்டில் நடந்த கொடுமைகள் எதுவும் இவர்கள் கண்களுக்கு தெரியாது. அப்பாவி காஷ்மீரி இந்துக்கள் அகதிகளாய் திரியும் அவலம் இவர்கள் மனதை பாதிக்கவில்லை.

    ReplyDelete
  4. செந்தில்: நீங்கள் பேசுவது முழு அபத்தம். காஷ்மீர் இங்கு எங்கு வருகிறது? Sweeping generalisation. விற்பனைக்காகத்தாண் நாங்கள் அனைவரும் புத்தகம் போடுகிறோம். அதே சமயம் நடுநிலையோடு (எழுத்தாளரின் சார்பு நிலை நிச்சயம் வெளிவரத்தான் செய்யும்) நியாயமாக எழுதவே ராகவன் தலைப்பட்டுள்ளார்.

    உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். தகவல்கள் திரிக்கப்பட்டுள்ளன என்றால் அதைச் சுட்டிக்காட்டலாம்.

    யூதர்கள் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது இந்தப் புத்தகத்தில் விளக்கமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புத்தகம் பாலஸ்தீனத்தைப் பற்றியது. ஜெர்மனியில்/ஐரோப்பாவில் யூதர்களுக்கு நடந்த கொடுமைகள் நடந்தவை இந்தப் புத்தகத்துக்கு எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு உள்ளது.

    ReplyDelete
  5. திரு. செந்தில் அவர்களின் வாதம் சரியானதாக இல்லை. பாரா போன்ற பிரபல எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும் கண்மூடித்தனத்துடன் குற்றம் சொல்வது இணையத்தில் பலரது பழக்கம். இந்தக் குற்றச் சாட்டுக்கள் குறுகிய காலத்தில் இறந்துபோகக்கூடியவைகள்தான். நான் திரு. பாரா எழுதிய டாலர் தேசம் என்கிற அமெரிக்கா குறித்த நூலை முழுக்க வாசித்திருக்கிறேன். அந்த நூலைக் காட்டிலும் இந்த நிலமெல்லாம் ரத்தம் தொடரில் சரித்திரம், கலப்படமில்லாமல் முழுமையாகவும் ஆழமாகவும் சார்பற்றும் பதிந்திருக்கிறது. அமெரிக்கா குறித்த நூலில் பல இடங்களில் மேலோட்டமான பார்வையே தெரிந்தது. ஆனால் நிலமெல்லாம் ரத்தத்தில் பிரச்னையின் தீவிரத்தையும்ம் முக்கியத்துவத்தையும் நன்கு புரிந்துக்கொண்டு எழுதியிருக்கின்றார். எந்தவிதமான சார்பு நிலையும் இதில் எடுக்கவில்லை என்பதே என் கணிப்பு.

    ReplyDelete