மேற்படி இணையத்தளத்தில் யார் என்ன என்ற தகவல் முழுவதாகக் கிடைக்கவில்லை, ஆனால் இன்று தி ஹிந்துவில் வந்த செய்தியில் மேற்படி விவாத மேடை முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள், நன்கு அறியப்பட்ட கவிஞர் கனிமொழியும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இணைந்து உருவாக்கியுள்ள மேடை என்று தெரிய வந்தது.
வரைபடம் பற்றி எனக்கு அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. சிறு பிழை, சரி செய்து கொள்ளலாம்.
ஆனால் மற்றபடி இந்தக் "கருத்துச் சுதந்திர" இணைய விவாத மேடையில் என்ன புதுமை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. யார் வேண்டுமானாலும் இணைய விவாத மேடைகளை அமைக்கலாம். Forumhub எனப்படும் மன்ற மையம் மிகவும் பிரசித்தமானது. யாஹூ குழுமங்கள் பலவும் - மரத்தடி, ராயர் காபி கிளப், தமிழ் உலகம், அகத்தியம், இன்ன பல - பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. முத்தமிழ் மன்றம் என்ற ஒரு விவாத மேடை உள்ளது.
இன்னமும் எத்தனை எத்தனையோ எனக்குத் தெரியாத விவாத மேடைகள் இருக்கலாம். Soc.culture.tamil பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் சார்ந்த விஷயங்களுக்கான விவாத மேடையாக இருந்து வந்திருக்கிறது. இவையனைத்திலும் கருத்துச் சுதந்தரம் இருந்து வந்துள்ளது. சிலவற்றில் மட்டுறுத்தல் இருந்துள்ளது, சில மட்டற்ற மேடையாக இருந்துள்ளன.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம், கனிமொழி ஆரம்பித்திருக்கும் விவாத மேடையில் என்ன விசேஷம்? நான் பார்த்த அளவில் ஒன்றுமில்லை. தொழில்நுட்ப அளவில் வெகு சாதாரணம். அபத்தமான சில பதிவுகளே அங்கு காணப்படுகின்றன. மேடையைத் தொடங்கியுள்ளவர்கள் தாங்களாக ஒன்றுமே எழுதவில்லை - இதுவரையில். கருத்துகள் அனைத்துக்கும் எழுதியவர்களே பொறுப்பு என்கிறார்கள்.
"குறிப்பு: தனிப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் எத்தகைய கருத்துக்கும் விமர்சனத்துக்கும் இந்த கருத்து மேடை - இயக்கம் பொறுப்பல்ல. எழுதுபவர்கள் தனிப்பட்ட சுதந்திரமான கருத்தை சுதந்திரமாக அவர்கள் சொந்த பொறுப்பிலே வெளியிடுகிறார்கள்."ஆனால் இந்திய IT Act, 2000 படி இந்த வாதம் செல்லுபடியாகாது. பிரச்னை ஒன்று ஏற்படுமானால், விவாத மேடையை அமைத்துக்கொடுத்தவர்களும் மானநஷ்ட, இன்னபிற குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். விவாத மேடையில் சட்டத்துக்குப் புறம்பானவற்றைப் பற்றிப் பேசுவது (உ.ம்: நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை, பயங்கரவாதம் etc.), சிலர் ஒன்றுசேர்ந்து சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பற்றி ஆலோசிப்பது (உ.ம்: பஸ்களை எரிப்பது பற்றியோ, ஒருவரைக் கொலை செய்வது பற்றியோ, ஒரு வங்கியைக் கொள்ளையடிப்பது பற்றியோ), வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்துவது (defamation) போன்ற பலவும் IT Act, 2000 படி குற்றமாகும்.
அதுவும் இந்தக் குற்றங்கள் நடந்தால் விவாத மேடை நிறுவனர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்யாமலிருந்தால் விவாத மேடை நிறுவனர்கள் தவறு இழைத்தவர்கள் ஆவார்கள். IT Act, 2000, செக்ஷன் 85 படி:
Offences by Companiesதி ஹிந்து செய்தியின்படி விழாவின்போது பேசிய எழுத்தாளர் சுஜாதா "முழுமையான கருத்துச் சுதந்தரம் இருக்க முடியாது என்றும் விவாதங்களை, தேவைக்கேற்றவாறு தணிக்கை செய்வது அவசியம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(1) Where a person committing a contravention of any of the provisions of this Act or of any rule, direction or order made thereunder is a company, every person who, at the time the contravention was committed, was in charge of, and was responsible to, the company for the conduct of business of the company as well as the company, shall be guilty of the contravention and shall be liable to be proceeded against and punished accordingly:
Provided that nothing contained in this sub-section shall render any such person liable to punishment if he proves that the contravention took place without his knowledge or that he exercised all due diligence to prevent such contravention.
(2) Notwithstanding anything contained in sub-section (1), where a contravention of any of the provisions of this Act or of any rule, direction or order made thereunder has been committed by a company and it is proved that the contravention has taken place with the consent or connivance of, or is attributable to any neglect on the part of, any director, manager, secretary or other officer of the company, such director, manager, secretary or other officer shall also be deemed to be guilty of the contravention and shall be liable to be proceeded against and punished accordingly.
Explanation - For the purposes of this section
(i) "company" means any body corporate and includes a firm or other association of individuals; and
(ii) "director", in relation to a firm, means a partner in the firm
என் கணிப்பில் இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை. அதற்கும் மேலாக வலைப்பதிவுகள் விவாத மேடைகளை விட வலுவான சமூக அமைப்பு கொண்டவை. அதனால் நாளடைவில் விவாத மேடைகள் காணாமல் போய்விடும். தணிக்கையற்ற விவாத மேடைகளை நடத்த முடியாது. இது விவாத மேடைகளின் அமைப்பாளர்களுக்குக் கடுமையான அழுத்தத்தைத் தரும். வருமானம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில் இதுபோன்ற விவாத மேடைகளை அமைத்துத் தருவது பிரயோசனமில்லாத செயல் என்று அவர்களே இதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
ஆனால் வலைப்பதிவுகளைப் பொருத்தவரையில் அதைச் சரியாகப் பராமரிப்பது வலைப்பதிவுகளை நடத்துபவர்களின் வேலையாகும். எனவே இங்கு ஒவ்வொருவரும் தனக்குத் தானே மானநஷ்டம், இன்னபிற வழக்குகளின் இக்கட்டை நேர்கொள்கிறார்கள்.
[IT Act India 2000, அது இந்தியர்களின் வலைப்பதிவுகளை எவ்வாறு பாதிக்கிறது ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ள வலைப்பதிவர்கள் அவசியமாகப் படிக்க வேண்டிய ஒரு தளம் இது.]
ITA2000 சுட்டிக்கு மிக்க நன்றி - Bookmark செய்துகொண்டாகிவிட்டது. இதை ஒரு வாட்டி மேலாகப் படித்தாலே பயமாக இருக்கிறது. யாராவது உங்கள் கருத்துகளைத் திரித்தும் ஒரு வழக்கு தொடர முடியும் போல. Comment moderation செய்யவேண்டியதும் ரொம்ப முக்கியம் என்று தெரிகிறது.
ReplyDeleteஇதன் சாரத்தைத் தமிழில் பெயர்த்து [பத்து கட்டளைகளாய் :)) ] இடலாம் - புண்ணியம் வந்து சேரும்.
கண்ணன்: அதனால்தான் நான் என் ஆங்கில, தமிழ் வலைப்பதிவுகளில் கமெண்ட் மாடரேஷனைச் செய்துள்ளேன்.
ReplyDeleteBadri
ReplyDeleteI looked at the site and posted the
post in my blog.At that time i did not dig deep into the site.After that I find the site is inaccessible.So I am unable to comment further on the site.
If they merely want to provide a forum for expressing views there is no need for one more forum unless that one forum is
going to be very different in terms of content and technical features.But from what has appeared in the papers i think
that they have no idea about the
forum, nor they seem to be have any specific objectives like offering legal service to protect freedom of expression.
ரொம்பவும் உபயோகமான தகவல்கள். நன்றி, பத்ரி.
ReplyDeleteஒரு கேள்வி - நானும் கமெண்ட் மாடரேஷன் செய்யலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்வதற்கு எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுவது என்பது சிந்தனையாக இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இல்லை, கருத்து ரீதியாக. நீங்கள் என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்?
நன்றி.
//என் கணிப்பில் இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை. //
ReplyDeleteஎன் கணிப்பும் இதுதான்
ஸ்ரீகாந்த்: கருத்து ரீதியாக நான் செய்யப்போவது (இப்போதைக்கு) இதுதான்:
ReplyDelete1. spam, தேவையற்ற வெட்டி விளம்பரங்கள் ஆகியவை வெட்டப்படும்.
2. மூன்றாவது மனிதர்களை (என்னை அல்ல) பற்றி ஒருவர் எழுதும்போது defamation/libel என்று நான் அதைக் கருதினால் அதனை வெளியிட மாட்டேன்.
3. என்னைப் பற்றி எந்த விமரிசனத்தையும் வெட்டமாட்டேன் - ஆனால் கீழ்த்தரமான "கெட்ட" வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதை வெட்டுவேனா மாட்டேனா என்று இன்னமும் யோசிக்கவில்லை.
4. ஒரு பதிவுக்குச் சம்பந்தமற்ற பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.
இவைதான் இப்பொழுதைக்கு...
(உஷா போட்டிருந்த "test:-)" பின்னூட்டத்தை வெட்டிவிட்டேன்:-)
karuthu.com paridhapamaga irukkiradhu. innum konjam marketing seidhal pizhaikalam. forumkalai vaazha vaikka community vendum.
ReplyDeletethamiznaatil karuthu sudhandhiram illamal irukalam. inayathil yeralaaga karuthu sudhandhiram ulladhu. ivargaludaya idea ennavendre puriyavillai.
Maybe, since the forum is run by celebrities, it can potentially attract a broader audience. The forum was started in response to the recent attacks on suhasini and kushboo. It's a welcome sign that atleast some sections of the ruling class are concerned about free speech. The protests in the past few days against suhasini and kushboo make me wonder if tamilians are cave people in modern dress. It's the protest by these barbarians that's insult to the great Tamil culture.
ReplyDeleteBadri, I am interested in writing one article regarding hacking(may be hethical hacking). I dont know whether I will face any problem regarding this. Please clarify my doubt.
ReplyDeleteஉருப்படியான, தேவையான தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி, பத்ரி.
ReplyDeleteஇதைப் படித்துவிட்டு மீன்டும் ஒருமுறை என் வலைப்பதிவில் பல மறுமொழிகளைக் களையெடுத்துள்ளேன். நமக்கு எதுக்கு வம்பு! ஆனால் இதில் நான் 'எனக்குத் தோணியபடி'தான் முடிவெடுத்தேன். பெரிய 'வழிமுறை'களையெல்லாம் பின்பற்றவில்லை;-) 'நியாயஸ்தன்' பட்டமெல்லாம் வாங்கி வெச்சுட்டு என்ன செய்வது:P
கருத்துச் சுதந்திரம் வாழ்க!
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி. இன்றைய நிலையில் எங்குமே கருத்துச்சுதந்திரம் என்பது ஒரு பம்மாத்தே! அது இணையத்தில் மட்டும் சாத்தியம் என்பது பொய்யான தோற்றமே. ஏனெனில் சுதந்திரத்துக்கான தேவையை மற்ற வெளிகளில், தளங்களில் பெறாத சமூகம் ஒரு தளத்தில் மற்றும் பெற்றிருக்கும் என்று நம்புவதும், அவ்வெளியில் சுதந்திரம் அனுமதிக்கப்படும் என்று சொல்வதும் உண்மையிலேயே சாத்தியமில்லாதது.
ReplyDeleteமோகன்தாஸ்: எத்திக்கல் ஹேக்கிங் பற்றி எழுதுவதில் எந்தத் தவறுமில்லைதான். ஆனால் அதே சமயம் ஹேக்கிங் செய்வது எப்படி என்று நீங்கள் வரிவரியாக எழுதி, அதைப் பார்த்து ஒருவர் சில இணையத்தளங்களை வீணடித்து, நாளை போலீஸில் பிடிபடும்போது "ஏன் செய்தாய்" என்ற கேள்விக்கு மோகன்தாஸ் பதிவில் எழுதியிருந்தபடி செய்துபார்த்தால் என்ன என்று செய்தேன் என்று சொன்னால் உங்களையும் விசாரிக்க வேண்டிவரும்... (என்று நினைக்கிறேன்.)
ReplyDelete"வங்கியைக் கொள்ளையடிப்பது எப்படி" என்று பதிவு போடுவதற்கும், "ஒரு வங்கி எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கொள்ளையடிக்கப்படும், என்ன செய்தால் வங்கிக் கொள்ளையைத் தடுக்கலாம்" என்று எழுதுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கவனமாக எழுதுதல் நலம்.
கண்ணன்: Comment moderation செய்வது வேறு ஒரு காரணத்துக்காகவும் அவசியம். Identity theft... யாராவது வேறொருவர் பெயரில் (உ.ம்: டோண்டு, போலி டோண்டு) libellous பின்னூட்டங்களை இட்டால், சந்தேகம் ஏற்படின் அதுபோன்ற பின்னூட்டங்களை அனுமதிக்காமல் இருக்கலாம்.
ReplyDeleteநன்றிங்க பத்ரி, நானும் அதைத்தான் நினைத்தேன், எழுதப்பார்க்கிறேன் கவனமாக.
ReplyDelete//வரைபடம் பற்றி எனக்கு அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. சிறு பிழை, சரி செய்து கொள்ளலாம். //
ReplyDeletehttp://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=pol&itemid=7
The above book "பாக். ஒரு புதிரின் சரிதம் " itself has a Pak map with POK included..!! hahaha..!