தி ஹிந்து செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பஞ்சாயத் யூனியனில் உள்ள மோட்டூர் பஞ்சாயத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மஹேஸ்வரி என்ற தலித் சமைக்கும் உணவைச் சாப்பிடமாட்டோம் என்கின்றனர்.
அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை.
முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மாடன், Village Gounder (அப்படியென்றால்?) மாதேஷ் ஆகியோர் மஹேஸ்வரியை ஏசியுள்ளனர். அதிகாரிகள் மஹேஸ்வரியை வேறு பள்ளிக்கு மாறச் சொல்லியுள்ளனர்.
மாடன், மாதேஷ் ஆகியோர்மீது Protection of Civil Rights Act, Section 4(3) வழக்கு போடப்பட்டுள்ளது.
தீண்டாமை தொடர்கிறது.
Update: தி ஹிந்துவில் வந்த மற்றொரு செய்தி
சேலம் பொன்னம்மாபேட்டையில் ஒரு கோயிலில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கும்போது, எல்லோருக்கும் வாழை இலையிலும், மாதேஷ் என்ற தலித் இளைஞருக்கு மட்டும் கையில்தான் கொடுப்பேன் என்றும் சொல்லியுள்ளனர். இதை மாதேஷ் எதிர்த்துக் கேட்டதற்கு திடீரென சிலர் கையில் அரிவாளுடனும் கட்டைகளுடனும் வந்து அவரைத் தாக்கியுள்ளனர்.
அழகும் ஆடம்பரமும்
4 hours ago
கொடுமை!என்று தான் திருந்துமோ இந்த சமுதாயம்!
ReplyDeleteபைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இன்னமுமா இந்தக் கொடுமை. ஓட்டல்களில் சாப்பிடும் பொழுது கூட இனிமே சமைக்கிறது யார் என்று கேட்டு விட்டுச் சாப்பிடுவார்கள் போல. மூடர்கள். இவன் ஒருவரைத் தன்னினும் கீழாக நினைப்பானானால்..இவனைத் தன்னினும் கீழாக நினைக்க ஒருவன் இருப்பான் என்பதை உணராதவன். மடையன்.
ReplyDeleteசாப்புடப்போற புள்ளைங்க மனசுலே இப்படி விஷத்தை விதைச்சிருக்காங்க பாருங்க.
ReplyDeleteபெரியவுங்க செய்யற இந்த அநியாயத்தைப் பிள்ளைங்களும் படிச்சுக்கப்போதுங்க.
வரப்போற தலைமுறை வேற்றுமை இல்லாம வளர விடமாட்டாங்களா?
கொடுமையோ கொடுமை.
ReplyDeleteபள்ளியிலேயே இவர்கள் அரங்கேற்றும் இக்கொடிய செயலை என்ன செய்வது.
எனக்கு வருகிற ஆத்திரத்தில் அவர்களை எல்லாம் தெருவில் நிற்க வைத்து அப்பெண்ணின் காலில் கிடக்கும் செருப்பால் அடிக்க வேண்டும்.
திருந்தாத ஜென்மங்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வேர்வையால் கிடைக்கும் அரிசி மற்றும் உணவு பொருட்கள் மட்டும் வேண்டுமா, அந்த அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு.
தலித் சமைத்த உணவைச் சாப்பிட்டால் என்ன? உயிரா போய்விடும்? இன்றைக்கும் தலித்துகளை வீட்டுக்குள் விடாமல், கோவிலுக்குள் விடாமல் தடுக்கின்றன சில அறிவிலி ஜாதிகள். பிறப்பினால் எல்லோருமே மனிதர்தானே? பின் எப்படி உயர்ந்தவர் தாழ்ந்தது? கத்தியை எடுத்து உங்கள் கையையும் எந்த தலித்தின் கையையும் வெட்டிப் பாருங்களேன். என்ன கலர் மாறியா ரத்தம் வருகிறது? என் இனம்தான் பெரிது, என் ஜாதிதான் பெரிது என்று பேசும் திருந்தாத மட ஜென்மங்கள்.
ReplyDeleteஅது கிராமத்து வழக்கு. கவுண்டர்கள் அதிகமுள்ள கிராமங்களில், ஊர் பெரிய மனிதர்களை, 'ஊர் கவுண்டர்' என்று சொல்வார்கள். ( நாட்டமை, மணியம், மிராசுதார். என்பது போல ), அதை, ஹிந்து village gounder என்று மொழிபெயர்த்திருக்கிறது.
ReplyDeleteகொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதிவெறி (பொதுவாச் சொன்னாலும் விதிவிலக்குகள் உண்டு)வெளிய நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகலில் வாழ்ந்திருப்பவர்களுக்கு, பிற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இவர்களின் தீண்டாமை மற்றும் இதர சாதிவெறித்தனங்கள் அதிர்ச்சியாய் இருக்கும்.
ReplyDeleteசாப்பிட வழியற்று ஏழ்மையில் அல்லாடும்போது குப்பைத் தொட்டியில் உள்ள எச்சில் கூட அமிர்தமாக இருக்கும். உடம்பில் கொழுப்பும், மனதில் கர்வமும் உள்ளவர்கள் உள்ளவரை இந்தக் கொடுமைகள் மாறாது போலும்.
ReplyDeleteவள்ளுவன், காந்தி, பெரியார், அம்பேத்கர் , பாரதி... இவர்கள் மீண்டும் பிறந்து வந்தாலும் இவர்களை
ReplyDeleteதிருத்த முடியுமா என்பது சந்தேகமே!
கொடுமையிலும் கொடுமை , தமிழ்நாடு கடந்த 40 ஆண்டுகளாக பெரியார்
கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் திராவிட கட்சிகளால் ஆளப்பட்டு வருவது!
மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் என்று மலரும்????
கத்தியின்றி ரத்தமின்றி வன்முறை ஒன்று நடக்குது!
ReplyDeleteஇது குறித்து போன வாரம் ஜூனியர் விகடனில் விவரமாக வந்திருக்கிறது. இதில் அரசியலும் கலந்திருக்கிறது எனவும், மகேஸ்வரியின் செவ்வியுடன் வந்திருந்தது
ReplyDelete//* இதை மாதேஷ் எதிர்த்துக் கேட்டதற்கு திடீரென சிலர் கையில் அரிவாளுடனும் கட்டைகளுடனும் வந்து அவரைத் தாக்கியுள்ளனர். *//
ReplyDeleteடோண்டு சார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ''நாங்களும் இப்பொழுது அருவாவை தூக்க ஆரம்பித்து விட்டோம்'' என்று கூறினார்களே அது இதுக்குத்தான் போல.
in one of my earlier posts: எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த ‘இவர்கள்’ தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது.
ReplyDeleteI still think the society can change. Consider the segregated America, and how it has evolved. Consider the high caste Eelam Tamils who form the underclass of the Western societies, and the altered caste situation in Eelam. So, the situation is not hopeless as some of the comments above indicate. But, it is sad to see when caste imposes itself in such a negative form.
ReplyDelete