Friday, March 17, 2006

Gesture-based keyboard

HP நிறுவனம் கணினிகளுக்கான புதிய தட்டச்சுப் பலகை ஒன்றை உருவாக்கியிருப்பதாக நேற்று தி ஹிந்துவில் செய்தி வந்திருந்தது.

இது பார்க்கும்போது டேப்ளட் கருவி போல் உள்ளது. ஸ்டைலஸ் வைத்து இந்த டேப்ளட்டில் எழுதினால் எழுத்து என்ன என்பதை உணர்ந்து அந்த எழுத்தைத் திரையில் கொண்டுவரும் நுட்பம்தான் இது.

எந்த அளவுக்கு தமிழ் மற்றும் பிற மொழிகளை உணர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

இந்த முறையில் வேகமாக எழுதமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாததற்கு தட்டித் தடவி எழுத்து எழுத்தாக எழுதி ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறேன்.

HP-யில் வேலை பார்க்கும் யாராவது இந்த கீபோர்டை எப்படி வாங்குவது என்று தகவல் சொல்லமுடியுமா?

1 comment:

  1. பத்ரி
    Hp எங்கள் அலுவலகத்திற்கு வந்து இதை எப்படி உப்யோகிப்பது என்று காட்டினார்கள். எழுத்தை புரிந்துகொள்ளாதவரை பல தவறுகளை செய்கிறது. ஒவ்வொருவர் கையெழுத்தையும் புரிந்துகொள்ள சில காலமாகலாம். ஆனால் மற்றவர் பயன்படுத்த முடியாதாகையால் பாதுகாப்பிற்கு வழி இருக்கிறது. டேப்லட் போல படங்களை நுழைத்து ஒரு விபத்தின் உடனடி அறிக்கை தயாரிக்கும் வகையில் இருக்கிறது.

    ReplyDelete