Wednesday, March 01, 2006

எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை

முழு விவரங்கள் இப்பொழுதைக்குத் தெரியவில்லை. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், ஹோட்டல் நிர்வாகம் போன்ற பல பட்டப்படிப்புகள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

நேற்று இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் கூட்டமாகக் கூடி இந்தக் கல்லூரி தொடங்கும் படிப்புகளுக்கு AICTE அனுமதி உள்ளதா என்று கேள்விகள் எழுப்பியிருக்கின்றனர். அதை NDTV கேமரா படம் எடுக்கச் சென்றுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் அடிதடியில் இறங்கினர், கம்ப்யூட்டர் லாபுக்குள் புகுந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள பொருள்களை நாசமாக்கியுள்ளனர் என்று கல்லுரி நிர்வாகம் கூறுகிறது. மாணவர்கள் தரப்பில் அவர்கள் எதையும் செய்யவில்லை என்றும் அடிதடியில் ஈடுபட்டது நிர்வாகத்தின் கைக்கூலிகள்தாம் என்றும் சொல்லப்படுகிறது. NDTV நிருபரும் கேமராமேனும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. அத்துடன் அவர்களது விடியோடேப் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கும் பாடங்களுக்கு AICTE அனுமதி தேவையில்லை; பல்கலைக் கழக மானியக் குழு (University Grants Commission) அனுமதியே போதுமானது என்கின்றது நிர்வாகம். (இது உண்மையா என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.)

சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிக்குக் காலவரையரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து செய்தி ஒன்று | இரண்டு
தினமணி செய்தி ஒன்று | இரண்டு

4 comments:

  1. //NDTV நிருபரும் கேமராமேனும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் //

    காவல்துறை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை போல. :(

    ReplyDelete
  2. அன்பின் முனைவரே
    அப்படித்தான் நடக்கின்றது. இது தமிழகத்தில் இரண்டாவது சம்பவம். அதுவும் ஒரு மாதத்திற்குள்ளாகவே. மாணவர்கள் பணம் கட்டி சேர்ந்துவிட்டார்கள். சேர்ந்த பின்தான் இத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்குத் தெரிய வருகின்றன. மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிப்பது தகுதிக்குறைவு என்ற ஒரு நீதி மன்ற ஆணை இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் தினமணியில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனை நிர்வாகத்தினர் மூடி மறைக்கப்பார்ப்பது வேதனை. அதெல்லாம் நடக்காது. போங்க என்ற பதிலால் மாணவரும் பெற்றோர்களும் சமாதானமாகிவிடுவார்களா என்ன.

    ReplyDelete
  3. Part of the blame lies with the deemed university concept.Earlier only few institutions like BITS and national level institutes were granted this status.During the last decade the UGC extended this to, too many institutes and this had led to lot of problems. UGC should have worked with AICTE to evolve some norms for this.Now
    AICTE finds that these deemed
    universities do not have adequate
    facilities.These deemed universities have all rights and no obligations and responsibilities.Universities do not have any control, nor the state govt. has any control over them. The proliferation of such
    universities has created too many
    problems, right from the admission
    stage.I would suggest that the UGC
    and AICTE should work together and
    try to restrict the status to deserving institutes only. Those which fail to meet the norms should be given the status of an
    affiliated college.

    ReplyDelete