* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணையலாம்; ஒரு கடிதம் கொடுத்தாலே போதும் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன். ஆனால் இப்பொழுது நடக்கும் விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுக்கிறார்.
* S.T.கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள 19 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து சில அடிப்படையான, கட்டாயமான தகவல்களைப் பெற அவர் முயற்சி செய்ததாகவும், அந்தத் தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் புகார் செய்துள்ளார்.
* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி. நெருக்கடி நிலையின்போதுகூட இம்மாதிரி இருந்ததில்லை என்கிறார்.
* Students Federation of India, All India Students Federation போன்ற மாணவர் சங்கங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஆதரித்து திருவான்மியூரில் போராட்டம் நடத்தின. சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மாணவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோருகின்றனர்.
முந்தைய பதிவு: நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை
கவளம்
9 hours ago
Badri,
ReplyDeleteInetentionally or unintentionally, it makes sense ..
// வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொல்லத் தடை விதிக்கவேண்டும்
-- Vignesh
நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலை உணர்த்துவது முழுக்க முழுக்க வியாபாரமே தவிர, அவர்களுக்கு மாணவர்களின் கல்வி நலன் குறித்தோ அல்லது சட்டரீதியான அணுகுமுறை குறித்தோ எல்லாம் கவலையில்லை. மேலும் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு விஷயத்தில் அரசுக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கல்வி தனியார்மயம் என்பது முழுக்க, முழுக்க வியாபாரமே - லாபமே! எனவே அரசின் கட்டுப்பாடு இல்லாமல் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படும் நிலையினை உடனடியாக மாற்றிட வேண்டும். ஜேப்பியார் போன்றவர்களின் இன்றைய நடவடிக்கை அவர்களின் பழைய தாதாதனத்தை இன்னும் கைவிடாமல், எந்த எல்லைக்கும் போகத் துணிந்துள்ளது தமிழகத்தில் நேர்ந்துள்ள பெரும் அவமானமாகும். கல்வியை இத்தகைய அரக்கத்தனமான வியாபாரிகளிடம் இருந்து உடனடியாக மீட்டிட வேண்டும். பிரான்சில் நடைபெறும் இன்றைய எழுச்சிகள் போன்று தமிழகம் மாறுமா?
ReplyDeleteநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி
ReplyDeletethis is atrocious.