Monday, August 10, 2009

இந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்

இன்று ரீடிஃப்.காம் தளத்தில் சுவாரசியமான செய்தி ஒன்றைப் படித்தேன். சீன நிபுணர் ஸாங் குவோ ஸான் லூ காங் என்பவர், சீனா எப்படி இந்தியாவின் பல எத்னிக் குழுக்களுடன் சேர்ந்து அவர்களது தேசிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவை 20-25 நாடுகளாகத் துண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்போதுதான் சீனா வலுவடையுமாம். இல்லாவிட்டால், இந்தியா ஆசியாவைத் தன் பின்னால் அழைத்துச் சென்றுவிடுமாம்.

இதுபோன்ற கோக்குமாக்கான எண்ணங்கள் அமெரிக்காவில் திங்டேங் என்ற பெயரில் நிறுவனங்களை நிர்வகித்து வருபவர்களுக்குத்தான் வரும். Project for the New American Century என்ற பெயரில் இருந்த அமைப்பு (டிக் செனி, பால் உல்ஃபோவிட்ஸ், டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், பில் கிறிஸ்டல்...) ஜார்ஜ் புஷ் குடியரசுத் தலைவராக வருவதற்குச் சில ஆண்டுகள் முன்னரே, பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோதே, தங்கள் திட்டத்தைத் தெளிவாக முன்வைத்தனர். எந்த நாட்டை அடித்து நொறுக்கவேண்டும்; எந்த நாட்டில் உள்குழப்பங்களை உருவாக்கவேண்டும்; எந்த ஆட்சிகளை மாற்றம் செய்யவேண்டும் போன்ற அதி உன்னதமான திட்டங்கள்.

ஆட்சிக்கு வந்ததுமே இந்த மூவர் குழு அதில் பல திட்டங்களை நடத்தவும் ஆரம்பித்தது.

இப்போது உலக அரங்கில் சீனா முன்னணியில் வரும்போது அதற்கும் இதுபோன்ற வலதுசாரி கிறுக்கு எண்ணங்கள் வந்துள்ளது.

இந்தியா என்ற நாடு சாத்தியமே அல்ல என்றுதான் உலகில் பலரும் நினைத்தனர், என்கிறார் ராமச்சந்திர குஹா, தன் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ என்ற புத்தகத்தின் முன்னுரையில். என்ன, ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நாசமாகிப் போய்விடும் என்ற ஆரூடங்களைப் பொய்த்து இந்தியா இன்னும் இந்தியாவாகவே, (காஷ்மீர் தவிர்த்து) எந்தவிதத்திலும் பெரிய அளவில் நில மாற்றங்களைக் காணாமலே முடிந்த அளவுக்கு ஒற்றுமையாக வளர்ந்துவருகிறது. என்னென்னவோ பிரச்னைகள் இருந்தாலும், மிக மிக மெதுவாக, ஆனாலும் மிக மிக உறுதியாக முன்னேறிச் செல்ல முயன்று வருகிறது.

சீனா ஒன்றும் சுகபோகமாக இல்லை. அங்கும் எண்ணற்ற பிரச்னைகள். சீனா, அமெரிக்க கிடையாது என்பதை சீன ஸ்ட்ரேட்டஜி வல்லுனர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தவனை அழித்தால்தான் தான் வாழமுடியும் என்ற காலனியாதிக்க மனநிலையிலிருந்தும் சீன ஸ்ட்ரேட்டஜி வல்லுனர்கள் விடுபடவேண்டும்.

அந்த ரீடிஃப் கட்டுரை சொல்வதைப்போல, சீன அரசு, இந்தக் கருத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வரலாற்றுரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. அதன் ஆரம்பங்களை ராமச்சந்திர குஹா மிக அழகாகத் தன் புத்தகத்தில் விளக்குகிறார். அதேபோல, பல்லவி அய்யரின் சமீபத்திய புத்தகமான ‘சீனா - விலகும் திரை’யும் இந்திய-சீன உறவை சமகாலக் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது.

இந்தியாவும் சீனாவும் கரம் கோத்து முன்னேறவேண்டிய காலகட்டம் இது. இரு நாட்டு மக்களும் வர்த்தகத்திலும் உற்பத்தியிலும் ஒருவரோடு ஒருவர் போட்டிபோடவேண்டும் என்றாலும் அந்தப் போட்டி நியாயமானதாகவே இருக்கலாம். அடுத்தவரை அடுத்துக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.

வரும் நாள்களில் தி ஹிந்து, இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்:-)

பல்லவி அய்யர் - சீனா: விலகும் திரை
ராமச்சந்திர குஹா - இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு - பாகம் 1

27 comments:

 1. //
  வரும் நாள்களில் தி ஹிந்து, இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்:-)
  //

  தி ஹிண்டு இந்தச்செய்தியை தன் பத்திரிக்கையில் மட்டும் போட்டால் உலகம் அழிந்துவிட்டது என்று அர்த்தம்.

  சீனக்கைக்கூலி நரசிம்மன் ராம் எடிட்டராக இருக்கும் வரையில், சீனக் கு** நக்கிகள் முக்கியப்பதவியில் இருக்கும் வரையில் திஹிண்டு இந்தச் செய்தியெல்லாம் பிளாக் அவுட் செய்துவிடும்.

  ReplyDelete
 2. //
  இப்போது உலக அரங்கில் சீனா முன்னணியில் வரும்போது அதற்கும் இதுபோன்ற வலதுசாரி கிறுக்கு எண்ணங்கள் வந்துள்ளது.
  //

  இது போன்ற எண்ணங்கள் வலது சாரி கிறுக்கு எண்ணங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்?

  ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் அந்த நாட்டின் வணிகத்திற்கும் பாதிப்பு வரும் வகையில் உள்ள அனைத்து நாடுகளும் போட்டி தான். அது அமேரிக்காவாக இருந்தாலும் சரி. சீனாவாக இருந்தாலும் சரி.

  போட்டியிடும் வீரனை வீழ்த்த அவனது வீக் பாயிண்டுகளைப்பற்றி ஆராய்வதில்லையா ? அது போல் தான்.

  இந்தியாவும் இப்படி சீனாவைத் துண்டாடுவது எப்படி, பாகிஸ்தானைத் துண்டாடுவது எப்படி என்றெல்லாம் வியூகம் வைத்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் இருப்பது வேண்டுமானால் இடதுசாரிக் கிறுக்குத்தனம் என்று சொல்லலாம்.

  நேரு இருந்தாரே. அப்படி.

  ReplyDelete
 3. வலதுசாரி கிறுக்கு எண்ணங்கள் என்றால் என்ன???

  ReplyDelete
 4. //வரும் நாள்களில் தி ஹிந்து, இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்:-)//

  சூப்பர் பஞ்ச்

  ReplyDelete
 5. Well said, Vajra!!

  If you extend this view point to a state level, district level, city level, village level, that is what we are all doing all over India. In-fighting / son of the soil / Mumbaikkars / Karnataka - Kaveri Issue / Kerala Mullai Periyar / lot of issues...Why do not we fight with each other? which place of Tamil nadu you are from??

  Can you justify these thoughts, Mr.Vajra??

  Just think on,

  Cheers to life,
  Thiru

  PS: can any one please tell me how to post in Tamil here? Google search points to e-kalappai link which is not working for me...

  ReplyDelete
 6. அன்புள்ள பத்ரி!
  பாரதம் இன்றும் பிளவுபடாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
  ஒன்று உலகிலேயே சமரச நோக்கு கொண்ட ஹிந்து மதம்.
  இரண்டாவது பாரம்பரியமாக குடும்பங்களுக்குள் இருந்துவரும் உறவுப் பிணைப்பு.
  இது தங்களுக்குத் தெரியாதது அல்ல. தி ஹிந்து நாளிதழ் போல மறைக்கப் பார்க்கிறீர்கள்.
  பாஸ்டனிலிருந்து விநோதினி

  ReplyDelete
 7. இந்தியா 20-25 தேசங்களாக அல்ல, தெற்கு ஆசியாவே பண்டைய முறைப்படி 64 தேசங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநிலமும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 8. TO RENGADURAI ABOVE.

  DONT BE FOOLISH. THIS IS NOT 12TH CENTURY AD. IT ABSOLUTELY FOOLISH TO SAY TO divide INDIA.

  REMEMBER WHAT HAPPEN TO pakistan. pakistan left india and became failed nation. if you divide tamil nadu from india. then it will also become failed nation like pakistan , bangladesh and sri lanka.
  many suryvey say india is a successfull nation other like srilanka, pakistan is worst failed nation in south asia.

  unity is power. so dont have any idea of dividing tamil nadu as india. dont say pandiya nadu chola nadu. say tamil nadu of india.

  ReplyDelete
 9. if your are feeling good divide tamil nadu from india then we are the loser. don tthink iam north indian i am from chennai velacherry.

  ReplyDelete
 10. Anony - I did not mean dividing India alone but the whole South Asia. If you wish, you can insist on dividing China too.

  ReplyDelete
 11. I will be surprised if this newsitem finds mention in The Hindu.

  ReplyDelete
 12. ரெங்கதுரை அவர்களே, சீனா பல சின்ன தேசங்களாகப் பிளவுண்டு இருப்பது பற்றி என்ன கருத்து சொல்கிறீர்?

  அல்லது, இந்தியா மட்டும் தான் பிளவு படவேண்டும் என்று நினைக்கிறீர்களா ?

  ReplyDelete
 13. திரு,

  You dont have to extend the view point into state level. If you can extend it to state level you can extend it to city level and family level also. Thats not what is needed here. Our extension is towards our enemy states. If china can have such ambitions, there is nothing wrong in fostering such attitudes towards china.

  China is a confederation of several nationalities. But, unlike india where the nationalities are recognized as states and their culture intertwined with each other. Chinese culture is monolithic with the dominant Han culture suppressing everything else.

  Its actually easy to break china to small nationalites than chinese trying to break India.

  But, there is one problem.

  Unlike in India, in China you don't have a recognised national political party and large number of "intellectuals" that are sympathetic towards India.

  ReplyDelete
 14. டுபுக்கு ரெங்கதுரை.

  ReplyDelete
 15. yaruppa inda rengadurai... idenna vadai ya pirichu kudukuradukku??? sinna pulla thanama pesittu irukkaru....

  ReplyDelete
 16. வஜ்ரா - நீங்கள் விரும்பினால் அமெரிக்காவையோ அல்லது கனடாவையோகூட பல தேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று நிச்சயம் எழுதலாம். என்னுடைய கருத்து என்னவென்றால் இந்தியா பிரிக்கப்பட வேண்டுமென்றால் பண்டைய முறைப்படி மட்டுமே பிரிக்கப்பட வேண்டும் என்பதே. அதற்குக் குறைந்தபட்சம் தெற்கு ஆசியா முழுவதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு தமிழ்நாடும் பிரிக்கப்பட வேண்டும் என்பதை மற்றவர்கள் வேண்டுமானால் புரிந்துகொள்ள மறுக்கலாம். ஆனால், உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 17. If you remove each organ of our mother then our mother will die for eg : hand or leg or heart alone do nothing.
  stupid people try to understand this .
  proud son of mother India

  ReplyDelete
 18. During the rule of the Cholas, the Tamils literally hold all of the South East Asia as well as marched upto Himalayas in North India. At the time, the Tamils have excelled in Commerce, Ship building, Warfare, arts and Wealth. Where have all these unique qualities of Tamils have gone now? First, the planned Aryan Invasion of the culture have eroded much of the qualities. They divided the Tamils into many sub groups in the name of Castes. They imposed their culture with the Tamils and later it dominated. Now, the Tamils should have to get their lost glory back. The only way to get is to stand on their own feet. It is true that there may be struggles after their Independence. Tamils are not afraid of the Struggles. If they were out of the Aryans cunningness, Definitely, they will achieve anything and stand Unique in the World.

  ReplyDelete
 19. To all friends who are bent on dividing India / Asia / China!!

  If we plan / try / are ambitious to divide other countries / asia / India to small nationalities, then we will not have locus standi that we are tolerant democratic society and to talk/complain about others. We will be one among the so called Strategic countries, that finally lose their peace and keep surviving on troubles they create. If you for the most stressed out people in the world, it's none other than the Americans and may be in future, Chinese. Already we all know how Chinese sportsmen are prepared for the competitions. When a country strategise for troubles in other countries, it is actually loosing your freedon and finally stress builds up.

  Instead, India can be the best example of Tolerance and Democracy. However, this does not mean Giving up our rights!!

  thanks for the response, actually I misunderstood Mr.Vajra to an extent.

  Thiru

  ReplyDelete
 20. A section of the chinese have overambitions and think that they will be the next USA and
  can dominate the world in 21st century. Such thinking gets expressed like this. Hindu will
  pretend as if there has been no such news item.

  ReplyDelete
 21. இந்த செய்தி பற்றி இந்துவின் தலைப்பு செய்தி

  இந்தியா 20 - 25 நாடுகளாக உடைக்கபட்டால் அருணாச்சல பிரதேசத்தை சீனாவுடன் தான் சேர்க்க வேண்டும்

  ReplyDelete
 22. இந்தியாவைக் காக்க அதன் 115 கோடி மக்கள் உள்ளனர்.

  சீனாவின் சதிக்கு எதிர் திட்டம் வகுக்க வேண்டிய பொறுப்பு நமது மைய அரசுக்கு உண்டு, அதில் பொறுப்பில் இருப்பவருக்கு உண்டு!

  இதில் தனியாக என்ன "வரும் நாள்களில் "தி ஹிந்து" இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்"?

  நமது நாடு "தி ஹிந்து" வை மையமாக வைத்தா இயங்குகிறது?

  நாட்டை மையமாக வைத்து, நாட்டின் பாதுகாப்பை பலப் படுத்தும் கருத்துக்களை முன் வையுங்கள் அய்யா!

  "தி ஹிந்து" புகழை பிறகு பாடலாம்!

  ReplyDelete
 23. தமிழ் நாட்டை இந்தியா நாட்டின் ஒரு பிரிக்கவே முடியாத பகுதியாகவே வைத்திருப்பது- மைய அரசோ, இராணுவமோ, உச்ச நீதி மன்றமோ,தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளோ, பார்ப்பனர்களோ அல்ல - தமிழ் நாட்டின் சாதாரண குடிமக்கள் தான்!

  ஐ.சி.எஃப் வாசலில் இட்டிலி கூடையை வைத்து இட்டிலி வியாபாரம் செய்யும் கிழவி, கொட்டாம் பட்டியில் வயலில் நாற்று நடும் பெண் மணி, கோயம்பேட்டில் கறிகாய் வியாபாரி- யாரை வேண்டுமானாலும் போய்க் கேளுங்கள், "இந்தியாவில் இருந்து தமிழ் நாடு தனியே பிரிய வேண்டுமா?" என்று-அவர்களின் மறுவினை உங்களுக்கு பல பாடங்களை தரும்.

  கறந்த பால் பசுவின் மடியில் புகுந்தாலும், கருவாடு மீனாக மாறினாலும், இந்தியாவில் இருந்து தமிழர் பிரிய மாட்டார்கள்- பிரிய வேண்டிய அவசியம் இல்லை.

  அண்ணா. அக்பர், போன்றவர்களின் சகிப்புத் தன்மை உடைய, புறாவுக்கு தன் வூணை ஈந்த சிபி சோழனின் கருணை உடைய, காந்தி, அசோகர் போன்றவர்களிடம் அஹிம்சைக் கொள்கையைப் பெற்ற , காமராசர் , கக்கன், அம்பேத்கர் போன்றவரிடம் அரசியல் நேர்மையைக் கற்ற மக்கள் தமிழ் மக்கள்.

  இந்தியாவைச் ஸுற்றியுள்ள எல்லா நாடுகளும் இராணுவ, ஸர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவிக்கும் போதும், முழுமையாக எப்போதும் சனநாயக முறையில் தேர்தல், மக்கள் ஆட்சி என்று குடியாட்சி நடக்கும் நாடு இந்திய நாடு! நாட்டில் கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் உரிமை, ஆட்சி மாற்றும் உரிமை , என்ற கலாச்சாரத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள்!

  இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது. சில ஐக்கியங்கள் ( Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன. ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால், உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.

  இதைப் புரிந்து கொள்ளாத சிலர், இந்தியாவில் இருந்து தமிழரைப் பிரிப்போம் என்று மனப் பால் குடித்துக் கொண்டு, சிறு சிறு பிரச்சினைகளை வூதிப் பெரிதாக்கும் முயற்ச்சி செய்து வருகின்றனர்.  இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா, சீனா, ஆகிய் நாடுகளில் சன நாயகத்துக்கு என்ன மதிப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இராணுவ ஆட்சியே பெரும்பாலான நேரங்களில் நடை பெறுகிறது.

  இலங்கையில் உள்ள " சன நாயகம்" எப்படிப்பட்ட "மக்கள் பாதுகாப்பு சன நாயகம்"" என்பதும் நாம் அறிந்ததே!

  நேபாளம் எந்த வழியில் செல்லும் என்று அதற்க்கே தெரியவில்லை!


  இந்த நிலையில் இந்தியா குட்டி குட்டி நாடாக
  'சுய நிர்ணயம்' செய்து கொண்டால், மேற்கு வங்கத்தை பங்களாதேஷ ஆக்கிரமிக்கும். காஷ்மீரை (இப்போது இந்திய ) இரு தூண்டாக்கி பாகிஸ்தான், சீனா பிரித்துக்கொள்ளும்.

  ராஜஸ்தான், குஸராத், பஞ்சாப் ஆகியவற்றை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்!

  அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் சீனாவுக்கு இரையாகும்!

  தமிழ் நாட்டில் சிங்களன் புகுந்து ஈழத்தில் செய்தது போல, தமிழ் நாட்டையும் பாழ் பாணமாக்கி, தமிழரை சிங்களருக்கு முழு அடிமை ஆக்குவான்.

  115 கோடி இந்தியருக்கு இது நன்றாகத் தெரியும்!

  6 கோடி தமிழருக்கு இது மிக மிக நன்றாகத் தெரியும்!

  மீண்டும் சொல்கிறேன்! இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!

  ReplyDelete
 24. வெவ் வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சில இந்திய அரசியல்வாதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

  மனு சோழன்: தான் மகன் ஒரு கன்றை விபத்திலே கொன்றதற்க்காக, தன் மகனையே, தேரை யெற்றி மரணம் அடைய வைத்த- நீதி தவறாத மன்னன் - வேறு எங்காவது உண்டா?

  கரிகாலன்: மக்கள் வரிப் பணத்தை வைத்து, மாட மாளிகை, கூட கோபுரம் என்று தனக்கு வசதி செய்து கொள்ளும் மன்னர்களின் நடுவில், தன் கரூவூலப் பணத்தை எடுத்து காவிரியில் மக்கள் நன்மைக்கு ஆக ஆணை கட்டிய மாமன்னனின் கருணை- உலகில் பிற நாடுகளில் காண்பது அரிது!

  அசோகர்- மாவீரன் அலெக்சாண்டர் மறைவுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக உருவாக்கும் சூழல் இருந்தது. அதே நோக்குடன் தான் கலிங்கப் போரை நடத்தி வெற்றியும் கண்டான். வேறு யாராக இருந்தாலும், அந்தப் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படை எடுப்புகள் போர்கள் , என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முனைப்பு காட்டி இருப்பான். ஆனால் அடுத்தவருக்கு துன்பம் தர விரும்பாத இந்தியனின் மன உணர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளியே வந்து , பிறகு நடந்ததும் ஒரு சரித்திரம் தான்!

  அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதி பலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.

  இப்படியே இன்னும் பல இந்திய அரசர்களை குறிப்பிடலாம். நேரம் இல்லாததால் அவர்களை குறிப்பிட இயலாததற்கு, அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

  இதோடு இன்னும் காந்தி, காமராசர், கக்கன்,ஜீவா... இப்படி பல சமீப கால தலைவர்களையும் சொல்ல முடியும்!

  இவர்கள் எல்லாம் இப்படி தன்னலம் இல்லா தியாகியாக வாழும்படிக்கான கருத்துக்கள், இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் மனக் கருத்துக்கள் தான்!

  அசோகர், அக்பர் எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான்.

  எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.

  அந்த எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது.

  அப்படிப்பட்ட மக்கள் சன நாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாக த் தானே உருவாகும்?

  எனவே வெறும் பொருளாதார , பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும்
  இந்திய மக்கள் இணைந்து வாழ வில்லை. இது ஒரே எண்ணம், உணர்வு உடைய மக்களின் இணைப்பு என்றே நான் கருதுகிறேன்!

  ReplyDelete
 25. "தமிழ் நாட்டை தட்டினால் தங்கம்! வெட்டினால் வெள்ளி!" என்றார் அண்ணா.

  எங்கே தட்டினால் கிடைக்கும் என்றும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ஜார்க்கண்டில் இருந்து இரும்பு வருகிறது. ஒரிசாவில் இருந்து அலுமினியம் வருகிறது. தூத்துக்குடியில் உள்ள அனு மின் நிலையத்துக்கு கூட நிலக்கரி ஒரிசாவில் இருந்துதான் வருகிறது. ராஜஸ்தானில் இருந்து மார்பில் வருகிறது. அதை எல்லாம் வைத்து தொழில் செய்து கார்களை , தானியங்கி பாகங்களை உற்பத்தி செய்வதால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கூட இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனை செய்வதால்தான் எங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது.


  இந்தியாவில் எந்த மாநிலமும் தனித்து இயங்க முடியாது.

  மராத்தாவில் ஒரு குடும்ப வெறிக் கும்பல் பிற மாநிலத்தவர் மும்பைக்குள் வரக் கூடாது என்று வன்முறை செய்கிறது.

  ஆனால் மும்பை பற்றி எரிந்த போது, அந்த குடும்பக் கும்பல் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி முடங்கிக் கிடந்தது.

  பிற மாநிலத்தவர் மும்பையில் வேலை செய்யக் கூடாது என்றால், பிற மாநிலத்தவர் பதிலுக்கு "மும்பையில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம்", என்றால் மும்பயில் தயாரான பொருட்களை எங்கு கொண்டு போய் விற்பார்கள்?

  ReplyDelete
 26. தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு,

  "கும்மடிக்கா தொங்கா ...." என்று தொடங்கும் அது.

  அதன் அர்த்தம், பூசணிக்காயைத் திருடியது யார் என்று கேள்வி வரும் போது தோளைத் துடைத்துக்கொள்வானாம் அந்தத் திருடன். (ஏனென்றால், பூசணிக்காயைத் தோளில் தூக்கிக்கொண்டுதான் போக முடியும்).

  அது போல், சீனாவின் உள் எண்ணம் வெளியில் தெரியும் போது அதைக் காப்பாற்ற அவசரப்பட்டு வெளியிட்ட கட்டுரை போல் உள்ளது தி ஹிண்டுவின் கட்டுரை.

  இப்படிப்பட்ட குருட்டுத்தனமான சீன ஆதரவு எண்ணத்தைத்தான் பலர் கேள்வி கேட்கின்றனர்.

  ReplyDelete
 27. Just for the Information
  B.Raman has published an article in outlook (basically a rebuttal to "The Hindu" Op-ed) on this issue.

  ReplyDelete