ஆகஸ்ட் 1 அன்று வெளியான புத்தகம், நான் இன்றுதான் வாங்கவே போகிறேன். அதன்பின், அந்த சுமார் 500+ பக்கம் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க எவ்வளவு நாள்கள் ஆகப்போகிறதோ, தெரியவில்லை. ஏற்கெனவே கையில் ஏழெட்டு உடனடியாகப் படித்துமுடிக்கவேண்டிய புத்தகங்கள் உள்ளன.
ஜஸ்வந்த் சிங் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதன் நோக்கம் என்ன, ஏது என்பது வேறு விஷயம். பரபரப்பாக எதையோ எழுதி, அதை விற்று நாலு காசு பார்த்துவிடவேண்டும் என்ற நிலையில் அவரது நிதி நிலை இல்லை என்று நினைக்கிறேன். அப்படியே ரூபா அண்ட் கோ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றுவிடும்? ஒரு 10,000? ஒரு புத்தகம் ரூ. 625/- என்கிறார்கள். ராயல்டி 10% என்ற கணக்கில், இவருக்குக் கிடைக்கக்கூடியது 62.5*10000 = ரூபாய் 6,25,000. வரி போக 4 லட்ச ரூபாய் மிஞ்சுமா? அதற்காக பதவியை இழக்கும் அளவுக்கு லூசா அவர்?
ஆக, பணம்தான் அவரை இதை எழுதத் தூண்டியது என்று நான் நம்பவில்லை. ஐந்து வருடங்கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார் என்றால் தன் வாழ்க்கையில் இறுதி காலத்தின் பெரும் பகுதியை இதில் செலவழித்துள்ளார்.
காந்தி முதற்கொண்டு யாருமே புனிதப் பசு கிடையாது. நிச்சயமாக காந்தி தன்னை அப்படிப் பார்க்கவில்லை. தன் காலத்திலேயே தன்னை அனைவரும் விமரிசிக்க வழி செய்துகொடுத்தவர் அவர். வல்லபபாய் படேல் உத்தமரும் கிடையாது; ஜின்னா வில்லனும் கிடையாது. நேரு, படேல், ஜின்னா, காந்தி என்ற நால்வருக்கும் இரு பக்கங்கள் இருந்தன. இதில் நாம் எதையும் மறைக்கவேண்டிய அவசியமே இல்லை. மீதி எல்லாமே interpretations-தான். ஜஸ்வந்த் சிங் தான் பார்த்ததை எழுதுகிறார். பிடிக்கவில்லையா, பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். வேண்டுமென்றால் கட்சியின் முக்கியமான பதவிகளில் இருந்து தூக்கலாம். ஆனால் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து அவரை விலக்குவது, மோடி குஜராத்தில் அந்தப் புத்தகத்தைத் தடை செய்வது எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
நீதிமன்றத்தில் மோடியின் தடை செல்லாது என்று எளிதில் சாதித்துவிடலாம். அதுதான் நடக்கவும் போகிறது. புத்தகத்தை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பது இந்தியர்கள் அனைவரையும் சென்றடைய உதவும்!
ஜிங்குச்சா அடிப்பவர்கள் மட்டும்தான் கட்சிக்கு வேண்டும் என்று பாஜக நினைத்தால், பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஐக்கியமாகிவிடலாம். எதிர்க்கருத்து என்பது ஜனநாயகத்தில் ஒரு கட்சிக்கு மிகவும் அவசியம். காங்கிரஸில் அது இல்லை. வருமா என்பது சந்தேகமே. பாஜகவிலும் அது இல்லை. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றான, மைய நீரோட்டக் கட்சி ஒன்றை உருவாக்குவது மிக மிக அவசியமாகிறது.
இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் (பிராந்தியக் கட்சியாக இல்லாமல்) ஒரு கட்சி மிக அவசியம். அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
good thoughts for book writter, all having two mindsets yes its correct, but their one mind set is for nation and its growth. now our leaders having n numbers of mindset two is important. its wealth and publisity or puzkal. jaswant singh done for publisisty. he expected the opponent leader or party post both are not posible so he did within party underground activities. so he was sacked.
ReplyDelete//அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.//
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களை அவர்கள் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே?
//உங்களைப் போன்றவர்களை அவர்கள் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமே?//
ReplyDeleteஇடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் ஒரு கட்சி இருந்தால், கண்டிப்பாக பத்ரிக்கு இடம் தருவார்கள் :) :)
அப்படி கட்சி வர வாய்ப்பு இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி
//
ReplyDeleteஅப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.
//
காங்கிரஸ் போன்ற ஜனநாயக விரோதக்கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரே எதிரி பா.ஜ.க மட்டுமே.
அதுவும் இப்படி சின்னாபின்னமாவது இந்திய அரசியலுக்கு உகந்தது அல்ல.
கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்க்ள்.
ஆக இந்திய அரசியலுக்கு வலுவான தேசியக்கட்சி ஒன்று தேவை. பா.ஜ.க வினர் இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
பலவித கருத்துக்கள் கொண்ட...
ReplyDeleteஇந்தியா முழுதும் independant கிளைகள் கூடிய...
தலைமையே இல்லாத...
ஜனநாயகம் உடைய...
இளைஞர்களை பிரதானமாக கொண்ட...
நேரு முதல் நமீதா வரை அனைவரையும் சமமாக நேசிக்கும் ஒரே கட்சி..
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
கிளை அலுவலகம் :- ஏரியா டாஸ்மாக் (அல்லது அது போன்ற தீர்த்த தலம்)
//இடதும் வலதும் சாராத, பலவிதக் கருத்துக்களுக்கும் இடம் தரக்கூடிய, முழுமையான ஜனநாயக நோக்கில் அமைக்கப்பெற்ற, இந்திய நோக்குடன் ஒரு கட்சி இருந்தால், கண்டிப்பாக பத்ரிக்கு இடம் தருவார்கள் :) :)//
ReplyDeleteமருத்துவரே, நீங்கள் சொல்வது மாதிரி கட்சி ஆரம்பிக்கமுடியாது, மடம்தான் ஆரம்பிக்க முடியும்.
Your argument is unfair.
ReplyDeleteIf I say Jinnah is imperfect, you say that so is Gandhi and so Jinnah and Gandhi are imperfect people.
It's like saying: if I say there are poor people in Somalia, you say there are poor people in America and so both Somalia and America have poor people.
Jinnnah is an extremely venemous character who openly called for mass killing of Hindus (Direct action day). Why should you sweep under the carpet Jinnah's violent call for killing large number of people to create false equivalencies between Jinnah and Gandhi.
'அப்படி ஒரு கட்சி தோன்றினால் நான் உடனடியாக அதில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்'
ReplyDelete:)
I second what Vajra has mentioned.
ReplyDeleteThanks
Venkat
காந்தி முதற்கொண்டு யாருமே புனிதப் பசு கிடையாது. நிச்சயமாக காந்தி தன்னை அப்படிப் பார்க்கவில்லை. தன் காலத்திலேயே தன்னை அனைவரும் விமரிசிக்க வழி செய்துகொடுத்தவர் அவர்.
ReplyDeleteபாஜக கட்சியைக் கலைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஐக்கியமாகிவிடலாம்
exact views about bjp,and Gandhi.
jagadeesh.
"....இந்த இதழில் கியூபாவின் காஸ்ட்ரோ அரசாங்கம் பற்றிய ஒரு விரிவான கட்டுரை வந்திருக்கிறது. பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவைப் பற்றியும் அப்படிப்பட்ட ஒரு கட்டுரையைத்தான் ஆண்டுகள் கழித்து எழுதவேண்டியிருக்கும். சர்வாதிகாரத்திலும் அடக்குமுறையிலும், ஜனநாயஜ மறுப்பிலும், கம்யூனிஸ்டுகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை. சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளைப் பாருங்கள். உண்மை விளங்கும். ஆக, வலதும் இல்லாத இடதும் இல்லாத, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற கட்சிகளும் பத்திரிகைகளுமே இப்போதைய தேவை. அப்படிப்பட்ட பத்திரிகையாக இருக்கவே வார்த்தை முயல்கிறது. தீவிரவாதத்தை ஆதரித்தும், அரசியல் சரிநிலைக்காக இடதுசாரி நிலைகளை எடுத்தும் வந்த பல அன்பர்கள், வார்த்தை இதழ் வந்த பிறகு, வார்த்தையின் இந்த நிலைப்பாட்டைத் தங்கள் வலைப்பதிவு, எழுத்து ஆகியவற்றில் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது. வார்த்தைதான் காரணம் என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. அவர்கள் சொல்லவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவும் இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து ஜனநாயக ரீதியில் காரியமாற்றியும் கருத்து சொல்லியும் வந்தால், மக்கள் மனதை மாற்ற முடியும் என்ற எங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு இது உரமூட்டுகிறது. இப்படி கடந்த 17 இதழ்களில் வார்த்தை தமிழ்ச் சூழலில் செய்திருக்கிற சிறுசிறு முக்கிய மாற்றங்கள் குறித்துத் தனியே எழுதவேண்டும்...."
ReplyDelete(செப்-2009, "வார்த்தை" தலையங்கம்-- பி.கே. சிவகுமார்)