Tuesday, August 25, 2009

சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு

மெட்ராஸ் புக் கிளப், கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்திய வெளியீட்டு விழாவில் வரலாற்றாளர் எஸ். முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு நூல், 23 ஆகஸ்ட் 2009, ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. முனைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட, முனைவர் இறையன்பு (இ.ஆ.ப) நூலைப் பெற்றுக்கொண்டார். குழந்தைசாமி மிக அற்புதமான தலைமை உரையை ஆற்றினார். சி.வி. கார்த்திக் நாராயணனும் இறையன்புவும் பேசினர். இறுதியில் முத்தையா, இந்தப் புத்தகம் எப்படித் தோன்றியது என்பது பற்றி பேசினார்.

இந்தப் பேச்சுகளின் ஒலிப்பதிவைக் கீழே கொடுத்துள்ளேன். என் ஒலிப்பதிவுக் கருவி, என் சட்டைப் பையில் இருந்ததாலும், நான் அங்கும் இங்கும் சற்றே நகர்ந்தபடி இருந்ததாலும், ஒலிப்பதிவின் தரம் சுமார்தான்.

கார்த்திக் நாராயணன்
இறையன்பு
குழந்தைசாமி
முத்தையா

3 comments:

  1. இறையன்புவும் => இறையன்பும்

    ReplyDelete
  2. பேச்சுகளை மெனக்கெட்டு பதிவு செய்து ஒலிப்பதிவுகளை இணைத்தமைக்கு நன்றிகள். இது போன்ற பேச்சுகளும் ஒருவகை ஆவணங்களே. ஆகவே அவற்றின் தரம் கூடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். (ஒலிப்பதிவுக்கருவியை லவட்டிக் கொண்டு போகாத ஒரு வெட்டி ஆபீஸரின் கையில் கொடுத்து உட்கார வைத்துவிடுங்கள் ;-)) முனைவர் வா.செ.குழந்தைசாமியின் உரை அருமை-நிறைகுடம்.

    நரசய்யாவின் மதராசப்பட்டினத்தையும் இந்நூலையும் எப்படி ஒப்பிடுவீர்கள்? (நான் இரண்டையும் இன்னும் வாங்கவில்லை).

    ReplyDelete