தமிழிலிருந்து நேரடியாக ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்யும் திறமை உள்ளவரா? அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவர் அப்படிப்பட்ட திறன் கொண்டவரா?
அப்படியானால் என்னைத்தொடர்பு கொள்ளுங்கள். (சும்மா பிராதமிக், மத்யமா ஹிந்தி பிரசார் சபாவில் படித்துவிட்டு “தூய” ஹிந்தியில் மொழிபெயர்க்கும் ரகமாக இருப்பவர்கள் விட்டுவிடுங்கள். நானே பிரவீன் வரை படித்தவன்தான்! என் ஹிந்தி எவ்வளவு மோசம் என்று எனக்கே தெரியும்:-)
எனக்குத் தேவை, நன்கு சரளமான, 21-ம் நூற்றாண்டு ஹிந்தியில் மொழிபெயர்க்கும் திறன். கிழக்கின் புத்தகங்கள் எந்த அளவுக்கு தமிழில் சரளமாக உள்ளனவோ அதே அளவுக்கு ஹிந்தி மொழிமாற்றத்தில் படிக்கச் சரளமாக இருக்கவேண்டும்.
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்: badri@nhm.in
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
9 hours ago
ஹூம். உங்களுக்கு பேரன் கிடையாதா? இருந்தாலாச்சும் இந்த ட்ரான்ஸ்லேஷனுக்கு உபயோகமா இருந்திருக்கும். (தயாநிதி மாறனை தொடர்பு கொண்டீர்களா? அவருக்கு தான் ரொம்ப நல்லா ஹிந்தி வருமாமே!?!)
ReplyDeleteநல்ல முயற்சி,
ReplyDelete21ம் நூற்றாண்டு ஹிந்தியில் 60-70% வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.தமிங்கலமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக உள்ளது. சந்தேகம் இருந்தால் ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி/பண்பலைகளைக் கேளுங்கள்.உங்கள் அறிவிப்பை படித்து அப்படிப்பட்ட ஹிந்கலம் மக்கள் தொடர்பு கொண்டால் என்ன செய்வார்கள் :).
ReplyDelete’(தயாநிதி மாறனை தொடர்பு கொண்டீர்களா? அவருக்கு தான் ரொம்ப நல்லா ஹிந்தி வருமாமே!?!)’
ReplyDeleteவிட்டால் அவர் கிழக்கையும் பத்ரியையும் சேர்த்து விலை பேசி வாங்கி விடுவார்.