தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளுடன் பாரத ரத்னா விருதையும் அளிப்பது வழக்கம். இந்த ஆண்டு யாருக்கும் பாரத ரத்னா விருது கிடையாது. பொதுவாக, அதிகம் அறியப்பட்ட விளையாட்டு வீரர்கள், சினிமாக் காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவ்வப்போது சில நல்ல இசைக் கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கும் விருதுகள் தருவதுண்டு. சில அரசு அதிகாரிகளுக்கும் தருவார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்குக் கடும் சேவை ஆற்றியிருக்க வாய்ப்புண்டு.
விருதுப் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.
இதில் குழந்தை விளையாட்டு வீரர்கள் (30-ஐத் தாண்டாதவர்கள்) பலர் இருப்பார்கள். இலக்கியம் என்றால் பொதுவாக 75 வயதைத் தாண்டியிருந்தால்தான் உண்டு! இம்முறை இலக்கியம்/கல்வி என்ற துறையில் 18 பேருக்கு பத்ம ஸ்ரீ, 6 பேருக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டுள்ளது:
பத்ம ஸ்ரீ விருது பெற்றோர் (கல்வி/இலக்கியம்):
Arun Sarma
Prof. Arvind Kumar
Bertha Gyndykes Dkhar
Prof. Govind Chandra Pande
Prof. Hamidi Kashmiri
Prof. (Dr.) Hermann Kulke
Janaki Ballav Shastri
Dr. Jitendra Udhampuri
Dr. Lal Bahadur Singh Chauhan
Lalzuia Colney
Maria Aurora Couto
Dr. (Smt.) Rajalakshmi Parthasarathy alias Y.G. Parthasarathy
Prof. Ramaranjan Mukherji
Dr. Ranganathan Parthasarathy
Fr. Romuald D’Souza
Prof. Sadiq-Ur-Rahman Kidwai
Sheldon Pollock
Dr. Surendra Dubey
பத்ம பூஷண் விருது பெற்றோர் (கல்வி/இலக்கியம்):
Anil Bordia
Prof. Bipan Chandra
G.P. Chopra
Prof. Mohammad Amin
Prof. Satya Vrat Shastri
Prof. Tan Chung
இதில் திருமதி ஒய்.ஜி.பி, இந்திரா பார்த்தசாரதி (ரங்கநாதன் பார்த்தசாரதி), பிபன் சந்திரா ஆகிய மூவரைப் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியும். மற்ற 21 பேரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. எனவே கொஞ்சம் அது தொடர்பாக இணையத்தில் தோண்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.
அவர்களது வாழ்வைப் பற்றி, சாதனைகள் பற்றி சிறு குறிப்பு ஒன்றை அரசு கொடுத்திருந்தால் அதனால் உபயோகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு சில வழிமுறைகள் அடிப்படையில்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர். அவற்றையும் சேர்த்து குறைந்தபட்சம் தங்கள் இணையத்தளத்தில்கூட வெளியிடாத உள்துறை அமைச்சகம் உபயோகமற்றது.
இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துகள்.
நியூஜெர்ஸி சந்திப்பு
1 hour ago
பிபன் சந்திரா - loyalty to Nehru family and congress
ReplyDeleteSheldon Pollock- well known scholar on india's languages and culture.Tamil readers know his work as it has been debated.Read Nagarjunan's blog to know more.Dont expect Charus and Jeyamohans to write about him.Tamilavan and Nagarjunan may write.
ReplyDeleteMaria Couto is Goa-based writer. She wrote Goa: A Daughter's Story.
ReplyDeleteஇதன் பொருட்டு உங்கள் பார்வையில் உள்துறை அமைச்சகம்
ReplyDeleteபுலம் பெயர்ந்தோர் பார்வையில் அயலுறவுத்துறை அமைச்சகம்.
வெளிநாட்டுகளில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் பார்வையில் அயலுறவுக் கொள்கைகள்
அடிப்படை விவசாயிகளின் பார்வையில் சரத்பவார்.
ஆனால் சரத்பார்வை என்ன தெரியுமா?விலைவாசி உயர்வு என்பது பிரதமர்?
எத்தனை தான் நெகடிவ் பார்வை கூடாது என்றாலும் இத்தனை பார்வைகளை எங்கே கொண்டு போய் வைப்பது?
Hi Badri,
ReplyDeleteAny idea when Indira Parthasarathy's short stories collection coming out of Kizhakku Pathipagam?
Thanks
Rajesh
இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு (2 தொகுதிகளா, 3 தொகுதிகளா என்று இன்னமும் முடிவு செய்யவில்லை) பிப்ரவரி மாதம் வெளியாகும். ஜனவரி புத்தகக் காட்சிக்கே கொண்டுவர விரும்பியது, நடக்காதது வருத்தமே. இன்னும் ஒரு மாதத்துக்குள் புத்தகம் வந்துவிடும் என்பது சந்தோஷம்.
ReplyDeleteThanks for the information about the short stories collection.
ReplyDeleteRegards,
Rajesh