15-ம் தேதி, கங்கண சூரிய கிரகணத்தைக் காண நான் ராமேஸ்வரம் செல்கிறேன். குடும்பத்தினருடன் நண்பர்கள் சிலரும் கூட வருகிறார்கள் - முக்கியமாக பேரா. அனந்தன் வருகிறார்.
கங்கண சூரிய கிரகணம் என்பது அபூர்வமாகவே ஏற்படும் ஒரு நிகழ்வு. அதுவும் நாம் இருக்கும் பகுதியில் வருவது பெரிய விஷயம்.
கிரகணங்கள் மனிதர்களைப் பயமுறுத்திய ஒன்று. அதனால்தான் சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குகிறது, டிராகன் விழுங்குகிறது என்றெல்லாம் காரணங்கள் சொன்னார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இன்றுகூட பலருக்கும் இதைப் பற்றிய தெளிவில்லை.
கன்யாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் (தனுஷ்கோடி) இந்த கிரகணம் அழகாக, கங்கணம் போலத் தெரியும். கங்கணம் என்றால் கையில் போடும் வளையல் போன்ற ஓர் ஆபரணம். வெளிப்புறம் மட்டும் தகதகக்கும் தங்கம் போன்ற ஒரு வட்டம்.
தமிழகத்தில் பகுதிகளில் பாதி கிரகணம் தெரியும். வேண்டிய முன்னேற்பாடுகளுடன் கிரகணத்தைப் பாருங்கள்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
19 hours ago
I don't fully agree with you on "கிரகணங்கள் மனிதர்களைப் பயமுறுத்திய ஒன்று. "
ReplyDeleteThere are some things we are not supposed to see directly with naked eye(even today).
like many of the beleif's the real reason was masked with religious reasons, so it's taken at face value
நானும் வருகிறேன்...
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteசூர்ய கிரஹணம் காண ராமேஸ்வரம் சென்ற தங்களது அனுபவம் பற்றிய பதிவு காண ஆவல்.
நன்றி.
நவீன பாரதி.