Wednesday, January 13, 2010

தமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு

தமிழகத்தில் பதிப்புத் துறையில் கோலோச்சி வந்திருப்பது நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. வானதி, கண்ணதாசன், அருணோதயம், மணிமேகலை, தமிழ்ப் புத்தகாலயம், கலைஞன் என்று தொடங்கி கண்ணுக்குத் தென்படுவதெல்லாம் செட்டியார் பதிப்பகங்களே.

தமிழ் பதிப்புத் துறைக்கு நகரத்தார் சமூகம் செய்துள்ள பங்களிப்பைக் கொண்டாடும்விதமாக ரோஜா முத்தையா நூலகம் ஒரு வாரக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளது.

இந்த மாதம் (ஜனவரி) 23 முதல் 31 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கும்.

26 ஜனவரி 2010 அன்று மாலை 5 மணிக்கு வரலாற்றாளர் எஸ்.முத்தையா, ரோஜா முத்தையா நூலகத்தில், செட்டியார் பாரம்பரியம் (Chettiyar Heritage) என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்தான்!) பேசுகிறார்.

5 comments:

  1. ’கவிதா’ சொக்கலிங்கம், செட்டியார் அல்லரா?

    ReplyDelete
  2. முடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. mr badri

    i got a news .big bang theory. paticulary the starting few min expantion is chanlenging einstin relativity theary (nothing can move beyond light speed ) any clarification

    ReplyDelete
  4. {முடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.}

    என் கருத்து சரியென்றால் இது இன்னும் நடைபெறுகிறது,வேறு சில அன்பர்களின் ஆர்வம் மட்டும் உதவியால்.

    பா.ஜ.க வின் இல.கணேசன் இதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிகிறேன்.

    பத்ரி லக்ஷ்மணனின் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பாரா தெரியவில்லை !

    பத்ரி,உங்களுக்கு வாக்களித்த படி மடலிட முடியவில்லை;கணனி திடீரெனப் படுத்துவிட்டு இன்றுதான் சொஸ்தமாகி வந்திருக்கிறது.

    இரண்டு தினங்களில் மடலிடுகிறேன்..கமெண்டின் இப்பகுதியை நீங்கள் நீக்கி விடலாம்...தகவலுக்காகவும்,பொறுத்துக் கொள்ளவும்.நன்றி.

    ReplyDelete
  5. நன்றாகச் சல்லடை செய்யப்பட்ட “செக் யூலர்” பட்டியல்.

    ReplyDelete