நேற்று எடிட்டிங் பயிலரங்கின் முதல் நாள். 30 பேருக்குத்தான் இடம் என்று சொல்லியும் கடைசி நேரத்தில் 38 பேர் உள்ளே இருந்தனர்.
சில அறிமுகங்களுக்குப்பின் நானும் தொடர்ந்து ராகவனும் அமர்வுகளை மாற்றி மாற்றி நடத்தினோம். நான் ஒரு அறிமுகம் தர, ராகவன் அ-புனைவுகளை எடிட் செய்வது பற்றிப் பேசினார். மதிய உணவுக்குப்பின் தூக்கம் வரும் நேரத்தில் நான் தமிழ் இலக்கணம் பற்றிப் பாடம் எடுக்கவேண்டிய கொடுமையான சூழல். ஆனால் ஓரிருவரைத் தவிர பிறர் யாரும் தூங்கவில்லை. அதன்பின் பயிற்சியாக ஒரு பக்கம் எழுதச் சொல்லி அதனை திருத்திக் கொடுத்தோம். அப்போது ராகவன், தனக்குச் சற்றும் பழக்கமே இல்லாத பாத் டப்பில் குளிக்க நேர்ந்ததைப் பற்றிய சோகமான நிகழ்வை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி அரங்கையே அதிரவைத்தார்.
எடிட்டர்கள் என்றால் தங்களது எழுத்தைச் சிதைக்க வந்த மாபாவிகள் என்று ஆரம்பத்தில் இருந்த எண்ணம் சற்றேனும் விலகியுள்ளது என்றுதான் நினைக்கிறேன்.
நேற்று வானொலிக்கு ஒரு பேட்டி, தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி என்று மதிய உணவு நேரத்திலும், பின்னர் இரவு 10-11 மணிக்கு வானொலியில் (ஒலி எஃப்.எம்) நீண்ட ஒரு கலந்துரையாடல் (அருண் மகிழ்நன், ராகவன், நான்) என்றும் நிகழ்ந்தன. கடுமையான அலுப்பில் வந்து விழுந்ததுதான். இன்று காலை இரண்டாம் நாள் அமர்வுகள் உள்ளன.
ராகவன் முந்தைய தினம் தூக்கம் வரவில்லை என்றும் நேற்று ஏதோ இரண்டு மணி நேரம் மட்டுமே ஓரளவுக்குத் தூங்க முடிந்தது என்றும் சொன்னார். காலை உணவில் ஒரு வழியாக அவருக்குப் பிடித்த ஏதோ கொஞ்சத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தேன். ஓரளவுக்குப் பசி அடங்கியிருக்கும்!
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
பாராவுக்குத் தேவையானது கிடைத்ததா இல்லையா? அது பற்றிய ஆழமான பதிவொன்றை எதிர்பார்க்கிறேன்!
ReplyDeleteபிரசன்னா:
ReplyDeletehttp://twitter.com/bseshadri/statuses/13986768947
என்று ஆழமாக ட்வீட் செய்துவிட்டேனே? இனி சரக்கு பற்றி இந்தியா வந்துதான் ஆழமான பதிவு எழுதவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
Sarakku, Sarakku,Item,Sarakku !!!
ReplyDeletePAA RAA enna Kuruviyaa :)
The two days workshop was bit boring
ReplyDeleteLooking forward to reading more about the workshop, the participants and about Singapore in general.
ReplyDeleteBadri,
ReplyDeleteI heard your interview in Oli 96.8 in USA.
Thanks
Senthil
Editing workshop was useful, for sure. It is an eye opener for most of the writers. One small thing is, looking deep, one can't stop from thinking that it could have been done in a day. But..but.. doing such a serious workshop without a joke or 2 may end as a serious experiment. :))
ReplyDeleteBoth of you are seen as guys with great substance by many who atteneded the workshop (that many incluses this paalu mani). Your speach in NLB was a surprise to some, as they come there with the view that 'Tharkala Thamizh Illakiyam' may not be your zone of comfort.
On my way home, i kept thinking - why this IIT graduate and a founder of Cricinfo must come to Tamil book punblishing... Whatelse can be an answer than, Vision & Passion. Keep Rocking Badri & Pa.Ra!
பத்ரி,நீங்கள் அறிவித்த எண்ணுக்கு அனுப்பிய செய்திக்கு பதில் ஒன்றும் வரவில்லையாதலால் சிறிது குழம்பினேன்;எனினும் மாலை சிராங்கூனுக்கு புறப்பட்டு மழையில் மாட்டியதால் வர இயலாது போனது..
ReplyDeleteஇன்னும் எனக்கு வருத்தம் இருக்கிறது.
நூல் நிலையம் சென்றிருப்பீர்கள் போலிருக்கிறது..எந்த நூல்நிலையம் சென்றீர்கள்?
அனைத்து அனுபவங்களையும் எழுத வேண்டுகிறேன்..நன்றி.
பத்ரி,
ReplyDeleteதி சிங்கப்பூர் ஸ்டோரி,லீ சீனியர் எழுதியது..
இரண்டு பகுதிகள் இருக்கிறது,படித்துப்பாருங்கள்..நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்..
சிங்கப்பூர் எப்படி சுத்தமாக இருக்கிறது என்பதற்கான விடை அந்தப் புத்தகத்தில் இருக்கிறது!
சுத்தமாக மட்டுமல்ல,சிங்கப்பூர் ஏன் சிங்கப்பூராக இருக்கிறது என்பதே விளங்கும்!
படித்து விட்டு எழுதுங்கள்,உங்கள் பார்வையை அறிய ஆவலாயிருக்கிறேன்..
கிரிக்இன்ஃபோ நீங்கள் துவங்கியதா?
ReplyDeleteஈஎஸ்பிஎன்னுக்கு கொடுத்து விட்டீர்களா?
அறிய ஆவல்,மின்மடலிட்டாலும் சரி..
\\காலை உணவில் ஒரு வழியாக அவருக்குப் பிடித்த ஏதோ கொஞ்சத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தேன். ஓரளவுக்குப் பசி அடங்கியிருக்கும்! \\
ReplyDeleteஅவரானால் காலை உணவில் பத்ரி கல்லைப் போட்டு விட்டதாகக் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்..
என்னய்யா விளையாடுகிறீர்களா? யாருடையது போங்கு ஆட்டம்?!!
:)
இப்போதுதான் அவரது 4 பத்திகளையும் வாசித்தேன்..உங்களது கணேஷ் எழுத்தாகவும் அவரது வசந்த் எழுத்தாகவும் தோன்றுகிறது..
அறிவன்: சாப்பாடு கொடுக்காதது முதல் நாள். கொஞ்சமாகக் கண்டுபிடித்துக் கொடுத்தது இரண்டாம் நாள்.
ReplyDeleteஉங்களைச் சந்திக்கமுடியாமைக்கு வருந்துகிறேன். ஒரு நாள் விடாமல் ஏதேனும் வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. இன்னொரு முறை கட்டாயம் சந்திக்கலாம்.
ஹூம்! அங்கிருந்திருந்தால் அவரின் சாப்பாட்டு பிரச்சனையையாவது தீர்த்திருப்பேன்.
ReplyDelete