சென்னை தக்கர் பாபா வித்யாலயா கட்டடத்துக்குள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்குமிடம் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு, காந்தி ஸ்டடீஸ் செண்டர் அண்ணாமலை மாமல்லபுரம் சென்றார். செல்வதற்குமுன், பேரா. சுவாமிநாதனின் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனை அவர்களுக்குப் போட்டுக் காண்பித்துள்ளார்.
ஒரு நாள் முழுவதும் சுற்றிவிட்டு வந்த குழந்தைகள் அடுத்த நாள் தாங்கள் பார்த்ததை படம் வரைந்து கட்டுரையாக எழுதியுள்ளனர். அதிலிருந்து மிகச் சிறப்பானதாக இருக்கும் ஒன்றை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதை வரி வரியாகப் படித்து ரசிக்கவேண்டும். பல விஷயங்கள் புலப்படும்! இதனை உருவாக்கிய சிறுவன் வீரமணி நான்காம் வகுப்பு படிக்கிறான்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
13 hours ago
முன்பு பள்ளிகூடங்களில் கோடை விடுமுறை நாட்களில் ஊர் சுற்றி வந்த கதையினை பற்றி மாணவர்கள் மாலை ப்ரேயரில் எல்லார் முன்பு கூறச்சொல்லி வெகு சுவாரஸ்யமாக சொல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுப்பார்கள் ! அதை போன்றதொரு நிகழ்வாக இது !
ReplyDeleteவெகு சுவாரஸ்யமான பேச்சுத்திறனையும் எழுத்துதிறனையும் ஊக்குவித்த/ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் :)
Veeramani is amazing!!! He did very good job! Well narrated for his age.
ReplyDeleteExtremely talented youngster. Hats off
ReplyDeleteஅருமையான அனுபவம்தான். அழகாக எழுதியிருக்கிறான் சிறுவன். படங்களும் அருமை. இது மாதிரி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ஒரு நிதி ஆரம்பிக்கலாம். பள்ளியில் இந்த மாதிரி விஷயங்கள்தான் ரொம்ப நாளைக்குப் பிறகும் நினைவில் நிற்கும். மாமல்லன் கட்டியவற்றை பட்டியல் போட்டு படித்ததோடு சரி. இன்னும் பார்த்ததில்லை :-(
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteமாமல்லபுரம் சிற்பங்கள் ஒரு பெரிய விஷயம். ஆனாலும் மாணவன் வீரமணி தனக்குத் தெரிந்த அளவில் சுயமாக இதை எழுதியுள்ளது மெச்சத்தக்கது. படஙகள் ஒன்றும் மோசமில்லை. பஞ்ச பாண்டவர்களை ”பஞ்சப்” பாண்டவர்களாக ஆக்கிய்தை மன்னிக்கலாம். எது ஒன்றாக இருந்தாலும் மாண்வர்களை சுயமாக எழுத்ச் செய்வது என்பது பள்ளிகளில் என்றோ மறைந்து விட்டது என்று கருதி வந்த எனக்கு இப் பள்ளியில் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அப் பள்ளிக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
ராமதுரை
பத்ரி..நீங்கள் சொல்வது போல் இதில் சொல்லாமல் புலப்படும் செய்திகள் நிறைய. சுற்றுலாவின் சிறப்பு என்றால் you are creating a lifetime memory for the child. மிக மிக சீரிய முயற்சி. இதற்கு முயற்சி எடுத்த அத்துணை பெரும் மேலோர். I will rate this as one of the best of your posts.
ReplyDeleteVeeramani is Architecture!!!
ReplyDeleteஅருமை. படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. இந்த பதிவையும் வந்த கருத்துக்களையும் பிரிண்ட் செய்து அந்த மாணவனிடம் கொடுத்து விடுங்கள் அவன் நிச்சயம் மகிழ்வான், மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். அவனுக்கு எங்கள் லிப்கோ டிக்ஷனரி ஒன்றை பரிசாக அளிக்க விரும்புகிறேன், உங்கள் அலுவலுகத்திற்கு அனுப்பினால் அதை அவனிடம் சேர்த்து விட முடியுமா?
ReplyDeleteஓவியங்கள், விவரிப்பு, கையெழுத்து எல்லாமே மிக அருமை. வீரமணிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇதைப் படிப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது பத்ரி. பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDelete//மிக மிக சீரிய முயற்சி. இதற்கு முயற்சி எடுத்த அத்துணை பெரும் மேலோர். I will rate this as one of the best of your posts.//
ReplyDeleteவழிமொழிகிறேன்
//சென்னை தக்கர் பாபா வித்யாலயா கட்டடத்துக்குள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்குமிடம் உள்ளது. //
ReplyDeleteஇவ்வளவு அழகாக தமிழில் 4வது வகுப்பு பையன் எழுதும் போதே நினைத்தேன். தமிழ் உணர்வு மிக்கவனாக தான் இருக்க வேண்டுமென.
சிறுவனுக்கு வாழ்த்துகள்
i couldnt get the sub-text here. :(
ReplyDeleteவெங்கடரங்கன்: அகராதியை அனுப்புங்கள். கட்டாயமாகச் சேர்ப்பித்துவிடுகிறேன்.
ReplyDeleteவெங்கட்: தனி அஞ்சல் அனுப்புங்கள். சப்-டெக்ஸ்ட் பற்றி பதில் அனுப்புகிறேன்.
அருமை! எதிர்காலம் ஒளியுடன் இருக்கிறது! இந்த பையனைப்போல திறமை உள்ளவர்களை கண்டறிந்தால் நல்லது!நன்றி!
ReplyDeleteVeeramani for his age, the description and the pictures are superb!!!
ReplyDeleteVeeramani is really gifted.
ReplyDeleteMahishaswara marthini art: One demon is upside down and rest of them are run for their life. I went back to your earlier article on this( a week back) and saw that picture. Wow. it was amazing.
Had anyone explained the sculpture to those boys and make them to visualize that?.If not he has real potential.
wonderful - hope many more such can be planned
ReplyDeletergds
vj
www.poetryinstone.in
தமிழில் எழுதும் சிறுவனா?? எங்கே எங்கே????
ReplyDeleteஎனக்கும் இந்த மாதிரி சுற்றுலாவுக்கு போய் படம் வரையும் பழக்கம் இருந்தது. ஆனால் நணபர்களெல்லாம் இடங்களை சுற்றிப் பார்க்க நான் மட்டும் கூர்ந்து நோக்குவேன்...
ReplyDeleteஆனால் இந்தப் படங்கள் மிக சிறந்ததாக அதுவும் மிக எளிமையான வார்த்தைகளால் முக்கியத்துவம் வாய்ந்தவைகளையும் கொண்டுள்ளது மிக பாராட்டுக் குறியது,.
அந்தச் சிறுவனுக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் நண்பரே