Wednesday, May 19, 2010

தி.நகரில் கிழக்கு ஷோரூம்

பொதுவாக கிழக்கு ஷோரூம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படும்போது முதல் வரிசையில் நான் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது சிங்கப்பூரில் இருப்பதால் முடியவில்லை.

அதிகம் சத்தம் போடாமல் தி.நகரில், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் 100 சதுர அடிக்கும் குறைவான குட்டி இடத்தில் ஒரு ஷோரூமைத் தொடங்கியுள்ளோம்.


முகவரி:

கிழக்கு புத்தக ஷோரூம்
3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)
57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)
தி.நகர்
சென்னை - 600 017
தொலைபேசி: 044-42868126
மொபைல்: 95000-45640

சென்னையின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் எல்டாம்ஸ் ரோடுக்கு வரமுடியாவிட்டாலும் எப்படியும் தி.நகருக்கு ஷாப்பிங் போவீர்கள். சென்னையின் எந்த மூலையிலிருந்தும் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வர இரண்டு பஸ்களில் ஏறி இறங்கினால் போதும். இறங்கி, அப்படியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு, உடனே மீண்டும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிடலாம்.

3 comments:

  1. நல்லா விஷயம் பத்ரி வாழ்த்துக்கள்,நானும் தி.நகர்தான்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பத்ரி

    ReplyDelete
  3. இதை ஏற்கெனவே ஒரு முறை சொல்லி இருந்தேன்.நல்ல விஷயம்.

    ReplyDelete