Friday, February 24, 2012

கை கால் முளைத்த காற்றா நீ?

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்த வெண்கலச் சிலை. சிவனும் அருகில் தேவியும். சிவனின் வலக்கையைப் பார்த்தால், வாகனமான ரிஷபத்தின்மீது அழகாக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. காளையைக் காணவில்லை. அந்த முகத்தையும் அந்தத் தலையலங்காரத்தையும் பாருங்கள். ஒயிலாகக் கால் மாற்றி நிற்பதைப் பாருங்கள். எடையே இல்லாமல் மிதப்பதுபோல் இல்லை?


சற்றே நெருங்கிப் பாருங்கள்.


எப்படி இந்த முகத்தில் அந்தக் கலைஞனால் இந்த பாவத்தைக் கொண்டுவர முடிந்தது?

10 comments:

  1. This is actually a duplicate one made in 80s. The original rishaparuda at Tanjore museum was supposed to be taken for an india show in us. But lot of noise was raised considering the safety of the original, so a replica was made and sent for the show. On return was kept at Madurai museum but with out the info

    Sankaranarayanan

    ReplyDelete
  2. //எப்படி இந்த முகத்தில் அந்தக் கலைஞனால் இந்த பாவத்தைக் கொண்டுவர முடிந்தது? //

    புரியவில்லை பத்ரி அண்ணே..சிறிது விளக்கினாள் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  3. அழகு. அழகு. அந்தத் தலைப்பாகையின் வரிகளைப் பாருங்கள். சிறிய புடைப்போடு அழகாக! ஆகா!

    பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ!
    மண்ணினார் வலம் செய் மறைக்காடரோ!

    ReplyDelete
  4. ஈசனின் சடாமுடி, சடா முடியாகத் தொங்காமல் பின்னி அலங்காரம் செய்த கோலம்! மாப்பிள்ளை அல்லவா!:)
    சடை அலங்காரத்தையும் மீறிச் சற்றே துள்ளி எழும் பாம்பையும் காணத் தவறாதீர்கள்!

    புருவ மத்தியில் நெற்றிக் கண்ணும் அழகு!

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    இனித்தம் உடைய பொற்பாதமும்...

    ReplyDelete
  5. "மோனாலிஸா"வை வரைந்தவனுக்கானால் ஒருவேளை புரியலாம்; நமக்கெப்படி?

    ReplyDelete
  6. In earlier days, they did sculptures from a model ( who is a devadasi who can exhibit all kind of facial expressions)
    _ Udayar -balakumaran

    ReplyDelete
  7. நீங்கள் சில்பியின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
    வாட்டர் கலர் ஒவியங்களில் கண்ணாடிப் பாத்திரங்களின் ஒளி எதிரொளிப்புகள்,ஆபரணக்கற்களின் ஒளிக்கற்றைகள் போன்ற பல நுணுக்கமான விதயங்கள் எளிய வீச்சுகளில் வெளிப்பட்டிருக்கும்..

    சோழர் காலத்திற்குப் பின் தமிழகத்தின் உலோகச் சிற்பக்கலை அறிவு அதன் உச்சத்தில் இருந்த காலம்...கல்லில் அவ்வளவு கலைவண்ணன் கண்டவர்கள் உலோகத்தில் காண்பது அரிதா என்ன?

    ReplyDelete
  8. தஞ்சை மண்டலத்தில் எட்டுக்குடி, எண்கண், சிக்கல் (சிங்காரவேலர்) என்று மூன்று முருகன் கோவில்கள் உள்ளன. மூன்றின் மூலவரையும் செதுக்கியது ஒரே சிற்பிதான். அதுபற்றி கதையெல்லாம் உண்டு. விசேஷம் என்னவென்றால் அந்த மூன்று முருகனும் அத்தனை அழகாக ஒய்யாரமாக வள்ளி தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்திருப்பார். சிலையின் மொத்த எடையும் மயிலின் இரண்டு கால்களில் மட்டுமே இறங்கியிருக்கும். இதில் உள்ளதுபோலவே மிகவும் நுணுக்கமான அற்புதமான வேலைப்பாடு! அந்தப்பக்கம் வந்தால் காணத்தவறாதீர்கள்!

    ReplyDelete