Tuesday, February 28, 2012

சுஜாதா புத்தகங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறோம். நாங்கள் வெளியிட்ட முதல் புத்தகம் ஜனவரி 2010-ல் வெளியானது.

நிதியாண்டுக் கணக்கின்படி, விற்பனை நிலவரம் இவ்வாறு:

2009-10: மொத்தம் வெளியிட்டது 5 புத்தகங்கள். மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 3,700 பிரதிகள்.

2010-11: மொத்தம் வெளியிட்டது 73 புத்தகங்கள் (மேலே உள்ள ஐந்தையும் சேர்த்து). மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 52,000 பிரதிகள்

2011-12: மேலும் 7 புத்தகங்கள் வெளியிட்டதைச் சேர்த்து மொத்தம் 80 புத்தகங்கள். மொத்தம் இதுவரையில் விற்பனை ஆனது: சுமார் 45,000 பிரதிகள்.

ஆக, இதுவரையில் நாங்கள் மட்டுமே, இரண்டே ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் சுஜாதா புத்தகங்களை விற்பனை செய்துள்ளோம். சுஜாதாவின் புத்தகங்களை திருமகள் நிலையம் (+ விசா), உயிர்மை, விகடன் ஆகியோரும் பதிப்பிக்கிறார்கள். தமிழ்ப் பதிப்புலகில் எழுத்தாளர் சுஜாதா ஒரு மாபெரும் சாதனை.

2012-13-ல் கிழக்கு பதிப்பகம் வாயிலாக மேலும் பல - நீங்கள் இதுவரை கண்டிராத - சுஜாதா புத்தகங்களை வெளியிடுவோம்.

எழுத்தாளர் சுஜாதா புத்தகங்களை இணையத்தில் வாங்க

13 comments:

  1. 80தில் அதிகம் விற்ற புத்தகம் எது?

    ReplyDelete
  2. காலவாரியாக முதலில் பதிப்பித்த நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில், மீண்டும் ஜீனோ ஆகியவையே அதிகம் விற்றுள்ளன. இன்னும் மூன்று வருடங்கள் தாண்டினால்தான் எது பொதுவாக அதிகம் விற்கிறது என்று சொல்லமுடியும்.

    ReplyDelete
  3. Are all Sujatha's books now available as Ebooks or PDF? Can you please list down the same and cost?

    ReplyDelete
    Replies
    1. We do not have e-rights. However, there are two sites that sell Sujatha's e-books. You can find them here:

      1. http://www.writersujatha.com/e-Commerce.html
      2. http://www.sangapalagai.com/

      Delete
  4. Please bring out Sujatha's "விவாதங்கள் விமர்சனங்கள்" from Kavya Pubslihers.

    ReplyDelete
  5. சுஜாதா எப்பவுமே கலக்கல் ராஜாதான்... அவருடைய நிறைய புக் வாங்கி வைத்திருக்கிறேன்.. (உங்களுடைய அதிரடி புத்தக விற்பனை எப்போ சார்... காத்துக்கிட்டு இருக்கோம்.. செம ஐடியா அது)

    ReplyDelete
  6. கவிதை காதலன்: அதிரடி புத்தக விற்பனை இனி கிடையாது! எனவே அதற்காகக் காத்திருக்காதீர்கள். மிகுதியான சில புத்தகங்களையும் அழுக்கடைந்த சில புத்தகங்களையும் விற்பனை செய்யவென்று டாக்டிகலாக அதிரடி விலை குறைப்பு புத்தக விற்பனையை சில முறை செய்தோம். அந்தப் புத்தகங்கள் எல்லாம் இப்போது தீர்ந்துவிட்டன.

    எனவே, வேண்டிய புத்தகங்களை, அதற்குரிய விலையைக் கொடுத்து உடனடியாக வாங்கிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. /// நீங்கள் இதுவரை கண்டிராத ///

    ?! அவரது ஆவி எழுதினால்தான் இது சாத்தியம்! மற்றபடி 'ஹாஸ்டல் தினங்கள்' அச்சில் இல்லை. கவனியுங்கள்.

    **** சுஜாதா புத்தகங்களை விற்பனை செய்துள்ளோம். சுஜாதாவின் புத்தகங்களை திருமகள் நிலையம் (+ விசா), உயிர்மை, விகடன் ஆகியோரும் பதிப்பிக்கிறார்கள். ****

    தி.நகர் பாரதி புத்தகாலயமும் சிலவற்றை வெளியிட்டுள்ளது. உதாரணம்- 'மனைவி கிடைத்தாள்' நாவல். 80-களில் வந்த அதே காப்பியை இப்போதும் எடுத்துத் தருகிறார்கள்! (மறு அச்சு இல்லாமல்)

    சரவணன்

    ReplyDelete
  8. கணேஷ் வசந்த் என்னும் ஒரு நாவல் (வசந்தை கணேஷ் கோர்ட்டில் குறுக்கு விசாரணை எல்லாம் செய்வார்) எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அதை பதிப்பிக்கும் எண்ணம் உள்ளதா?

    ReplyDelete
  9. about 80 books about 1 lakh copies in 2 years means average no of copies per year about 600.of course some books will sell more than others.in any case his books outsell most writers books even now.

    ReplyDelete
  10. Somewhere read in the newsfeeds in the social media

    Kalki and Sujatha are evergreen sellers and that was evident during the recent book festival in chennai also...

    why not nationalize their works...
    will this affect your business??

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சார்.. நன்றி.

    ReplyDelete