Tuesday, February 28, 2012

எந்த மின்சாரம் ‘நல்லது’?

கூடங்குளம் அணு மின் நிலையம் கூடாது என்பதையொட்டி ஏகப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. அதிலிருந்து மின்சாரம் பற்றிய விரிவான விவாதமும் நடக்கிறது.

அணு மின்சார உற்பத்தி மிகுந்த ஆபத்தானது; உயிரைக் குடிக்கக்கூடியது என்பது முதன்மையான வாதம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அனைத்துவிதமான மின் உற்பத்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போதைக்கு அணு மின் உற்பத்தியில்தான் ஆபத்து அதிகம். அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்வியும் பெரிய கேள்வியே. அணுக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த முடியுமா; பெரும் தவறு நேர்ந்துவிட்டால் அந்த விபத்தின் விபரீதம் எப்படி இருக்கும்; காலாகாலத்துக்கும் மக்களும் பிற விலங்குகளும் புல் பூண்டுகளும் அந்த இடத்தில் முளைத்து உயிர்வாழ முடியுமா; எத்தனை சதுர கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குப் பிரச்னை இருக்கும் என்பன போன்ற கேள்விகளை அணு மின் எதிர்ப்பாளர்கள் மக்கள்முன் வைத்தபடி உள்ளனர்.

எஸ்.பி.உதயகுமார் இப்போது அணு மின் நிலையத்துடன் அனல் மின் நிலையத்தையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். இது அவருடைய கூட்டாளிகளாக இப்போது இருக்கும் பிறருக்கு ஏற்புடையதா என்று தெரியவில்லை. இரு நாள்களுக்குமுன் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது உதயகுமார், அணு, அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக பிற மின் உற்பத்தி முறைமைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

அனல் மின் நிலையங்களின் நேரடி ஆபத்து குறைவுதான். நிலையம் வெடித்துச் சிதறினால் அதிக உயிரிழப்பு இருக்காது. கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால் அனல் மின் நிலையங்களால் நீர், நிலம், காற்று மாசுபடுகின்றன. எப்படிப்பட்ட அனல் மின் நிலையமாக இருந்தாலும் புகை வெளியே வரும். கரியினால் இயங்கக்கூடிய நிலையமாக இருந்தால் (இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்துமே) கரித்தூள், புகை, சாம்பல் ஆகியவை காற்றைத் தொடர்ந்து மாசுபடுத்துகின்றன. கரிச் சுரங்கத்தால் ஏற்படும் நில அழிப்பு, காற்றில் பரவும் மாசு ஆகியவை மற்றொரு பக்கம்.

புனல் (நீர்) மின் நிலையங்களுக்காக அணைகளைக் கட்டவேண்டியிருப்பதால், பெருமளவு நிலப்பரப்பு அழிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் இடம் பெயர்க்கப்படுகின்றனர். மேலும் இவற்றால் கிடைக்கும் மின்சாரம், அனல்/அணு மின் நிலையங்கள் உருவாக்குவதைவிடக் குறைவாகவே இருக்கும்; ஆண்டு முழுதும் ஒரே அளவிலும் இருக்காது. பராமரிப்புக்கு என்று அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். 100 ஆண்டுக் காலகட்டத்தில் அணைகளின் கட்டுமானம் பலவீனம் அடைவதால் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கும்.

இந்த மூன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் பெருமளவு மின்சாரத்தை ஒரே இடத்தில் தயாரிக்க முடியாது. இதனை மின் ஆலை எதிர்ப்பாளர்கள் வெளியே சொல்வதில்லை. காற்றாலை, சூரிய ஒளி, இப்போது அனைவரின் பேராதரவையும் பெற்றுள்ள கடலலை ஆகிய வழிகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இயங்குகின்றன என்பது பற்றி இவர்கள் உங்களுக்குச் சொல்லமாட்டார்கள்.

காற்றாலையை நாடெங்கிலும் நம்ப முடியாது. காற்று தொடர்ந்து வீசக்கூடிய பகுதிகள் எவை என்று சில வரைபடங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் தமிழகம் கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளது. இங்கே, குறிப்பாகத் தென் தமிழகத்தில் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆண்டு முழுதும் உற்பத்தி என்றால் இந்த வகையில் முடியாது.

சூரிய ஒளி மின்சாரம் என்பது எளிதானதொரு விஷயமல்ல. இதுவரையில் நாம் சொன்ன வகையிலிருந்து மாற்றம் கொண்டது. புனல், அனல், அணு, காற்றாலை ஆகியவற்றில் சுழலும் இயக்கத்திலிருந்தும் மின்காந்தத்திலிருந்துமாக ஜெனரேட்டர் கோட்பாட்டின்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியில் ஃபோடோவோல்டாயிக் முறைப்படி மின்சாரம் தயாரிக்கப்படவேண்டும்.

சூரிய ஒளி மின் நிலையங்கள் பொதுவாக 25 மெகாவாட் அளவில்தான் இருக்கும். வெகு சில இடங்களில்தான் 100 மெகாவாட், 200 மெகாவாட் என்ற நிலையை அடைய முற்பட்டுள்ளனர். 550 மெகாவாட் நிலையம் ஒன்றை கலிஃபோர்னியாவில் அமைத்துவருகின்றனர் என்று விக்கிபீடியா சொல்கிறது. இவற்றை அமைக்க வேண்டிய இடமும் வெகு அதிகம். மக்களே வசிக்காத பாலைவனத்தில்தான் இது சாத்தியம்.

(இத்துடன் ஒப்பிடும்போது அனல்/அணு மின் நிலையங்கள் எல்லாம் இன்று சுமார் 3000 மெகாவாட் அல்லது அதற்குமேல் என்று நிறுவப்படுவதைப் பாருங்கள்!)

மொத்தமாக ஓரிடத்தில் 100 மெகாவாட் சூரிய மின் நிலையம் என்று அமைக்காமல், ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைப்பதாகக் கொண்டால், அதற்கான முதலீட்டை ஒவ்வொரு வீடும் செய்யவேண்டுமா அல்லது அரசே அதன் செலவில் ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைத்துக் கொடுத்துவிட்டு நம்மிடம் காசு வசூலித்துக்கொள்ளுமா?

ஜியோதெர்மல் மின்சாரம் என்பது அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் நியூசிலாந்திலும் ஓரளவு பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் ஏன் இது இதுவரையில் முயற்சி செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே சூரிய ஒளியும் சரி, ஜியோதெர்மலும் சரி, சிறு திறன் மின் நிலையங்களாகத்தான் இருக்க முடியும் (இப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது).

எனவே நம் இப்போதைய மின் தேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சிறுசிறு மின் நிலையங்கள்மீது தனியார் பலருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அரசு அமைப்புகள்தான் இதில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டலாம். (சூரிய ஒளி மின் நிலையங்களில் சில தனியார் அமைப்புகள் இறங்கியுள்ளன.)

என் கருத்து:

எதிர்காலத்தை மனத்தில் வைத்துப் பார்த்தால், சூரிய ஒளி மின்சாரம்தான் சரியானது என்று தோன்றுகிறது. ஆனால் உதயகுமார் போன்றோர், இன்று அணு/அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக இதனை முன்வைப்பது அறிவு நேர்மையற்றது. இன்னும் 20-30 ஆண்டுகள் வேலை செய்து, நிறைய முதலீடுகளைச் செய்தால்தான் நமக்கு வேண்டிய அளவு சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கப் போகிறது.

ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் நாசமாகப் போகட்டும் என்று விட்டுவிடலாமா? மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளன. நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச மின்சாரம்கூட இன்னும் கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக முக்கியம். அடிப்படை வாழ்வாதாரத்துக்கே இன்று மின்சாரம் முக்கியம்.

அனல், அணு மின்சாரத்தை விட்டால் அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு வேறு வழியே இல்லை. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மின்சாரம் இல்லாவிட்டால் சாத்தியமே இல்லை. அனல் மின் நிலையங்களை அதிகரிக்கவேண்டும். அணு மின் நிலையங்களையும் உருவாக்கவேண்டும். மின் தேவையை ஓரளவுக்காவது சரிக்கட்டவேண்டும். அதே நேரம் மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடாது. அதே நேரம், சூரிய ஒளி, ஜியோதெர்மல் மின்சாரத்தில் முதலீட்டை எப்படி அதிகரிப்பது என்று யோசிக்கத் தொடங்கவேண்டும்.

ஆனால், அணு மின்சார பயம் என்பதைத் தாண்டி, அனல் மின்சாரமும் கூடாது என்று மேலும் மேலும் நெருக்கடிகளை அதிகரிக்க உதயகுமார் முயல்கிறார். இது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது?

49 comments:

 1. Masdar Power is developing the 100MW Shams 1 CSP plant in the Western Region of Abu Dhabi, set to be the largest CSP plant in the world.

  ReplyDelete
 2. http://www.thefuturebuild.com/masdar-tests-geothermal-energy-for-green-city-28974/news.html.

  Abu Dhabi, UAE

  Masdar tests geothermal energy for green city.
  One of the most exciting projects at Masdar City was the exploratory drilling deep underground to test the availability of sufficient, and sufficiently hot, geothermal water to be used in thermal cooling and domestic hot water.

  Power production and desalination also constitute possible applications of geothermal energy, although in our case, purely thermal applications (cooling, domestic hot water, desalination) are the most advantageous.

  The amount of cooling, desalination and heating the geothermal resource can provide is being evaluated. This will be a direct geothermal plant relying on heat exchange with deep underground aquifers.

  Initial results are promising and confirm Masdar City’s ability to address a significant portion of the base cooling load of the city’s first phase using absorption chillers continuously supplied with geothermal heat. The main focus initially is expected to be thermal cooling and, possibly, central provision of hot water for showers and sinks.

  The drilling of a pair of wells is complete – one for drawing hot water, one for re- injection of this water after heat extraction. Both wells have been drilled to about 2,500m, where sufficient temperature and flow have been achieved to drive an efficient configuration of absorption chillers.

  For power generation and/or desalination, deeper wells would be needed to reach higher temperature aquifers. The stationary geothermal water temperatures in the aquifers below Masdar City can be estimated at between 85°C and 105°C.

  The rig used for drilling was a relatively large oil and gas drilling rig that had undergone minor modifications for geothermal operations. Now that the rig has completed drilling, the wells will provide energy to Masdar City with a minimal visible footprint on the ground.

  ReplyDelete
 3. மின்சார அளவீடுகள் பற்றி எங்காவது விரிவாக காணக்கிடைக்குமா? உதாரணமாக ஒரு மின் உலை '4000 மெகா வாட் திறன் கொண்டது' என்றால் எவ்வளவு. இது ஒரு மாதத்திற்கா? வருடத்திற்கா??
  நமது வீட்டு உபயோக மின்சாரத்தின் அளவு என்ன?
  பேட்டரி தவிற வேறு வழிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியுமா?

  மின்சாரம் சம்பந்தமான செய்திகள் படிக்கும் போது எனக்கு எழும் சந்தேகங்கள் இவை. (பள்ளி கல்லூரிகளில் இவற்றை பற்றி நான் படித்திருக்கலாம். ஆனால் இங்கு தொடர்பு படுத்தி பார்க்க முடியவில்லை).

  ReplyDelete
  Replies
  1. 4000MW is every instant. You multiply by the number of hours of operation to get the production in MWH (Mega Watt hours).The units in yr electricity bill are KWH, which is one-thousandth of a MWH.

   As far as I know, Capacitors are the means of storing electricity in large quanta.

   Delete
  2. One other way of non-conventional energy production is Bio-gas/Bio-mass. Even is, as you say, this is also a relatively small-scale production it serves a dual purpose. It cleans up the sewage (and may help clean up the Coovum, eventually) as well as producing energy. There is also technology for Compressed city waste. None of these have been implemented in any scale though these are means of producing energy as well as greening the environment.

   Delete
 4. // காற்றாலை, சூரிய ஒளி, இப்போது அனைவரின் பேராதரவையும் பெற்றுள்ள கடலலை ஆகிய வழிகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம்

  இயங்குகின்றன என்பது பற்றி இவர்கள் உங்களுக்குச் சொல்லமாட்டார்கள் //

  உங்கள் வீட்டு முன் குப்பைகளை கொட்டுபவர்களை , முறையற்ற விதத்தில் குப்பை தொட்டி அமைப்பதை நீங்கள் எதிர்ப்பது உங்கள் உரிமை. அவர்கள் எங்கே எப்படி குப்பைகளை மேலாண்மை செய்ய வேண்டும் என்று தீர்வு கண்டறிவது உங்கள் கடமையல்ல.

  // மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளன. //

  இதில் பாதிக்கு மேல் மனிதனின் ஆடம்பர, விளம்பர மோகத்தால் உருவானது. உணவுப் பயிருக்குத் தட்டுப்பாடு வந்தால் யாரும் சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிட்டுப் பசியாறுவதில்லை. தேவையைத் தணிக்கைக்கு உட்படுத்திப் பங்கீட்டு வழங்கல் - ரேஷன் - முறைகளை பின்பற்றுகிறோம்.இதை ஏன் மின் மேலாண்மையில் செய்யக் கூடாது? நடைமுறையில் சற்று கடினமான தீர்வாக இருந்தாலும் இதை ஏன் யாரும் பேசுவதில்லை என்று தெரியவில்லை.

  // நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச மின்சாரம்கூட இன்னும் கிடைக்கவில்லை.அடிப்படை வாழ்வாதாரத்துக்கே இன்று மின்சாரம் முக்கியம்.//

  ஆனால் எந்த உறுத்தலுமின்றி பல அடுக்கு நட்சத்திர விடுதிகள் நாள் முழுவதும் குளிரூட்டப்பட்டு வாடிக்கையாளர்களின் கேளிக்கை தேவைகளை நிறைவு செய்கின்றன. ஆடம்பர விழாக்கள், விளம்பரங்கள், மக்களின் கட்டுப்பாடில்லாத, எந்த முன் யோசனையுமற்ற மின் உபயோகம் இவைதான்
  நெறிப்படுத்தப் பட வேண்டும். நாள் முழுவதும் குளிர் அறைகளில் வாசம் செய்கிறேன். அனைத்து மின்சாதனங்களையும் குறைவின்றி பயன்படுத்துகிறேன். கடும் மின்தட்டுப்பாடு உருவாகிறது. தீர்ப்பதற்கு ஒரே வழி ஆபத்தான அணு மின் நிலையத்தை கட்டுவது. அதில் ஏதும்
  பாதிப்பானால் வெளிநாட்டிற்கோ வெளியூருக்கோ விமானத்தில் பறப்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் எந்நிலையிலும் துயரம் அனுபவிப்பது
  வறியோரும் எளியோரும் தான்.

  பேராசிரியர். நல்ல தம்பி.
  கோயம்புத்தூர்.

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியர் ஐயா, நாள் முழுவதும் குளிரூட்டப்பட்ட நட்சத்திர விடுதிகளைப் பற்றி எந்தப் பேராசிரியர்களுக்கும் பேச அருகதை இல்லை. இரவு பகல் பாராமல் ஏ.சி அறையில் உட்கார்ந்துகொண்டு "உழைக்கும்" வர்க்கம் உங்கள் வர்க்கம்.

   Delete
  2. பேராசிரியரின் பதிவு பல உண்மைகளை வெளிப்படையாக வைக்கிறது.மாற்று வழிகளில் முக்கியமானது சேமிக்கப்படும் மின்சாரம்.
   யார் யாருக்கு ,எந்த ஊர்களுக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுகிறது என்பதை பார்த்தால் மின்சார தேவையை குறைத்து கொள்ளும் வழிகள் எளிமையாக புலப்படும்
   வட கிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.அங்கு மொத்த மாநிலத்திற்கும் தேவைப்படும்/கிடைக்கும் மின்சாரம் நம் ஊரில் சில நகரங்களில் தேவைபடுவதை விட குறைவு
   24 மணி நேர மின்சாரம் ஒரு அத்தியாவசியமான அடிப்படை உரிமை போல் நம் மீது திணிக்கப்படுவதே தவறு.
   மின்சார தேவையை குறைத்து கொள்வதும்,குறைந்த மின்சாரத்தில் வேலை செய்யும் சாதனங்கள் பெருகுவதும் இன்றைய முக்கிய தேவை
   தொழில் நிறுவனங்கள்,மருத்துவமனைகள் மற்றும் 24 மணி நேர மின்சாரம் தேவைப்படும் சில அத்தியாவசிய இடங்களை தவிர மற்ற அனைவரும் மின்வெட்டிற்கு பழகி கொள்ள வேண்டும்
   புலியின் எண்ணிக்கை குறைகிறது என்று லட்சகணக்கான பழங்குடியின மக்களின் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கபடுகிறது.அவர்கள் வலுக்கட்டாயமாக அவர்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த இடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்படுகிரார்கள்.தாஜ் மகாலின் பளபளப்பு குறைகிறது என்று ஆயிரகணக்கான தொழிற்சாலைகள் மூடபடுகின்றன.சாயப்பட்டறயினால்/தோல் தொழிற்சாலைகளினால் தண்ணீர் மாசுபடுகின்றது என்று அவற்றை மூட போராட்டங்கள் நடக்கின்றன,அவையும் மூடவும் படுகின்றன ஆனால் பல லட்சம் பேருக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு உள்ள,தீங்கு நிகழ்வதை பார்த்த பிறகும் கூட வேறு வழியில்லை என்று வாதிடுவது சரியா

   Delete
 5. இந்த இணையதளத்தை பார்ப்பது , உங்கள் கம்ப்யூட்டர் , இன்டர்நெட் , நீங்கள் பயன்படுத்தும் விளக்கு , உதயகுமார் சென்னைக்கும் மட்டற்ற இடங்களுக்கும் சென்று வர பயன்படும் வாகனங்கள் யாவும் மாசு படுத்துபவை தான். வறட்டு பிடிவாதமும், போலி கொள்கைகளும் இன்னும் நம்மை வறுமையை இருக்க வைக்க நல்ல வழி. எல்லா அறிவியலும் அபாயகரமானது . ஆண்டொன்றுக்கு வாகன விபத்தால் உலகெங்கிலும் பல லட்சம் பேர் உயிர் இழக்கிறார். எனவே காரில் செல்வது தடை செய்ய படவேண்டும். - சரியான வதம். இவர்களில் எத்தனை பேர் பேன் இல்லாமல் இரவில் உறங்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும்

  ReplyDelete
 6. பத்ரி,

  வணக்கம்,

  நடுநிலையான அலசல்.
  மின் தேவைகள் மனித குலம் இருக்கும் வரைக்கும் இருக்கும், உற்பத்தி மூலம் தான் காலத்திற்கு ஏற்ப மாறும். உற்பத்தி,தேவை,தட்டுப்பாடு இவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு செயல்ப்பட வேண்டும்,ஆனால் தட்டுப்பாடு கழுத்தை நெரிக்கும் போது உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என துடிப்பதில் பலன் இல்லை.

  கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மின் உற்பத்தி திட்டமும் செயல்ப்பாட்டுக்கு வரவில்லை,ஆனால் மின்ப்பயன்ப்பாடு மட்டும் உயர்தே வந்தது. இப்போது உச்சமாக போய்விட்டது. மத்திய மின் தொகுப்பில் இருந்து வாங்கும் மின்சாரம் வைத்தே கடந்த ஆட்சியில் காலம் தள்ளினார்கள்.ஆனால் இப்போது மத்திய மின் தொகுப்பில் கிடைக்கும் மின்சாரம் இன்றைய தேவைகளுக்கு போதவில்லை.கூடுதலாக கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள்,ஏன் எனில் கூடன்ங்குளம் திட்டத்தினை எதிர்ப்பதால்.

  தற்சமயத்திற்கு புதிய உற்பத்திக்கும் வாய்ப்பு இல்லை, மத்தியிலும் கொடுக்க மாட்டார்கள்,எனவே மின்வெட்டு ஒன்றே வழி. கொஞ்சம் நிலமை சரியாக எப்படியும் 3 ஆண்டுகள் ஆகும். அது வரை இன்வெர்டர், ஜெனெரேட்டர், சிம்னி விளக்கு என அவரவர் வசதிக்கு ஏற்ப ஒளி ஏற்றிக்கொள்ள வேண்டியது தான் :-))
  சில முன் உற்பத்தி குறித்தான எனதுப்பதிவுகள் சில,


  கூடன்குளம் ஒரு மாற்றுப்பார்வை

  அணு உலைப்பாதுகாப்பானதா

  மாற்று எரிசக்தி சூரிய சக்தி

  சூரிய மின்சக்தி உற்பத்தி

  கடலலை மின்சாரம்

  ReplyDelete
 7. மின் திட்டம் என்பது பெரிதாகவே இருக்க வேண்டும் என்பது எதற்காக? இப்போது மின்தடை உள்ள இடங்களில் ஏழெட்டு மணி நேரம் மின் தொடர்பு இல்லாத போது வசதியுள்ளவர்கள் ஏழெட்டு மணி நேரம் பேக்அப் உள்ள இன்வெர்டர்களைப் பயன் படுத்துகிறார்களே, அது முடியுமானால் இருபத்து நான்கு மணி நேரமுமே ஒவ்வொரு வீடும் தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தானே தயாரித்துக் கொள்ளும் திறனுடையதாக ஏன் இருக்கக் கூடாது?
  மைசூர் அருகே ஒரு சிறிய கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின் சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் மொட்டை மாடியில் வாட்டர் டேங்குடன் இணைக்கப் பட்டிருக்கிறது. மைசூரை விடவும் வருடத்தில் அதிக நாட்கள் வெயில் காயும் தமிழ்நாட்டில் இது ஏன் சாத்தியமாகாது? வாட்டர் ஹீட்டர் மட்டுமின்றி எல்லா சாதனங்களுமே சூரிய சக்தியில் இயங்க்குமளவு இங்கு வருடம் முழுதும் வெயில் இருக்கிறதே!(அதே கர்நாடகத்தில் ஒரு மலைப்பிரதேச கிராமம் முழுமைக்கும் ஒரு இளைஞர் சூரியமின் சக்தி அளிப்பதில் இறங்கி வணிக ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சில மாதங்களுக்குமுன் கல்கியில் ஒரு கட்டுரை வந்தது. அவரே சாதனங்கள் நிறுவ, பராமரிக்கக் கடன் வசதி கூட செய்து தருகிறாராம்.)
  மழை நீர் சேகரிப்பு சட்டமானது போல சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பையும் சட்டமாக்கலாமே? முதல் படியாக சோதனை முறையில் புதிதாகக் கட்டப்படும் அடுக்ககங்களில் இதை சட்டமாக்கலாமே?
  இந்த சிறு அளவிலான தனியார் தன்னிறைவு மின்சாரத் திட்டங்களுக்கு அரசுடன் வங்கிகள், வெஞ்சர் கேபிடல் நிறுவனங்கள், IIT மாணவர்கள் என்று கூட்டாகக் கைகோத்துக் கொண்டால் இந்தத் திட்டம் சுலபமாக சாத்தியமாகி விடும்.
  பெரிய தொழிற்சாலைகள் மட்டும் பெரிய அளவிலான மின் திட்டங்களிலிருந்து மின் சக்தி பெற்றுக் கொள்ளலாம்.(அவர்களும் கூட உற்பத்திக்குத் தேவையானதை மட்டும் இந்தப் பொதுத் திட்டத்திலிருந்து பெற்றுக் கொண்டு அலுவலகம் சார்ந்த பொதுத் தேவைகளான விளக்கு, விசிறி போன்றவற்றுக்குத் தாங்களே சூரிய சக்தியிலிருந்து தயாரித்துக் கொள்ள ஊக்குவிக்கப் படலாம்)
  இதனால் transmission loss முற்றிலும் தவிர்க்கப் படும்.
  தவிர க்ரீன் பில்டிங் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் காற்றோட்டம், சூரிய ஒளி பற்றிய விதிமுறைகளில் கண்டிப்பாக இருந்தால் மின் தேவை மேலும் கணிசமாகக் குறையும்.
  எல்லாவற்றையும் விட முதலில் செய்ய வேண்டிய விஷயம்: கரை வேட்டிகள் பொது இடங்களில் மேடை போட்டுப் பொதுக் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது இடங்களில் அரசியல் விழாக்களைத் தடை செய்ய வேண்டும். கல்யாண மண்டபங்களில்/ வேறு தனியார் இடங்களில் விழாக்களை நடத்திக் கொள்ளட்டுமே? அங்கிருக்கும் மின்சார வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டால் பொது மின்சாரம் திருடப்படுவது நிற்குமே?
  அரசியலுக்கு அடுத்தபடி பொது மின்சாரத்தைக் கபளீகரம் செய்பவை தெருவோர ஆன்மிக நிகழ்ச்சிகள். கோவில் கொடை போன்றவை(இவையும் அரசியல்வாதிகளின் ஆசியுடன் தான் நடக்கிறது என்பது வேறு விஷயம்) இவற்றையும் கண்காணித்தால் தமிழகம் விரைவில் மற்ற மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதி செய்யலாம்.

  ReplyDelete
 8. S.P. Udayakumar seems to have some hidden agenda as he does not seem to be ready for a feasible solution. Also he threatened central govt (Puthiya thalaimurai debate few weeks back) that christian groups can bring country to a standstill.

  A feasible solution could be to
  1. Set a deadline to decommission the plant within a fixed time-frame. (20 years should be reasonable)
  2. Set up a joint committee comprising public + scientists for tracking the safety measures every month.

  ReplyDelete
  Replies
  1. உதயகுமாரின் குமார குமாரத்திகள் அமேரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். லாந்தர் விழக்கு, கொசுக்கடி, கொள்கைப் புடி எல்லாம் கிராமத்தானுக்குத் தான். தன் பிள்ளைகளுக்கு அல்ல.

   இவனுக்கு ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளிடமிருந்து பணம் வருகிறது. இவனுக்கு நார்வே ஓயில் ஃபண்டில் இருந்து பணம் வருகிறது. நார்வே காரர்கள் தமிழர்கள் வாழ்க்கையில் விளையாடுவதே வேலையாக வைத்திருக்கிறார்கள். இந்திய உளவுத்துறை அதனை கொஞ்சம் ஆராயவேண்டும். இந்தியர்கள் கண்ணில் மண்ணைத் தூவவே அந்த வங்காளக் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைத்துள்ளது போலவும் தெரிகிறது.

   Delete
 9. பத்ரி அவர்களுக்கு,
  வணக்கம். பலரும் பல கருத்துக்களை சொல்கிறார்கள்.ஆனால் ஒரு கருத்து அப்துல் கலாம் அவர்கள் கூறியது ஏனோ பலராலும் கண்டு கொள்ளப்படவேயில்லை. நீங்களும் அதனை மறந்தது ஏனோ. நினைவில்லையா....பலரும் மறந்தது போலவே இருக்கிறார்களே. அது ஏன் பத்ரி....
  என்ன என்று நீங்களும் நினைக்கிறீர்களோ? ..... மனிதக்கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு... நம்மிடம் உள்ள அளப்பறிய செல்வம் இதுதான். முகம் சுழிக்காமல் நீங்கள் கண்டறிந்து தகவல் அளியுங்களேன். ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மனிதக் கழிவு, தாவரக் கழிவு என்று எதாலும் நீங்கள் (அல்லது கலாம்) நினைப்பதுபோல் அதிக அளவு மின்சாரத்தைத் தயாரிக்க முடியாது. ஒன்றைக் கவனியுங்கள். மின் நிலையம் அமைக்க இடம் தேவை. நீர் தேவை. ஜெனரேட்டர் தேவை.

   வீட்டுக்கு வீடு கழிவறைக்கு அருகில் ஒரு மின்னறையும் இருப்பதுபோல நீங்கள் கனவு கண்டால் அதற்கு இப்போதைக்குப் பலன் ஏதும் இருக்கப்போவதில்லை.

   Delete
  2. தியரெடிக்கலி வீட்டுக்கு வீடு கழுவறைக்குப் பக்கத்தில் ஒரு மின் அறை வைக்க முடியும். தோஷிபா Residential fuel cell செய்ய ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறது.
   http://www.toshiba.co.jp/csr/en/highlight/2005/fuelcell.htm

   Delete
 10. Change the Clause 17 of the Nuclear Liability Bill, to meet the US demands, then this movement will lose its steam. Hidden forces behind this movement will pull out the support for this movement.
  As of now, US companies are not able to proceed with their plans in India.
  It was US which took the lead initiative in getting exemption for India, from NSG. But, later through the Nuclear liability bill clause 17, Indian government has effectively shut out the US companies from this newly opened lucrative market. This is not something that US will take lying down. Hence, the (unoffical) US backing for this movement (through proxies).

  ReplyDelete
 11. ஒரு நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்ள பிரச்சினைகளைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா பெரிய நாடு. ஜனத்தொகை அதிகம். வரும் காலத்தில் நமது மின் தேவை பயங்கரமாக அதிகரித்துச் செல்லும். சூரிய மின்சாரம் எல்லாம் நமக்குக் கட்டுபடியாகாத விஷயம். இப்போது வசதி படைத்தவர்கள் உட்பட சராசரியாக ஒரு யூனிட்டுக்கு நாம் சுமார் மூன்று ரூபாய் வீதம் மின் கட்டணம் செலுத்துகிறோம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து அதைப் பயன்படுத்துவதானால் யூனிட் ஒன்றுக்கு ரூ 12 கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் எவ்வளவு பேர் இதற்குத் தயார். கை தூக்கட்டும்.Grid மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு ஆகும் செலவும் சூரிய மின்சாரத்துக்கு ஆகும் செலவும் சரிசமமாக இருந்தால் Grid Parity சூரிய மின்சாரம் கட்டுபடியாகும். மேலை நாடுகளிலேயே இதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்.
  சூரிய மின்சாரத்தில் இரண்டு வகை உண்டு. சூரியப் பலகைகள் ஒரு முறை. கண்ணாடிகள் Mirror மூல்ம் சூரிய வெப்பத்தைத் திருப்பி ஒரு திரவத்தை அல்லது சாதாரண உப்பை சூடேற்றி மின்சாரம் தயாரிப்பது இர்ண்டாவது முறை.

  எல்லோரும் கோஷம் போடுகிறார்கள் என்பதற்காக கும்பலோடு கும்பலாக கோஷம் போட்டு அணுசக்தி மின்சாரம் கூடாது என்பது படு முட்டாள்தனமானது. இருப்பதில் சுற்றுச்சூழல் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இன்றி மின்சாரம் தயாரிப்பதற்கு அது ஒன்று தான் சிறந்த முறை.

  ஜப்பானில் காஷிவாசாகி கரிவா என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையம் உலகிலேயே பெரியது. 8000 மெகாவாட் மின் திறன் கொண்டது. ஒரு மானிலத்தில் இம்மாதிரி இரண்டு மின் நிலையம் இருந்தால் போதும்.மானிலத்தின் மொத்த மின் தேவை பூர்த்தியாகி விடும்.இந்த அளவு திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை நிறுவினால் தினமும் சில ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். அதற்கான ரயில்பாதை போடவே பெருஞ்செலவு பிடிக்கும். அவ்வித அனல் மின் நிலையத்துக்குத் தேவையான த்ரமுள்ள நிலக்கரி நம்மிடம் இல்லை.

  சுருங்கச் சொன்னால் சூரிய் மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவை வெறும் ஊறுகாய் மாதிரி. அவற்றினால் ஒரு நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.

  அணுமின் நிலையக் கழிவுகள் ஆபத்தானவை. அவற்றை என்ன செய்வது என்று எழுப்புகின்ற வாதம் எல்லாம் திசை திருப்புகின்ற வாதங்களே

  .புதிதாக வீடு கட்டுகிறவரிடம் போய் புதிதாக வீடு கட்டாதீர்கள். 50 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீட்டை இடிக்கும் போது பிரச்சினையாகும். நிறைய தூசு கிளம்பும். அக்கம்பக்கத்தில் உள்ள்வர்களுக்கு சிரமமாக இருக்கும்.போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் கூறி வீடு கட்டாதபடி தடுக்க முற்பட்டால் அது அசட்டுத்தனமாக இருக்கும். அது போன்றது தான் அணுக்கழிவு வாதமும்.

  உலகில் 400 அணுமின் நிலையங்கள் உள்ளன.அண்டை நாடான வங்கதேஷில் புதிதாக-- முதல் தடவையாக் இரு அணுமின் நிலையங்களை (ரஷிய உதவியுடன்) அமைக்க இப்போது உடன்பாடு ஆகியுள்ளது.மேலும் அமெரிக்காவிலும் புது அணுமின் நிலையங்கள் வர இருக்கின்றன.
  ஆகவே அணுமின் நிலையங்களே வேண்டாம் என்றால் நாம் பழையபடி இலுப்பெண்ணெய் விளக்கைப் பயன்படுத்தும் யுகத்துக்குப் போகத் தயாராக இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Can you give the details of new neculear plants which are going to be started newly in US?

   can you give the cost per unit to generate power using nuclear plant? Thermal Plant? Hydro Electric plant?

   In Japan maximum elecricity is being generated using nuclear plants. Are the same safety measures follwed in Japan is follwed by kalpakkam plant?

   Delete
 12. மின்சாரம் பெறப் பயன்படும் பாரம்பரிய முறைகளை விட ஜியோதெர்மல் முறை அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தாது என்று தற்போது எண்ணினாலும், பெரும்பாலோனோர் எண்ணுவது போல ஜியோதெர்மல் பவர் ப்ளாண்ட் செலவு குறைந்த்தும் அல்ல; சுற்றுப்புறத்திற்குக் கேடு விளவிக்காததுமல்ல. எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் மட்டும் எடுக்கப்படுகின்றது. ஆனால், ஜியோதெர்மல் பவர் ப்ளாண்டுகளில் ஆழ் துளைகள் இடப்பட்டு, அதிக அழுத்தத்தில் தண்ணீர் பூமிக்குள் பாய்ச்சப்படுகின்றத்து. இதன் காரணத்தால் Seismic effects ஏற்பட்டு நில அதிர்வுகள் ஏற்படுகின்றன். ஸ்விட்சர்லாந்த்தில் ஒரு ஜியோதெர்மல் ப்ளாண்ட் துவங்கப்பட்ட ஒரே வாரத்திலேயே 10000 முறைகளுக்கு மேல் நில அதிர்வுகள் ஏற்பட்டு அந்த ஆலை இழுத்து மூடப்பட்டு விட்டது. மேலும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து வரும் நீராவியில், அபாயகரமான மெர்ர்குரி போன்ற கனஉலோகங்களும் பூமியின் பரப்பிற்கு வந்து சுற்றுச் சூழல் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இபோதைக்கு அணு மின்சாரமே தேவையானது என்று கூறலாம். - சிமுலேஷன்

  ReplyDelete
 13. பொன்.முத்துக்குமார்Tue Feb 28, 10:01:00 PM GMT+5:30

  ஆகாது ஆகாது என்று சொல்லிக்கொண்டு முயற்சியே செய்யாமல் இருப்பதைவிட நடைமுறையில் சாத்தியப்படும் எல்லா மாற்று திட்டங்களையும் முயன்று பார்ப்பதே நல்லது.

  சூரிய சக்தி இப்போதைக்கு மிகுந்த செலவு பிடிக்கும் திட்டமாக இருக்கலாம். தொடர்ச்சியான ஆராய்ச்சி மூலம் ஏன் திட்டச்செலவை குறைக்க இயலாது ? கண்முன் உள்ள உதாரணம் மின்னணு உபகரணங்கள் மற்றும் கணினி. அறைகளை அடைத்துக்கொண்டிருந்த மாபெரும் சர்வர்கள் இன்று அளவில் சிறுத்து திறனில் பலபடி முன்னேறவில்லையா ? அதுபோல ஃபோட்டோ வோல்டாயிக் தொழில்நுட்பமும் முன்னேறும் - உடனடியாக இல்லாவிட்டாலும் இன்னும் 20-30 ஆண்டுகளிலாவது - என்று ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது ?

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. பொன்.முத்துக்குமார்Tue Feb 28, 10:08:00 PM GMT+5:30

  "அணுமின் நிலையக் கழிவுகள் ஆபத்தானவை. அவற்றை என்ன செய்வது என்று எழுப்புகின்ற வாதம் எல்லாம் திசை திருப்புகின்ற வாதங்களே

  .புதிதாக வீடு கட்டுகிறவரிடம் போய் புதிதாக வீடு கட்டாதீர்கள். 50 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீட்டை இடிக்கும் போது பிரச்சினையாகும். நிறைய தூசு கிளம்பும். அக்கம்பக்கத்தில் உள்ள்வர்களுக்கு சிரமமாக இருக்கும்.போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் கூறி வீடு கட்டாதபடி தடுக்க முற்பட்டால் அது அசட்டுத்தனமாக இருக்கும். அது போன்றது தான் அணுக்கழிவு வாதமும்."

  திரு.ராமதுரை அவர்களே, இப்படிப்பட்ட ஒப்பீடு உங்களுக்கே அதீதமாக படவில்லையா ?

  அணு உலைக்கழிவு மேலாண்மைகூட தற்போதைய நிலையில்தான் பெரும் சவாலாக இருக்கிறதே ஒழிய அப்படியே இருக்கும் என்று நான் நம்பவில்லை. நிச்சயமாக அணு இயற்பியல் துறை இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் என்று சர்வ நிச்சயமாக நான் நம்புகிறேன்.

  மாற்று வழிகள் இருக்கையில் அவற்றுக்கு போதிய நிதி ஆதாரம் செய்யாமல் புறக்கணிக்கத்தக்க நிலையில் விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளில் அணு உலைகள் தேவையா என்பதே இப்போதைய வாதம்.

  இதுவரை நாம் அணு உலைகளுக்கு செலவு செய்த நிதி எத்தனை ஆயிரம் கோடிகள், இதில் மாற்று மின்சக்தித்துறைகளுக்கு நாம் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம் என்ற கணக்கு உள்ளதா எங்கேனும் ?

  ReplyDelete
 16. Badri,

  This is what TOI says:
  http://articles.timesofindia.indiatimes.com/2012-02-27/india/31104023_1_kudankulam-pmane-foreign-funds

  "Government sources said an investigation into the use of foreign funds and local reports showed that agitators were being given a daily food packet and liquor besides Rs 500 a day."

  Do you agree with this finding of this govt sources that the people are protesting for briyani,quarter and money?

  First thing is to accept that people has genuine fear.Instead,these kind of shameful allegations don't take anywhere.

  ReplyDelete
  Replies
  1. I do not have sufficient data to either agree with or disagree with statements emanating from PMO. As of now, I am restricting my comments to what Udayakumar says in public.

   Delete
 17. பத்ரி நீங்கள் மிகச் சரியான ஒரு பதிவை செய்துள்ளீர்கள். நான் ஞானி அவர்களின் தளத்தில் ஒரு பதில் கமெண்டை ஒரு நண்பருக்கு செய்தேன். ஆனால் நம்ம 'most perfect' ஞானி அதை வெளியிடவில்லை கேட்டால் இந்த தளம் அதற்கான இடம் அல்ல என்று பதில் கமெண்ட்டை போட்டார். நான் சொன்னதும் நீங்கள் சொன்னதை போலேதான். சூரிய சக்தி மின்சாரம் அதிக இடத்தை ஆக்கிரமித்து கொள்ளும் ஆனாலும் குறைவான மின்சாரமே எடுக்க முடியும் ( ஞானி சீனாதான் சூரிய சக்தி மின்சாரத்தில் முதல் இடத்தில உள்ளதாக சொன்னார், நான் என்னுடைய கமெண்ட்டில் அங்கே எடுக்கப்படும் அதிகபட்ச மின்சாரமே 300MW's தான் அதுவும் எல்லா நேரத்திலும் எடுக்க முடியாது என்றும், காற்றாலைகள் மூலம் எடுக்கப்படும் மின்சாரம் ஒரே நாளில் 3000MWடில் இருந்து 300MW'டாக குறையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பாதாகவும், அதுவும் சில பருவ காலங்களில் மாட்டுமே எடுக்க முடியும் என்றும் சொன்னேன். அதே சமயம் அவர் அமெரிக்காவில் புதிய அணு உலைகளை கட்ட அனுமதிக்கவில்லை என்றும் எழுதினார், நான் அமெரிக்க அணு சக்தி 'website'டில் உள்ள ஒரு லிங்கை அனுப்பினேன், அதில் வரும் வருடங்களில் பல அணு உலைகளை கட்ட அவர்கள் திட்டம் போட்டுள்ளதாக இருந்தது). இந்த எதிர்பாளர்கள் சொல்லும் பல தீர்வுகள் நிச்சயம் 'Dark Humor' வகையை சேர்ந்த கொடுமையான ஜோக். இவர்கள் நம்மை ஒரு 2 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்லுகிறார்கள். அதுவும் ஞானி வெளிவிடும் கருத்துகளில் 90 சதம் எதிர்மறை கருத்துகளே.

  ReplyDelete
 18. எல்லாப் புள்ளிகளும் ஒரு நேர்கோட்டில் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு புள்ளி சற்று விலகியிருக்கிறது. ஜெயமோகன் என்ற புள்ளி இணைவதற்கான காரணத்தை இந்துத் தத்துவஞானத்தில் தேடிக்கொண்டிருக்கலாம். கிடைத்தவுடன் விரைவில் கோட்டில் இணைந்து கொள்ளும். வாழ்க உங்களுடைய அறிவு நேர்மைகள்!

  நன்றி - சொ.சங்கரபாண்டி

  ReplyDelete
  Replies
  1. அடி முட்டாள்தனமான, மேம்போக்கான ஒரு விமரிசனம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உள்ளது என்பதை மட்டும் இங்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

   Delete
  2. “மீண்டும் மீண்டும்” என்று நீங்கள் கூறுவது கொஞ்சம் எரிச்சலில் வெளியானது :-)

   சக ஆராய்ச்சியாளர்களின் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவில் அவ்வாராய்ச்சியாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டபின்னரே ஆராய்ச்சி முடிவுகளை நூல் வடிவில் கொண்டுவருவார்கள் என்பதையும், அப்படியான நூலையே ஆராய்ச்சி நூல் என்பதையும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவேதான், அரைகுறை உண்மை மற்றும் பொய்த் தகவல்களையும், வெறும் ஊகங்களையும் புனைந்து சிறுபான்மை இனங்களின் மேல் வெறுப்பை உமிழ்ந்து இந்துத்துவ வெறியூட்டும் “உடையும் இந்தியா” ஒரு நூலை ஆராய்ச்சிப்பூர்வமான நூல் என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நடுநிலைக்குப் பொருந்தவில்லையென்று குறிப்பிட்டேன். அப்பொழுது மேம்போக்காக உங்களை விமர்சிக்கவில்லை. குற்றஞ்சாட்டவுமில்லை. ஆனால் நீங்கள் அதற்குப் பதிலுமளிக்கவில்லை.

   தற்பொழுது மிகத்தந்திரமாக உதயகுமாரின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் உங்களுடைய நோக்கம் இந்துத்துவக்கும்பலின் நடவடிக்கைகளை ஒத்திருந்ததால் உங்களது இந்துத்தச் சார்பைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

   இன்று நேற்றல்ல, இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் பல்லாண்டுகளாகவே சுற்றுச்சூழலியலாளர்கள் வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுத்தப்படுவதையும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நவீன உலகின் வளர்ச்சி என்ற அடிப்படையிலான தேவைகளுக்கு எந்த முழுமையான தீர்வையும் அவர்கள் முன்வைக்கவுமில்லை. அது அவர்களது துறைசார் அறிவோ அல்லது கடமையோ அல்ல. எனவே அவர்களுடைய வாதத்தை சுற்றுப்புறச் சூழல் தீவிரவாதம் என்ற விமர்சனத்தை வைத்து மட்டுமே அவர்களுடன் உடன்படாத நடுநிலையாளர்கள் எதிர்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவிலோ மதவாத, இனவாத இந்துத்துவ சக்திகள், போலித்தேசியவெறிபிடித்தவர்கள், ஊழலுக்குள்ளேயே முழுமையாக முங்கித்திளைக்கும் மத்திய-மாநில அரசுகள், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சாதிவெறி பிடித்தலையும் பத்திரிகைகள் என அனைத்தும் சேர்ந்து மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த என்னென்ன நேர்மையற்ற ஒடுக்குமுறைகளில் ஈடுபட இயலுமோ, அத்தனையையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து உதயகுமாருக்கும், மக்களுக்கும் பணம் வருவதாக அறவழிப்போராட்டத்தை கொஞ்சமும் நாக்கூசாமால் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியக்கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் மெய்சிலிர்க்க எழுதும் உங்களுக்கு அவையெல்லாம் கொஞ்சம் கூட கோபப்படுத்தவில்லை, நேர்மையின்மையாகப்படவில்லை. மாறாக, வழக்கமான சுற்றுச்சூழல் தீவிரவாதத்தன்மையுடன் அணு மற்றும் அணல்மின்நிலையங்களை உதயகுமார் எதிர்ப்பதை முன்னிட்டு அறிவுநேர்மையற்றவர் என்று சுட்டிக்காட்டிடவே இவ்விடுகையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

   முன்பொரு பதிவில் நீங்கள் எழுதியது கீழே:

   “2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.

   3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.”

   என்று எழுதியிருப்பதும் நீங்கள்தான்.

   உதயகுமார் ஒன்றும் புதிதாகக் கண்டுபிடித்து அனல் மின் நிலையங்களை எதிர்க்கவுமில்லை. நீங்கள் பட்டியலிட்ட காரணங்களே அவை. எனவே அவருடைய நேர்மை எப்படி பிறழ்ந்துள்ளது? நேர்மையற்ற குற்றங்களைச் செய்துகொண்டிருப்பவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் உதயகுமார் ஒருவரை மட்டுமே நடுநிலை என்ற போர்வையில் இழிவுபடுத்த இப்பதிவை எழுதியதாகவே எனக்குப் படுகிறது. உதயகுமாரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வளர்வதாகப் பொய்களைப் பரப்பும் அனானிப்பின்னூட்டங்களை வேறு அனுமதித்திருக்கிறீர்கள். உங்களுக்கும் இந்துத்துவக்கும்பலுக்கும் இந்தப் பிரச்னையில் என்ன வேறுபாடு?

   நன்றி – சொ.சங்கரபாண்டி

   Delete
 19. Just as I read this, came across some good news for solar and other micro-grids:

  http://www.technologyreview.com/energy/39802
  http://www.aquionenergy.com/technology/

  ReplyDelete
 20. /// எஸ்.பி.உதயகுமார் இப்போது அணு மின் நிலையத்துடன் அனல் மின் நிலையத்தையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். ///

  அனல் மின் நிலையங்களை உதயகுமார் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. மாற்றுகளை முன்னெடுக்கவேண்டும் என்றுதானே சொல்கிறார்? நீண்டகால நோக்கில் அனல் மின்சாரம் கைவிடப்பட வேண்டும் என்று அனைவருமே ஒப்புக்கொள்வார்களே.

  சரவணன்

  ReplyDelete
  Replies
  1. எங்கே சொன்னார், என்ன சொன்னார் என்பதைத் தெளிவாகச் சொல்லியுள்ளேன். அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் கூடாது என்று பொதுக்கூட்டத்தில் அவர் சொன்னதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை நான் பார்த்தேன்.

   “அனைவரும்” ஒப்புக்கொள்வார்களே என்று பொதுவாக எதையும் சொல்லாதீர்கள். யாரும் எதையும் ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் ஒப்புக்கொள்வதில்லை. நாளை யாரெல்லாம் சூரிய ஒளி மின்சாரத்தை எதிர்க்கப்போகிறார்களோ, தெரியவில்லை. நீண்டகால நோக்கில் - என்று பொதுவாக எதையாவது சொல்லாதீர்கள். எல்லாவிதமான மின் தயாரிப்பிலும் ஏதோ ஒரு சிக்கல், சூழல் கேடு இருந்துகொண்டுதான் இருக்கும்.

   Delete
 21. Indian nuclear establishment's thorium life cycle is not commercially implemented anywhere in the world.My guess is,in the next 20-30 years, they are not going to produce 1000s of MWs from that.Given the nuclear establishment's history of tall claims,their current installed capacity of 4780MW inself suggest their capability.
  DAE/NPCIL are not able to install not even a single 1000MW reactor with uranium lifecycle.(Which was proved in 1940s itself).But we have to believe that the same people are going to develop the throium reactors on their own research and going to install commercial reactors.

  Nuclear power is not going to make any real difference in power situation in next 20-30 years.With two kudankulam and other current plants, may be they can add other 4800 MWs.( They can continue to project any number they want, but no plan in real terms)

  It doesn't mean nuclear power is not an option itself, but still we find more ways/techniques/procedures to control the controlled nuclear reactions in better way, it is time to pause.And thats what world is doing.

  Nuclear power share of 16% in global power was reached in late eighties itself.But the shock of 1986, put a brake and it was not able to sustain the share and it is now below 14%.Again when the general confidence grows,2011 gave the next shock.Even in 2011, there was no way to control it, other than evacuating the entire 30KM radius.Now for next 2 decades, maintaining this share of 14% itself is tough task.Meaning, definitely nuclear power is not in growth path globally.

  May be after significant breakthroughs in maintaining the neclear reactions in full control,we may again start the new reactors.Then, it can be started in nuclear SEZs in delhi/noida itself.

  ReplyDelete
 22. உதயகுமார் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாததால் அது பற்றி மேலும் நான் கூற விரும்பவில்லை.

  ஆனால், புவிச் சூடேற்றத்துக்குக் காரணமாக விளங்கும் அனல்மின் நிலையங்களுக்கு எதிர் காலத்தில் மாற்று காணப்பட வேண்டும் என 'அனைவரும்'(புவி சூடேற வேண்டும் என விரும்புபவர்கள் தவிர!) ஒப்புக்கொள்வார்கள் என்றே இப்பொழுதும் கூறுகிறேன் - அது சூரியசக்தியா, கடலலையா, ஜியோதெர்மலா என்பது போல ஒரு குறிப்பிட்ட டெக்னாலஜி பற்றித்தான் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஒருவேளை சுற்றுச்சூழலைப் பாதிக்காத, மலிவான டெக்னாலஜி (இப்போது நினைத்தே பார்க்கப்படாத) ஏதேனும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் வேண்டாம் என்று யாரும் சொல்லப்போவதில்லை அல்லவா? அப்படியான எதிர்காலத்துக்கான (ஆராய்ச்சி) முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று உதயகுமாரோ அல்லது வேறு யாருமோ சொன்னால் தவறில்லையே.

  சரவணன்
  சரவணன்

  ReplyDelete
  Replies
  1. Global warming ? முதலில் இந்த புவி சூடேற்றம் என்ற மதவாதக் கொள்கைக்கு ஆப்பு வைக்கவேண்டும். 1990 க்குப் பிறகு பூமியின் வெப்பம் அதிகமாகவில்லை. குறைந்துகொண்டு தான் வந்துள்ளது. இந்த பூமி வெப்பமாகிவிடும் என்று பயம் காட்டியே சில மேற்கத்திய நாட்டு முதலாளித்துவவாதிகள் கீழை நாடுகளை "மறுகாலணியாதிக்கம்" செய்கின்றனர்.

   -நாளைய கம்மூனிஸ்ட்

   Delete
 23. கேள்வி: சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க யூனிட் ஒன்றுக்கு 12 ரூபாய் செலவு. யார் இதற்குத் தயார்?
  பதில்: 7 வருடங்களுக்கு முன்னால் கேஸ் சிலிண்டர்(கொண்டு வருபவருக்கு டிப்ஸ் உட்பட) 300+ ரூபாய் கொடுத்து வாங்கினேன். தற்போது (டிப்ஸ் உட்பட) 500 ரூபாயை நெருங்கி விட்டது. இதற்கு யார் தயார்?
  பெட்ரோல் விலை மாதம் ஒரு முறை ஏறிக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் தயார்?
  என் தந்தை(சாதாரண ஆசிரியர்) வேலை பார்த்த காலத்தில் அவரது ஒரு வருட சம்பளத்தில் அழகான வீடு வாங்கும் அளவு வீட்டு விலை இருந்தது. வாடகை என்றாலும் மாத வருமானத்தில் 10% க்கு டீஸன்டான வீடு கிடைத்தது. தற்போது நானும் சாதாரண மத்திய வர்க்கம்தான். இருபது வருட கடன் திட்டத்தில் கையெழுத்துப் போட்டு 100 மாத சம்பளத்தைத் தந்தால் தான் வீடு வாங்க இயலும். வாடகை என்றால் மாத வருமானத்தில் 50% எடுத்து வைக்க வேண்டிய நிலைமை! இன்றைய மத்திய வர்க்கத்தின் நிலை இதுதான். இதற்கு யார் யார் தயார் என்று கேட்டுவிட்டுத்தான் ரியல் எஸ்டேட் காரர்களும் வீட்டு ஓனர்களும் கொள்ளையடிக்கிறார்களா? அரசும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறதா?
  கேள்வி: சாலை விபத்துகளில் உயிரிழப்பு நேர்கிறதென்று வாகனங்களைத் தடுத்துவிடுவோமா?
  பதில்: சாலை விபத்துகளில் நேரடியாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும்தான் ஆபத்து. அணு மின் நிலைய விபத்தும் அப்படித்தான் என்று மாண்புமிகு நாராயணசாமி கூட சொல்ல மாட்டார். (அவ்வளவு அண்டப்புளுகுக்கு இன்னும் சில காலமாவது ஆகும் என்று நம்புவோமாக!)
  சாலை விபத்துகளையே எடுத்துக் கொள்வோம். தடுப்பதற்கு அரசு என்ன முயற்சி எடுத்து வருகிறது? குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களைக் காவல் துறையினரே வேடிக்கை பாத்துக் கொண்டு சும்மா இருப்பதைக் கண்ணால் பார்க்கிறோமே? நமது மக்களும் விதிகளை மீறுவதில் எவ்வளவு ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிந்ததே! (படித்தவர்கள் தான் இதில் முன் நிற்பது) இவ்விஷயத்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறதே ஒழிய முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் இல்லை என்பது கவலையூட்டுகிறது. அணு உலை மடுமல்ல, எந்த ஒரு அமைப்பிலும் திறமையின்மை மற்றும் ஊழலுக்கு முதல் பலியாக ஆவது பாதுகாப்புதான். இந்நிலையில் ஏற்கெனவே இயங்கும் அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்த அச்சமும் அதிகரித்து வருவது நியாயமே. அவற்றையும் ஆராய்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. எதிர்ப்பாளர்களுக்குப் பணம் வரும் வழியை ஆராய்வதை விட இருக்கும் உலைகளின் பாதுகாப்பை ஆராய்ந்தால் மத்திய அரசின் மீது மக்களுக்குக் கொஞ்சமாவது நம்பிக்கை வருமல்லவா?

  ReplyDelete
 24. அமெரிக்காவில் அணு உலை இருக்கிறது, ஜப்பானில் இருக்கிறது என்று புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக தொடர்ந்து அணு உலைகளைத் திறந்து கொண்டே போவோம், மைய அரசின் சத்தியங்களை மீறி ஒரு விபத்து நேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம், மீட்பு நடவடிக்கைக்கு நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம்? அதில் அமெரிக்கா, ஜப்பான் போல இருக்கிறோமா? நம்மூரில் தீயணைப்பு வண்டி சமயத்துக்கு வராததால் பலி எண்ணிக்கை கூடிய நிகழ்வுகள் எத்தனை?

  தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் கூட நட்னததிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கு பதில்- பாதிக்கப்பட்ட தொழிலளருக்கு சட்ட ரீதியான ஈட்டுத் தொகை அளிப்பதைக் கூட ஏய்த்துவிட்டு - அந்தத் தொகைக்கு 100 மடங்கு ஃபீஸ் அழுது வாஸ்து நிபுணரை வரவழைத்து தொழிற்சாலையை வாஸ்து படி இடித்துக் கட்டிகிற பிரஹஸ்பதிகள் நம் நாட்டில் அநேகம்.
  பொதுவாக எந்த விபத்து பற்றிய விழிப்புணர்வு பற்றி நம்மவர்களிடம் பேசினாலும் (படித்தவர்கள்தான் இதிலும் முதல் இடம்.) விபத்து எல்லா இடத்திலும் தினமா நடக்கிறது என்பார்கள். விபத்து என்பதே தினம் காட்டும் அலட்சியங்களின் பலனாக என்றோ ஒரு நாள் எங்கோ நடப்பதுதான் என்ற எளிய உண்மை நம்மவர்களுக்கு உறைப்பதே இல்லை.
  தூண்டுபவர்களின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும் கூடங்குளம் பகுதி மக்கள் மனதில் தற்போது அச்சம் உண்டாகி இருக்கும். அதை நீக்கிவிட்டு உலையை இயங்கச் செய்வதே முறை. இல்லையென்றால் ஜன நாயகம் என்று பீற்றிக் கொள்வதற்கு என்ன பொருள்? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன வேறுபாடு?
  கூட்டத்தில் கோஷமாக எழும் குரல் என்றாலும் அதற்கும் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அது வரை நாமும் மின் பற்றாக்குறையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏஸியில் சுகமாக இருக்க கூடங்குளம் பகுதி மக்கள் அச்சத்தை விட வேண்டும் என்று உபதேசிப்பதற்கு பதில் அப்பகுதியில் இருக்கும் நம் சகோதரர்களின் பாதுகாப்புக்காக நம் மின் தேவைகளை நாம் தியாகம் செய்யத் தயாராகலாமே? அல்லது கூடுதல் விலை கொடுத்தாவது சூரிய ஒளி மின்சாரம் போன்ற மாற்று ஏற்பாடுகளை சோதிக்க முயலலாமே?
  மனிதன் உயிர் வாழ ஊறுகாய்தான் இருக்கிறது என்ற நிலை வந்தால் அதையும் சாப்பிட்டு உயிரைக் காப்பாற்றக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதையும் எல்லாருடனும் பங்கிட்டுத்தான் அனுபவிக்க வேண்டும். தியாகம் செய்யத் தயாராக இல்லாவிட்டால் வல்லரசாக ஆசைப்படக் கூடாது.
  அணு உலைக்கு உதாரணம் காட்டப்படும் ஜப்பான், அமெரிக்க நாட்டு மக்களும் கூட தேவையான சமயங்களில் தியாகம் செய்யாமல் முன்னேற்றத்தை அடைந்து விடவில்லை. பொருளாதார முன்னேற்றத்துக்கு முதல் தேவை மின்சாரம் அல்ல. தேச பக்தியும் தியாகங்களுக்குத் தயாராக இருப்பதும் தான்.
  அணு சக்தித் துறையே நேருவின் கனவால் உருவானது. தற்போது அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தற்போதைய பிரதமர் கனவு காண்பவரல்ல. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர். விபத்து நடந்த பின் குற்றவாளிகள் (ஆண்டர்ஸன், குவட்ரோச்சி வழியில்) தப்பி ஓட வழி செய்து விட்டு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் செய்தது போல எனக்கு எதுவுமே தெரியாது என்று சத்தியம் செய்வார்.
  அணு உலை இல்லை என்றால் அதிக பட்சம் இலுப்பை எண்ணை விளக்குதான். தப்பித்தவறி அணு விபத்து நடந்தால் எல்லாருக்கும் மொத்தமாக மெழுகுவர்த்தி. அதை நினைவில் கொள்வது நலம்.
  நமது அரசும் நாமும் முதலில் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொண்டபின் தான் தடையற்ற மின்சாரத்துக்கும் ஏன், எந்த வகை நாகரிக வசதிகளுக்குமே அருகதை உள்ளவர்கள் ஆவோம்.

  ReplyDelete
 25. உதயகுமார் மற்றும் அவரது உள்நாட்டு வெளிநாட்டுக் கூட்டாளிகள் தங்கள் கருத்தை பல முறை தெளிவுபடத் தெரிவித்துவிட்டனர். அதாவது, அனுவுலை மூடப்படவேண்டும் என்பதே அது. அரசு ஊரில் இருப்பவர்கள் பயத்தைப் போக்கிக்கொண்டிருக்கவேண்டும், அதே வேளை இந்த ஊத்தையகுமார் புதுப் புதுப் பயத்தை உருவாக்கிக்கொண்டிருப்பார் என்பது நடக்க முடியாதது.

  உதைக்கும் மார் தைரியமாக நான் கட்டி முடித்து ஆப்ரேஷனல் ஆக இருக்கும் அனு உலைக்கு எதிராகப் போராடுவேன். உன்னால் முடிந்ததைச் செய் என்று அரசுக்கு சவால் விடுகிறார். எப்பேற்பட்ட நிபுணர்கள் வந்து நல்ல வார்த்தை சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை. மேரி க்யூரி வந்து சொன்னாலும் அவரிடம் இந்த "பீஸ் ஸ்டடீஸ் பீ.எச்.டி" பட்டதாரி நூக்கிளியர் ரியாக்டர் பற்றி என்ன தெரியும் என்று கேட்கக்கூடும். முதலில் இந்த உதைக்குமாருக்கு நூக்கிளியர் ஃபிசிக்ஸ் பற்றி என்ன ம$ரு தெரியும் ? செருனொபைல், ஃபூக்குஷீமா என்று மக்களை பயமுருத்தத் தெரியும். அதில் குளிர்காயத்தெரியும். எவனாவது டாலர் கொடுத்தால் அவனுக்காக நல்லா சத்தமா கத்தத் தெரியும்.

  நியாயமான போராட்டம் என்றால் nuclear liability bill ரொம்ப வலுவான ஷரத்துக்களுடன் இருக்கவேண்டும். போப்பால் விஷவாயு கேஸில் நடந்தது போல் ரஷிய நிறுவன அதிகாரிகள் சில்லரையை விட்டெரிந்துவிட்டு தப்பிக்க முடியாதபடி சட்ட திட்டங்கள் இருக்கவேண்டும். 50 ஆண்டுக்குள் மாற்று மின்சக்திக்கு வழிவகை செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாகப் போராடியிருக்கவேண்டும். அதை விட்டுப் போட்டு மக்களுக்கு வெளிநாட்டுப்பணத்தில் பிரியாணி போட்டு போராட்டம் நடத்துவது, அன்னிய மதவாத சக்திகளுடன் கூட்டுசேர்வது, போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார் இந்த உதைவாங்கப்போகும் குமார்.

  ReplyDelete
 26. கூடங்குளம் மூன்றாவது தலைமுறை ரியாக்டர் என்கிறார்கள். அப்படியானால் 50 ஆண்டு பழைய முதல் தலைமுறையைச் சேர்ந்த தாராப்பூரையும். 30 ஆண்டு பழைய இரண்டாம் (?) தலைமுறையைச் சேர்ந்த கல்பாக்கத்தையும் மூடிவிட அரசு முன்வருமா?

  சரவணன்

  ReplyDelete
 27. உதயகுமார் அனல் மின்சாரத்தை முற்றாக எதிர்க்கிறார் என்று கருதுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் முன்வைக்கும் மாற்று ஏற்பாடு கட்டப்பட்ட மின்னுற்பத்தி நிலையத்தை எரிவாயுவால் செயல்படும் நிலையமாக மாற்றுவதே. Thermal Power Plants can either be coal based or gas based.

  ReplyDelete
 28. அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு அணுமின்சாரம் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் சுயலாபம் கருதி அரசுகளையும், பிற ஆய்வு நிறுவனங்களையும் பிற ஆற்றல்மூலங்களில் நேரமும், பொருளும் செலவிடவிடுவதில்லை என்பது.

  மேலும் மின் தேவை குறித்த எல்லா கருத்துக்களும் ஏன் மின் உற்பத்தியையே, அதுவும் பெருமின் திட்டங்களையே சுற்றிவரவேண்டும்? பரவலான, அந்தந்த பகுதியின் தேவைக்கு அங்கேயே உற்பத்தி செய்துகொள்ளும் Distributed Generation, மின் கடத்துகையிலும், பகிர்விலும் ஏற்படும் தொழில்நுட்ப இழப்புகளை குறைத்தல் என்ற நோக்கில் ஏன் விவாதம் செல்வதில்லை?

  மேலும் அணுமின்நிலையங்கள் கட்டப்படுவதன் நோக்கம் மின்சார உற்பத்தி மட்டுமே என்பதே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது!

  ReplyDelete
 29. It is fairly well known that most of the non-renewable generation methods of electricity (solar, tidal, etc.,) are cost intensive and futuristic - do not expect them to solve our energy problems now. They are at best feel-good technologies as of now. While solar might have more promise amongst these, we still have a long way to go with fuel cell technology etc., Likewise wind energy also has a long way to go; the burgeoning of the wind mills has to do more with the tax holidays and benefits various governments offer to those promoters. While research in these technologies should certainly be top priority for India(and China has already started doing this in a big way), it would be naive to expect that our energy problems TODAY can be solved with these technologies.

  Notwithstanding all the risks, Thermal supplemented by nuclear power is the likely way for large scale power production in India, at least for some more decades to come. While the quantum of nuclear power may not be comparable to thermal power, it certainly has the potential to produce more than all the 'feel-good' technologies discussed above. On the safety issue yes, we have to be very careful and take others' experiences around the world as wake-up calls.
  While all of us - the public- certainly can and should voice our opinions on policy decisions, I think finer points on the viability of a technology etc., is best left to the 'experts'. Otherwise there is the danger of armchair 'technologists' with googled, half-baked ideas directing such public discourses. Sadly, this is already happening in the present debate on nuclear power.

  ReplyDelete
  Replies
  1. Sorry for the typo - in the first line above it should read 'renewable' instead of 'non-renewable'

   Delete
 30. There are issues like the credibility of DAE and NPCIL. In India there is no university or autonomous body that can verify their claims, nor the private sector can do that. Because DAE had killed all attempts to develop independent capacity for research in nuclear engineering in universities/IITs. The only option is you do research for them.The regulatory side of DAE and NPCIL is weak and AERB has little powers to control DAE units. So even if one is for atomic power it is difficult to accept the claims of the nuclear establishment on safety and performance. Their past record does not inspire any confidence.A scientific and technical audit by an independent body is a must before they operationalize Koodankulam plant.

  ReplyDelete
 31. அணுமின் நிலைய எதிர்ப்பானது கடைசியில் வசதியற்ற மக்களைப் பெரும் பொருள் ஈட்டத் துடிக்கும் தனியார் துறையினரிடம் தள்ளுவதில் தான் போய் முடியுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.உங்கள் ஆலையில் உங்கள் வீட்டில் மாடியில் சூரிய மின் பலகைகளை நிறுவிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று மேலும் மேலும் பல தனியார் நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன. வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகளைப் பொருத்த ஆரம்ப முதலீடு அதிகம. முதல் வேலையாக பணக்காரர்கள் இதில் ஈடுபடுவர். மத்திய தர வர்க்கத்தினரும் அதைப் பின்பற்றுவர். வசதியற்றவர்கள் பாடு தான் திண்டாட்டம்.இப்போது மின் பற்றாக்குறையை சமாளிக்க வசதி படைத்தவர்கள் ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இன்வெர்ட்டர்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இவற்றின் விற்பனை இப்போது மிக ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனியார் துறையினர் பணம் பண்ண இது மிக நல்ல சந்தர்ப்பம்.
  இந்தியாவில் பெரிய அளவில் சூரிய மின் ஆலைகளை நிறுவ முற்பட்டுள்ளவர்கள் தனியார் துறையினரே. மானில் மின் வாரியங்கள் அல்ல.மின் தேவையை சொந்தமாகப் பூர்த்தி செய்து கொள்ள அவரவர் முற்படும் போது மின் வாரியங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு பொறுப்பு விட்டது என்று ஒதுங்கிக்கொள்ளலாம்.
  ஸ்பெயின் நாட்டில் மட்டும் தான் இரவு பகல் இரு வேளைகளிலும் மின்சாரத்தை அளிக்கிற சூரிய மின் நிலையம் உள்ளது. மற்றபடி சூரிய மின்சாரம் பகலில் மட்டுமே கிடைப்பது. மேக மூட்டம் இருந்தால் அம்போ. ஆண்டில் 300 நாட்கள் நல்ல வெயில் அடிக்கின்ற இடத்தில் தான் சூரிய மின்சாரம் பலன் த்ரும். அதுவும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும். ஜன அடர்த்தி அதிகம் உள்ள இந்தியாவில் பிரச்சினை தான்.

  அமெரிக்காவில் சாண்டியாகோ நகரில் சுமார் 70 சதவிகித மின் தேவை சூரிய மின்சாரம் மூலம் பெறப்படுகிறது.அதாவது அவரவர் மின்சாரத்தை தயாரித்துக் கொள்கிறார்கள். அங்கும் சரி, மேக மூட்டம் என்றால் கிரிட் மின்சாரத்துக்கு திருமப வேண்டியுள்ளது. அங்கு மின்சாரத் தர விஷயத்தில் பிரச்சினைகளை எதிர்ப்பட்டுள்ளனர். சூரிய மின்சாரத்தை உபரியாகப் பெற்றிருப்போர் அதை கிரிடுக்கு அளிப்பதிலும் கிரிட்டிலிருந்து தேவையான சமயத்தில் மின்சாரத்தைப் பெறுவதிலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன்.

  தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவதாக பாவனை செய்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அது போல உண்மையான அச்சத்தைப் போக்க முடியும்.வேண்டுமென்றே பீதியைக் கிளப்புவர்களின் அச்சத்தைப் போக்க இயலாது.

  இந்திய நிபுணர்களும் ரஷிய நிபுணர்களும் சேர்ந்து நன்கு ஆராய்ந்து உருவாக்கிய ஒரு திட்டத்தை மத்திய குழு ஆராய்கிறது. மானில குழு ஆராய்கிறது.( மானில அரசுக்கு இது விஷயத்தில் எந்த அதிகாரமும் கிடையாது) அணுசக்தி பற்றி அறியாதவர்கள் அத் திட்டம் பற்றி விமரிசிக்கிறார்கள். இனி மேல் புதிதாக ரயில் பாதை போடுவதானால் கூட அந்த வட்டாரப் போராட்டக் குழு என்ன சொல்கிறது என்று கேட்டு அதன்படி தான நடக்க வேண்டும். இந்த கண்ணராவியெல்லாம் இந்தியாவில் தான்நடக்கும்.தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்குள் பூதம் வளர்ந்து விட்டது. அது உள்ளூர் பூதமா அல்லது வெளி நாட்டு பூதமா என்று ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க ஓட்டு வங்கி அரசியல்.

  ReplyDelete
 32. மின் தேவையைப் பூர்த்தி செய்ய அந்தந்த வட்டாரத்தில் ஏற்பாடு இருக்க வேண்டும் என ஓர் அன்பர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த யோசனை.
  இக் கொள்கையை மேலும் விரிவுபடுத்தி பனியன் உற்பத்தி, கார் உற்பத்தி, உருக்கு உற்பத்தி முதலியவை விஷயத்திலும் பின்பற்றலாம். ராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவில் ஆண்டுக்கு 10 லாரி விற்பனை ஆகிறதா? அந்த தாலுகாவில் ஆண்டுக்கு 10 லாரிகளை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவினால் போதும்.திருப்பூரில பனியன் உற்பத்தியை தடை செய்து விட்டு ஒவ்வொரு தாலுகாவிலும் பனியன் ஆலையை நிறுவலாம். இன்னொரு தாலுகாவில் ஆண்டுக்கு மூன்று கார் விற்பனை ஆகிறதா? அந்த தாலுகாவில் ஆண்டுக்கு மூன்று கார்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவலாம். எல்லாப் பொருட்களுக்கும் இப்படி செய்யலாம்.

  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்கள் அணுசக்தி நிபுணர்கள் என இதுவரை பலரும் கருதி வந்தனர். அவர்கள் பொருளாதார நிபுணர்களும் கூட என்று இப்போது தெரிய வந்துள்ளது.இன்னும் வேறு எதில் எல்லாம் அவர்கள் நிபுணர்கள் என்பது வருகிற நாட்களில் தெரிய வரலாம்.

  ReplyDelete
 33. மின் தேவைகள்,உற்பத்தி ,என்ன வகையான உற்பத்தி என்று பேசும் போது அனைவரும் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக அல்லது குருடன் யானையை பார்த்தார் போலவே பேசுகிறார்களே :-))

  அதிலும் ராமதுரைப்போன்ற அறிவியல்ப்பதிவர்களும் குதிரைக்கு குர்ரம்,ஆனைக்கு அர்ரம்னு பேசுவது வியப்பளிக்கிறது.

  ஒரு வேலை அறிவியல் பார்வைனா அணுப்பார்வையோ?

  மாற்று மின்சக்தி திட்டன்ங்களான சூரிய, காற்றாலை,கடலலை , புவி வெப்பம் என்பதை வைத்து 100 சதம் மின் உற்பத்தி செய்ய சொல்லவில்லை, ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து செய்து தேவையைப்பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.

  உதாரணமாக இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரம்ம் சுமார் 5000 மெ.வாட், சுமார் 2.7 சதவீதம் தான். மற்ற மின்சாரம் எல்லாம் மரபு வழியே.

  எனவே ஆபத்தான அந்த 2.7 சதவீதத்துக்கு மாற்றாக சூரிய,காற்றாலை இன்னப்பிறப்பயன்ப்படுத்தலாமே.அதற்காக கூடுதல் செலவானாலும் ரொம்ப பெரிதாக போய்விடாது. என்னமோ 100 சதவீதம்ம் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய சொன்னத்உ போல சாத்தியம் இல்லைனு சொல்லிக்கொண்டு.

  அப்படி சாத்தியம் இல்லை எனில் ஏன் 2020 குள் 30% சூரிய மின்சாரம் மொத்த மின் உற்பத்தியில் இருக்க வேண்டும் என அமெரிக்கா சட்டம் போட்டுள்ளது.

  இரவுப்பகல் எப்போதும் சூரிய மின்சாரம்ம் பயன்ப்படுத்த முடியும் , முந்தைய பின்னூட்டத்தில் எனது சிலப்பதிவுகளின் சுட்டிப்போட்டேன் யாரும் படிக்கவே இல்லை. படித்தால் ஓரளவு மாற்று மின்சக்தி திட்டங்களின் சாத்தியம் புரியும்.

  சூரிய மின் உற்பத்தி திட்டங்களில் அதிகம் கமிஷன் கிடைக்காது என்ற காரணத்தினாலும் நம் நாட்டு அரசியல்வாதிகள் இப்படி அணு ,அனல் மின்சாரம் போன்ற பெரிய திட்டன்ங்களைப்போடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது இருக்கும் உற்பத்தியில் 2.7% அனு மின்சாரம். இப்பொழுது நிலவும் தேவையில் அல்ல. இந்தியாவுக்கு இந்தியா மொத்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட அதிகம் தேவைப்படுகிறதென்பதால் தான் மின் வெட்டுக்களே நிகழ்கின்றன. உற்பத்தியைக் கூட்டுவதற்கு என்ன வழி ? காற்றாலை, சூரிய மின்சாரமா ?

   உதயகுமார் போன்ற தான்தோன்றி அனு மின்சார நிபுணர்களும் "சிவில் சொசைட்டி" அறிவுசீவிகளும் தான் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்றானால் நாடு சீரழிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

   Delete
 34. Dear Badri,

  I lived in Japan when one of the worst disaster in this century hit Japan on March 11, 2011. I have noticed lot of pro and anti Nuclear Energy folks debating and spreading half baked information through the media and internet without understanding the ground realty on where we are, how is our energy need for the next couple of decades and what steps can be taken instead of blindly supporting or opposing a source of energy. If you have time, we can have a debate with like minded people and this can be presented to the public via youtube so that they can take informed decisions and stance. Currently I live in Chennai

  Regards,
  KeeYes

  ReplyDelete