Thursday, February 02, 2012

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து

இன்று பெரும் விழா காண உள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். எழுத்தாளர்களை அனைவரும் கொண்டாடவேண்டும்.

ஒரு பக்கம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் நுழையவே கூடாது என்று ஒரு கூட்டம் போராடுகிறது. காங்கிரஸ் கட்சி இதனை மறைமுகமாக எதிர்க்கிறது. மறுபக்கம் தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று அதேபோன்றதொரு கூட்டம் கொல்கத்தா புத்தக விழாவில் ரகளை செய்துள்ளது.

அம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.

பெரும்புகழ் பெற்றுள்ள சில நபர்களைக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விழா நடத்த உயிர்மை முடிவு செய்ததைப் பல வாசகர்கள் ஃபேஸ்புக்கில் எதிர்த்துள்ளனர். இது தவறு. ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தமிழகத்தில் முக்கியமான நபர்கள். அவரவர் துறையில் பெரும் சாதனை புரிந்துள்ளவர்கள். ரஜினிகாந்தின் இலக்கியத் திறமைக்காக அவர் இந்த மேடையில் தோன்றப் போவதில்லை. எஸ்.ரா மீதுள்ள அன்பால், நட்பால் வருகிறார்.

நானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம்? நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது.

எஸ்.ராவுக்கு மீண்டும் என் வாழ்த்து. பாராட்டு.

11 comments:

  1. பேஸ்புக்கில் விமர்சித்துள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் நான் ரஜினியை அழைப்பதை எதிர்க்கவில்லை.யார் வேண்டுமானாலும் எழுத்தாளரைப் பாராட்ட வரலாம். ஆனால் விழா அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு அதை விட சிறியதாக எஸ்.ரா படத்தைப் போட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.இது பாராட்டப்படும் எழுத்ஹ்டாலனை அவமதிப்பதேயாகும். ஞாநி

    ReplyDelete
  2. ஞாநி சொல்வது சரி என்றே நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. பள்ளியில் படிக்கும்பொழுது தமிழ் பாடத்தில் செய்யுள்கள் மட்டுமே இலக்கியம் அல்ல எழுத்தும் இலக்கியம் என்று அவர் எழுத்தின் மூலம் நாங்கள் கண்டு கொண்டோம்.அவருடைய எழுத்தின் வீச்சு சில சமயங்களில் வெகுவாக எம்முள் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.எ-கா "தேசாந்திரி". அக்கட்டுரைகளில் வரும் வரலாற்றின் தொன்மை, வாழ்ந்த மனிதர்கள் நம்மை எளிதில் எழுத்தில் மூழ்கச் செய்பவை.மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். வாழ்த்த வார்த்தைகள் இல்லை..

    ReplyDelete
  4. "நானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம்? நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது." இப்படி உங்களால்தான் பட்டவர்த்தனமாக எழுதமுடியும்

    ReplyDelete
  5. //
    அம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.
    //

    சலான் ருஷ்டியின் புத்தகத்தையோ அல்லது தஸ்லீமாவின் லஜ்ஜாவையோ தமிழில் நீங்கள் கொண்டு வாருங்கள்...பின்னர் பார்க்கலாம்.

    ReplyDelete
  6. இன்றைய நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள் ஞாநியின் வாதம் எத்தகையதொரு அபத்தம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். முடியாவிட்டால் இறையன்பு, பெருமாள், ஞானசம்பந்தம் போன்றவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  7. இப்படியொரு விழா நடத்த யோசனை சொன்னவரே ரஜினிதான் என்பது நேற்று தெரிந்தது.

    ரஜினி : இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கு விழா எதுவுமில்லையா?

    எஸ்ரா : நீங்க வர்றதா இருந்தா வேணும்னா நடத்தலாம்.

    ரஜினி : கண்டிப்பா வர்றேன், நடத்துங்க..

    - இப்படித்தான் இந்த பாராட்டுவிழா நடத்தும் எண்ணமே தோன்றியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை பார்த்தால் எஸ்.ரா. தனக்கு தானே விழா எடுத்து கொண்டார்

      Delete
  8. நானும் எதிர் குரலை எழுப்பியவன் என்ற முறையில் பின்னூட்டம் இடுகிறேன்.

    ஆனால், ரஜினி விழாவிற்கு வருவதை எதிர்த்து அல்ல. தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பதும் உண்மையே.

    வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் விருதுதான் சிறந்ததா பத்ரி?

    உயிர்மை பதிப்பகத்தில் “தமிழ்மகன்” மற்றும் “விஜய மகேந்திர”-னின் புத்தகங்களும் ஜெயந்தன் விருது பெற்றிருக்கின்றன. அவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும். அவர்களுக்கும் சேர்த்து இந்த விழாவினை உயிர்மை எடுத்திருக்கலாமே!

    இது உயிர்மை பதிப்பகத்தின் காழ்ப்பை தானே காட்டுகிறது.

    ReplyDelete
  9. கருத்துக்களை கூறத் தயங்காத வெளிப்படையான ஆளுமைத் திறனும், போலித்தனத்தை நேரடியாக விமர்சிக்கும் தைரியமும், கோடிக்கணக்கான ரசிகர்களைத் தவறாக வழிநடத்தாத உயர் சிந்தனையும், உண்மையான பெருந்தன்மையும் கொண்ட ரஜினிகாந்த் அவர்களை அநாகரிகமாக் விமர்சிப்பது "வெரி வெரி ஸில்லி"
    .

    ReplyDelete
  10. My FB Status Today:

    சாருவின் எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் உச்சத்தில் இருந்தது. தெரிந்த நண்பர் அருகில் வந்து கை குலுக்கினார். அவர் எழுத்தாளரும், பன்முக ஆளுமையும் கூட. கடந்த சில நாட்களாக, சமூக வலைத் தளங்களில் ‘எஸ்ரா – இயல் விருது – மாபெரும் பாராட்டு விழா’ குறித்து உயிர்மை பதிப்பகத்தை கடுமையாக விமர்சித்து என்னுடைய எண்ணங்களை பகிர்ந்தபோது “காழ்ப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன்.

    “காழ்ப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தியது ‘தவறு’ என்று நண்பர் சுட்டிக் காட்டினார்.

    அப்பொழுது நண்பரிடம், “இல்லை, அந்த வார்த்தை சரிதான். மேலும் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தானே கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்ய முடியும்” என்று வாதாடினேன். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தமிழ் அகராதியை எடுத்து அர்த்தம் பார்த்தேன்.

    “காழ்ப்பு – பகையுடன் கூடிய வெறுப்பு. (Feeling of) intense dislike or hatred” என்று இருந்தது. பாரபட்சம் என்று பயன்படுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. காழ்ப்பு என்ற வார்த்தையை பிரயோகித்தது தவறுதான். ஆகவே உயிர்மைக்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ( Manushya Puthiran )

    ReplyDelete