இவர் சென்னை அமெரிக்க தூதரகத்தில் 1963-1968 இல் கான்ஸல் ஜெனரலாக இருந்தவராம். தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆர்வமுடையவராம். தமிழ் சிறுகதைகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
முன்னர் soc.culture.tamil இல் மௌனி எழுதிய ஒரு சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வந்திருந்தது, அதை மொழிமாற்றியவர் பெயர் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின்.
மேலும் கூகிளில் தேடுகையில் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் என்பவரது 'தமிழ்க் கதையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி' என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக மௌனியின் கதையிலிருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டிருந்தது. இதிலிருந்து கிடைத்த தகவல்கள்:
- அசோகமித்திரனும், ஆல்பர்ட் ஃபிராங்க்ளினும் சேர்ந்து மௌனியின் கதை ஒன்றை (பிரதக்ஷிணம்) ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது 1971இல் Adam International Review வில் வெளிவந்திருக்கிறது.
- மௌனியின் 'சாவில் பிறந்த சிருஷ்டி' என்னும் சிறுகதை கமலா லக்ஷ்மன்/அடில் ஜுஸ்ஸாவாலா ஆகியோரால் மொழிமாற்றப்பட்டு 'Born of Death' என்று பெங்குவின் 1974 வெளியீடான 'New Writing in India' என்ற புத்தகத்தில் வந்திருக்கிறது.
- 'Mauni: A writers' writer' என்ற புத்தகம் 1997இல் கதாவினால் அச்சிடப்பட்டுள்ளது. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் இதில் மௌனியின் பதினோரு கதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.
- எனக்குத் தெரிந்து நான் The New Yorker பத்திரிக்கையில் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் மொழிமாற்றம் செய்த மௌனியின் இரண்டு கதைகளைப் படித்திருக்கிறேன். 1970களின் கடைசியிலோ, 1980களின் ஆரம்பத்திலோ இவை வெளிவந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment