Saturday, December 11, 2004

தமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application Softwares



அமர்வின் தலைவர்: குமார் குமரப்பன்

1. பத்ரி சேஷாத்ரி: தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்

காமதேனு.com எனும் தமிழ் புத்தக வணிகத்தளம் பற்றி நான் பேசினேன். எனது முழு பிரசெண்டேஷனை நாளை wi-fi இணைப்பு வந்ததும் போடுகிறேன்.

2. ரவீந்திரன் பால்: Encoding Independent Database Applications in Tamil

எல்லோரும் யூனிகோட் என்று பேசும்போது இவர் எந்த எழுத்துக் குறியீடு என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லாக் குறியீட்டில் உள்ளவற்றையும் ஒரு neutral "encoding free" வழியில் தரவுத்தளத்தில் சேர்த்து வைக்கலாம் என்பது இவர் வாதம்.

இதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை, இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

3. டேவிட் பிரபாகர்: Tamil Hyphenation

தமிழில் கிடைக்கோடு (hyphen) என ஒன்றும் இல்லை. ஆனால் அழகுணர்ச்சி காரணமாகவும், படிப்பதற்கு வசதியாக இருப்பதற்குமென வேண்டுமென்றால் கிடைக்கோட்டைப் பயன்படுத்தலாம் என்கிறார். அதற்கு சில விதிகளைத் தருகிறார்.

ஆனால் அச்சுத்தொழிலில் இருப்பவர்கள் கிடைக்கோட்டைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. டேவிட் சொன்ன விதிகளைத்தான் கிட்டத்தட்டப் பயன்படுத்துகிறோம், ஆனால் கிடைக்கோட்டை விட்டுவிடுகிறோம். தமிழுக்கு கிடைக்கோடு அவசியமில்லை, நிறுத்தல் குறிகள் கூட மிகவும் குறைவாகத்தான் தேவைப்படுகிறது என்பது என் எண்ணம்.

4. பாலாஜி ஸ்வாமி: National Language Support in Oracle

சிறப்புப் பேச்சாளராக இந்த அமர்வில் வாசித்தவர் ஆரக்கிள் கார்பொரேஷனின் பாலாஜி ஸ்வாமி. ஆரக்கிளில் யூனிகோட் (UTF-8) வழியில் தமிழ் முதற்கொண்டு பிற இந்திய மொழிகளுக்கு எப்படிப்பட்ட ஆதரவு உள்ளது என்பதை விளக்கினார். கூடவே சில எடுத்துக்காட்டுகளை செயல்முறை மூலம் விளக்கினார்.

கேள்வி-பதில், அடுத்த அமர்வு ஆகியவை பற்றி நாளையோ, திங்களோதான்.

4 comments:

  1. Badri,
    காமதேனு தலம் நன்றாக இருக்கிரது. சுடச் சுட
    முதல் போணி பண்ணிவிட்டேன்.
    தனி தளமாக இருப்பதால், கிழக்கு தவிர்த்த மற்ற பதிப்பாளர்களின் புத்தகமும் கிடைக்கும் என யூகிக்கிறேன்.
    சரிதானே....?

    சரி என்றால் மிக்க சந்தோஷம். தமிழினைய மாநாட்டு அமர்வில் இந்ட்ர்ஹ மாதிரி ஒரு அறிவிப்பு செய்தது மிகப் பொருத்தம் மற்றும் நன்று.

    ReplyDelete
  2. ஆமாம். இப்பொழுதைக்கு காலச்சுவடு, உயிர்மை, தமிழினி புத்தகங்கள் உள்ளன என்பதைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் சிறிது சிறிதாக பிறரது புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதல் அனைத்தும் கிடைக்கும், நாளடைவில்.

    இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கும்.

    ReplyDelete
  3. Quite unrelated to this post.

    Badri, In the Kamadenu site when you click on the "Pay Now" button, in Firefox browser, it redirects to a page (kamadenu.com/cgi-bin/order_confirm.cgi), which instead of showing the content, shows the "Source Code"

    ReplyDelete
  4. நன்றி சந்தோஷ். நீங்கள் குறிப்பிட்ட பிரச்னையை சரி செய்துவிட்டோம்.

    ReplyDelete