Monday, September 04, 2006

அப்புசாமி, சீதாப்பாட்டி

குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ஜ.ரா.சுந்தரேசன் என்னும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தாம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும்.

குமுதத்தில் தொடராக பல கதைகளை அப்புசாமி, சீதாப்பாட்டி பின்னியிருக்கிறார்கள். இவை புத்தகங்களாகவும் வந்துள்ளன.

சிறுவயதில் இந்தக் கதைகளைப் படித்து எவ்வளவோ முறை சந்தோஷப்பட்டுள்ளேன்.

கிழக்கு பதிப்பகம் அடுத்த வாரம் முதல் வரிசையாக மாதம் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களாக அப்புசாமி சீரிஸைக் கொண்டுவரும்.

முதல் புத்தகம் 'அப்புசாமியும் 1001 இரவுகளும்.'

புத்தகம் முழுக்கப் படங்களுடன், நல்ல தாளில், நல்ல அச்சில், சேமித்து மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்து 'குபீர் குபீர்' என்று சிரிக்கக்கூடிய வகையில் அப்புசாமி புத்தகங்கள் இருக்கும்.

இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாகவும் (காமிக்ஸ்) கொண்டுவர விரும்புகிறோம். விரைவில்.

15 comments:

  1. Badri,

    People are crazy about "Thanga Vettai" programme in SUN TV. They are ready to acquire knowledge for the sake on winning in this competition. There is a good oppurtunity here. Why don't you release a good book on this title which covers the topics in this programme? If possible, a CDROM may be made available along with this book may contain the audio/video stuff also.

    Regards
    Vel murugan
    Boston

    ReplyDelete
  2. படங்கள் ஜெயராஜுடையதுதானே!

    ReplyDelete
  3. பத்ரி : நானும் சொல்றேன்.. வாழ்க, வளர்க.. அடுத்தது என்ன, அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியுமா?

    நடராஜன், ஜெ... இல்லை வேறு யாரோ என்று கேள்வி :-). காற்றுவாக்கில் வந்த சேதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின் சொல்கிறேன்.....

    ReplyDelete
  4. அடுத்து 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. அப்புசாமியைப் பொருத்தவரை எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், எந்த வரிசையில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டுமானால் அடுத்து எந்தப் புத்தகம் வரவேண்டும் என்று ஓர் ஆன்லைன் வாக்கெடுப்பைக்கூட நடத்தலாம்:-)

    ஜெ இல்லை. ஷ்யாம்.

    ReplyDelete
  5. Vel Murugan: The level of 'Q's in Thanga Vettai is shocking most of the times. This is not like real quiz or something that requires encyclopedic knowledge like for jeopardy.

    I will think about this. Thanks.

    ReplyDelete
  6. //இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாகவும் (காமிக்ஸ்) கொண்டுவர விரும்புகிறோம். விரைவில்.//

    அப்புசாமி காமிக்ஸ்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.... இதைப் பாருங்கள் : http://www.karuththu.com/forum/index.php?showtopic=812

    ReplyDelete
  7. பத்ரி,
    தகவலுக்கு நன்றி. உங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் - இதுபோல சின்னச் சின்னத் துண்டாக. நான் சொல்வது அவரது முழுநீள நாவல்களை இப்படி காமிக்சாகக் கொண்டுவருவது.

    ReplyDelete
  9. ///ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் - இதுபோல சின்னச் சின்னத் துண்டாக. நான் சொல்வது அவரது முழுநீள நாவல்களை இப்படி காமிக்சாகக் கொண்டுவருவது.////

    தயவுசெய்து இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள்.... தமிழ் காமிக்ஸ் வரலாறு உங்களைப் போற்றும்....

    குழந்தைகளுக்கான காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது உங்களைப் போன்ற பதிப்பகத்தாரின் கடமை.... அப்புசாமி காமிக்ஸ் மட்டுமன்றி புதிய கேரக்டர்களை தகுந்த ஓவியர்கள் மற்றும் காமிக்ஸ் எழுத்தாளர்கள் (அப்படி இப்போதும் இருக்கிறார்களா) கொண்டு மலிவுவிலை காமிக்ஸ்களை உருவாக்க முயற்சியுங்கள்....

    இப்போது தமிழில் வந்துக் கொண்டிருக்கும் காமிக்ஸ்கள் லயன் மற்றும் முத்து மட்டுமே.... அவையும் தகுந்த காலத்தில் வருவதில்லை என்று காமிக்ஸ் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள்....

    என் நண்பர் ராம்கி (அருமையான ஓவியர்) இதுபோல ஒரு முயற்சி மேற்கொள்ள நினைத்தார்.... ஆனால் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.... நாங்கள் இருவரும் சேர்ந்து லக்கிலுக் காமிக்ஸ்களை இந்தியப் பாணியில் உருவாக்க நினைத்தோம்.... காப்பிரைட் அதை அனுமதிக்காது என்ற நிலையில் அந்த திட்டத்தை கைவிட்டோம்....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பத்ரி..இந்த முயற்ச்சியை வரவேற்க்கிறேன்...

    காமிக்ஸ் வடிவத்தில் கொண்டுவரும் முயற்ச்சி இன்னும் அருமை...

    புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது..

    ReplyDelete
  11. Dear Badri,

    A welcome move. Congrats. Just commenced reading Bill Bryson's 'Thunderbolt kid', a laugh riot like all his previous books. You may be aware he is the best selling author on both sides of the globe - a perfect choice for light reading and relaxing. The Guardian is serializing a few excerpts from this latest book by Bill. How nice if you could plan releasing Tamil translation of Bill's books!

    warm regards
    era.murukan

    ReplyDelete
  12. அப்புசாமியும் சீதாபாட்டியும் மறக்கமுடியாத பாத்திரங்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. One more post on Appusami. Read and enjoy

    http://comicstamil.blogspot.com/2009/12/appusami-in-comics.html

    ReplyDelete
  14. பத்ரி, அப்புசாமியின் முழு நீள கதைகளை சித்திரக்கதை வடிவத்தில் கொண்டு வர எண்ணி உள்ள தங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கது.

    அந்த அறிவிப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete