மதுரை. புத்தகக் கண்காட்சி. அதெல்லாம் பிற்பாடு.
முதலில் அவசியம் பேசவேண்டியது தன்னப்ப முதலி தெருவில் உள்ள மோஹன் போஜனாலய் எனப்படும் ராஜஸ்தானி உணவகம்.
தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் சிறப்பான உணவு என்றால் அது மோஹன் போஜனாலய் வழங்கும் ராஜஸ்தானி உணவுதான் என்று தோன்றியது.
ஆடம்பரமில்லாத உணவகம். முதல் மாடியில் உள்ளது. தனியான அலங்காரங்கள் ஏதும் இல்லாத சாதாரண வீடு. சுவற்றில் ஒரு கிருஷ்ணர் படம் மாட்டியுள்ளது. கறவை மாடு. அதன் அருகில் பால் குடிக்க வரும் கன்றுக்குட்டியைத் தள்ளிவிட்டு குழந்தை கிருஷ்ணன் மாட்டின் மடியில் வாய் வைத்து பால் உறிஞ்சுகிறான். தாய் யசோதா கைவிரலை ஆட்டி, கண்களை உருட்டி கிருஷ்ணனை மிரட்டுகிறாள். மாடு, முழங்காலிட்டிருக்கும் கிருஷ்ணனின் பின்னம்பக்கத்தை வாஞ்சையுடன் தன் நாக்கால் நக்கிக்கொண்டிருக்கிறது.
உணவகத்தை நடத்துவோரின் சின்னக்குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டும் அழுதுகொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டும் இருப்பது என்னவோ வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் உணர்ச்சியைத் தருகிறது.
நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் ஒரு பணியாளர். தமிழர்தான். சமையல் செய்வோரும் சொந்தக்காரர்களும்தான் ராஜஸ்தானியர்கள் போல.
தண்ணீரை தம்ளர்களில் ஊற்றியவாறு ஆர்டரைப் பெற்றுக்கொள்கிறார் அவர். Unlimited தாலி. தட்டுக்கு ரூ. 40. வேண்டிய அளவு கோதுமை சுக்கா ரொட்டிகள். நான்கைந்து பதார்த்தங்கள் தொட்டுக்கொள்ள. ஊறுகாய்கள், வெங்காயத் தயிர்ப்பச்சடி. ஊறவைத்த பச்சை மிளகாய். குறையக் குறைய தட்டை நிரப்புகிறார்கள். ரொட்டிகள் வந்தவண்ணம் உள்ளன. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்காது மேலும் இரண்டு ரொட்டிகளை நம் தட்டில் வைக்கிறார்கள்.
ஆம்ரஸ் எனப்படும் மாம்பழ பானம் (கெட்டியானது), தித்திக்கும் ரஸமலாய் (இவை உணவோடு சேர்த்து அல்ல. தனியாகக் கட்டணம் உண்டு). வேண்டிய அளவு சாதம், ரசம், மோர்/தயிர் ஆகியனவும் உண்டு.
அடுத்த நாள், ஞாயிறு, இரவு சீக்கிரம் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததால் இப்படி ஆடம்பரமாக, விலாவாரியாக உட்கார்ந்து சாப்பிட முடியாது என்று தோன்றியது. ஆனாலும் விட மனமில்லாமல் மோஹன் போஜனாலய் சென்று விஷயத்தைச் சொன்னோம். நேரம் இல்லை, சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கவேண்டும் என்றோம். கை கழுவி வருவதற்குள் தட்டில் சுடச்சுட நான்கு ரொட்டிகள், அனைத்து பக்க பதார்த்தங்களுடனும் தயாராக இருந்தது. விலை ரூ. 12 மட்டுமே!
வயிற்றுக்கு சிறிதளவும் பிரச்னை தராத, அற்புதமான உணவு.
கட்டாயம் போகவேண்டிய இடம்!
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
எனது நண்பர் பழனிக்குமாருக்கு தனது நண்பர்களுக்கு உணவளித்து ரஸிப்பது மிகவும் பிடிக்கும். நீங்கள் சொல்லுகின்ற ஹோட்டலின் உணவை அதிகம் சாப்பிட முடியாது என்று அவர் ஸவால் விட, நண்பரு உதயஷங்கர் இந்த ஸவாலை ஏற்றுக்கொண்டார். போட்டியின் நடுவர்கள் என்கிற போர்வையில் நானும், இன்னும் சில நண்பர்களும் கலந்து கொண்டோம். போட்டியில் ஈடுபட்டவர்களை விட ஒரு 10, 12 ரோட்டிக்களை அதிகம் சாப்பிட்டது நாங்கள்தான். இருந்தாலும் உதயஷங்கர் வெற்றி பெற்றார் என்று அறிவித்துவிட்டார். கோபம் கொண்ட என்னை ஸமாதானம் செய்ய அப்புறம் வெளியே இருந்த கடைகளில் 2 லஸ்ஸி, 3 கரும்புச்சாறு, 2 பஜ்ஜிக்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து ஸமாதானம் செய்ய முயன்றார். வயிறு நிறைந்திருந்தால் ஸமாதானம் ஆகியிருந்தாலும் ஆயிருப்பேன். ஆனால் ஆகவில்லையே.
ReplyDeleteசங்க காலத்தில் மதுரையில் தமிழ் வளர்த்தார்கள் என்றால் இப்போது யாரேனும் மதுரை சென்றால் வயிறு வளர்க்கலாம்.
ReplyDeleteரோட்டோரத்தில் கிடைக்கும் அன்பான ஆச்சி கடைகளில் இருந்து எல்லா இருந்து பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை தமிழகத்திலேயே சிறந்த உணவு கிடைக்கும் இடமாக மதுரையை குறிப்பிடலாம்.
தோசா மேலா எல்லாம் நடக்கும் இது பற்றி விகடனில் கூட ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள்.
எங்கெங்கு திரும்பினும் நல்ல ஹோட்டல்கள் கொண்ட ஊர் மதுரை.
Can you please suggest a good hotel to stay in Madurai? My budget is around 1000 rupees a night.
ReplyDeleteIt will be good if it is walking distance (within a mile or so) from the temple. But this requirement is not very important.
TIA
For known reasons Mugrugan Idly kadai was closed. I still remember their special - Ghee Onion Rava Oothappam.
ReplyDeleteNon veg lovers can find wonderful spots all around the city. Especially at Goripalayam - Ameer mahal. :-)
You can get Idly and Kara chuttney - even at 2AM!!!
Regarding Bojanalayas - you can taste them at Covai, Ooty and Tirupur too, there are goo no of hotels of same style as Badhri explains. There should be some Bhojanalayas on North Chennai ;-) Right?
Anonymous: You can stay at Kaveri lodge or College House!
ReplyDeleteஅந்த ராஜஸ்தானி உணவகம் போல் மதுரையில் முதலில் ஆரம்பித்தது எனக்குத் தெரிந்து கிழக்கு கோபுரம் அருகில் உள்ள ஜடாமுனி கோவில் தெருவில் இருக்கும் "ஷங்க் வாலா" என்கிற போஜனாலய் தான்...
ReplyDeleteஅதை அடுத்த முறை try செய்யவும்...!
முன்பு போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல் இப்போது வட நாட்டு உணவகங்கள் பெருகிவிட்டது...
சிறப்பாம்சம்:
சுத்த சைவம், நல்ல நெய், கட்டித் தயிர்,உண்மையிலேயே மூன்று விரலால் பிய்க்கக்கூடிய ரோட்டி..(நம்ம ஹோட்டல்களில் இரண்டு கைகளால் முயன்றாலும் முடியாதது..) சுத்தம் clenliness.
'அடுத்தமுறை': லிஸ்ட்டில் சேர்த்துட்டேன்.
ReplyDeleteநன்றி பத்ரி.
Murugan idli closed. That is really bad. Where will I go now when I visit Madurai? :-((((
ReplyDeleteDear TIA
ReplyDeleteYou may stay at hotel supreme , or Ganga or TM lodge or College House and in one of the nuemerous lodges located at Melap Perumal Mestry Street. This road is located in a lane that starts at the begining of Town Hall road. Town Hall road is just opposite to Regal Theatre next to railway station. Rates will range from Rs.300 per day to Rs.1000 per day. These hotels are close to the temple too. Try to book in advance. Normally it is tough to get a vacant room. You may also consider Hotel Aarthi next to Koodal Alagar Koil.
Kumaran:
Who said Murugan Idli shop was closed ? They even opened branches in Chennai T Nagar. Even Sujatha wrote about his experience in eating at Murugan Idli shop in his K P. You may also try idlis at Modern Restaurent in Dindigul road, Rajendra Cofee, a small idli shop next to Sai Engg/Titan showroom in TownHall road and also at Gobu Iyengar's Idli shop at West Chitrai street corner and at Keela Anumantharayan street. NV people can go to Konar Mess.
Mohan Bojanalay that Badri enjoyed is located in a small lane just opposite to Central Cinema/NCBH in west tower street, which is an extension of Townhall road.
Rajan
ராஜன்.
ReplyDeleteமுருகன் இட்லிக்கடை மூடப்படவில்லை என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள். மேலே ஒரு நண்பர் முருகன் இட்லிக்கடை மூடப்பட்டுவிட்டது என்று சொல்லியிருந்தார். அதனைப் பார்த்து தான் நான் வருந்தினேன்.
சுஜாதா முருகன் இட்லிக் கடையைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.
மாடர்ன் ரெஸ்டாரண்ட் சாம்பாருக்காகவே எத்தனை நாள் காலையில் வீட்டிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சிறுவயதில் ஓடியிருப்பேன்?! இரண்டு இட்லி வாங்கினாலும் அப்போதெல்லாம் எடுத்துச் சென்ற பாத்திரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நிறைய சாம்பார் கொடுப்பார்கள். இப்போது தலைமுறை மாறிவிட்டதில் சாம்பாரின் சுவையும் அளவும் குறைந்தது போல் தோன்றுகிறது. :-)
மற்ற உணவகங்களில் சாப்பிட்டதில்லை. அடுத்த முறை மதுரை போகும் போது கோனார் மெஸ் உட்பட எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டியது தான். :-)
மிக்க நன்றி.
நல்லா எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteNice article
ReplyDeleteYour blog is very nice... i like your blog ....