இப்பொழுது மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவர உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27% கல்வித்துறை இட ஒதுக்கீட்டை 'உயர்சாதியினர்' பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஆச்சரியத்தை வரவழைப்பது சந்திர பன் பிரசாத் என்னும் தலித் அறிஞரின் எதிர்ப்பு. இதைப்பற்றி ஆங்கில வலைப்பதிவுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில் இவற்றை அறியத்தரும் முயற்சியாக சில சுட்டிகள் மட்டும்.
1. சந்திர பன் பிரசாத்தின் நேர்முகம், அவுட்லுக் பத்திரிகையில் மார்ச் 2001-ல் வந்தது. அதில் பல விஷயங்களைப் பற்றிப் பேசும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டால் தலித்களுக்கு நன்மை இல்லாததோடு, தீமையும்கூட என்கிறார்.
2. சந்திர பன் பிரசாத் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் மே 2006-ல் எழுதியது (என்று நினைக்கிறேன்.) இங்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியான இட ஒதுக்கீடு வேண்டும் (இது தமிழகம் போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது) என்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் இடங்களை முன்னேறிய, நில உடைமை சாதிகளே கைப்பற்றும் என்கிறார்.
3. சந்திர பன் பிரசாத் எங்கெல்லாம் தடுமாறுகிறார் என்பதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார் ஷிவம் விஜ், நேபாளத்திலிருந்து வெளியாகும் ஹிமால் பத்திரிகையில் - செப்டம்பர் 2006. [ஷிவம் விஜ்ஜின் வலைப்பதிவு.]
தமிழகத்தைப் பொருத்தவரையில் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி என்னென்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்று எங்காவது வெளியாகியுள்ளதா?
[பி.கு: சந்திர பன் பிரசாத் எழுதிய கட்டுரைகளில் சுட்டிகள், www.ambedkar.org தளத்திலிருந்து]
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
i have given references to his article.but the pro reservation gang in the tamil blog world has
ReplyDeletenot responded to that.
எனக்கும் கூட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாய்ப்புகளை காப்பாற்ற அரசாங்கம் ஏதேனும் கூடுதல் விதிகள் (not policies but clause within the policy) விதித்திருக்கிறதா எனூற் தெரிந்து கொள்ள விருப்பம். அமெரிக்காவில் மைனாரிட்டிகளுக்கான எந்த சட்ட அமைப்பும் பலவிதமான விதிகள் மூலம் மற்றவர்களால் அபயோகிப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியும் சில இடங்களில் சட்டத்தின் சிக்கல் (technicality flaws) இவ்விதிகளை மீற சிலருக்கு உதவுகின்றது. ஆனால் அந்த மீறல்கள் "கண்டுபிடிக்கப்பட்டு"நீதிமன்றத்திற்கு போனால் தகுந்த தண்டனை உண்டு. இதுகுறித்தான பல சந்தேகங்கள் எழாமல் இல்லை.ஆனாலும் இடஒதுக்கீடே வேண்டாம் என்பதைவிட பாதுகாப்பு விதிகள் நிறந்த ஒதுக்கீடு வேண்டும் என்பதே சிறந்ததாகும்.
ReplyDelete//தமிழகத்தைப் பொருத்தவரையில் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி என்னென்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்று எங்காவது வெளியாகியுள்ளதா?
ReplyDelete//
திருமா அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளதாகவே தெரிகின்றது, சமீபத்தில் நடைபெற்ற கூட்டங்களில் அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசியுள்ளார், ஏதோ ஒரு தினசரியின் இணையதளத்தில் தான் படித்தேன், முடிந்தால் தேடி சுட்டி தருகின்றேன், மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பற்றி எனக்கு தெரியவில்லை, நீங்கள் அளித்த சுட்டிகளை இன்னும் படித்து முடிக்கவில்லை, பொறுமையாகத் தான் படிக்க வேண்டும், 27% இடஒதுக்கீடு என்பதே OBC பட்டியலில் உள்ள சாதிகள் எண்ணிக்கையை பார்க்கும்போது குறைவுதான் என்றபோதும் ஒப்பீட்டளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு அளவிற்கு குறைவாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது, இது சரியானதும் கூட என எனக்கு தோன்றுகின்றது... ஏனெனில் வர்ணாசிரம அடுக்குமுறை சமூகத்தில் தலித்களைவிட மேலே தான் பிற்பட்டவர்கள் இடம் உள்ளது, அவர்களும் தலித்களுக்கு இணையாக கேட்கக்கூடாது, அதே போல் உடனே அவர்களை முற்பட்டவர்களுடனும் இணை வைத்து பார்க்க கூடாது... ஏற்கனவே என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் கீழே
http://www.dinamalar.com/2006aug22/general_tn28.asp
தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
http://www.annauniv.edu/tnea06/rama21.doc
CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, 31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி 20% MBC யிலோ 3804 இடங்கள் காலி 18% SC யிலோ 4569 இடங்கள் காலி,
இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு.
வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.
தமிழகத்தில் திருமா, கிருஷ்ணசாமி இருவருமே பிற்படுத்தப் பட்டவருக்கான இத ஒதுகீட்டை ஆதரிக்கவே செய்கின்றனர். கிருஷ்ணசாமியும் ஆதரித்து அறிக்கை விட்டது பத்திரிகைகளிலும் வந்தது. (என் நினைவு சரியானல் ஒதுக்கீட்டிற்கு ஆதரவான மனித சங்கிலியிலும் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.)
ReplyDeleteஸெலக்டிவாக, சந்தரபான் பிரசாத் கருத்துக்களை பயன்படுத்த விழையும் அரசிலை(அதுவும் ரவி ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் செய்வதை) புரிந்து கொள்ள பெரிய மேதவித்தனம் எதுவும் தேவையில்லை.
சந்திரபான் பிரசாத்தை எப்படி எடுத்துகொள்வது என்பது குழப்பமானது. அவரது பேட்டி ஒன்றில் அருந்ததியையும், மேதா பட்கரையும், மொத்த நர்மதாவிற்கான போராட்டத்தையும், இந்திய நடுத்தர வர்க்க பார்பன நலன்களுக்கானதாகவும், அதன் அழுகிய முகமாகவும் குறிப்பிட்டிருப்பார். தலித்துக்கள் தங்கள் நலன்களுக்கு பிராமணர்களுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்றும் பேசியிருப்பார். இப்படி ஒன்றை குறிப்பிட்ட சந்தர்ப்பம் சார்ந்த அணுகுமுறையாய் (வேறு வழியில்லாமல் பிற்படுத்தப் பட்டவர்களின் சாதி வெறியை எதிர்கொள்ள) செய்வது புரிந்து கொள்ள கூடியதே. ஆனால் அதை கொள்கைரீதியில் முன்வைப்பது மிகுந்த ஆபத்தானது. இதைத்தான் சிறியவன் ஆனந்த் போன்றவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ரவிகுமார் 'மதம் மாறியபின்', இதற்கு ஒரு தார்மீக அடிப்படையையும் தந்துள்ளார். தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இந்த பிரசாரம் ஓரளவு எடுபடும் என்றே தோன்றுகிறது. இந்த பிரசாரத்தின் மாயைதன்மையை தாண்டும் தெம்பு தமிழகத்தில் ஓரளவு இருக்கும் என்று தோன்றுகிறது. மற்றபடி காலம் பதில் சொல்லும்.
இந்த பின்னூட்டத்தை உள்ளிட்டுவிட்டு சுட்டிகளை படிக்க வேண்டும். சுட்டிகளுக்கு நன்றி.
//இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு.//
ReplyDeleteIt portays otherway also: that OBCs spill over to self financing colleges but BC,MBC and SC/ST does not have applicants to fill up.
Puthiya Thamizhagam Krishnaswamy is for excluding the creamy layer from reservation benefits. Check out http://in.rediff.com/news/2004/oct/12dalit.htm
ReplyDeleteஇங்கே பார்க்கவும்
ReplyDeletehttp://www.rxpgonline.com/postt51650.html
http://www.hindu.com/2006/06/08/stories/2006060802740400.htm
பத்ரி,
ReplyDeleteசுட்டிகளுக்கு மிக்க நன்றி. படித்த பின்னர் என் கருத்துக்களைச் சொல்கிறேன்.
கருணாநிதி இந்தி பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்; தமிழர்களில் சிலரையும் வெறுக்கிறார்!
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?