Monday, September 25, 2006

அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்பவை

இன்று 'தி ஹிந்து'வில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒரு நேர்காணல் வந்துள்ளது. அதில் ஒரு கேள்வி/பதிலை மட்டும் இங்கே தமிழாக்கியுள்ளேன்.

ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதி பவனுக்கிடையேயான நெடும்பயணத்தில் நெஞ்சில் நிற்கும் தருணங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

நான்கைச் சொல்லலாம். (ஆனால் ஐந்தை பதிலாகச் சொல்கிறார். - பத்ரி) 1980-ல் என்னுடைய குழு செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை - SLV-III - விண்ணில் செலுத்தியது மகிழ்ச்சியான தருணம். அந்தத் திட்டத்தின் தலைவனாக இருந்ததால் எனக்காகவும் என் குழுவுக்காகவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 1989-ல் அக்னி ஏவுகணை 2,000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் நிலையை அடைந்தபோது மேலும் மகிழ்ச்சியடைந்தேன். மே 11, 1998 அன்று பொக்ரானில், 52 டிகிரி செண்டிகிரேட் தகிக்கும் சூரியனுக்குக்கீழ் நாங்கள் பல அறிவியலறிஞர்கள் நின்றுகொண்டிருந்தோம். அன்றுதான் இந்தியா அணு ஆயுத பலம் பெற்ற நாடானது. அன்று எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. 'இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வை' என்ற அறிக்கையைத் தயாரித்து, தொழில்நுட்ப அனுமாணிப்புக் குழுக்கூட்டத்தில் பிரதமரிடம் கொடுத்தபோது இன்னமும் அதிகமான மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலாக, 1990-ல் ஹைதராபாத், நிஜாம் மருத்துவக் கல்வியகத்தின் எலும்பு மருத்துவர் B.N.பிரசாத், போலியோவினால் பாதிகப்பட்ட சிறுவர்கள் அணிந்துகொள்ளும் காலிப்பர்கள் 3 கிலோ எடையுடன் இருப்பதால், நடக்கச் சிரமமாக உள்ளதாகச் சொன்னார். நானும் எனது குழுவும் அடுத்த 10 நாள்கள் தொடர்ந்து வேலை செய்து வெறும் 300 கிராம் எடையுள்ள காலிப்பர்களைத் தயாரித்தோம். அந்த காலிப்பர்களை அணிந்த சிறுவர்கள் ஓடத் தொடங்கினர். அதுவரை தன் மகனைச் சுமந்து பள்ளிக்குச் சென்றுவந்த தாய் ஒருவர், யார் உதவியும் இன்றித் தன் மகன் ஓடுவது கண்டு கண்களில் நீர்சொரிய நின்றிருந்ததைப் பார்த்தேன். அந்தத் தாயின் கண்ணீர் எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.

மற்றபடி, ராஷ்டிரபதி பவன் என்னைப் பொருத்தமட்டில் மக்களின் வீடு.

10 comments:

 1. நல்ல மனிதர்,
  மக்கள் தலைவனையா அவர்,
  அப்துல்கலாம் படித்த (சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளி) படித்தவன் என்ற தற்பெருமை கூட என்னிடம் உண்டு,

  //அதுவரை தன் மகனைச் சுமந்து பள்ளிக்குச் சென்றுவந்த தாய் ஒருவர், யார் உதவியும் இன்றித் தன் மகன் ஓடுவது கண்டு கண்களில் நீர்சொரிய நின்றிருந்ததைப் பார்த்தேன். அந்தத் தாயின் கண்ணீர் எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது//

  அப்துல் கலாம்.. நீரெல்லம் ரெம்ப காலத்துக்கு உசுரோட
  நல்ல இருக்கனும்யா!!!!

  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 2. நானும் எனது குழுவும் அடுத்த 10 நாள்கள் தொடர்ந்து வேலை செய்து வெறும் 300 கிராம் எடையுள்ள காலிப்பர்களைத் தயாரித்தோம். அந்த காலிப்பர்களை அணிந்த சிறுவர்கள் ஓடத் தொடங்கினர். அதுவரை தன் மகனைச் சுமந்து பள்ளிக்குச் சென்றுவந்த தாய் ஒருவர், யார் உதவியும் இன்றித் தன் மகன் ஓடுவது கண்டு கண்களில் நீர்சொரிய நின்றிருந்ததைப் பார்த்தேன். அந்தத் தாயின் கண்ணீர் எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.//

  நானும் படித்தேன்.. இப்படியொரு ஜனாதிபதியா என்று வியந்துபோனேன்..

  ReplyDelete
 3. பாரத நாடு புண்ணிய பூமின்னு சொல்றோம் இல்லையா, எல்லாம் அத்தி பூத்தமாதிரி வரும் இவரைப்போல் இருக்கும்
  நல்லவர்களால்தான்.

  அருமையான மனிதர். நல்லா இருக்கணும்.

  ReplyDelete
 4. வராது வந்த மாமணி என்பார்களே!
  பாரதத் குடியரசுத் தலைவர் உயர் திரு கலாம்; மாணியே!!!; கவிஞர் வைரமுத்து; ராஜ்ரபதி பவனில் மனிதம் கண்டேன். எனக் குறிப்பிட்டது இதைத் தானோ!!!
  தகவலுக்கு நன்றி!
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 5. மனிதர்களை மனிதனாக மதிக்கத் தெரிந்தவர்.

  ReplyDelete
 6. // Dr.Abdul Kalam Said:
  ராஷ்டிரபதி பவன் என்னைப் பொருத்தமட்டில் மக்களின் வீடு.//

  Badri Sir,
  Note this point!
  It is the very important point in his interview.
  You have forgotten to highlight this point in your posting

  Chinna

  ReplyDelete
 7. I hope, we give unwanted AARAVARAM to Kalam.
  he visited. many people lost 2 days earnings. Police did not allow Tamil Refugees out of camp.
  many Fishermen lost their Works.

  Why? Lal Bahudur Sasthiri and Raajaji and some other Nobel Sons of India never affect daily life of Ordinary People.

  i hope We give More AARAVARAM to our President.

  ReplyDelete
 8. we welcme DR Kalam. But His visit distrubted others daily life.

  Dear Dr kalam ! visit again and again. we welcome you always. But ask Local Administration does not give trouble to ordinary Citizens.

  ReplyDelete
 9. //I hope, we give unwanted AARAVARAM to Kalam.
  he visited. many people lost 2 days earnings. Police did not allow Tamil Refugees out of camp.
  many Fishermen lost their Works.

  Why? Lal Bahudur Sasthiri and Raajaji and some other Nobel Sons of India never affect daily life of Ordinary People.

  i hope We give More AARAVARAM to our President....//


  லால் பகதூர் சாஸ்திரி, ராஜாஜி இவர்களின் காலத்தில் விஷமிகள் கையில் துப்பாக்கிகளுடனும் இடுப்பில் வெடிகுண்டுகளுடனும் அலையவில்லை.

  தலைவர்கள் தப்பிவிடுவார்கள் பொதுமக்களாகியா நாம் தான் இந்த தீவிரவாதிகளை இனம் கண்டு தண்டிக்க வேண்டும்

  ReplyDelete
 10. Hi Kalkari SIVA !
  Dont misunderstand your ANTHAK KALAM. A Criminal Killed Gandhiji
  in 1947. Not Now.

  our president is Great. He is great Teacher.we welcom him always. But our Local Administration give more trouble during the VIP VISIT.

  ReplyDelete