Sunday, September 24, 2006

போலியோ, உத்தர பிரதேசம்

சென்ற வாரம் காணாமல் போன செய்திகளில் இது ஒன்று. பங்களாதேசத்தைப் பற்றிய சில செய்திகளைத் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது.

உலக சுகாதார நிறுவனம் (WHO), சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில், முக்கியமாக உத்தர பிரதேச மாநிலத்தில், போலியோ தாக்குதல் அதிகமாகியுள்ளது என்றும், பங்களாதேசம் போன்ற போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா போலியோவை ஏற்றுமதி செய்யும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சென்ற ஆண்டு 66 போலியோ தாக்குதல்; இந்த ஆண்டோ 290 குழந்தைகள் போலியோ வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதில் 70% மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்கிறது புள்ளிவிவரம்.

ஏன் வெறும் 290-க்கு நாம் பயப்பட வேண்டும், இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது சின்ன தொகைதானே என்று சொல்லலாம். ஆனால் போலியோ நோய் ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளையும் பீடித்தது. போலியோ என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக்கொள்ளும் தொற்றுநோய். மனிதக் கழிவிலிருந்து பரவும் நோய். பொதுவாக 3-5 வயதுக் குழந்தைகளை பாதிக்கும் நோய். என் பெரியம்மாவுக்கு (அம்மாவின் அக்கா) இந்த நோய் உள்ளது (இப்பொழுது அவருக்கு வயது 60க்கும் மேல்). போலியோ வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதித்து கை கால்கள் சூம்பிப்போய் குறைவளர்ச்சி அடைந்துவிடும்.

போலியோ வைரஸில் மூன்றுவகை உண்டு. அதில் ஒருவகை (Type 1) படுவேகமாக தொற்றக்கூடியது. இந்த வகை வைரஸ்தான் உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்ட 290 பேர்களுக்கும் உள்ளது என்று சொல்கிறார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உத்தர பிரதேசத்தில் ஒழிக்கப்படவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து பரவி ஒரு தலைமுறை குழந்தைகளையே கை-கால் முடங்கியவர்களாக ஆக்கிவிடும்.

இதேபோல போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள அண்டை நாடுகளையும் இந்திய போலியோ அழிக்கக்கூடும்.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் போலியோ வேக்சினேஷன் - சொட்டுமருந்து தினம் - வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். நான் என் பெண்ணுக்கு ஐந்து வயது ஆகும்வரை வருடாவருடம் சென்று சொட்டுமருந்து கொடுத்து வந்துள்ளேன். தமிழக அரசின் பணிகளிலேயே எந்தப் பிரச்னையும் இல்லாது மிக அருமையாக நடைபெறும் திட்டம் இது ஒன்றுதான். எந்தப் பாகுபாடும் இல்லாது குழந்தைகள் உள்ளே வருவதும், சொட்டுமருந்து கொடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சாக்லேட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுவதும் மட்டுமின்றி, மறுநாள் காலை தமிழகம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் உடனடியாகக் கொடுக்கப்பட்டுவிடும். ஒருவாரம் முன்னதாகவே தெருவுக்குத் தெரு ஆட்டோவில் பாட்டு போட்டபடி விளம்பரம். வீடு வந்து கதவைத் தட்டி, சின்னக் குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டு ஒரு பதிவேட்டில் பதிந்துகொண்டு, சொட்டுமருந்து போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வீட்டுக்கே வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போகிறார்கள்!

இப்படி ஏன் செய்யப்படுகிறது? இந்த நோயின் தீவிரம் கருதியும், இதை முற்றிலுமாக ஒழிக்காவிட்டால் ஒரு நாட்டின் மக்களுக்கு என்னவிதமான கஷ்டங்கள் வந்துசேரும் என்று உணர்ந்து எப்பொழுதும் ஒழுங்காகக் செயல்படாத மாநில அரசுகளும் மத்திய அரசுமே ஒழுங்காக வேலைசெய்கின்றன. உத்தர பிரதேசம் தவிர்த்து.

WHO அறிக்கையை அடுத்து அன்புமணி ராமதாஸ் 2007-க்குள் போலியோவை இந்தியாவிலிருந்து ஒழித்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இதில் மத்திய அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது. காசு கொடுக்கலாம். ஆனால் வேலையைச் செய்வது மாநில அரசின் ஊழியர்கள். ஆனால் உத்தர பிரதேச சுகாதார அமைச்சரோ கவலையே படாமல் இருக்கிறார்.
“It is a very serious issue and a necessary cause for panic,” says Ramadoss.

While Ramadoss has pressed the panic button at the Central level, UP health minister Ahmed Hasan doesn’t think there’s much to worry about.

“This is an entirely unnecessary panic. We have the support of people in UP and we have done this (polio eradication) before too,” says Hasan.
மற்றொரு பிரச்னையும் உள்ளதாகத் தெரிகிறது. Peninsula Online, Qatar-ல் வந்த ராய்ட்டர்ஸ் செய்தியின்படி
Another hurdle facing officials in the state of 170 million people, with a large Muslim minority, are rumours that polio drops are part of a Western ploy to make Muslim children sterile.
இந்த நோய் தாக்கியுள்ள குழந்தைகளில் 70% முஸ்லிம்கள் என்று பார்த்தால் இந்த வதந்திக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரலாம். அன்புமணி சொட்டுமருந்துக்கு பதில் ஊசி வழியாகத் தரும் போலியோ தடுப்பு மருந்தை உத்தர பிரதேசத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகச் சொல்கிறார்.

எதற்கெடுத்தாலும் ஃபாத்வா கொடுக்கும் முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இந்த விஷயத்தில் ஒரு ஃபாத்வா கொடுத்தால் நாட்டுக்கு நல்லதாக இருக்கும்: "போலியோ சொட்டுமருந்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏதும் வந்துவிடாது!"

போலியோ சொட்டுமருந்து பற்றிய என் முந்தைய பதிவு, 5 ஜனவரி 2004

15 comments:

 1. எதற்கெடுத்தாலும் ஃபாத்வா கொடுக்கும் முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இந்த விஷயத்தில் ஒரு ஃபாத்வா கொடுத்தால் நாட்டுக்கு நல்லதாக இருக்கும்:
  >>>>
  India's Cash-for-Fatwa Scandal

  Muslims in the country are outraged by revelations, uncovered by a TV sting, that clerics take money for their religious rulings

  -Pari

  ReplyDelete
 2. புரளிகளை தடுக்க அமைச்சகம் நிறைய மெனக்கெடவேண்டும் ஆனால் அமைச்சரே பொறுப்பற்று இருந்தால் என்ன செய்வது. இதனால் பாதிக்கப்படுவது உ.பி குழந்தைகள், இந்திய குழந்தைகள் & அண்டை நாட்டு குழந்தைகள்.


  ஃபாத்வா போடுவார்களா? அய்யம் தான், போட்டால் மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. //உத்தர பிரதேசம் தவிர்த்து.//
  பீகார் ???

  இது குறித்து ஒரு விரிவான பதிவு எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்

  You should have wondered as to how Tamil Nadu has more AIDS patients (as per news reports) than for example Bihar and Uttar Pradesh.

  The answer is one word - Surveillance.

  Tamil Nadu is one of the few areas in India where we have Primary Health Care functioning well(every where we have only secondary and tertiary)

  Public Health Department is Tamil Nadu is oftened criticised. Very rarely do we (I am working at DPH!!!) get appreciated for all the hard work. Thanks Badri

  PS: Hope you remember that after the 2004 Tsunami we had WHO and UNICEF and every one crying loud that there will be more deaths due to infectious diseases than due to Tsunami. But NOT EVEN ONE PERSON died AFTER the Tsunami in Tamil Nadu. Hope you all know what happened in USA after Katrina

  ReplyDelete
 4. உருப்படியான பதிவு மாப்ளே!

  ஆனா நாமதான் எதுவும் அட்டாக் ஆன பொறவுதானே கவலப்படுவோம்

  மொதல்ல சனங்களுக்கு விழிப்பு உணர்ச்சி வரனும் மாப்ளே!

  அதுக்கு ஏதாவது மருந்து கீதா மாப்ளே?

  Chinna (ppa Doss)

  ReplyDelete
 5. இந்துவில் படிக்கும் போதே வருத்தமாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது பல பையன்களுக்கு இந்த போலியோவால் கால் செயல் போயிருந்தது. இன்றும் பலர் அந்தக் கால கவனக் குறைவுக்கு விலை கொடுத்து வருகிறார்கள். நீங்கள் சொல்வது போல போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து திருவிழாக்கள் மிக நிறைவான திட்டம். இப்போது இந்தச் செய்தி நிம்மதிக்கு தீ வைப்பது போல. ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்து கொடுக்கா விட்டாலும், எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பது கஷ்டமான உண்மை.

  அன்புடன்,

  மா சிவகுமார்

  ReplyDelete
 6. இந்த கொடுமைக்குத்தான் அமிதாப் சொல்லியே கேட்கவில்லை என்று ஷாருக் கான் எல்லாம் வந்து "போலியோ சொட்டு மருந்து கொடுங்க" என்று விளம்பரம் செய்தார்...

  "செகுலரிசத்தின்" திருட்டுப் பிள்ளையான "இஸ்லாமியர் அறியாமை" வெளியில் தெரிந்துவிடும் என்று எந்த அரசும் இதை பெரிய்ய அளவில் பிரபலப்படுத்த வில்லை. லிபரலிஸ்டு என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள எந்த அறிவாளியும் இதைப் பற்றி மூச்!!

  இதே, ஒரு இந்து சம்பிரதாய முறை என்று சொல்லி இது போல் மூடப்பழக்கங்கள் செய்துகொண்டிருந்தால்..எந்தப் பத்திரிக்கையாவது விட்டு வைத்திருக்குமா...? ஷபானா ஆஸ்மி, ஜாவெத் அக்தர், அருந்ததி ராய், விரிந்தா காரட் எல்லாம் சும்மா இருந்திருப்பார்களா...?

  //
  எதற்கெடுத்தாலும் ஃபாத்வா கொடுக்கும் முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இந்த விஷயத்தில் ஒரு ஃபாத்வா கொடுத்தால் நாட்டுக்கு நல்லதாக இருக்கும்: "போலியோ சொட்டுமருந்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏதும் வந்துவிடாது!"
  //

  பத்துவா போட்டு மக்களை நெறி படுத்த என்ன அவசியம்...இந்திய அரசாணைக்கு முஸ்லீம்கள் கொடுக்கும் மதிப்பு அவ்வளவு தானா? அவர்கள் பத்துவா போட்டுத்தான் கேட்பார்கள் என்று சொல்கிறீர்களா?

  dont you think its foolish to demand fatwa..? Arent the muslims bound to follow the laws of the country which everybody else follows?

  Issuing of fatwa should be illegal in a secular country like india. As it amounts to running parellel judicial process, which is dangerous.

  ReplyDelete
 7. போலியோ குறித்த இடுகை வெளிப்படுத்துவதாகத் தெரியும் அக்கறையைவிட உங்களின் பதிவில் மெலிதாக உபி அமைச்சரை அடிக்கும் கிண்டலும் அதையே சிறுபான்மையினர் மீதான தங்கள் காழ்ப்பைக் கொட்டி மகிழ சிலர் உபயோகித்து அதனை நீங்கள் வெளியிட்டு ...

  நடத்துங்கள்...

  ReplyDelete
 8. //உத்தர பிரதேசம் தவிர்த்து.//
  பீகார் ???

  போலியோவினால் ஒரு குழந்தை பாதிப்படைந்துள்ளது என்று கண்டறிய 2 Stool Samples எடுத்து அதை முறைப்படி (Reverse Cold Chain மூலம்) அனுப்பி பரிசோதிக்க வேண்டும்.

  இதலாம் செய்யாமல் அவர்கள் சும்மா Nil Report தருகிறார்கள்

  ReplyDelete
 9. /./
  "செகுலரிசத்தின்" திருட்டுப் பிள்ளையான "இஸ்லாமியர் அறியாமை" வெளியில் தெரிந்துவிடும் என்று எந்த அரசும் இதை பெரிய்ய அளவில் பிரபலப்படுத்த வில்லை. லிபரலிஸ்டு என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள எந்த அறிவாளியும் இதைப் பற்றி மூச்
  /./  மிதமுள்ள 30 % பாப்பானா..???

  ReplyDelete
 10. பத்ரி, உண்மையான அக்கறையுடன் எழுதப் பட்டுள்ள உங்கள் பதிவு,சில உறுதி செய்யப் படாத ஹேஷ்யங்களால் திசை மாற்றப் படுகிறது. முஸ்லீம் பெருமக்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் பெருமளவில் இதனை ஏற்றுக் கொள்ள வில்லையா ? உ.பி அரசின் மெத்தன முறையாலும் அலட்சிய மனப்போக்கினாலுமே இத்திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. தென்னக மாநிலங்களில் கல்வியறிவு பெருகியிருப்பதும் ஒரு காரணம்.
  மைய அரசு இது மாநிலங்களின் பிரச்சினை என்று வாளாவிருந்து விடலாகாது. அறிவுறுத்தும் திட்டங்களை (Awareness Programs) உ.பியை குறிவைத்து தயாரித்து அமலாக்க வேண்டும்.இத்தகைய விதயங்கள் அரசியலாக்கப் பட்டு திசை திரும்புவதை நம் போன்ற பதிவர்கள் தவிர்க்க வேண்டும்.

  ReplyDelete
 11. //Another hurdle facing officials in the state of 170 million people, with a large Muslim minority, are rumours that polio drops are part of a Western ploy to make Muslim children sterile.
  இந்த நோய் தாக்கியுள்ள குழந்தைகளில் 70% முஸ்லிம்கள் என்று பார்த்தால் இந்த வதந்திக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரலாம். //

  Badri,
  The theory that it is a Western conspiracy to reduce the Muslim population by mixing anti-fertility agents with polio vaccine was in fact created and spread by Muslim clerics in Nigeria. This was widely covered by the Westen media and science journals. I heard in BBC news mothers in Nigeria telling the interviewing journalist that refused to vaccinate their children for this reason.

  It is shocking that Muslims in India bought this conspirary theory risking themselves and others. A google search does indicate that this is an import from Nigeria.

  http://www.sciam.com/article.cfm?articleID=0001EFE3-08BE-11BF-AD0683414B7F0000

  http://www.irinnews.org/report.asp?ReportID=38884&SelectRegion=West_Africa

  http://www.danielpipes.org/blog/155

  ReplyDelete
 12. மு சுந்தரமூர்த்தி ஐயா...

  danielpipes எல்லாம் கோட் செய்தீர்கள் என்றால் உங்களை ஹிந்துத்வாவாதி என்று பட்டம் கட்டிவிடுவார்கள்...ஜாக்கிரதை...!

  உண்மை...இந்திய உ.பி முஸ்லீம்கள் குழம்பியதும், அவர்களை குழப்பிய முல்லாக்களும் உள்ளனர் என்பது தான். அதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு அரசு என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதில் தான் முஸ்லீம் மற்றும் முஸ்லீமல்லாதவர்களின் நலன் உள்ளது. ஒருவர் போலியோவால் பீடிக்கப் பட்டால் அந்த ஊரில் உள்ள மற்ற சொட்டு மருந்து கொடுக்காத குழந்தைக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளன. போலியோ நுண்கிருமி தண்ணீர் மூலம் பரவக் கூடிய தொற்று வியாதி கிருமி. vaccination ஒன்றே வழி.

  http://en.wikipedia.org/wiki/Polio

  உ. பி மட்டுமே உலகின் 2/3 பங்கு போலியோ கேஸ்கள் உள்ளதாகக் கூறுகின்றது.

  //
  மிதமுள்ள 30 % பாப்பானா..???
  //

  சின்ன புள்ள, சீக்கிரமே காம்ப்ளாக் குடித்து வளர்ந்து பெரியவனான பிறகு மறுபடியும் படித்து கேள்வி கேளுங்கள்...!

  ReplyDelete
 13. //danielpipes எல்லாம் கோட் செய்தீர்கள் என்றால் உங்களை ஹிந்துத்வாவாதி என்று பட்டம் கட்டிவிடுவார்கள்...ஜாக்கிரதை...!
  //

  Vajra,

  I have heard and read news about the problem in Nigeria in BBC/NPR and Science/Nature magazine(s). In my previous feedback I just gave three top hits from a quick google search with few related keywords. Otherwise, I don't know anything about danielpipes.org website.

  ReplyDelete
 14. பத்ரி, ஏதோ நல்லது நடக்கட்டுமென்று எழுதியிருக்கிறீங்க, எதுக்கெடுத்தாலும் டென்சனாகித்தொலையற ஆங்கிரி யங் மேன் அமிதாப்பச்சன் வஜ்ரா சங்கர் இங்கேயும் முஸ்லீம்ங்கிற ஒரு வார்த்தையை மட்டும் மோப்பம் பிடிச்சு வந்து சட்டையைக் கிழிச்சிக்கினு குதிக்கிறாரு - உருப்படியான பதிவுகளையும் எப்படி ஒழிக்கறதுன்னு இவங்ககிட்டேர்ந்து கத்துக்கணும் சாமி!

  ReplyDelete
 15. இதற்கும் மதத்திற்கும் சம்மந்தம் இல்லை.

  இது கல்வி (மற்றும் பொருளாதாரம்) சம்மந்தப்பட்ட விஷயம்.

  தயவு செய்து இதில் மதத்தை புகுத்த வேண்டாம்.

  The same problme also exists in Measles and other examtheme. The only difference. It is அம்மன் குற்றம். Have you seen only the Hindus from Lower Socio-economic status not getting treatment for Measles in the name of God and there by leading to loss of eye sight and brain damage. The educated people and the socially affluent are not influenced by this.

  Similarly, You can see how this problem is not there in developed Muslim countries.

  If more Muslims are affected (compared to general population) in UP, then it means that more muslims are under developed and that something has to be done in education and social front also.

  நீங்களாம் இன்னும் பீகாரை மறந்துட்டிங்க

  ReplyDelete