நேற்று படம் பிடிக்க விட்டுப்போயிருந்த அஇஅதிமுக சுவரொட்டியை இன்று காலை படம் எடுக்கச் சென்றால், ஒன்றுகூடக் காணோம். சுத்தமாகச் சுரண்டப்பட்டிருந்தன. இதற்கென்றே நேற்று இரவு திமுக அணியினர் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. அருகில் இருந்த பிற, கட்சி சார்பற்ற போஸ்டர்கள் (அன்னார் மறைந்துவிட்டார், தகனம் இந்த நாளில் இத்தனை மணிக்கு - என்றோ, மூலம் பவுத்திரம் என்றோ சொல்லும் சுவரொட்டிகள்) அப்படியே இருந்தன.
ஆனால், திமுக போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது கண்ணில் தென்படும் என்றால் அதையும் காணோம். தயாநிதி மாறன், கைகூப்பி, முகமலர்ந்து சிரிக்கும் போஸ்டர் ஒன்றே போதும் வாக்குகளைச் சேகரிக்க என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்!
சரத்பாபுவின் தேர்தல் சின்னம் "சிலேட்டு". இதற்கு பதிவேதும் இல்லையா பத்ரி..????
ReplyDelete