இன்று ஓவியர் அரஸ் அழைப்பின்பேரில் அவரது மகன்கள் (ஹர்ஷ், அரவிந்த்) வரைந்துள்ள ஓவியங்களைக் காண விஞ்யாசா ஆர்ட் கேலரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அரஸின் சில ஓவியங்களும் இருந்தன. இரு பையன்களும்கூட நன்றாகவே வரைந்திருந்தனர். சில படங்கள் மட்டும் இங்கே - அவசரமாக மொபைல் போனில் பிடித்தது. முதல் இரண்டு படங்கள் அரவிந்த் வரைந்தவை.
இந்த இரண்டு படங்கள் அரஸ் வரைந்தவை.
Pac-Man வீடியோ கேம்
5 hours ago
மிகவும் அமெச்சூர் தனமாக இருக்கின்றன. (அரஸ் வரைந்தவை உட்பட.) முன்பு குமுதம்/விகடன் பத்திரிகைகளில் சுஜாதா, ராஜேஷ்/ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை வகையறாக்களின் மசாலாத் தொடர்களுக்கு பெண்களின் கவர்ச்சிகரமான படங்களை வரைந்துகொண்டிருந்தவர் அரஸ். இவருக்கு எதற்கு இந்தக் கண்காட்சி ஆசையெல்லாம்?
ReplyDeleteபடங்கள் எல்லாமே சூப்பர் :-)
ReplyDeleteபதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு தகவல். பா.ராகவன் எழுதிய ‘பிரபாகரன் வாழ்வும், ...........!’ புத்தகத்தை சமீபத்தில் வாங்கினேன். அட்டைப்பட லே-அவுட் ரொம்ப ரொம்ப சுமாராக எனக்குப் படுகிறது. முக்கியமான புத்தகங்களின் லே-அவுட்டில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் தொலைக்காட்சில கூட ஒளிபரப்புனாங்க.
ReplyDelete