Wednesday, May 20, 2009

பன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்

அப்டேட்: மருத்துவர் புருனோவின் வேலை காரணமாக, இந்த நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி, வியாழன், 28 மே 2009 அன்று நடைபெறும்.

27 மே 2009, புதன்கிழமை, 28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.

கடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.

இதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? இதனைத் தடுக்கமுடியுமா? ஏன் பரவுகிறது? நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும்? தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.

தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

4 comments:

  1. சனி ஞாயிறு வச்சாலே வருவதற்கு கொஞ்சம் கஷ்டம் தான்! புதன் கிழமை வச்சிடிங்க!

    பரவாயில்லை! பதிவா போட்டுடிங்கன்னா!
    வரும்முன் காத்து கொள்வோம்!

    ReplyDelete
  2. ஆமாம்; பதிவா போட்டுட்டீங்கன்னாதான் வசதி. தவறாம கலந்துக்கங்க. வருமுன் காக்க வசதியா இருக்கும்.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி பத்ரி.

    ReplyDelete
  4. வலையில் தடுக்கியது http://swineinfluenzaflu.blogspot.com/2009/05/swine-flu-prevention-and-treatment.html

    ReplyDelete