சென்ற வாரம், பி.எஸ்சி வேதியியல் படிக்கும் ஒரு மாணவனைச் சந்தித்தேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, மூன்றாம் ஆண்டு போகிறான். மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் என்றான். சரி, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா என்று கெட்டேன். தெரியாது என்றான். ஆனால், மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், ஏதாவது கோச்சிங் வகுப்பில் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதாகச் சொன்னான்.
ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயார் செய்யும் அதே நேரம், வேலை எதிலாவது சேர முற்படுவாயா என்று கேட்டேன். ஆமாம், வேலை என்பது மிகவும் அவசியம் என்றான். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். சம்பாத்தியம் மிகவும் குறைவு. மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வருபவன். குடும்ப உறவுகள் என்று யாரும் அவனுக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. இப்போது அவன் படிப்பதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்குமான செலவை அவனது கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது.
அப்படியானால், ஐ.ஏ.எஸ் என்பதைவிட, வேலை என்பது முக்கியம் அல்லவா என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சரி, வேலை என்றால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று தெரியுமா என்றேன். தெரியாது என்றான். அவன்தான் கல்லூரியில் அவனது வகுப்பில் முதல் மாணவன். ஆனால் அது போதாதே வேலை கிடைக்க. அவனது கல்லூரியில் கேம்பஸ் நேர்முகம் நடக்கிறதா என்று கேட்டேன். ஐடி சரிவால், யாரும் வருவதில்லை என்றான்.
சரி, ஐடி வேலையை கண்டுகொள்ளாதே; ஆனால் வேதியியல் வேலைகள் ஏதேனும் கிடைக்குமே என்றேன். எந்த மாதிரியான வேதியியல் நிறுவனங்கள் புதுமுக பயிற்சி நிலை மாணவர்களை எடுத்துக்கொள்ளும் என்று தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றான்.
நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. முதல் வேலை என்பதை நாம்தான் தேடிப் பெறவேண்டும். அது தானாகக் கையில் கிடைக்காது. ஒரு வேலையில் எப்படியோ தட்டி முட்டிச் சேர்ந்துவிட்டால், அடுத்து அடுத்து என்று வேலைகள் கற்றுக்கொண்டு, நிறுவனங்கள் மாறி, ஒரு நல்ல நிலையை அடையலாம்.
கல்லூரிப் படிப்பின்போதே ஒரு மாணவன் மேற்படிப்பு, வேலை ஆகியவை தொடர்பாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி சற்றே விரிவாக, சில பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன். அதற்கான பீடிகை இந்தப் பதிவு.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
I am not so much inclined to agree that our students are careless/ not-so-interested about job prospects. I think there are not so much up to date information available. So this is a nice thing that you are planning to do!
ReplyDeleteFrom my expereinces during student time, information always seemed to be an privileged thing... although these days internet is good place to get them but most students seem not to know how to use internet to such end!
அருமையான முயற்சி.இதை நீங்கள் தொடர்ந்தால்,உங்களுக்குக் கோடிப் புண்ணியம்,பத்ரி.
ReplyDeleteGreat initiative. நல்லா செய்யுங்க. எல்லா துறை மாணவர்களுக்கும் பயன்படும் தகவல்களைத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteஅது கிழக்கிலிருந்து ஒரு புத்தகமாக உதிக்கட்டுமே!
ReplyDeleteஅருமையான முயற்சி.
ReplyDeleteநன்றியும் வாழ்த்துகளும்.
Great idea. In addition, I think what's required is a website portal that can provide general guidelines for various careers. It should also include provision for users to post questions and get answers from a panel of experts or knowledgeable people. May include a moderated discussion board.
ReplyDeleteAs for this student, since he seems to be academically bright, I would advise him to take GATE and do master's degree at IIT or IISc or similar institution. Since master's degree programs through GATE offers good stipend, it may take of his immediate financial needs. If he wants to join a career in chemistry, he has much better chances of getting one after an MSc at IIT or similar place. Most importantly, an MSc degree will strenghen his knowlege of chemistry, which he can take as one of the subjects for his IAS and this will improve his chances of clearing the IAS entrance.
Very good initiative and much needed for young graduates. thanks
ReplyDeletehttp://www.hinduonnet.com/thehindu/thscrip/pgemail.pl?date=2009/05/28/&prd=th&
ReplyDeleteநல்ல பாராட்டவேண்டிய முயற்சி
ReplyDeleteஉண்மையியல், சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் இந்த விஷயத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.
அங்கு உள்ள மாணவர்களுக்கு படிப்பு தவிர அது சார்ந்த விஷயங்களில் தகவல்கள் கிடைப்பது இல்லை. முன்னணி ஆங்கில பத்திரிகைகள் தொடர்ந்து வாசித்தால் ஒரு வேளை பொது அறிவு கிடைக்கும். நம் மாணவர்களுக்கு, தமிழ் சானல்களும், தினகரன் போன்ற தமிழ் நாளிதழ்களும் அரசியல், சினிமா தவிர வேறு விஷயங்களைப் பற்றி பெரிதாக தகவல்கள் கொடுப்பது இல்லை. அவர்கள், ஏதேனும் தாற்காலிக வேளை கிடைத்து, சென்னை போன்ற ஊர்களுக்கு வந்தால் ஒழிய, இது பற்றி தெரிய முடியாமல் இருந்து விடுகிறார்கள். (இது சொந்த அனுபவம்!)
வலைப் பதிவு, expert panel interaction முதலியன சிறப்பான எண்ணம். ஒன்றை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்: இன்டர்நெட் எந்த அளவுக்கு சிறு நகரங்களில் பயன் படுத்தப் படுகிறது என்பது.. கல்லூரிகளில் இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிப்பது முக்கியம்.
//
ReplyDeleteநம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது
//
நீங்க சொல்லுவது சரியே.
நிச்சயமா உங்களிடம் இருந்து நல்ல inputs கிடைக்கும்னு தெரியும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!
Appreciate your initiative. My humble suggestion would be try to make it as a book. I promise I will gift this book to at least 10 students.
ReplyDeleteகண்டிப்பா எழுதுங்க.
ReplyDeleteநீங்கள் மட்டும் கல்லூரியில் படிக்கும்போதே தொழில் தொடங்கி குட்டி-பூர்ஷ்வா நிலையிலிருந்து பெருமுதலாளி நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். மற்றவர்களெல்லாம் உழைக்கும் வர்க்கமாகவே உழன்று கொண்டிருக்க வேண்டுமா? நல்ல நியாயம்தான். அவர்களும் தொழில்முனைவோராகி முதலாளித்துவப் பாதையில் நடைபோட வழிசொல்லுங்கள்.
ReplyDeleteMost indian college students are unemployable. 100% literacy does not guarantee 100% employment.
ReplyDeleteNo school curricula or college education gives what it needs for life outside the protected school/college environment. As long as we do not rectify this, we are going to produce billions of students who are unemployable only.