Tuesday, May 26, 2009

கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்

சென்னையைச் சுற்றி கிழக்கு நடத்திவரும் புத்தகக் கண்காட்சிகளுக்கு தாற்காலிக விடுமுறை. நேற்றோடு பல்லாவரம், ஈக்காடுதாங்கல் கண்காட்சிகள் முடிவுற்றன. பாடி அதற்குமுன்னரே முடிவடைந்தது. அடுத்து புரசைவாக்கம், திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் நடக்க உள்ளது. அதற்கான தகவலை ஜூன் நெருங்கும்போது தருகிறேன்.

அதைத் தவிர தமிழகம் முழுவதும் எங்களது விற்பனையாளர்களின் உதவியுடன் பல இடங்களில் கிழக்கு சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அதுபற்றிய தகவல்கள் இங்கே:

1. ரத்னா ஏஜென்சீஸ், 56, நாடி அம்பாள் கோவில் தெரு, பட்டுக்கோட்டை, 25 மே 2009 - 24 ஜூன் 2009

2. தாஜ் ஏஜென்சீஸ், பஸ் ஸ்டாப் அருகில், திருத்துறைப்பூண்டி, 5 மே 2009 - 30 மே 2009

3. சக்சஸ் புக் செல்லர்ஸ், BMS மைதானம், பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், புதுக்கோட்டை, 6 மே 2009 - 28 மே 2009

4. காந்தளகம், 21, சிவசண்முகம் தெரு, கனரா வங்கிக்கு எதிரில், மேற்கு தாம்பரம், 14 மே 2009 - 14 ஜூன் 2009

5. KPM ஸ்டோர்ஸ், 3, தாம்பரம் சாலை, மேற்கு முகப்பேர், சென்னை 37, 20 ஏப்ரல் 2009 - 30 மே 2009

6. ஜனனி பிக் பாஸார், பழைய கற்பகம் சூப்பர் மார்க்கெட், SBI மெயின் பிராஞ்ச் அருகில், ஆஃபீசர்ஸ் லைன், வேலூர், 8 மே 2009 முதல்

7. இன்லாண்ட், கமெர்ஷியல் பில்டிங், புதுச்சேரி, 24 மே 2009 முதல்

8. AVM Book, மிஷன் தெரு, புதுச்சேரி, 1 மே 2009 முதல்

9. தினேஷ் புக் ஹவுஸ், பஸ் ஸ்டாண்ட், நாமக்கல், 2 ஏப்ரல் 2009 - 30 ஜூலை 2009

10. மல்லிகை புக் செண்டர், ரயில்வே சந்திப்பு எதிரில், மதுரை, 27 மே 2009 - 26 ஜூன் 2009

11. செந்தில் முருகன் ஏஜென்சீஸ், ராஜா ஸ்கூல் விளையாட்டு மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம், 26 ஏப்ரல் 2009 - 27 மே 2009

12. கிழக்கு ஷோரூம், புது எண் 17, ரெட்டியப்ப முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர், 26 மே 2009 முதல்.

3 comments: