இன்று (11 மே 2009) மாலை 7.00 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக் கடையில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகம் பற்றிப் பேசுகிறார். அப்போது தமிழ், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம். தமிழில் கிழக்கு பதிப்பகம் செய்து தந்துள்ள புத்தகங்கள் அச்சாகி கடைக்கு வந்திருக்கக்கூடும். தமிழ்ப் பிரதியில் ஜெஃப்ரி ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்கும் வாய்ப்பு ஒருவேளை கிடைக்கலாம்!
முடிவில் ஒரு திருப்பம், ஒரு பைசா குறையாமல் ஒரு பைசா கூடாமல் - ஒவ்வொன்றும் விலை ரூ. 195/-
11.30 மணி அப்டேட்: “முடிவில் ஒரு திருப்பம்” அச்சாகி இன்று தில்லியிலிருந்து வந்துவிட்டது. எனவே புத்தகம் லாண்ட்மார்க்கில் கிடைக்கும். ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்குபவர்கள் கட்டாயம் லாண்ட்மார்க் வந்துவிடுங்கள்!
இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா
13 hours ago
தகவலுக்கு நன்றி பத்ரி.
ReplyDeleteவாழ்த்துகள்.
//முடிவில் ஒரு திருப்பம், **ஒரு பைசா குறையாமல் ஒரு பைசா கூடாமல்** - ஒவ்வொன்றும் விலை ரூ. 195/-//
ReplyDeleteபத்ரி,
இந்த வாக்கியத்தை வேறு மாதிரி அமைத்திருக்கலாமோ? புத்தகத்தின் விலையை ரொம்பவும் கட்அண்ட்ரைட்டாக சொல்வது மாதிரி அமைந்திருக்கிறது. :-)
உண்மைதான். இரண்டையும் சுற்றி மேற்கோள் குறி போட்டிருக்கலாம். அவசரம்!
ReplyDeleteசுரேஷ் கண்ணன் சொன்னது
ReplyDeleteபத்ரி,
இந்த வாக்கியத்தை வேறு மாதிரி அமைத்திருக்கலாமோ? புத்தகத்தின் விலையை ரொம்பவும் கட்அண்ட்ரைட்டாக சொல்வது மாதிரி அமைந்திருக்கிறது. :-)
what the friend said is correct.
Badri சொன்னது…
உண்மைதான். இரண்டையும் சுற்றி மேற்கோள் குறி போட்டிருக்கலாம். அவசரம்!//
This is also more or less correct.:-)
Thanks for the heads-up :)
ReplyDeleteபயங்கர கூட்டம்
ReplyDeleteகையெழுத்து வாங்க முடியவில்லை