Tuesday, May 04, 2010

சுஜாதா புத்தகங்கள் மறுபதிப்பு

கிழக்கு பதிப்பகம், சுஜாதா குடும்பத்தினருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருடைய பல புத்தகங்களை மறுபதிப்பு செய்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின்போது 5 நாவல்கள் வெளியாகின. இப்போது மேலும் 12 புத்தகங்கள் அச்சாகி வந்துள்ளன. மேலும் 30 புத்தகங்கள் அச்சாக்கத் தயாராக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜனவரியில் வெளியான புத்தகங்கள்:
ஆஸ்டின் இல்லம்
தீண்டும் இன்பம்
மீண்டும் ஜீனோ
நில்லுங்கள் ராஜாவே
நிறமற்ற வானவில்

நாளை முதல் கிடைக்க உள்ள புத்தகங்கள்:
24 ரூபாய் தீவு
அனிதாவின் காதல்கள்
நைலான் கயிறு
வாய்மையே சில சமயம் வெல்லும்
அப்ஸரா
ஆர்யபட்டா
கமிஷனருக்குக் கடிதம்
எதையும் ஒரு முறை
இதன் பெயரும் கொலை
மெரீனா
மூன்று நாள் சொர்க்கம்
ஊஞ்சல்

இதற்குமுன் இந்தப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பக்கம் தாண்டவில்லை என்றால், கூடச் சில சிறுகதைகள் அல்லது ஒரு குறுநாவல் என்று எதையாவது சேர்த்து வெளியிட்டார்கள். அப்படி வரும்போது இரண்டு புத்தகங்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் வந்துள்ளது. (உ.ம்: மூன்று நாள் சொர்க்கம் என்ற கதை.) ஆனால் மேலே நான் குறிப்பிட்டுள்ளவற்றுள் அந்த ஒரு கதை மட்டும்தான் உள்ளது. ஊஞ்சல் மட்டும் ஒரு நாடகம். மற்றவை எல்லாம் நாவலாக, தொடர்கதையாக எழுதப்பட்டவை.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் அனைத்துப் புத்தகங்களையும் வாங்க

6 comments:

  1. நல்ல செய்தி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆன்லைனில் கிழக்கு நூல்களை வாங்க முடியுமா?

    ReplyDelete
  2. சரவணக்குமார்: வாங்க முடியும்.

    ReplyDelete
  3. Hope his family will get a fair and professional treatment.As a writer he was brilliant.But his books were published by many
    and production was shoddy in many of them.Some were out of print and some were not easily available.I hope some of these would be set right now.

    ReplyDelete
  4. ஜெ. உமா மகேஸ்வரன்Thu May 06, 10:29:00 AM GMT+5:30

    பத்ரி, இந்த வரிசையில் "சிலிக்கன் சில்லுப் புரட்சி" மற்றும் "கணிப்பொறியின் கதை" புத்தகங்களையும் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  5. பத்ரி,

    'விவாதங்கள் விமர்சனங்கள்' உங்களிடம் கிடைக்குமா?

    ReplyDelete
  6. எனக்குத் தெரிந்து ஹாஸ்டல் தினங்கள் யாரும் வெளியிடுவதாகத் தெரியவில்லை.

    ReplyDelete