பண்டைய எழுத்துமுறைகள் பற்றிய தொடரில் முதல் மாதம் அறிமுகம், இரண்டாம் மாதம் சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துகள், மூன்றாம் மாதம் எகிப்திய ஹியரோகிளிஃப் ஆகியவற்றுடன் தொடர்ந்து நான்காம் மாதம் சீன எழுத்துகள் பற்றிப் பேசினார் பேராசிரியர் சுவாமிநாதன்.
சுமேரிய, எகிப்திய எழுத்துகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட முடியாமல் தொலைந்துபோனபின், ஐரோப்பிய ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சீனாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எழுத்து இது. மாற்றங்கள் கண்டாலும் அவை தொடர்ந்தே இருந்துவந்துள்ளன. எனவே அவர்களது பண்டைய ஆவணங்களைக் கண்டுபிடித்துச் சொல்ல அந்நியர்கள் தேவைப்படவில்லை. மேலும் சீனா, எழுத்துகளை முதன்மைப்படுத்திய ஒரு கலாசாரம். அவர்கள் அனைத்தையும் எப்போதுமே எழுதிவைத்தார்கள். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
அடுத்த மாதம் மெசோ அமெரிக்கன் எழுத்து பற்றி. அதைத் தொடர்ந்து இந்திய எழுத்துகளுக்கு வருவோம்.
முந்தைய மூன்று மாத வீடியோக்களும் இங்கே:
கவளம்
9 hours ago
திரு. சுவாமிநாதன் பேச்சைப்பூராவும் கேட்டேன். பல அருமையான தகவல்கள். சந்தேகம் கேட்க சீனமொழியில் எழுதி, பேசும் பரிசயமுள்ள நபர் இருந்தால், இன்னும் தெளிவாக இருந்திருக்கும். உபயோகமான முயற்சி. தொடரட்டும்.
ReplyDelete