மெட்ராஸ் கோயில்களில் இருக்கும் சோழர் காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக்கொண்டு, ‘கோயில் சுவர்கள் பேசினால்...’ என்ற தலைப்பில் பிரதீப் சக்ரவர்த்தி பேசினார்.
சோழர் காலத்தில் மெட்ராஸ் என்ற பெயரைத் தவிர கிட்டத்தட்ட இன்றைய சென்னை இருந்தது. திருவொற்றியூர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய இடங்கள் முதற்கொண்டு பல இடங்கள், அங்குள்ள மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படித் தீர்க்கப்பட்டன, வரிகள் எப்படி வசூலிக்கப்பட்டன, ஆட்சி அமைப்பு முறை எப்படி இருந்தது போன்ற பலவற்றையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் பிரதீப் விளக்கினார்.
இந்த அளவுக்கு விரிவான கல்வெட்டுகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் பகுதிக்கும் கிடையாதாம். வீடியோ கீழே:
இந்த வீடியோவை தரவிறக்கிக்கொள்ள | நேற்றைய மாமல்லபுரம் வீடியோவைத் தரவிறக்கிக்கொள்ள
Tuesday, August 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ரொம்பவே தெளிவாக, பார்ப்பவர்களுக்குத் தொற்றிக்கொள்ளும் ஆர்வத்துடன் பேசியிருக்கிறார். விஷயச் செறிவான வீடியோ. நன்றி.
ReplyDeleteநடுநடுவே கேள்விகள் கேட்டு, கதை போல சொல்லி ரொம்ப சுவையாகவே சொல்லியுள்ளார். நன்றி
ReplyDeleteநாம் கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கேள்வி, அவர் சொன்ன கே.வி.ராமன் புத்தகம் எங்கே கிடைக்கும்?
அற்புதமான செய்திகள் அடங்கிய கானொளி. அவர் குறிப்பிட்ட புத்தகங்களை தமிழில் வெளியிட்டால் மிகுந்த பயன் தரும்
ReplyDelete