பார்ப்பானுக்குத்தான் பூணூலா? இல்லை பிறரும் அணியலாம் என்று சொல்கிறார்கள். எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம்.
மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை.
சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.
தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
இப்போது சில படங்களைப் பார்ப்போம்.
இடது பக்கம் நீங்கள் பார்ப்பது ‘அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.
இந்தக் காட்சியில் அர்ஜுனன் தவம் செய்வதும், சிவன் காட்சி அளித்து அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தைத் தருவதும் காட்டப்பட்டுள்ளது. சிவன் கையில் வேல் போலத் தோற்றம் அளிக்கும் ஆயுதம்தான் பாசுபத அஸ்திரம்.
கடவுளைப் பார்த்தோம். அசுரர்கள் எப்படி? மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும்.
ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
எத்தனை பூணூல்? அதில் என்ன கணக்கு என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள். இரண்டுமே கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை.
மேலே, இடப்புறம் உள்ளது பலராமன். பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை.
ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை!
சரியான கிராஸ் பெல்ட் என்றால் அது சுப்ரமணியர்தான். திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது.
பொதுவாக வெகு சிலரே இப்படி அணிந்திருக்கிறார்கள்.
நூலால் ஆன பூணூலை யாருமே அணிவதில்லையா? நிவீதம் முறையில் யாரும் அணிவதில்லையா என்றால், அதற்கான் ஒரு முழுமையான உதாரணம் இந்தக் காட்சி. அனந்தசயனக் காட்சி.
இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை.
கவனமாகப் பார்த்தால் மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
5 hours ago
பூனூலின் அவசியம் என்ன?
ReplyDeleteஎன்னவாக அதை பயன்படுத்த நினைக்கிறார்கள்
தெளிவான விளக்கங்கள். நன்றி !!
ReplyDeleteபூணுல் அணிந்த பூசாரிகள் படங்கள்/சிற்பங்கள் உள்ளனவா.
ReplyDeleteஆனால் குடுமி வைத்த, பஞ்சகச்சம் கட்டிய முனிவர்கள் படங்களை பார்த்து இருக்கிறேன்.
மடிசார் கட்டிய பார்வதி, லட்சுமி யும் பார்த்தது இல்லை.
வால்பையன்: பூணூலின் அவசியம் என்ன, என்னவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.
ReplyDeleteராம்ஜி: கச்சம், கௌபீனம் (கோமணம்) ஆகிய இரு கீழாடைகளைத்தான் ஆண்கள், பெண்கள் இருவருமே அணிந்திருப்பதாக சிற்பங்கள் காண்பிக்கின்றன. பெண்கள் மார்பில் குச்சபந்தம் என்ற ஆடையை அணிவதாகவும் பார்க்கலாம்.
ReplyDeleteசீசனல் இடுக்கை.
ReplyDeleteமிக்க நன்று.
என் கருத்தில் பூணுல் என்பது ஒரு ஆடைவடிவம் தான்.
பூதகணங்கள் ஆடை அற்றவை எனவே பூணுல் இல்லை.
இன்றும் கூட பெரியவர்களை(பெரிய ஜாதி/பணக்காரர்கள்) பார்த்தால் கிராமத்தில் மேல் துண்டை எடுத்துவிடுவார்கள். பூணல் என்பது மேல் துண்டின் வடிவமே.
மரியாதக்குரிய அடையாளம் என கருதலாம்.
கல்லூரி பட்டம் பெரும் பொழுது கருப்பு தொப்பியும் அங்கியும் அணிகிறார்கள் அதனால் என்ன பயன் என கேட்டோமா? அது போலவே பூணூல். அந்த காலத்தில் கற்றவர்களும் சமூக அந்தஸ்து கொண்டவர்களும் அணிந்தார்கள்.
ஒருவனின் சிகையும் பூணலும் அறுத்துவீசினால் அவன் இறந்ததுக்கு சமமாக கருத்தபட்டான். ருக்மணி கல்யாண கதையில் கேள்விப்பட்டிருக்கலாம்.
அதனால் சன்யாசிகள் தங்களின் அடையாளம் தொலைத்து இறந்ததாக காட்டுவதற்கு தங்களின் சிகையும் பூணலையும் துறந்தார்கள்.ஆதிசங்கரர் காலத்தில் ஏற்பட்ட பழக்கம் இது.
சன்யாசிகள் செய்துகொண்டது தற்கொலைக்கு சமமான காரியம்.
//பூணூலின் அவசியம் என்ன, என்னவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. //
ReplyDeleteஎன்னவாக பயன்படுத்தியிருப்பார்கள் ??? முக்கியமாக துணியால் ஆன பூணூல் !!
சிறிது சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும். விடை கிடைக்காவிட்டாலும் சாத்தியக்கூறுகள் கிடைக்கும் என்றே தோன்றுகிறது
Not sure on the accuracy, but I found the meaning at: http://www.hinduism.co.za/sacred1.htm to be "The three cords remind the wearer that he has to pay off the Three Debts he owes: 1.To the Rishis (ancient seers), 2.To the ancestors and 3.To the gods".
ReplyDeleteSee this photo http://twitpic.com/2hqbz0 I took in my Nephew's Upanayanam two years back explaining the meaning of Upanayanam in Tamil.
பூணல் வர்ண ஆசிரம வாழ்க்கை வாழ்பவர்களை குறிக்கும் ஒரு அடையாளம். பூணல் அணிபவர் சில கடமைகளை நிறைவேற்றுகிறவர் என்று மற்றவர் தெரிந்துகொள்ள உதவுகிறது. பெண்கள் அணியும் தாலி போன்றது. இந்த காலத்தில் தாலி எவ்வளவு பயன்படுகிறதோ அவ்வளவு பூணலும் பயன்படுகிறது (அதாவது ஒன்றுமில்லை!)
ReplyDeleteஒரு பையனுக்கு பிரம்ம உபதேசம் செய்யப்பட்டதிலிருந்து அவன் பூணல் அணிகிறான். வேள்வி செய்வது உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு தீபத்தை வாழ்நாள் முழுதும் பரமரிப்பது, வேதங்களை கற்றுத்தெளிவது போன்ற பொறுப்புகளை அவன் ஏற்றுக்கொள்கிறான். அவன் மணம் புரியும் போதும், தந்தையை இழந்து முன்னோர்களுக்கு (அடையாள) உணவு வழங்கும் கடமையை ஏற்றுக்கொள்ளும் போதும் அவனது பூணல் 6,9 என்று பெரிதாகிறது. இன்று போல் அன்று அனைவரும் சட்டை அணிந்திருக்கவில்லை. பார்த்ததும் ஒருவரின் பொறுப்புகளின் அளவை தெரிந்துகொள்ளலாம்.
****
அந்த காலத்தில் பிரம்ம உபதேசம் பெரும் கல்வித்தகுதி மூன்று வர்ணக்காரர்களுக்கு மட்டுமேயிருந்த்தால் அவர்கள் மட்டுமே அணிந்தனர். பிற்காலத்தில் சூத்திரரும், ஆதிவாசிகளும் கல்வி அறிவு பெற்றபின் தாமும் அணிந்திருக்கலாம். இப்போது கல்வி அறிவுள்ள எவறும் பிரம்ம உபதேசம் பெற்று பூணல் அணியலாம். ஒரு சில வெளிநாட்டவர் செய்கின்றனர்.
****
பிரம்ம உபதேசம் பெற்ற ஆசிரம வாழ்க்கை வாழும் பிரிவினர் பிற்காலத்தில் தம்மை இருபிறப்பாளர்களாக (twice-born) சொல்லிக்கொண்டனர். இது பல நாகரிகங்களில் இருக்கும் வழக்கமே. யூதர்கள் = bar mitzvah, சோராஸ்திரகள் (parsis) = navjote, கிறஸ்தவர்கள் = baptism. குறிப்பாக baptism செய்யப்பட்ட சில கிறஸ்தவர்கள் தம்மை "மீண்டும் பிறந்தவர்கள்" (born-again christian) என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
-பாலாஜி.
தினமும் சந்தியாவந்தனம் செய்வதை மெமரியூட்டுவதற்காக என்று தான் நினைக்கிறேன்.
ReplyDeleteமேலும்,
ReplyDeleteசோராஸ்திரர்கள் பூணல் போன்ற கயிறு ஒன்னற இன்றும் அணிகிறார்கள்.
யூதர்கள் ஒரு துணியை அணிகிறார்கள் (பிரார்த்தனைக்காக அணியும் போர்வை - shawl -அல்ல, மற்றொரு துணி).
baptism செய்யப்பட்ட தமிழக கிறஸ்தவர்கள் அடையாளத்திற்கு என்ன அணிகிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தவர் எழுதவும்.
அதே போன்று இஸ்லாமியரிடம் இது போன்ற வழக்கம் இருக்கிறதா என்றும் விவரம் அறிந்தவர் எழுதவும்.
//சிறிது சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும். விடை கிடைக்காவிட்டாலும் சாத்தியக்கூறுகள் கிடைக்கும் என்றே தோன்றுகிறது //
ReplyDeleteமண்டையை பிழிந்து சின் தித்து பார்த்ததில், மூக்கு ஒழுகினா துடைத்து கொள்ள துணியாலான பூணூல் பயன்படும் என தெரிகிறது! வேற சாத்தியகூறுகள் இருக்கா என்ன?
madisaar vaitha parvathiyum lakshmiyum parthadhillai nu solreenga ok. neenga first kadavula parthirukeengala? lakshmi na ippadi than iruppanga, saraswathi na kaila veena vechindu than irupanga nu ungalukku i mean ellarukkum theriyuma? then how you all can tell that i have not yet seen either lakshmi or saraswathi in madisar saree? its waste of arguing. god is one superior power. its a path to lead a life for each and every human in a good way. tats it. it has no shapes or dresses. :-) if i was wrong in any way, sorry. thank you.
ReplyDelete1. பூநூல் போட்ட சரஸ்வதி, லக்ஷ்மி சிலைகளின் படங்களை நான் சித்ரா மாதவனின் பவர்பாயிண்ட் தொகுப்பில் பார்த்துள்ளேன். எந்த கோயில் என்று ஞாபகமில்லை. 2. வடநாட்டில் ப்ராமண பெண்கள் மடிசார் அணிவதில்லை என்று நினைக்கிறேன். ஆரிய பிராமணர்களை மணந்த திராவிட தமிழ்நாட்டு பெண்கள், தங்களின் அடையாளம் தனியாக தெரியவேண்டும் என்பதர்க்காக, பிராமண ஆண்களை போல், பஞ்சகச்ச வேட்டியின் மரபில், மடிசார் வகையில் சேலை கட்டுகிறார்கள் என்பது வரலாற்று ஆசிரியர் பிடி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் கருத்து. கருத்து மட்டுமே; இதற்கு சான்றாக அவர் நூலோ மரபோ கதையோ கல்வெட்டோ சுட்டிகாட்டவில்லை; யூகம் என்றே சொல்கிறார். 3. சிலைகளில்,மடிசார் கட்டிய அரசகுல பெண்கள் (மல்லையிலோ, காஞ்சியிலோ) ஒன்றுகூட இல்லை. - ர. கோபு
ReplyDeleteசிவ்கங்கைப் பக்கம் வழங்குகிற ஒரு வாய்மொழி வரலாறு இது
ReplyDeleteராணி மங்கம்மாள் (நாயக்கர் ஆட்சி 1690 - 1710) மதுரையை ஆண்டபோது மதுரைக் கோட்டைத் தலைவராக வெங்கிடரங்க அய்யங்காரு என்ற தமிழ் வைணவர் இருந்தார். அவர் ஓர் ஆவணி அவிட்ட நாளில் பூணூல் மாற்றிக் கொண்டு வரும்போது, கூட்டமாக 12 சௌராஷ்டிரர்கள் வைகைக் கரையில் தங்கள் ஆவணி அவிட்டத்தை முடித்து புதுப் பூணூலோடு வருவதைப் பார்த்தார்.
சௌராஷ்டிரர்ர்களுக்கு பூணூல் அணிய்ம் உரிமை கிடையாது என்று அவர்களிடம் கோபத்தோடு அய்யங்கார் சொன்னராம். சொன்னதோடு நிற்காமல் அவர்களின் பூணூலை அறுத்தெறியச் செய்து அவர்களையும் சிறைபிடித்து திருச்சி கொண்டு போய்விட்டார்.
இதை அறிந்த ராணி மங்கம்மா வேத விற்ப்ன்னர்களின் அவையைக் கூட்டி அவர்களின் க்ருத்து கேட்க, அவர்களும் சாஸ்திரங்களை அல்சி ஆராய்ந்து சௌராஷ்டிரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.
அதன் அடிப்படையில் சௌராஷ்டிரர்களுக்கு இந்த உரிமையை அரசு முறையில் வழங்கும் அபயப் பிரதான சாசனத்தை ராணி மங்கம்மா வழங்கினாராம்.
பேரன்புள்ள முருகன் கேரளாவில் வட்க்கு மாநிலங்களில் குறிப்பாக
ReplyDeleteத்ரிவேதிகளிடயே மடிசார் சம்பிரதாய்ம் இல்லை., திவச்சமையல் மாநிலத்திற்கு
மாறுபட்டே இருக்கின்றன. இவ்வகையில்தாம் தமிழ் பிராமணர்களின் பழக்க
வழக்கங்களும் கேரள அகத்தம்மைகள் திருமண்த்தின் போதோ திவசத்தின்போதோ
மடிசார் உடுத்தியிருந்தனரா ஓலக்குடை இன்னும் மறையவில்லை என்கிறார்கள்
மடிசார்.. it is regional rather than geographical.
காஷ்மீர் பிரமணர் உதறு மடி சம்பிரதாயம் உடைகளை நனைக்காமல் உடைகளை மூன்று
தடவை உதறுவதாம். 5 வயதில் கல்யாணம் 16 வயதில் பெண் பிறத்தல் 32 வயதில்
மாமியார் அந்த்ஸ்து அதன் பின் மடிசார் தாம் கட்டணுமாம் ஒருக்கால்
குடும்பக் கட்டுப்பாடாக இருக்கலாமோ.. மனுஷனுக்காக மடிசாரை அவிழ்த்து
மறுபடியும் கட்டிக்கம்டியுமோ மனுஷ்னுக்கு எப்பவும் அவசரம்தான்... இந்த
அருத்தத்தில் வரும் சொற்தொடர்களை அடியேன் கேட்டதுண்டு... அதற்காக
இருக்குமோ என்னவோ இப்பொழுதெல்லாம் சிரியல் களில் சிம்பாலிக்காக
மடிசார்கள் மற்றப்ப்டி சுரிதார்களே..அன்புடன் இரா.முகுந்தராசன்
-
hi
ReplyDeleteChannavira is more a ornament worn by a warrior and not a type of wearing yagnopavitam.
the 3 basic poses for wearing the yagnopavitha - upavita or savya, prachinavita or apasavya n malakara
Upavita - worn over the left shoulder and under the right arm - auspicious stuff/godly duties
Prachinavita - opp - right shoulder, under left arm. only while doing pitru karya... ( rites to the departed / forefathers)
Malakara - like a garland - for morning calls and night ( matters) n while being a PAL bearer.
Nowehere in mallai do you see Prachinavita.
see vishnu in sayana is wearing it as malakara - like garland since he is sleeping.
the only ref where i have seen the prachinavita is the famous painting in the big temple - said to be Saint Karuvurar and Sri Raja Raja Chola - the bearded man clearly wears it the opp way.
rgds
vj
www.poetryinstone.in
//baptism செய்யப்பட்ட தமிழக கிறஸ்தவர்கள் அடையாளத்திற்கு என்ன அணிகிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தவர் எழுதவும்.//
ReplyDeleteதமிழக கிருத்தவர்கள் என்றில்லை. எந்த ஊர் கிருஸ்தவர்களும் ஒன்றும் அணிவது கிடையாது
ரொம்ப முக்கியம் நாட்டுக்கு!
ReplyDeleteபூணூல் அணிவதால் எந்த விதப் பிரயோஜனமும் இல்லை. குளிக்கும்போது அழுக்கு தேய்த்துக் குளிப்பதற்கே அது பயன்படுகிறது பார்ப்பனர்களுக்கும் மற்ற ஜாதியினருக்கும்.
மடிசார் அப்படி இல்லை. சேலை கட்டுவதில் ஒரு விதம். அவ்வளவுதான்.
//madisaar vaitha parvathiyum lakshmiyum parthadhillai nu solreenga ok. neenga first kadavula parthirukeengala? lakshmi na ippadi than iruppanga, saraswathi na kaila veena vechindu than irupanga nu ungalukku i mean ellarukkum theriyuma? then how you all can tell that i have not yet seen either lakshmi or saraswathi in madisar saree? its waste of arguing. god is one superior power. its a path to lead a life for each and every human in a good way. tats it. it has no shapes or dresses. :-) if i was wrong in any way, sorry. thank you. //
ReplyDeleteஇடையில் நுழைவதற்கு மன்னிக்கவும்
அவர் முதலில் எழுதியதில் நான் புரிந்து கொண்டது மடிசார் அணிந்த சரஸ்வதி படம் அல்லது சிலை / பார்வதி படம் அல்லது சிலை
ஒரு வேளை என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்
பாரதிராஜாவின் "வேதம் புதிது" ல், அந்த சின்னப் பையன் "பூணூலை" கழற்றி ஆற்றில் விடும் காட்சி பெரும் சர்சைக்கு உள்ளானது!
ReplyDeleteபாக்யராஜ் படத்தில் "சோமயஜாலு" கூட "பூணூலை" கழற்றி எரிந்து விடுவார் என்று நினைக்கிறேன்!
பாரதி கூட தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு "பூணூலை" போட்டு விட்டார் என்று சொல்வார்கள்.
மயிலாடுதுறை சிவா...
//தமிழக கிருத்தவர்கள் என்றில்லை. எந்த ஊர் கிருஸ்தவர்களும் ஒன்றும் அணிவது கிடையாது
ReplyDelete//
ஐயையோ! ;)
//
ReplyDeleteதமிழக கிருத்தவர்கள் என்றில்லை. எந்த ஊர் கிருஸ்தவர்களும் ஒன்றும் அணிவது கிடையாது
//
ஆதாமும் ஏவாளும் போலா ? என்ன கொடுமை சரவணன் இது ?
பூணூலைப் பற்றியும் சரச்சைகள் கிளம்பியுள்ள நேரம் இது. பூணூல் என் பது இந்து மதத்தில் சூத் திரர்களுக்குக் கிடையாது; பார்ப்பனர், சத்திரியர் வைசியர்கள் மட்டுமே அணிந்து கொள்ள உரிமை படைத்தவர்கள்!
ReplyDeleteபார்ப்பனர் சமூகத்தில் பூணூல் அணிவது என் பதே தனி விழாவாகவே கொண்டாடுப்படுகிறது - அதற்குப் பூணூல் கல் யாணம் என்று பெயர் சூட்டியுள்ளனர் என்றால் அதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
பூணூல் அணிவிக்கப் பட்ட பிறகே ஒரு பார்ப் பனச் சிறுவன் பிராமணன் துவி ஜாதி (இரு பிறப் பாளன்) ஆக்கப்படுகிறான் - அதுவும் பார்ப்பனப் பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது.
சூத்திரர்களில்கூட சிலர் பூணூல் அணிந்து கொள்கிறார்களே, ஆசாரி யார் செட்டியார் போன்ற வர்கள் அணிந்து கொள் கிறார்களே என்று சிலர் கேட்பது நமக்குப் புரிகிறது. அதற்கு இந்து மதத்தில் சாஸ்திர ரீதியாக அனுமதி கிடையாது.
இந்து மதத்தில் மிக முக்கியமான சாஸ்திர நூல் மனு தர்மம்; பதினெட்டு ஸ்மிருதிகளுக்கும் மனுஸ் மிருதிக்கும் விரோதமாய் பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காகச் சொல்லியி ருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத் தக்கதன்று. மனுஸ்மிருதிக்கு விரோத மான ஸ்மிருதி புகழடை யாது என்கிறது மனுதர்மத் தின் பீடிகை.
இந்து மதத்தில் மிக உய ரமான இடத்தில் வைத்துப் போற்றப்படும் அந்த மனுஸ்மிருதி பூணூல் யார் யார் அணியலாம் என்றும் கூறி இருக்கிறது.
பிராமணனுக்கு மிஞ் சிப் புல்லினாலும், க்ஷத்திரி யனுக்கு வில்லின் நாணை யொத்த முறுவற் புல்லி னாலும், வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் - மெல்லியதாக பின்னி மூன்று வடமாக மேலரை ஞாண் (பூணூல்) கட்ட வேண் டியது! (மனுதர்மம் - அத் தியாயம் 2- சுலோகம் 42)
இத்தோடு நிறுத்தினா லும் பரவாயில்லை. சூத் திரர்கள் பூணூல் அணிந் தால் இதுபற்றி இதே மனு தர்மம் என்ன கூறுகிறது?
சூத்திரன் பூணூல் அணிந் தால் அரசு அங்க சேத முடைய சிக்ஷ் செய்ய வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 224) சூத்திரன் பூணூலைத் தரித்தால் அங்கங்களை வெட்ட வேண்டுமாம்.
இந்து மதத்தைப் புண் படுத்துவதா என்று விவரம் புரியாமல் வெறிக் கூச்சல் போடும் நமது சூத்திர மக்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டாமா?
எந்த அளவுக்குப் பார்ப் பனர்கள் செய்துள்ளனர் தெரியுமா? திருப்பதி ஏழு மலையானுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் மூன்று கிலோ தங்கத்தால் பூணூல் அணிவித்தாரே! (மாலை மலர் 16.3.2002).
ஆக, கடவுளும் பார்ப் பனும் ஒன்று என்று இதன் மூலம் சாதிக்கப் பார்க்கின் றனர்.
பூணூலைப் பார்ப்பனர் கள் தரிப்பதன் மூலம் - தாங்கள் பிர்மாவின் முகத் தில் பிறந்தவர்கள் - பூணூல் அணிந்திட சாத்திர ரீதியாக தகுதியில்லாத சூத்திரர் களோ நீங்கள் விபச்சாரி மக்கள் என்பதை மறைமுக மாக பார்ப்பனர் சொல்லு வதாகும் - சூத்திரத் தமி ழர்கள் சிந்திப்பார்களாக!
- மயிலாடன்
சங்கராச்சாரியார் பார்பனர் கிடையாது அவர் விஸ்வகர்மா குலம் (ஆ(ச்)சாரி) விஸ்வகர்மா மக்களுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு.....தேவை எனில் பார்பனர் களிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் யார் யார் அணியலாம் என்று மற்றும் விஸ்வகர்மா என்றால் யார் என்று தேடி பார்க்கவும்....http://vishwakarmaviswass.com/?page_id=898
DeleteInnum sollaponal poonool aniyum marabu kammalargalidam irundhe copy adikkapattadhu."தமிழ் சிந்தனையாளர் பேரவை"enum YouTube channels parkavum.parpanar varum min adhi Brahmanandam aga irundhanga kammalargal.adhigapadiyana kalvi payindravargalum avargale annalil.
ReplyDeleteஒரு சில வடக்கத்திய பிராமணர்கள்? தமிழகத்தில் நிதி தர்ப்பண கண்களில் அணிவது போல் எப்போதும் வலது தோளில் பூணுல் அணிகிறார்களே அது பற்றித் தெளிவான விளக்கம் வேண்டுகிறேன்
ReplyDelete